அதிகரித்துவரும் காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான டெல்லி-தேசிய தலைநகர் பிராந்தியத்தின் GRAP செயல் திட்டம் எவ்வாறு உள்ளது? -ரோஷ்ணி யாதவ்

 

GRAP :  Graded Response Action Plan - தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம்


NCR : National Capital Region - தேசிய தலைநகர் பிராந்தியம்


தற்போதைய நிகழ்வு : 


நான்கு மாதங்களுக்கும் மேலாக முதல் முறையாக, செவ்வாய்க்கிழமை டெல்லியின் காற்றின் தரம் 'மோசமாக' (poor) மாறியது. 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு (Air Quality Index (AQI)) மாலை 4 மணிக்கு 211 ஆகப் பதிவாகியுள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (Central Pollution Control Board (CPCB)) கூற்றுப்படி, கடந்த மூன்று நாட்களாக முக்கிய மாசுபாடு தரைமட்ட ஓசோன் மற்றும் நுண்துகள் பொருள் (Particulate Matter (PM)) 10 ஆகும்.


காற்று தரக் குறியீட்டில் (AQI) ஏற்பட்ட சரிவு, தேசிய தலைநகர் பிராந்தியம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் காற்று தர மேலாண்மை ஆணையம் (CAQM) மாசுபாட்டைச் சமாளிக்க தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் (Graded Response Action Plan (GRAP)) நிலை 1-ஐ செயல்படுத்தத் தூண்டியது. இந்த சூழலில், தரைமட்ட ஓசோன் (ground-level ozone) மற்றும் தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் (GRAP) பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.


முக்கிய அம்சங்கள் :


1. ஓசோனில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, மேல் வளிமண்டலத்தில் (upper atmosphere) உள்ளது. இது தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்கள் மற்றும் தரைமட்ட ஓசோனுக்கு எதிராக ஒரு கவசத்தை உருவாக்குகிறது. இதன் வெளிப்பாடு ஆஸ்துமா தாக்குதல்களின் நிலையை அதிகரிக்கக்கூடும். காற்றேற்ற விரிவு (emphysema) மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி (chronic bronchitis) போன்ற நுரையீரல் தொடர்பான நோய்களை அதிகரிக்கக்கூடும். மேலும், காற்றுப்பாதைகளில் வீக்கத்தை ஏற்படுத்தும்.


2. தரைமட்ட ஓசோன் (Ground-level ozone) நேரடியாக வெளியேற்றப்படுவதில்லை. ஆனால், நைட்ரஜன் ஆக்சைடுகள் (oxides of nitrogen (NOx)) மற்றும் ஆவியாகும் கரிம சேர்மங்கள் (volatile organic compounds (VOC)) ஒன்றுக்கொன்று வினைபுரியும் போது வெப்பமான மற்றும் வெயில் நாட்களில் உருவாகிறது. இந்த இரசாயனங்கள் கார்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வருகின்றன. தரைமட்ட ஓசோன் மாசுபாடு (Ground-level ozone pollution) முக்கியமாக நகர்ப்புறங்களை பாதிக்கிறது.


தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் (GRAP)


1. தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் (GRAP) என்பது ஒரு குறிப்பிட்ட வரம்பை அடைந்தவுடன் காற்றின் தரம் மேலும் மோசமடைவதைத் தடுக்க உதவும் அவசர நடவடிக்கைகளின் தொகுப்பாகும்.


2. தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் (GRAP) நிலை-1, AQI 'மோசமான' வரம்பில் இருக்கும்போது செயல்படுத்தப்படுகிறது. அதாவது, வரம்பு நிலையானது 201 முதல் 300 வரை.


காற்று தரக் குறியீடு (AQI) 'மிகவும் மோசமான' வரம்பை அடைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு நிலை-2 செயல்படுத்தப்படுகிறது. அதாவது வரம்பு நிலை 301 முதல் 400 வரை.


காற்று தரக் குறியீடு (AQI) 'கடுமையான' வரம்பை அடைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு நிலை-3 செயல்படுத்தப்படுகிறது. அதாவது வரம்பு நிலை 401 முதல் 450 வரை.


காற்று தரக் குறியீடு (AQI) 450-ஐ விட அதிகமாகச் செல்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு நிலை-4 செயல்படுத்தப்படுகிறது, அதாவது 'கடுமையான +' (severe +) வரம்பு நிலையைக் குறிக்கிறது.

3. புதிய நிலை செயல்படுத்தப்பட்டாலும் முந்தைய நிலைகளின் நடவடிக்கைகள் தொடரும். எடுத்துக்காட்டாக, நிலை-2 நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டாலும், நிலை-1 நடவடிக்கைகள் இன்னும் நடைமுறையில் இருக்கும்.


4. குறிப்பிடத்தக்க வகையில், தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் (GRAP) முதன்முதலில் ஜனவரி 2017-ல் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது. இது நவம்பர் 2016-ல் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் (CPCB) சமர்ப்பிக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் அமைந்தது.Knowledge Nugget: How is GRAP, Delhi-NCR’s action plan to combat rising air pollution relevant for UPSC Exam?


5. அறிவிப்பின்படி, தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தை (GRAP) செயல்படுத்தும் பணி தற்போது கலைக்கப்பட்டுள்ள தேசிய தலைநகர் பிராந்தியத்திற்கான (NCR), சுற்றுச்சூழல் மாசுபாடு (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) ஆணையத்திடன் (Environment Pollution (Prevention and Control) Authority) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த அதிகாரம் இப்போது கலைக்கப்பட்டுள்ளது. 2021 முதல், GRAP காற்று தர மேலாண்மை ஆணையத்தால் (Commission for Air Quality Management (CAQM)) செயல்படுத்தப்படுகிறது.

காற்றின் தரக் குறியீடு (AQI)Knowledge Nugget: How is GRAP, Delhi-NCR’s action plan to combat rising air pollution relevant for UPSC Exam?

1. மாசுபாடு குறித்த பொதுவான புரிதலை எளிதாக்க உதவும் வகையில், தூய்மை இந்தியா பிரச்சாரத்தின் (swachh Bharat campaign) ஒரு பகுதியாக, 2014-ம் ஆண்டு மத்திய அரசால் காற்றின் தரக் குறியீடு (AQI) தொடங்கப்பட்டது. மருத்துவ வல்லுநர்கள், காற்று தர நிபுணர்கள், கல்வியாளர்கள், "பரிந்துரைக் குழுக்கள் மற்றும் பிறரை உள்ளடக்கிய ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டு, IIT கான்பூருக்கு தொழில்நுட்ப ஆய்வு வழங்கப்பட்டது. IIT கான்பூரும் நிபுணர் குழுவும் காற்றின் தரக் குறியீடு (AQI)  திட்டத்தை பரிந்துரைத்தன.


2. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) கூற்றுப்படி, காற்றின் தரக் குறியீடு (AQI) பல்வேறு மாசுபடுத்திகளின் சிக்கலான காற்றின் தரநிலையின் தரவை ஒற்றை எண் (குறியீட்டு மதிப்பு), பெயரிடல் மற்றும் நிறமாக மாற்றுகிறது. இது பல்வேறு மாசுபாடுகளை அளவிடுகிறது. இந்த மாசுபடுத்திகளில் PM 10, PM 2.5, நைட்ரஜன்-டை-ஆக்சைடு, ஓசோன், கார்பன் மற்றும் பிற அடங்கும்.


3. காற்றின் தரக் குறியீட்டில் (AQI)  ஆறு வகைகள் உள்ளன. அதாவது 

  1. நல்லது (Good) (0-50)

  2. திருப்திகரமானது (Satisfactory) (51-100)

  3. மிதமான மாசுபாடு (Moderately polluted) (101-200)

  4. மோசம் (Poor) (201-300)

  5. மிகவும் மோசமானது (Very Poor) (301-400)

  6. கடுமையானது (Severe) (401-500)

4. PM 10 மற்றும் PM 2.5 மாசுபடுத்திகள் மிகவும் நுண்துகள் பொருள்கள் (PM), அவற்றுடன் வரும் இலக்கங்கள் அவற்றின் விட்டத்தைக் குறிக்கின்றன. எனவே, PM 10 மற்றும் PM 2.5 ஆகியவை முறையே 10 மற்றும் 2.5 மைக்ரான் விட்டத்தைவிட சிறியவை. துகள்கள் எவ்வளவு நுண்ணியதாக இருக்கிறதோ, அவற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வது மிகவும் கடினமாகிறது.Knowledge Nugget: How is GRAP, Delhi-NCR’s action plan to combat rising air pollution relevant for UPSC Exam?


5. அவற்றின் அளவு காரணமாக, PM 2.5 துகள்கள் மூக்கு மற்றும் தொண்டையை எளிதில் கடந்து இரத்த ஓட்ட அமைப்பிற்குள் நுழைய முடியும். இந்த துகள்கள் ஆஸ்துமா, மாரடைப்பு, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் பிற சுவாசப் பிரச்சினைகள் போன்ற நாள்பட்ட நோய்களுக்கும் வழிவகுக்கும்.

மாசுபடுத்திகள்

மூல

தாக்கம்

நைட்ரஜன்-டை-ஆக்சைடு (NO2)

        வாகனங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து வெளியேறும் உமிழ்வுகள் உள்ளிட்ட ஆதாரங்களைக் கொண்ட எரிபொருளை எரித்தல்.

            அதிக அளவு NO2-க்கு குறுகிய கால வெளிப்பாடு சுவாச நோய்களை அதிகரிக்கக்கூடும். நீண்டகால வெளிப்பாடு ஆஸ்துமாவின் வளர்ச்சிக்கு பங்களிக்கக்கூடும் மற்றும் சுவாச நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகக்கூடிய தன்மையை அதிகரிக்கக்கூடும்.

ஓசோன் (O3)

    சூரிய ஒளியின் முன்னிலையில் வளிமண்டல மாசுபடுத்திகளின் எதிர்வினையால் மேற்பரப்பு ஓசோன் மாசுபாடாக உருவாகிறது.

        நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கள் (Chronic Obstructive Pulmonary Diseases (COPD)) மற்றும் இருதய மற்றும் சுவாசக் கோளாறுகளால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை ஆகியவற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சல்பர்-டை-ஆக்சைடு (SO2)

        மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பிற தொழில்துறை வசதிகளால் புதைபடிவ எரிபொருட்களை எரிக்கின்றன. கூடுதல் ஆதாரங்கள் தொழில்துறை செயல்முறைகள் மற்றும் எரிமலைகள் போன்ற இயற்கை மூலங்களும் பங்களிக்கின்றன.

        இருதய அமைப்புக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் சுவாச நோய்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். SO2 மற்ற சேர்மங்களுடன் வினைபுரிந்து துகள்களை உருவாக்குகிறது.

அம்மோனியா (NH3)

    உரப் பயன்பாடு அதிகரிப்பதோடு, கால்நடைக் கழிவுகளின் பெரிய பங்களிப்பும் உலகின் மிக உயர்ந்த வளிமண்டல அம்மோனியா செறிவுகளுக்கு வழிவகுத்துள்ளது.

        அதிகப்படியான அம்மோனியா தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் காற்று மற்றும் நீரின் தரத்தை குறைக்கிறது.

லீட் (பிபி)

    இது பூமியின் மேலோட்டத்தில் காணப்படும் இயற்கையாகவே நிகழும் ஒரு நச்சு உலோகமாகும். இது சுரங்கம், உருக்குதல், உற்பத்தி மற்றும் மறுசுழற்சி நடவடிக்கைகள் மூலம் வெளிப்படும்.

      கடுமையான ஈய நச்சுத்தன்மையிலிருந்து தப்பிப்பிழைக்கும் குழந்தைகள் நிரந்தர அறிவுசார் குறைபாடு மற்றும் நடத்தை கோளாறுகளுடன் விடப்படலாம்.

கார்பன் மோனாக்சைடு (CO)

      மரம், நிலக்கரி மற்றும் பெட்ரோல் போன்ற கார்பன் கொண்ட எரிபொருள் எரிக்கப்படும்போது இது வெளியேறுகிறது.

        CO அளவுகள் போதுமான அளவு அதிகமாக இருந்தால், ஒருவர் மயக்கமடைந்து இறக்க நேரிடும். நீண்டகால வெளிப்பாடு இதய நோய் அபாயத்தை அதிகரிப்பதோடு தொடர்புடையது.


தேசிய தலைநகர் பிராந்தியம் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் காற்று தர மேலாண்மை ஆணையம் (Commission for Air Quality Management(CAQM))

1. CAQM சட்டம், 2021-ன் கீழ் CAQM உருவாக்கப்பட்டது. இந்த சட்டம் ஏப்ரல் 13, 2021 அன்று அமலுக்கு வந்தது. இந்த அமைப்பு காற்றின் தரத்தை கண்காணித்து, தேசிய தலைநகர் பிராந்தியம் (NCR) மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் காற்று தர குறியீடு தொடர்பான ஒருங்கிணைப்பு, ஆராய்ச்சி, சிக்கல் அடையாளம் மற்றும் தீர்வுகளை மேம்படுத்த செயல்படுகிறது.


2. பிராந்தியத்தில் காற்றின் தரத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் நடவடிக்கைகளை எடுக்கவும், வழிகாட்டுதல்களை வழங்கவும், புகார்களைப் பெறவும் காற்று தர மேலாண்மை ஆணையத்துக்கு (CAQM) அதிகாரம் உள்ளது.


3. ஆணையத்திற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாசுக் கட்டுப்பாடு துறையில் 15 ஆண்டுகளுக்குக் குறையாத அனுபவம் அல்லது 25 ஆண்டுகளுக்குக் குறையாத நிர்வாக அனுபவம் கொண்ட முழுநேரத் தலைவர் இருக்க வேண்டும்.

Original article:

Share: