டெல்லி-தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பசுமை பட்டாசுகளை உச்சநீதிமன்றம் ஏன் அனுமதித்தது? அந்த உத்தரவு குறிப்பிடுவது என்ன?. -வினீத் பல்லா

 பசுமை பட்டாசுகள் மீதான உச்சநீதிமன்றம், டெல்லி-தேசிய தலைநகர் பிராந்தியம் பட்டாசு விதிகள் : இந்த தற்காலிக தளர்வு டெல்லி அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளின் நிலைமையை மாற்றியமைக்கிறது. அவை சமீபத்திய ஆண்டுகளில், தேசிய தலைநகர் பிராந்தியத்தில் அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் முழுமையான தடையை விதித்தன.


இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி கே. வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு பிறப்பித்த இந்த உத்தரவு, பட்டாசுத் தொழிலில் உள்ள மக்களின் வாழ்வாதாரம், பண்டிகை மரபுகள் மற்றும் ஒவ்வொரு குளிர்காலத்திலும் இப்பகுதியில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் பொது சுகாதார கவலைகள் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்த முயற்சிக்கிறது.


இந்த தற்காலிக தளர்வு, சமீபத்திய ஆண்டுகளில் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் முழுமையான தடை விதித்த டெல்லி அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளின் வரிசையை மாற்றியமைக்கிறது. மத்திய அரசும் டெல்லி அரசும் நிபந்தனைக்கான தளர்வை ஆதரவளித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.


நீதிமன்றத்தின் புதிய வழிமுறைகள் என்ன?


பட்டாசு பயன்பாட்டை தற்காலிகமாக தளர்த்துவதற்கு உச்சநீதிமன்றம் கடுமையான விதிகளை வகுத்துள்ளது. இதன் முக்கிய வழிமுறைகள் பின்வருமாறு,


தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (National Environmental Engineering Research Institute (NEERI)) அங்கீகரித்த பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்து பயன்படுத்த முடியும்.


இந்த பட்டாசுகளை அக்டோபர் 18 முதல் அக்டோபர் 20, 2025 வரை மட்டுமே விற்க முடியும்.


நியமிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விற்பனை செய்ய முடியும். இந்த இடங்கள் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டு பரவலாக விளம்பரப்படுத்தப்படும்.


தீபாவளிக்கு முந்தைய நாள் மற்றும் தீபாவளி நாளில் பட்டாசுகளைப் பயன்படுத்துவது இரண்டு நாட்களுக்கு மட்டுமே காலை 6-7 மணி வரை ஒரு மணி நேரம் மற்றும் மாலை 8-10 மணி வரை இரண்டு மணி நேரம் என நேர வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


முந்தைய நீதிமன்ற உத்தரவுகளால் தடைசெய்யப்பட்ட பேரியம் உப்புகள் (barium salts) அல்லது பிற இரசாயனங்கள் (other chemicals) கொண்ட பட்டாசுகள் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன.


மின் வணிக வலைத்தளங்கள் மூலம் பட்டாசுகளை விற்பனை செய்வது அல்லது வாங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது. அத்தகைய எந்தவொரு விநியோகமும் பறிமுதல் செய்யப்படும்.


பொதுவாக 'லாரிஸ்' (laris) அல்லது தொடர் பட்டாசுகள் (series crackers) என்று அழைக்கப்படும் இணைந்த பட்டாசுகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு அனுமதி இல்லை.


பரிந்துரைக்கப்பட்ட விற்பனை தளங்களைக் கண்காணிக்கவும், நம்பகத்தன்மையைச் சரிபார்க்கவும், சோதனைக்காக சீரற்ற மாதிரிகளை எடுக்கவும் காவல்துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ரோந்து குழுக்களை அமைப்பார்கள்.


உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உட்பட விதிமீறுபவர்கள் அபராதங்களை எதிர்கொள்வார்கள். இந்த அபராதங்களில் அவர்களின் உரிமங்களை ரத்து செய்வதும் அடங்கும்.


நீதிமன்றம் ஏன் தடையை தளர்த்தியுள்ளது?


முழுமையான தடைக்கு அதன் சொந்த சிக்கல்கள் இருப்பதை ஒப்புக்கொண்ட பிறகு, "சமச்சீர் அணுகுமுறையை" (balanced approach) கண்டறியும் விருப்பத்திலிருந்து நீதிமன்றத்தின் காரணம் உருவாகிறது.


முதலாவதாக, தடை இருந்தபோதிலும், வழக்கமான மற்றும் அதிக மாசுபடுத்தும் பட்டாசுகள் தேசிய தலைநகர் பிராந்தியத்திற்குள் (NCR) கடத்தப்பட்டு பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. பசுமை பட்டாசுகள் போன்ற குறைந்த மாசுபடுத்தும் மாற்றீட்டை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் அனுமதிப்பது சிறப்பாக செயல்படும் என்று நீதிமன்றம் நியாயப்படுத்தியது. முழுமையான தடையை அமல்படுத்துவது கடினம் என்று குறிப்பிடுகிறது.


இரண்டாவதாக, பசுமை பட்டாசுகளை உருவாக்குவது, நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த பட்டாசுகள் துகள் உமிழ்வை 30-80% குறைக்கும் என்று நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இது ஒரு சாத்தியமான நடுத்தர பாதையை வழங்கியது. இந்த குறைந்த மாசுபடுத்தும் பட்டாசுகளுக்கான வேதியியல் விதிமுறைகளை உருவாக்குவதில் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI) மேற்கொண்ட பணியை இந்த உத்தரவு ஒப்புக்கொண்டது. இந்த தயாரிப்புகளை 'பசுமை' என்று சோதித்து சான்றளிப்பதற்கான நியமிக்கப்பட்ட அமைப்பாகவும் NEERI பொறுப்புடையதாகும். மேலும், அவை பட்டாசுகள் துகள் உமிழ்வை குறைந்தபட்சம் 30% குறைப்பதற்கான பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்கிறது.


மூன்றாவதாக, மத்திய அரசும் டெல்லி அரசும் தளர்த்துவதை ஆதரித்தன. மேலும், நீதிமன்றம் விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றுவதை உறுதி செய்தது. இது டெல்லி அரசு ஆண்டு முழுவதும் தடை விதித்த முந்தைய நிலைப்பாட்டிலிருந்து மாற்றத்தைக் குறித்தது.


இறுதியாக, பட்டாசுத் தொழில் மற்றும் அதன் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியையும், அண்டை மாநிலங்களான ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகியவற்றின் கவலைகளையும் நீதிமன்றம் கருத்தில் கொண்டது. இவற்றில் பெரும்பாலான பகுதிகள் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் கீழ் வருகின்றன. மேலும், இவற்றின் தடையால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவு "ஒரு தொழிலைத் தொடரும் உரிமையை" (right to carry on a profession) அடிப்படை "வாழ்க்கை சுதந்திரத்துடன்" (right to life) சமநிலைப்படுத்த முயற்சிக்கிறது. இதில் சுத்தமான சூழலுக்கான உரிமையும் அடங்கும்.


நீண்டகாலமாக நடந்து வரும் வழக்கின் பின்னணி என்ன?


டெல்லியில் பட்டாசு வெடிப்பது தொடர்பான சட்டப் போராட்டம் இப்போது குறைந்தது ஒரு பத்தாண்டு காலத்தை எட்டியுள்ளது. 2015-ம் ஆண்டு மூன்று குழந்தைகள், அவர்களின் பெற்றோர் மூலம், காற்று மாசுபாட்டின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். மனுதாரர்களின் கோரிக்கைகளில் ஒன்று பட்டாசுகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது ஆகும். 2018-ல், உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வெளியிட்டது. இது வழக்கமான பட்டாசுகளை தடை செய்தது. நீதிமன்றம் குறைந்த உமிழ்வு "பசுமை பட்டாசுகள்" (green crackers) என்ற யோசனையையும் அறிமுகப்படுத்தியது. டெல்லியில் தீபாவளியன்று அவற்றை வெடிக்க இரண்டு மணி நேர அவகாசத்தை இது அனுமதித்தது.


இருப்பினும், ஒவ்வொரு குளிர்காலத்திலும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) காற்றின் தரம் தொடர்ந்து சரிந்து வருவதால், தீபாவளி காலத்தில் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) பட்டாசுகளை விற்பனை செய்வதற்கோ அல்லது பயன்படுத்துவதற்கோ 2020-ம் ஆண்டில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் "முழுமையான" தடையை விதித்தது. அதைத் தொடர்ந்து, டெல்லி மாசு கட்டுப்பாட்டுக் குழு (Delhi Pollution Control Committee (DPCC)) ஒவ்வொரு ஆண்டும் கடைசி சில மாதங்களுக்கு முழுமையான தடைகளை பிறப்பிக்கத் தொடங்கியது. டிசம்பர் 2024-ல், இது உச்சநீதிமன்றத்தால் முழு தேசிய தலைநகர் பிராந்தியத்திற்கும் (NCR) நீட்டிக்கப்பட்டது.


இந்த தடைகள் இருந்தபோதிலும், அமலாக்கம் ஒரு சவாலாகவே இருந்தது. இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) காற்று தரவு, 2016 முதல் தீபாவளியன்று 24 மணி நேர சராசரி காற்று தர குறியீடு தொடர்ந்து ‘மிக மோசமான’ அல்லது ‘கடுமையான’ வகையில் இருப்பதாகக் காட்டுகிறது.


'பசுமை பட்டாசுகள்' என்றால் என்ன?


'பசுமை பட்டாசு' என்ற சொல் மாசு இல்லாதது என்று அர்த்தமல்ல. இது வழக்கமான வெடிகளுடன் ஒப்பிடும்போது சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் வகையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) மற்றும் NEERI ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட ஒரு கலவையைக் குறிக்கிறது.


முக்கிய அம்சங்கள் :


  • அவை பேரியம் நைட்ரேட், ஆர்சனிக், லித்தியம் மற்றும் மெர்குரி போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை கொண்டிருக்கவில்லை.

  • அவை நீராவி அல்லது தூசி அடக்கிகளை வெளியிட வடிவமைக்கப்பட்டுள்ளன, இவை உருவாகும் துகள்களில் ஒரு பகுதியைப் பிடித்து வைக்கின்றன.

  • இவை PM2.5 உமிழ்வை குறைந்தது 30% குறைப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளன.

  • இவை 120 டெசிபல் வரை மட்டுப்படுத்தப்பட்ட குறைந்த சத்த தீவிரத்தைக் கொண்டவை.

  • உற்பத்தியாளர்கள் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பிடமிருந்து உரிமம் மற்றும் CSIR-NEERI இடமிருந்து சான்றிதழ் பெற வேண்டும். 

  • உண்மையான பசுமை வெடிகளை பேக்கேஜிங்கில் உள்ள பசுமை லோகோ மற்றும் QR குறியீடு மூலம் அடையாளம் காணலாம்.உச்ச நீதிமன்றம் இந்த ஆண்டு “தளர்வு ஒரு சோதனை அடிப்படையில் மட்டுமே” என்று தெளிவுபடுத்தியது. 

  • இது CPCB-யை அக்டோபர் 14 முதல் அக்டோபர் 25 வரை தீவிரமான காற்று தர கண்காணிப்பு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.


தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR)பட்டாசு விதிகளின் எதிர்காலம் இந்த பரிசோதனையின் முடிவுகளைப் பொறுத்தது.



Original article:

Share: