அகதிகள் மற்றும் ஊடுருவல்காரர்கள்: இந்தியாவின் அகதி சமூகத்திற்கான வெவ்வேறு அளவுகோல்கள் குறித்து . . .

 இந்தியாவிற்கு பாகுபாடற்ற (non-discriminatory) அகதிகள் கொள்கை ஆவணம் தேவை.


ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அகதிகளுக்கும் ஊடுருவல்காரர்களுக்கும் இடையே வேறுபாடு காண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். இது சரியானதாக இருந்தாலும், அதிகாரத்தில் உள்ளவர்கள் வேறுபாட்டைக் கண்டறிய நடுநிலையான அளவுகோல்களைப் (objective parameters) பயன்படுத்துவதில்தான் பிரச்சனை உள்ளது. சரியான கொள்கையும் சட்ட கட்டமைப்பும் இருக்கும் இடத்தில், சில நேரங்களில் பிரச்சனைகள் எழக்கூடும். அரசாங்க அதிகாரிகளின் புரிதல் நிலையும் இதில் பங்கு வகிக்கிறது. 1951ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளின் நிலை தொடர்பான மாநாட்டிலும் (UN Convention on the Status of Refugees), 1967-ஆம் ஆண்டு நெறிமுறையிலும் இந்தியா கையெழுத்திடவில்லை. இதன் காரணமாக, அகதி யார் என்பதை வரையறுக்கும் ஒரு தெளிவான சட்டம் இந்தியாவில் இல்லை. இது சீரற்ற முடிவுகளுக்கு வழிவகுக்கும். 


மார்ச் 2025 இறுதி வரை, குடியுரிமைச் சட்டம் 1955 (Citizenship Act) மற்றும் கடவுச்சீட்டு சட்டம் 1967 (Passports Act) தவிர, மூன்று சட்டங்கள் 1946-ஆம் ஆண்டு வெளிநாட்டவர் சட்டம் (Foreigners Act), 1939-ஆம் ஆண்டு வெளிநாட்டவர் பதிவு சட்டம் (Registration of Foreigners Act) மற்றும் 1920ஆம் ஆண்டு கடவுச்சீட்டு (இந்தியாவிற்குள் நுழைவு) சட்டம், (Passport (Entry into India) Act)) அகதிகள் உட்பட வெளிநாட்டு குடிமக்களை கையாள பயன்படுத்தப்பட்டன. ஏப்ரல் முதல், குடியேற்ற மற்றும் வெளிநாட்டினர் சட்டம், சுதந்திரத்திற்கு முந்தைய மூன்று சட்டங்களை மாற்றியது மற்றும் 2000 ஆம் ஆண்டின் குடியேற்ற (பயணிகள் பொறுப்பு) (Immigration (Carriers’ Liability) Act, 2000) சட்டத்தை உள்ளடக்கியது. 


இது சட்ட கட்டமைப்பை ஒழுங்குபடுத்திய போதிலும், அகதிகள் கொள்கை ஆவணம் இல்லாதது இந்தியாவில் உள்ள அகதிகள் சமூகத்திற்கு வெவ்வேறு அளவுகோல்களை ஏற்படுத்தியுள்ளது. இது சட்டக் கட்டமைப்பை நெறிப்படுத்தியிருந்தாலும், இந்தியாவிடம் தெளிவான அகதிக் கொள்கை இல்லாததால், வெவ்வேறு அகதிக் குழுக்கள் வித்தியாசமாக நடத்தப்படுகின்றன. 


2014-ஆம் ஆண்டில், 63,000 திபெத்திய அகதிகளுக்கு உதவித் திட்டம் இருந்தது. ஆனால், 90,000 இலங்கைத் தமிழர்களுக்கு அத்தகைய ஆவணம் இல்லை. ஜூன் 2023-ல், மியான்மர், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள் உட்பட இந்தியாவில் 2.11 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் இருந்தனர். ஒரு அகதியிடம் முறையான ஆவணங்கள் இல்லையென்றால் அல்லது அதிக காலம் தங்கியிருந்தால், அவர்கள் சட்டத்தின்கீழ் சட்டவிரோத குடியேறிகளாகக் (illegal migrant) கருதப்படுவார்கள். அவர்கள் ஊடுருவல்காரர்கள் (infiltrator) என்றுகூட அழைக்கப்படலாம். இதன் காரணமாக, அப்பாவி மற்றும் அமைதியான அகதிகள் கூட பிரச்சனையை சந்திப்பார்கள்.


2019ஆம் ஆண்டு குடியுரிமை (திருத்த) சட்டம், வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஆறு மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டியதால் பலர் இந்த சட்டத்தை விமர்சித்தனர். இஸ்லாமியர்கள், இலங்கை தமிழர்கள் அல்லது ரோஹிங்கியாக்கள் தங்கள் நாடுகளில் சிறுபான்மையினராக இருந்தாலும், இந்த சட்டத்தில் அவர்களை சேர்க்கவில்லை. ஆனால். கடந்த மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஆவணமற்ற அல்லது காலாவதியாகி தங்கியிருக்கும் தமிழ் அகதிகள், அதிகாரிகளிடம் தங்களைப் பதிவு செய்து கொண்டவர்கள், ஜனவரி 9, 2015 அன்று அல்லது அதற்கு முன்னர் இந்தியாவில் தஞ்சம் புகுந்திருந்தால், குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் (Immigration and Foreigners Act) தண்டனை விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டனர். மற்ற குழுக்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், மதத்தின் அடிப்படையில் மக்களை ஒதுக்கி வைக்கும் நடவடிக்கைகள் இன்னும் மாறவில்லை. பொதுவாக அகதிகளுக்கு அமைதியாக உதவுவது தவறல்ல. ஆனால், அது அனைவருக்கும் நியாயமான, தெளிவான மற்றும் சமமான முறையில் செய்யப்பட வேண்டும்.


Original article:

Share: