கடந்த வாரம், உச்ச நீதிமன்றம் தனது முடிவை ஏப்ரல் 2021 முதல் மறுபரிசீலனை செய்வதாக அறிவித்தது. பெரிய இந்திய கானமயில் (Great Indian Bustard (GIB)) வாழ்விடத்தில் நிலத்தடியில் மின் கம்பிகளை புதைப்பது குறித்த முடிவு ஆகும். இந்த உத்தரவை, நீண்ட தூரத்திற்கு அமல்படுத்துவதில் ஒன்றிய அரசுக்கு சிரமம் ஏற்பட்டது.
பெரிய இந்திய கானமயில் (GIB) பாதுகாப்பதற்கான வழிகளைக் கண்டறிய நீதிமன்றம் ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்தது. மின் இணைப்புகளை பூமிக்கு அடியில் புதைக்க வேண்டிய முக்கியமான பகுதிகளை இந்த குழு அடையாளம் காணும் அடிப்படையில் அமைக்கப்பட்டது.
இவற்றில் 150க்கும் குறைவான பெரிய, தீக்கோழி போன்ற பறவைகள் காடுகளில் விடப்பட்டுள்ளன. அவை மிகவும் ஆபத்தான இந்திய கானமயில் (GIB) என்று அழைக்கப்படுகின்றன. அவர்கள் மேற்கு இந்தியாவில் உள்ள கட்ச் மற்றும் தார் பாலைவனங்களில் வாழ்கின்றனர். ஆனால், அங்கு ஏராளமான மின்கம்பிகள் ஆங்காங்கே கிடப்பதால், அபாயகரமான நிலை உள்ளது. இந்த பகுதிகள் சூரிய மற்றும் காற்றாலை ஆற்றல் திட்டங்களுக்கான பிரதான இடங்களாகும், இது ஒவ்வொரு ஆண்டும் அதிக மின் இணைப்புகளை நிறுவ வழிவகுக்கிறது.
ராஜஸ்தானின் கெட்லோய் கிராமத்தில் (Rajasthan’s Khetloi village) இறந்த பெரிய இந்திய கானமயில் (GIB) கண்டுபிடிக்கப்பட்டது. 2020 இல் இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் (Wildlife Institute of India (WII)) மதிப்பீட்டின்படி, மின் கம்பிகளால் ஏற்படும் நான்கு இறப்புகள் கூட 20 ஆண்டுகளுக்குள் இனங்கள் அழிந்து போக வழிவகுக்கக் கூடும். (புகைப்படம்: WII/Bipin CM). மின் கம்பிகளால் பல பல ஆண்டுகளுக்கு முன், மின்கம்பிகளில் பல பறவைகள் இறந்தன. அப்போது உச்ச நீதிமன்றம், பறவைகள் முக்கியமான பகுதிகளில் மின்கம்பிகள் பூமிக்கடியில் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டது.
மின் கம்பிகள் ஏன் கானமயில்களைக் கொல்கின்றன
மின்கம்பிகள் அனைத்து பறக்கும் பறவைகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. 2020 ஆம் ஆண்டில், இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) நடத்திய ஆய்வில், ராஜஸ்தானில் உள்ள பெரிய இந்திய கானமயில் (GIB) வாழ்விடத்தின் 4,200 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த சுமார் 84,000 பறவைகள் மின் கம்பிகளால் கொல்லப்படுகின்றன.
பெரிய இந்திய கானமயில் (GIB) அவற்றின் வரையறுக்கப்பட்ட பார்வை மற்றும் பெரிய அளவு காரணமாக இன்னும் அதிக ஆபத்தில் உள்ளன. தலையைச் சுற்றி பார்க்கக்கூடிய சில பறவைகளைப் போலல்லாமல், பெரிய இந்திய கானமயில்கள் (GIB) மற்றும் ராப்டர்கள் (raptors) போன்ற பிற பறவைகள் அவற்றின் தலைக்கு மேலே குருட்டுப் புள்ளிகளைக் கொண்டுள்ளன. இதன் பொருள் அவர்கள் முன்னோக்கி பறக்கும்போது மின் கம்பிகளைக் காண முடியாது. அதனால், அவற்றைத் தவிர்ப்பது கடினம்.
மார்ச் 2021 இல் நீதிமன்ற பிரமாணப் பத்திரத்தில், பெரிய இந்திய கானமயில்கள் (GIB) தொலைதூரத்திலிருந்து மின் இணைப்புகளைக் கண்டுபிடிக்க முடியாது என்றும், அவை பெரிய பறவைகள் என்பதால், அவை நெருக்கமாக இருக்கும்போது இணைப்புகளை எளிதில் தவிர்க்க முடியாது என்றும் மின்சார அமைச்சகம் விளக்கியது.
2020 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மின் இணைப்பு தொடர்பான வருடத்திற்கு 4 இறப்புகள் 20 ஆண்டுகளுக்குள் பெரிய இந்திய கானமயில்கள் (GIB) அழிவுக்கு வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டது. இந்த அவசரத்தை உணர்ந்த உச்ச நீதிமன்றம், 2021 ஏப்ரலில், செலவைப் பொருட்படுத்தாமல் மின் கம்பிகளை பூமிக்கடியில் புதைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஒன்றிய அரசின் வாதம்
இந்த பிப்ரவரியில் உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட ஒரு ஆவணத்தில், 66 கிலோ வாட் மற்றும் அதற்கு மேற்பட்ட மின் இணைப்புகளை புதைப்பது அதிக மின்சாரத்தை நகர்த்துவதற்கு நடைமுறையில் சாத்தியமில்லை. ஏனெனில், இது ஆற்றல் இழப்பு, பராமரிப்பு சிக்கல்கள், அதிக கேபிள் இணைப்புகள், நீண்ட நேரம் தேவைப்படும் மற்றும் பாதுகாப்பு கவலைகள் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று ஒன்றிய அரசு விளக்கியது.
அடையாளம் காணப்பட்ட பகுதியில் உள்ள அனைத்து மின் இணைப்புகளையும் புதைப்பதற்கான செலவு மிக அதிகமாக இருக்கும் என்றும், பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்றும் ஒன்றிய அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த செலவு, மற்ற தொடர்புடைய செலவுகளுடன் சேர்ந்து, குறிப்பிடத்தக்கதாகவும் பொருத்தமற்றதாகவும் இருக்கும் என்று அவர்கள் கூறினர்.
கூடுதலாக, ராஜஸ்தான் மற்றும் குஜராத் போன்ற இடங்களில் அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கும். மேலும், காலநிலை மாற்றம் தொடர்பான இந்தியாவின் சர்வதேச கடமைகளை பூர்த்தி செய்வதற்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம் என்று ஆவணம் கூறியுள்ளது.
களத்தில், ஒரு உண்மை சோதனை
மார்ச் 5, 2020 அன்று, மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மக்களவையில் 220-400 கிலோ வாட் மின்னழுத்தத்தின் நிலத்தடி கேபிள் அமைப்புகள் நவீன மின் பரிமாற்ற உள்கட்டமைப்புக்கு முக்கியம் என்று கூறினார்.
நிலத்தடி கேபிள்கள் அதிக விலை மற்றும் மேல்நிலைக் கம்பிகளை விட அதிக சிறப்பு உபகரணங்கள் தேவைப்படுவதால், அவை குறிப்பிட்ட சூழ்நிலைகளில் குறுகிய தூரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்று அமைச்சர் கூறினார். அவரது பதிலில் 54 நிலத்தடி மின் இணைப்புகளின் பட்டியல் இருந்தது. மிக நீளமானது 320KV பாதை 32 கி.மீ ஆகும்.
உச்ச நீதிமன்றம் தனது 2021 உத்தரவில், இரண்டு வகையான மின் இணைப்புகளை அடையாளம் கண்டது: பறவை திசைமாற்றிகளை (bird diverters) நிறுவும் மற்றும் ஒரு வருடத்திற்குள் சாத்தியமென்றால் நிலத்தடி இணைப்புகளாக மாற்றப்படும். ராஜஸ்தானில், மொத்தம் 1,342 கி.மீ நீளமுள்ள 25 டிரான்ஸ்மிஷன் லைன்கள் பறவை திசைமாற்றிகளை நிறுவ அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், 104 கி.மீ நீளமுள்ள நான்கு 33 கிலோ வாட் லைன்கள் மட்டுமே பூமிக்கு அடியில் அமைக்கப்பட உள்ளன. பறவை திசைமாற்றிகளை (bird diverters) நிறுவுவதற்கும் இந்த பாதைகளை பூமிக்கு அடியில் அமைப்பதற்கும் சுமார் ரூ.287.16 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இது அதிக செலவு குறைந்த திசைதிருப்பல்களுடன் சுமார் ரூ .150 கோடியாக குறைக்கப்படலாம்.
செலவு குறித்த ஒன்றியத்தின் கவலைகள் இருந்தபோதிலும், 104 கி.மீ.க்கு ரூ.59 கோடி பட்ஜெட் கொண்ட ராஜஸ்தானில் உள்ள நான்கு 33 கிலோ வாட் பாதைகளில் எதுவும் உச்சநீதிமன்றத்தின் 2021 உத்தரவுக்குப் பிறகு பூமிக்கடியில் போடப்படவில்லை. இந்த நேரத்தில், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு குழு, தார் பாலைவனத்தில் உள்ள பெரிய இந்திய கானமயில் நிலப்பரப்பில் மொத்தம் 2,356 கி.மீ புதிய மின் இணைப்புகளுக்கான விண்ணப்பங்களை மதிப்பீடு செய்தது. மேலும், மேல்நிலை இடுவதற்கு 98% நீளத்திற்கு ஒப்புதல் அளித்தது.
பெரிய இந்திய கானமயில் (GIB) எதிர்கொள்ளும் பிற அச்சுறுத்தல்கள்
பெரிய இந்திய கானமயில்களுக்கு (GIB) மின் இணைப்புகள் மட்டுமே ஆபத்து அல்ல. தார் பாலைவனத்தில் தெரு நாய்களும் ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளன. 2017 ஆம் ஆண்டில், பாலைவன தேசிய பூங்காவில் (Desert National Park) சிங்காரா மான்கள் மீதான மூன்றில் ஒரு பங்கு தாக்குதல்களுக்கு இந்த நாய்கள் காரணமாக இருந்தன.
பெரிய இந்திய கானமயில்கள் (GIB) எப்போதாவது வேட்டையாடப்பட்டாலும், பெரிய அச்சுறுத்தல் விவசாயப் பகுதிகளில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளிலிருந்து வருகிறது. புல்வெளிகளின் இழப்பு, குறிப்பாக பெரிய இந்திய கானமயில்கள் (GIB) கூடுகட்டும் இடம் மற்றும் உள்ளூர் சமூகங்களின் ஆதரவு குறைந்து வருவதும் கவலையளிக்கின்றன.
கூண்டிலிட்டு இனப்பெருக்கம் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாத்தல் போன்ற திட்டங்கள் மூலம் பெரிய இந்திய கானமயில்களைப் (GIB) பாதுகாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என்று ஒன்றிய அரசு தனது ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது. ஆரம்பத்தில் சிரமங்கள் இருந்தபோதிலும், ஜெய்சால்மர் மாவட்டத்தில் இனப்பெருக்க முயற்சிகள் வெற்றி பெற்றன. இரண்டு பெரிய இந்திய கானமயில்கள் (GIB) முட்டையிட்டன மற்றும் ஒன்று மார்ச் 2023 இல் செயற்கை அடைகாத்தல் உதவியுடன் குஞ்சு பொரித்தது.
இருப்பினும், தீங்கு விளைவிக்கும் உள்கட்டமைப்பு இல்லாமல் பெரிய இந்திய கானமயில்களுக்கு (GIB) பாதுகாப்பான வாழ்விடங்களை உருவாக்க முடிந்தால் மட்டுமே கூண்டிலடைக்கப்பட்ட இனப்பெருக்கம் உதவும். ராஜஸ்தான் மாநில வனவிலங்கு வாரியத்தின் (Rajasthan State Wildlife Board) முன்னாள் உறுப்பினர் ஒருவர், பறவை திசைதிருப்பல்கள் முற்றிலும் பயனுள்ளதாக இல்லாததால், மின் கேபிள்களை புதைப்பது முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நிலத்தடி சாத்தியமில்லை என்றால், உயர்தர டைவர்ட்டர்களில் முதலீடு செய்து அவற்றை நன்கு பராமரிப்பது முக்கியம். இந்த முயற்சிகளுக்கு போதுமான ஈடுசெய்யும் காடு வளர்ப்பு மற்றும் வனவிலங்குகளின் வாழ்விடத்தை மேம்படுத்துதல் (compensatory afforestation and improvement of wildlife habitat(CAMPA)) நிதி உள்ளது.
பசுமை ஆற்றல் Vs வனவிலங்குகள் எனபதல்ல
பாலைவன தேசிய பூங்காவின் (DNP) வன அதிகாரி ஒருவர் வளர்ச்சி இலக்குகளுக்காக ஒரு இனத்தின் உயிர்வாழ்வை தியாகம் செய்வதற்கு எதிராக எச்சரித்தார். புல்வெளிகளின் முதன்மை இனம் மற்றும் ராஜஸ்தானின் மாநில பறவையான பெரிய இந்திய கானமயிலை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பின்தொடர்வதில் GIB இன் சாத்தியமான இழப்பை புறக்கணிக்க வேண்டாம் என்று அவர் எச்சரித்தார்.
இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் (WII) ஆராய்ச்சியாளர் ஒருவர் பாலைவனத்தில் அதிகப்படியான உள்கட்டமைப்பு வளர்ச்சியின் அபாயத்தை எடுத்துரைத்தார். பாலைவனத்தின் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் சூரிய மற்றும் காற்றாலை மின் திட்டங்களுக்கு எவ்வளவு நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என்பதை கவனமாக பரிசீலிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
மார்ச் 21 அன்று உச்ச நீதிமன்றம் தனது சமீபத்திய தீர்ப்பில், மின் கம்பிகளை புதைக்கும் திட்டத்தை மாற்றியமைக்க பரிந்துரைத்தது. 88,636 சதுர கிலோமீட்டர் சாத்தியமான GIB வாழ்விடத்தை உள்ளடக்குவதற்கு பதிலாக, ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் 13,696 சதுர கிலோமீட்டர் முன்னுரிமை பகுதிகளில் கவனம் செலுத்தப்படும். இருப்பினும், மனுதாரர் எம்.கே.ரஞ்சித்சிங், குறைந்தது 20,890 சதுர கிலோமீட்டர் GIB வாழ்விடங்களை மேல்நிலை இணைப்புகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு தனது பரிந்துரைகளை வழங்க ஜூலை 31 வரை அவகாசம் உள்ளது.
Original article: