இஸ்லாமாபாத்தில் ஒரு துவக்கம்

 வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்திற்கான பயணம் இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒரு படியாகும். இது கணிசமான பேச்சுவார்த்தைகளுக்கும் உறுதியான வெற்றிகளுக்கும் வழிவகுக்கும். 


இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (Shanghai Cooperation Organisation (SCO)) அரசுத் தலைவர்கள் கூட்டத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எந்த முன்னேற்றமும் ஏற்படாதது ஆச்சரியத்தை அளிக்கிறது.  வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், எல்லை தாண்டிய தனது பயணம் முக்கியமாக பலதரப்பு சந்திப்புக்காகவே என்று தெளிவாகக் கூறினார். 


ஒன்பது ஆண்டுகளில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஒருவரின் முதல் வருகை இதுவாகும். மேலும், இருதரப்பு உறவை மேம்படுத்துவதில் குறைவான தொடர்பு இருந்தது. எவ்வாறாயினும், பாகிஸ்தான் தொடர்பான ஒவ்வொரு வளர்ச்சிக்கும், அது நேர்மறையாக இருந்தாலும் சரி அல்லது எதிர்மறையாக இருந்தாலும் சரி, இந்தியா பதிலளிக்கும் என்று ஜெய்சங்கர் சமீபத்திய வாரங்களில் குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலையில், கடந்த ஆண்டு கோவாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் நடந்தது போன்ற குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எதுவும் இல்லை. இந்தியா ஒரு கண்ணியமான நிலையை பராமரித்தது, ஜெய்சங்கர் யூரேசியன் கூட்டத்திலேயே இந்தியா என்ன எதிர்பார்க்கிறது என்பதை கோடிட்டுக் காட்டினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) அதன் சாசனக் கடமைகளை நிறைவேற்றவில்லை.  குறிப்பாக, பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிரான அதன் உண்மையான இலக்குகள் குறித்து அவர் சுட்டிக்காட்டினார். சீனப் பிரதமர் லீ கியாங் தனது உரையில், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட கூட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.


இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் இந்தியப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது (SCO), பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஊக்குவித்த சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட பயணத்தில் கட்டமைப்பை நிறுவுவதற்கு மிகவும் தேவையானது ஆகும்.

 

இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்பு குறைவாக இருந்தாலும், அவை நல்ல முறையிலேயே பாராமரிக்கப்பட்டு வந்தது. வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் அவரது பாகிஸ்தான் பிரதமர் இஷாக் தர் ஆகியோருக்கு இடையே மகிழ்ச்சியான பரிமாற்றங்கள் மற்றும் சுருக்கமான உரையாடல்கள் இருந்தன. இது முறைசாரா அமைப்புகளில் நிகழ்ந்தது. ஆனால், கணிசமான தகவல்கள்  எதுவும் வெளிவரவில்லை. இது இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒரு நல்ல தொடக்கமாக பார்க்கப்படுகிறது.


ஸ்ரீநகரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் பதவியேற்ற போது முற்றிலும் தற்செயல் நிகழ்வாக இது நடந்துள்ளது. இந்த வளர்ச்சியானது ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டிற்கு அப்பால் உள்ள புதிய சூழ்நிலைகளை ஏற்றுக்கொள்ள  ஊக்குவிக்க வேண்டும். இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியாக புதிதாக தொடங்கக்கூடிய திட்டங்கள் ஏராளமாக  உள்ளன.  அவற்றில் வர்த்தகம் மற்றும் கிரிக்கெட் ஆகியவை அடங்கும்.  இஸ்லாமாபாத்தில் ஜெய்சங்கரின் முறைசாரா உரையாடல்களில் கிரிக்கெட் உறவுகளின் மறுமலர்ச்சி குறிப்பிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மிகவும் குறைவான சர்ச்சைக்குரிய பிரச்சினை மற்றும் வர்த்தகத்துடன் இணைந்து, இருதரப்பு உறவுகளை புத்துயிர் பெறுவதற்கு மேலும் அளவீடு செய்யப்பட்ட அணுகுமுறைக்கு வழிவகுக்கும்.


இரு நாட்டின் உறவுகளில் இயல்பான தன்மையின் மேம்பாட்டிற்கு இது ஒரு நல்ல தொடக்கமாகும்.  மேலும், இவை கணிசமான உரையாடல்களுக்கும் உறுதியான ஆதாயங்களுக்கும் வழிவகுக்கும்.




Original article:

Share:

குடியுரிமையும் அதன் அதிருப்திகளும்

 குடியுரிமைச் சட்டத்தின் 6A பிரிவை உச்ச நீதிமன்றம் சரிபார்த்துள்ளது வரவேற்கத்தக்கது மற்றும் அசாமில் இந்த விதி மீதான விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.


குடியுரிமைச் சட்டம் (Citizenship Act), 1955 இன் பிரிவு 6A மீதான 4-1 தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் பல கேள்விகளைக் கருத்தில் கொண்டது. இந்தக் கேள்விகள் அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் வரையிலானவை. இருந்தபோதிலும், நீதிமன்றம் பிரிவு 6A க்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. 


இந்த தீர்ப்பு பல ஆண்டுகளாக அசாமில் பிரச்சனையாக இருந்த ஒரு பெரிய விவாதத்திற்கு தீர்வு காணும் என்று நம்பலாம். ஜனவரி 1, 1966-ஆம் ஆண்டு அல்லது அதற்குப் பிறகும், மார்ச் 25, 1971-ஆம் ஆண்டுக்கு முன்பும் அசாமிற்கு  வந்தவர்கள் 10 வருட இடைவெளிக்குப் பிறகு இந்தியக் குடிமக்களாகப் பதிவு செய்ய பிரிவு 6A அனுமதிக்கிறது.  1985-ஆம் ஆண்டு அசாம் ஒப்பந்தம் (Assam Accord) கையெழுத்தான பிறகு இந்தப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது.  இருப்பினும், இது ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக இருந்து. கிளர்ச்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தீவிரவாத குழுக்களைத் (militant groups) தூண்டியது.


வழக்கின் பெரும்பான்மையான பார்வையானது, புவிசார் அரசியல் சூழலில் ஏற்பாட்டை சரியாக வைத்துள்ளது. குடியுரிமைச் சட்டத்தில் அசாம் தொடர்பான விதிவிலக்கான பிரிவை நாடாளுமன்றம் உருவாக்க வழிவகுத்த அரசியல் சூழ்நிலைகளையும் அது ஆய்வு செய்தது. இந்த விதி அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகும் மற்றும் அசாமின் சமூக மற்றும் கலாச்சார இயக்கவியலில் சட்டவிரோத இடம்பெயர்வு மற்றும் அதன் தாக்கத்தை நிவர்த்தி செய்வதற்கு நிர்வாகத்திற்கு அவசியமானது என்று நீதிமன்றம் கூறியது.


அசாமில் பல ஆண்டுகளாக இடம்பெயர்வு ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக உள்ளது.  தேயிலை தோட்டங்களுக்கு தொழிலாளர்களை வழங்கவும், குறைந்த அளவிலான நிர்வாக வேலைகளை செய்யவும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அசாமிற்கு குடிபெயர்ந்தனர். 


1947-ஆம் ஆண்டில் நடந்த பிரிவினையானது கிழக்கு பாகிஸ்தானிலிருந்து மக்கள் வெளியேற வழிவகுத்தது. பிந்தைய ஆண்டுகளில், கிழக்கு பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம், குறிப்பாக 1971-ஆம் ஆண்டில் நடைபெற்ற  போர், ​​பிரம்மபுத்திராவின் மேற்பகுதியில் இருந்து அசாமின் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்வதை பாதித்தது.  இந்த இடபெயர்வு கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் எழுச்சி பற்றிய அச்சத்தை எழுப்பியது. 


மேலும், பல புலம்பெயர்ந்தோர் வாக்காளர்களாக பதிவு செய்து அரசியல் அதிகாரம் பெற்றனர். இந்தப் பின்னணியானது 1979-ஆம் ஆண்டில் தொடங்கிய அசாம் இயக்கத்திற்கு (Assam Movement) வழிவகுத்தது.  1983-ஆம் ஆண்டில் நடந்த தேர்தல்,  வன்முறை மற்றும் மோசமான வாக்குப்பதிவைக் கண்டன. இந்த வன்முறை போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசை கட்டாயப்படுத்தியது.


 இது அசாம் ஒப்பந்தத்திற்கு (Assam Accord) வழிவகுத்தது.   இந்த ஒப்பந்த்தின் படி மார்ச் 25, 1971-ஆம் ஆண்டு, கிழக்கு பாகிஸ்தான்/வங்கதேசத்திலிருந்து குடியேறியவரை இந்தியாவின் வாக்காளர் பட்டியல் மற்றும் குடியுரிமை ஆகியவற்றில் சேர்ப்பதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. பிரிவு 6A இந்த வாக்குறுதியை முறைப்படுத்தியது. உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலுடன், மார்ச் 25, 1971-ஆம் ஆண்டுக்குப் பிறகு அசாமில் நுழைந்த நபர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாகக் கருதப்படுவார்கள். மேலும், அவர்களை நாடு கடத்துவதும் தொடங்கும். 


நீதிபதி ஜே.பி. பர்திவாலா இந்த விதி சட்டவிரோத குடியேற்றத்தை ஊக்குவிப்பதாக வாதிட்டார். வெளிநாட்டவர்களுக்கு எதிரான போராட்டத்தின் போது அசாமில் நிலவும் சூழ்நிலைக்கு அரசியல் தீர்வு தேவை என்றும், மத்திய அரசு அசாம் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் கூறினார். பின்னர், இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்றம் வழிவகை செய்தது. இந்த செயல்முறையை பின்பற்றுவது சரியானது. மேலும், அசாமில் உள்ள சூழ்நிலைகளின் அடிப்படையில் சட்டத்தின் விதிவிலக்கான தன்மை நியாயமானது.


உச்ச நீதிமன்றத்தின் ​​பிரிவு 6A சரிபார்ப்பு, தற்போது வழக்கில் உள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (Citizenship Amendment Act (CAA)) விளக்கத்தை பாதிக்கலாம். இந்த சூழலில், பிரிவு 6A ஒரு மதச்சார்பற்ற ஏற்பாடு என்பதை நினைவில் கொள்வது அவசியம். இது அசாமின் தனித்துவமான வரலாற்று அனுபவத்தில் வேரூன்றியது மற்றும் அவர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் யாரையும் விலக்கவில்லை.


 மக்கள்தொகை மாற்றங்கள், இயற்கை வளங்கள் மற்றும் பொது பொருட்கள் மீதான அழுத்தம் பற்றிய கவலைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த பிரிவு எழுந்தது.  இதற்கு நேர்மாறாக, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் முஸ்லீம் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதன் மூலம் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) ஒரு வகுப்புவாத வேறுபாட்டை உருவாக்குகிறது.  இந்த விவாதங்கள் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான உணர்வுகளை ஊக்குவிப்பதில்லை என்பதும் முக்கியமானது. ஏனெனில் சமூகங்களும், கலாச்சாரங்களும் இடம்பெயர்வுகளின் பயனாளிகளாக இருந்துள்ளன.




Original article:

Share:

தலைமைத்துவத்தின் மரபு : டாடா குடும்பத்தின் கதை -நிகிதா மோஹ்தா

 டாடா குழுமம் தலைமுறை தலைமுறையாக வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் தொழில்துறை மற்றும் சமூக நிலப்பரப்பை வடிவமைத்துள்ளது. டாடா குழுமம், ஜாம்செட்ஜி டாடா முன்னோடியாக  தொடங்கிய ஆலை முதல் ஜேஆர்டி டாடா விமானப் போக்குவரத்து வரை பரந்த மைல்கற்களை எட்டியுள்ளது. ரத்தன் டாடா உலகளாவிய கையகப்படுத்துதலில் கவனம் செலுத்தினார். டாடா குழுமம் மக்கள் சேவைக்காக ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் முன்னேற்றமும் அடைந்துள்ளது.


அக்டோபர் 8-ம் தேதி, நாஸ் பர்வீன் விமானத்தில் புது டெல்லியிலிருந்து தனது சொந்த ஊரான ஜாம்ஷெட்பூருக்கு பயணம் மேற்கொண்டார். தற்போது, குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக இணைவதற்காக அவர் மகிழ்ச்சியாக இருந்தார். இருப்பினும், ​​​​அவருடைய மகிழ்ச்சியில் துக்கமான செய்தி மும்பையிலிருந்து அவருக்கு எட்டியது. டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி இவருக்கு வந்தது. பின்னர் ஒரு நாள் கழித்து, அவரது மறைந்த செய்தி சமூகத்தில் சோகமான நிகழ்வுகளை கொண்டு வந்தது. ஒரு காலத்தில் பிரகாசமாக இருந்த நகரம் துக்கத்தில் மங்கியது. துர்கா பூஜைக்கான பந்தல்களில் ரத்தன் டாடாவின் உருவப்படங்கள் அன்புடன் காட்சிப்படுத்தப்பட்டன.


பர்வீன் மற்றும் ஜாம்ஷெட்பூரில் இருந்த பிற குடியிருப்பாளர்களுக்கு, ரத்தன் டாடாவின் மறைவு ஆழ்ந்த இழப்பாகும். “எனது தாத்தா, சஃபி முகமது, இங்குள்ள டாடா நிறுவனத்திற்காக 48 ஆண்டுகளை அர்ப்பணித்துள்ளார். மேலும், என் தந்தையும் அவரது கொள்கைகளைப் பின்பற்றினார். நான், வளர்ந்து வரும் போது ​​டாடா குழுமங்களின் கதைகள் முன்னோர்களின் கதைகள் போல் கேட்டிருக்கிறேன். அவர்களின் குடும்பங்கள் சாதரண குடும்பங்கள் போல் இருந்தது  இல்லை.





நிறுவப்பட்ட தருணங்கள்


டாடா குடும்பத்தின் அடித்தளம் குஜராத்தின் நவ்சாரி என்ற பகுதியில் உள்ளன. நுசர்வாஞ்சி டாடா 1822-ஆம் ஆண்டில் அங்குள்ள ஒரு பார்சி (Parsi) குடும்பத்தில் பிறந்தார். அவர் இளம் வயதிலேயே ஜீவன்பாயை மணந்தார். மார்ச் 3, 1839 அன்று  ஜாம்செட்ஜி நுசர்வாஞ்சி டாடா என்ற மகனை பெற்றனர்.


தனது குடும்பத்திற்கு சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த நுசர்வாஞ்சி, கிராம வாழ்க்கையின் சுகபோகங்களை விட்டுவிட்டு, தன் மனைவி மற்றும் மகனுடன் மும்பை சென்றார். பின்னர் 20 வயதில், அவர் தனது மகன் ஜாம்செட்ஜிக்கு நல்ல கல்வியைப் பெற வேண்டும் என்ற நம்பிக்கையில், பருத்தி ஏற்றுமதி தொழிலைத் தொடங்கினார்.


1835-ஆம் ஆண்டில், கவர்னர் ஜெனரல் வில்லியம் பென்டிங்க் பிரபு ஆங்கிலக் கல்விச் சட்டத்தை இயற்றினார். இந்த கல்விச் சட்டம் இந்தியாவில் கல்வி மற்றும் இலக்கியத்தை மேம்படுத்துவதற்காக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திலிருந்து நிதியை பெற்றதுடன், உயர்கல்விக்கு ஆங்கிலத்தை முதன்மை மொழியாக மாற்றியது. நுசர்வான்ஜி, தனது தீவிர தொலைநோக்கு பார்வையால், இந்த மொழிக்கான மாற்றத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தார். 


1856-ஆம் ஆண்டில், மும்பையில் புதிதாக நிறுவப்பட்ட எல்பின்ஸ்டோன் கல்லூரிக்கு (Elphinstone College) விண்ணப்பிக்க ஜம்செட்ஜியை ஊக்குவித்தார். தனது படிப்பை முடித்த பிறகு, ஜாம்செட்ஜி இளம் ஹிராபாய் தாபுவை மணந்து தந்தையானார். இவர்கள் ஒரு மகனுக்கு டோராப் என்று பெயரிட்டனர்.


ஜம்செட்ஜி டாடா : தலைமுறைகளுக்கான எதிர்காலத்தை உருவாக்குதல்


1859-ஆம் ஆண்டில், ஜாம்செட்ஜி அவரது மனைவி ஹீராபாய் மற்றும் அவர்களது மகன் டோராப் ஆகியோருடன் ஹாங்காங்கின் பிரிட்டிஷ் காலனிக்கு கப்பலில் பயணம் சென்றனர். இவர்களுடன், அவரது தந்தை நுசர்வான்ஜி மற்றும் இரண்டு வணிகர்களும் அவருக்கு ஆதரவாக இருந்தனர். இருவரும் இணைந்து ஜாம்செட்ஜி மற்றும் அர்தேஷிர் என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். இந்த நிறுவனம் பருத்தி மற்றும் அபின் வர்த்தகத்தில் கவனம் செலுத்தியது. அவரது ”டாடாக்கள்: ஒரு குடும்பம் ஒரு வணிகத்தையும் தேசத்தையும் எவ்வாறு உருவாக்கியது” (The Tatas: How A Family Built A Business And A Nation), என்ற புத்தகத்தில், பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான கிரிஷ் குபேர் அந்த நேரத்தில் அபின் வர்த்தகம் சர்ச்சைக்குரியதாக பார்க்கப்படவில்லை என்று விளக்குகிறார். இது மருத்துவப் பயன்களைக் கொண்டிருந்தது மற்றும் கிரிமியன் போரின் (Crimean War) போது (1853-56) பரவலாகப் பயன்படுத்தப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.


நுசர்வான்ஜியின் மைத்துனரான தாதாபோய் டாடாவும் ஹாங்காங்கில் அபின் வியாபாரியாக இருந்தார். இதனால், வெளிநாடுகளில் வலுவான டாடா நிறுவனத்தை உருவாக்க அவர் உதவியாக இருந்தார். அவர்கள் பருத்தியை ஐரோப்பாவிற்கும், அபின் சீனாவிற்கும் ஏற்றுமதி செய்தனர். அதே நேரத்தில், அவர்கள் மற்ற பொருட்களுடன் தங்கம் மற்றும் ஜவுளிகளை இறக்குமதி செய்தனர். இதனால், வணிகம் வெற்றிகரமாக இருந்ததால், ஜம்செட்ஜி தலைமையில் ஷாங்காயில் இரண்டாவது அலுவலகம் திறக்க வழிவகுத்தது.


அமெரிக்க உள்நாட்டுப் போர் (1861-65) டாடாக்களுக்கு எதிர்பாராத வாய்ப்பை உருவாக்கியது. ஏனெனில், இங்கிலாந்துக்கு அமெரிக்க பருத்தி விநியோகத்தை போர் சீர்குலைத்தது. இது பருத்திக்கு வழக்கமான கட்டணத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக டாடாக்கள் வசூலிக்க அனுமதித்தது. இந்த தருணத்தைப் பயன்படுத்தி, ஜம்செட்ஜி அலுவலகத்தை நிறுவுவதற்கு லண்டன் சென்றார். இருப்பினும், போருக்குப் பிறகு, இங்கிலாந்தின் முக்கிய பருத்தி விநியோகர்கள் என்ற நிலையை அமெரிக்கா மீண்டும் பெற்றது. இந்த மாற்றம் ஜாம்செட்ஜியை நெருக்கடிக்குள் தள்ளியது. கடனை அடைக்க, நுசர்வாஞ்சி அவர்களின் வீட்டை விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை மகனுக்குக் கொடுத்தார். டாடா பெயருடன் தொடர்புடைய அறக்கட்டளை இந்தச் செயலுடன் தொடங்கியிருக்கலாம் என்று குபேர் குறிப்பிடுகிறார்.


இங்கிலாந்தில் இருந்தபோது, ​​லிவர்பூல் மற்றும் லங்காஷயர் வழியாக ஜம்செட்ஜி பயணம் செய்தபோது உற்பத்தி பற்றி நிறைய கற்றுக்கொண்டார். இதனால், அவர் ஒரு வியாபாரி என்பதை உணர்ந்தார். எனவே, அவர் உற்பத்தியில் கவனம் செலுத்த முடிவு செய்தார். 1869-ஆம் ஆண்டில், அவர் மும்பையில் ஒரு பழைய எண்ணெய் ஆலையை வாங்கி அதை ஒரு பருத்தி ஆலையாக மாற்றினார். ஜனவரி 1, 1877-ஆம் ஆண்டில், அவர் நாக்பூரில் எம்ப்ரஸ் மில்லை (Empress Mills) விக்டோரியா மகாராணியின் நினைவாக நிறுவினார். இதில், தொழிலாளர்களின் ஓய்வூதியத்திற்கான வருங்கால வைப்பு நிதி மற்றும் பணியிட காலத்தில் விபத்துகளுக்கான காப்பீடு போன்ற முயற்சிகளையும் அவர் அறிமுகப்படுத்தினார்.


மும்பைக்கு தென்கிழக்கே உள்ள மலைப்பகுதியான பஞ்ச்கனி பகுதியில் ஜம்செட்ஜி நிலத்தை கையகப்படுத்தினார். அங்கு பார்சிகளுக்காக ஒரு மருத்துவமனையை நிறுவினார். 1896-ஆம் ஆண்டில், டாடா பட்டுப் பண்ணையை Tata Silk Farm) உருவாக்க பெங்களூரு மற்றும் மைசூரில் நிலம் வாங்கினார். இந்தப் பண்ணை உள்ளூர் விவசாயிகளை பட்டுப்புழு வளர்ப்பில் ஆய்வு செய்ய ஊக்குவித்தது. வெள்ளையர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஹோட்டலில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்ற தகவல் நிலவுகிறது.  இதற்குப் பதிலாக, அவர் 1903-ஆம் ஆண்டில் தாஜ்மஹால் அரண்மனையை நிறுவினார். இன்று அது மும்பையின் அடையாளமாக விளங்குகிறது.


குறிப்பாக, இளம் இந்தியர்களுக்கு பயிற்சி அளிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். 1892-ஆம் ஆண்டில், அவர் வெளிநாடுகளில் உயர்கல்வி பெற தகுதியான மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கத் தொடங்கினார். அவர் வைஸ்ராய் கர்சனையும் சந்தித்து, அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் இந்திய மையத்திற்காக (Indian centre of excellence in science and research) வாதிட்டார். அவர் தனது உயிலில், அவர் தனது வாழ்நாளில் நிறுவனம் கட்டப்படவில்லை என்றால், அதை உருவாக்க தனது தனிப்பட்ட செல்வத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 


அவர் 1904-ஆம் ஆண்டில் இறந்தாலும், அவரது கனவு பின்னர் நனவாகியது. ஆர்.எம்.லாலா, ”செல்வத்தின் உருவாக்கம்: டாடாக்கள் 19 முதல் 21-ம் நூற்றாண்டு வரை” (The Creation of Wealth: The Tatas to the 19th from 21st Century), என்ற புத்தகத்தில் மைசூர் மகாராஜா பெங்களூரில் 371 ஏக்கர் நிலத்தை வழங்கியதாக குறிப்பிடுகிறார். இந்த நிலம் 1909-ஆம் ஆண்டில் இந்திய அறிவியல் கழகத்தை ( Indian Institute of Science (IISc)) நிறுவ பயன்படுத்தப்பட்டது.


ஜாம்செட்ஜியின் மூத்த மகன் டோராப்ஜி டாடா, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு 1879-ஆம் ஆண்டில் இந்தியாவுக்குத் திரும்பி தனது சகோதரர் ரத்தன்ஜியுடன் சேர்ந்தார்.  20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சுதேசி இயக்கம் வேகம் பெற்றது. இந்த இயக்கம் பிரிட்டிஷ் பொருட்களைப் புறக்கணிக்கவும், இந்திய உற்பத்தியை ஆதரிக்கவும் வாதிட்டது. டோராப்ஜி 1907-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனத்திற்கு (Tata Iron and Steel Company (TISCO)) 8,000 முதலீட்டாளர்களை வெற்றிகரமாகத் திரட்டினார். 1914-ஆம் ஆண்டில் முதலாம் உலகப் போர் தொடங்கியபோது, ​​பிரிட்டன் தனது காலனிகளில் இருந்து மனிதவளத்தையும் பொருட்களையும் நாடியது. டிஸ்கோ (Tata Iron and Steel Company (TISCO)) நிறுவனம் இந்த தேவையை பூர்த்தி செய்ய 1,500 மைல்கள்  இரும்பு பாதைகளை தயாரித்தது.


1917-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி கேரளாவில் TISCO க்கு கூடுதலாக டாடா ஆயில் நிறுவனம் (Tata Oil Mills Company(TOMCO)) டாடாக்கள் நிறுவினர். TOMCO முதலில் Cocogem எனப்படும் சுத்திகரிக்கப்பட்ட, வாசனை நீக்கப்பட்ட தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்தது. இது விரைவில் தரத்திற்கான நற்பெயரைப் பெற்றது. டாடா ஆயில் நிறுவனம்  பின்னர் ஹமாம் மற்றும் மோதி குளியல் சோப்புகளை அறிமுகப்படுத்தியது. இவை இரண்டும் பெருமை வாய்ந்த சுதேசி தயாரிப்புகளாக அமைந்தன. இருப்பினும், முதல் உலகப் போர் 1918-ஆம் ஆண்டில் முடிவடைந்த பிறகு, ஒரு நெருக்கடி ஏற்பட்டது.  இதைத் தீர்க்க, டோராப்ஜி தனது தனிப்பட்ட சொத்துக்களில் சிலவற்றை விற்க வேண்டியிருந்தது. அவரது மனைவி மெஹர்பாய் நிறுவனத்தை காப்பாற்ற தனது நகைகளை அடகு வைக்க வேண்டியிருந்தது.


டோராப்ஜி மற்றும் மெஹர்பாய் இருவரும் சுதந்திர இயக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கள். டோராப்ஜி சுதேசி இயக்கத்தில் கவனம் செலுத்தினார். மெஹர்பாய் பெண்களின் உரிமைகளுக்காக பாடுபட்டார். அவர் 1929-ஆம் ஆண்டு சர்தா சட்டம் (Sarda Act) என்றும் அழைக்கப்படும் குழந்தை திருமண தடைச் சட்டத்திற்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தார். ஒலிம்பிக்கில் இந்திய பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக டோராப்ஜி டாடா இயக்கத்தை வழிநடத்தியதாக பலருக்குத் தெரியாது என்று குபேர் குறிப்பிடுகிறார். மெஹர்பாய் விளையாட்டுகளை, குறிப்பாக டென்னிஸை விரும்பினார். அவர் மேற்கிந்திய நாடுகளில் டென்னிஸ் போட்டியில் ‘டிரிபிள் கிரவுன்’ (Triple Crown) உட்பட 60 பரிசுகளை வென்றார்.


இந்தியாவில் கல்வி மற்றும் சமூகத்தை மேம்படுத்த டோராப் மற்றும் ரத்தன்ஜி டாடா ஆகிய சகோதரர்கள் முக்கியமான அறக்கட்டளைகளை உருவாக்கினர். சர் ரத்தன் டாடா டிரஸ்ட் (1919) மற்றும் சர் டோராப்ஜி டாடா டிரஸ்ட் (1932) ஆகியவை இதில் அடங்கும். டோராப்ஜி தனது மனைவியின் நினைவாக லேடி மெஹர்பாய் டி. டாடா கல்வி அறக்கட்டளையைத் (Lady Meherbai D. Tata Education Trust) தொடங்கினார். இந்த அறக்கட்டளை இது வெளிநாட்டில் குடிமைப்பணி தேர்விற்கு படிக்கும் பெண் பட்டதாரிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.


டோராப்ஜிக்கு இந்தியாவில் ஒரு சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையம் கட்ட வேண்டும் என்ற கனவு இருந்தது.  இருப்பினும், அவர் ஜூன் 3, 1932-ஆம் ஆண்டில் காலமானார். அவரைக் கௌரவிக்கும் வகையில், 1932 முதல் 1938 ஆண்டு வரை டாடா குழுமத்தை வழிநடத்திய அவரது உறவினரும் வாரிசுமான நவ்ரோஜி சக்லத்வாலா டாடா மெமோரியல் மருத்துவமனையை நிறுவுவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். பரேல், பம்பாயில், இது பிப்ரவரி 28, 1941-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.


நவ்ரோஜி ஜாம்செட்ஜியின் சகோதரி விர்பாயின் மகன். அவர் ஒரு தீவிர விளையாட்டு ஆர்வலராக இருந்தார் மற்றும் கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியாவை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார். பீகாரின் முங்கரில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு, காயமடைந்தவர்களுக்கு உதவ நவ்ரோஜி ஒரு தற்காலிக மருத்துவமனையைக் கட்டினார். 


சக்லத்வாலாவின் வழிகாட்டுதலுடன், சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளையின் நிதி மூலம் 1936-ஆம் ஆண்டில் சர் டோராப்ஜி டாடா கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க் (Graduate School of Social Work) உருவாக்கப்பட்டது. இந்த பள்ளி பின்னர் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் (Tata Institute of Social Sciences) ஆனது.  நவ்ரோஜி 1938-ஆம் ஆண்டில்  மாரடைப்பால் காலமானார். அந்த நேரத்தில், 34 வயதாக இருந்த ஜேஆர்டி டாடா, டாடா பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.


ஜே.ஆர்.டி.டாடா பிரான்சில் ஜாம்செட்ஜி டாடாவின் உறவினரான ரத்தன்ஜி தாதாபோய் டாடா மற்றும் தாயார் சுசான் பிரையர் ஆகியோரால் வளர்க்கப்பட்டார். அவர் கேம்பிரிட்ஜில் பொறியியல் படிக்க விரும்பினாலும், அவரது தந்தை மும்பைக்கு திரும்பவும், பின்னர் ஜாம்ஷெட்பூருக்கு குடும்ப வணிகத்தில் சேரவும் வலியுறுத்தினார். 1926-ஆம் ஆண்டில்  ரத்தன்ஜியின் மரணத்திற்குப் பிறகு, ஜே.ஆர்.டி. விமானப் போக்குவரத்து மீதான அவரது ஆர்வம் அவரை டாடா ஏவியேஷன் சர்வீசஸ் நிறுவனத்தை நிறுவ வழிவகுத்தது. பின்னர், டாடா ஏர்லைன்ஸ் என மறுபெயரிடப்பட்டது.


ஜே.ஆர்.டி டாடாவின் பயணத்தைப் புரிந்து கொள்ள, அவருடைய உறவினரான நேவல் டாடாவையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நேவல் ரத்தன் ஜம்செட்ஜி டாடாவின் மகன். அவரை ரத்தன்ஜியின் விதவை பெண் நவாஜ்பாய் தத்தெடுத்தார். நேவல் ஜூன் 1, 1930-ஆம் ஆண்டில்  டாடா குழுமத்தில் சேர்ந்தார். 1938-ஆம் ஆண்டில்  சக்லத்வாலா இறந்த பிறகு, ஜே.ஆர்.டி.யை தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தார்.


ஜேஆர்டியின் தலைமையின் கீழ், டாடா குழுமம் பெரிய மாற்றங்களைக் கண்டது. மூத்த தலைவர்களுக்கான சிறப்பு சலுகைகளை நீக்கினார். அனைவரும் சமமாக நடத்தப்படுவதை உறுதி செய்தார். ஜேஆர்டி குழுமத்தின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு தலைவரை நியமித்தது. இது 1939-ஆம் ஆண்டில் குஜராத்தின் மிதாபூரில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தை நிறுவ வழிவகுத்தது.


ஒரு இளம் பார்சி சிறுவனும், டாடாவின் ஆலோசகருமான ஹோமி பாபா, தொழில்நுட்ப ஆராய்ச்சியை ஆதரிக்க நிதி கேட்டு ஜேஆர்டி டாடாவுக்கு கடிதம் எழுதியபோது ஒரு முக்கிய தருணம் ஏற்பட்டது. ஜேஆர்டி ஒப்புக்கொண்டு, டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (Tata Institute of Fundamental Research (TIFR)) அமைக்க உதவியது.  இது ஜூன் 1, 1945-ஆம் ஆண்டில்   அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.


"எனது தந்தை ஹோமி பாபா பொறுப்பில் இருந்த  டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில்  பணிபுரிந்தார். மேலும், ஜேஆர்டி அடிக்கடி வருகை தந்தார். இருவருமே நல்ல தலைமையின் எடுத்துக்காட்டுகள் என்று என்னிடம் கூறுவார். மும்பையைச் சேர்ந்த ஆலோசகர் ரோஷ்னி மாஸ்டர் என்பவர், "அவர் அடிக்கடி அவர்களை உதாரணமாகப் பயன்படுத்துவார் மற்றும் நல்ல தலைமை என்பது எல்லோரையும், குறிப்பாக துப்புரவு செய்பவர்களைக் கூட கேட்பது என்று அவர் என்னிடம் கூறுவார்."


1945-ஆம் ஆண்டில், ஜேஆர்டி ஜம்ஷெட்பூரில் ஒரு சிறிய தொழிற்சாலையை ரயில்வேயில் இருந்து வாங்கியதுடன், அதை டாடா இன்ஜினியரிங் மற்றும் லோகோமோட்டிவ் கம்பெனி லிமிடெட் (Tata Engineering and Locomotive Company Limited (TELCO)) ஆக மாற்றினார். பின்னர், டாடா மோட்டார்ஸ் என்று அழைக்கப்பட்டது. இந்த நிறுவனம் விரைவில் நீராவி இயந்திரங்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது.


1948-ஆம் ஆண்டில், ஜேஆர்டி ஏர் இந்தியா இன்டர்நேஷனல், இந்தியாவின் முதல் சர்வதேச விமான நிறுவனத்தை அறிமுகப்படுத்தியது. 1952-ஆம் ஆண்டில், நேவல் டாடாவின் இரண்டாவது மனைவியான சிமோனுடன் இணைந்து லாக்மே (Lakmé) என்ற அழகு சாதனப் பொருட்கள் நிறுவனத்தை நிறுவினார்.


இந்திய அரசாங்கம் தேசியமயமாக்கலில் கவனம் செலுத்தியதால், ஜே.ஆர்.டி பெரும் சவால்களை எதிர்கொண்டது. தேசியமயமாக்கல் தொழில்களை அரசியலாக்கியது மற்றும் பொருளாதாரத்தை பாதிக்கிறது என்று அவர் வாதிட்டார். நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் (New India Assurance Company) மற்றும் ஏர் இந்தியா இன்டர்நேஷனல் (Air India International) உட்பட பல வெற்றிகரமான டாடா முயற்சிகளை அரசாங்கம் தேசியமயமாக்கியது. இருந்தபோதிலும், 1956-ஆம் ஆண்டில், டாடா குழுமம் 46 நாடுகளுக்கு விரிவடைந்தது.


1990-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில், ஜே.ஆர்.டி.யின் உடல்நிலை மோசமடைந்தது. ஆனால், அவர் உறுதியாக இருந்தார். மார்ச் 3, 1991 அன்று, அவர் ஜாம்ஷெட்பூரின் நிறுவன தினத்தை கொண்டாடினார். அவருக்குப் பின் யார் என்ற கேள்வி முக்கியமானது. தெல்மா விகாஜி என்பவரை திருமணம் செய்திருந்தாலும், அவர்களுக்கு குழந்தை இல்லை. மார்ச் 25 அன்று நடந்த ஒரு முக்கிய கூட்டத்தில், நேவல் டாடாவின் மகன் ரத்தனை தனது வாரிசாக பரிந்துரைத்தார்.


முதலில் ஜாம்ஷெட்பூரிலிருந்து வந்த பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஆகாஷ் முகோபாத்யாய். அவர் முதலில் ஜாம்ஷெட்பூரை சேர்ந்தவர். அவர் மார்ச் 3 அன்று இந்நிறுவனத்திற்கு திரும்புகிறார். "அன்றைய தினம், ஜே.ஆர்.டி. டாடாவின் பிறந்தநாளைக் கொண்டாட டாடா சமூகம் ஒன்று கூடுகிறது. ஊழியர்கள் அணிவகுத்துச் சென்று, ரத்தன் டாடா அன்புடன் கைகுலுக்கி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தது எனக்கு நினைவிருக்கிறது. அவர் உண்மையிலேயே டாடாக்களின் உணர்வைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அவர் தெளிவான சரியான வாரிசு ஆவார்.


ரத்தனின் தந்தை 1955-ஆம் ஆண்டில் சிமோனை மறுமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நோயல் என்ற மகன் இருந்தான். ரத்தன் கார்னெல் பல்கலைக்கழகத்தில் (Cornell University) கட்டிடக்கலையில் பட்டம் பெற்றார். 1962-ஆம் ஆண்டில், அவர் இந்தியா திரும்பி ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு அவர் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் பணியாற்றினார்.


1991-ஆம் ஆண்டில், ரத்தன் டாடா அவர்கள் டாடா சன்ஸ் தலைவராக ஆனார். இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலின் போது டாடா குழுமத்தின் பெரிய மறுசீரமைப்பை அவர் தொடங்கினார். 2000-ஆம் ஆண்டு காலகட்டத்தில், குழு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்தது. இந்த வளர்ச்சியில் டெட்லி (Tetley), ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) மற்றும் ப்ரன்னர் மோண்ட் (Brunner Mond) போன்ற குறிப்பிடத்தக்க கையகப்படுத்தல்களும் அடங்கும்.


2008-ஆம் ஆண்டில், ரத்தன் டாடா நானோ என்ற புதிய சிறிய கார் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. 2012 டிசம்பரில், டாடா குழுமத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இருப்பினும், அவர் எமரிட்டஸ் தலைவராக (Chairman Emeritus) நியமிக்கப்பட்டார்.


ரத்தனின் ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் அக்டோபர் 9 அன்று டாடா அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்பட்டார். நோயலுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்கள், நெவில் என்ற மகன் மற்றும் லியா மற்றும் மாயா என்ற இரண்டு மகள்கள். அவர்கள் டாடா குழுமத்தின் பல்வேறு கிளைகளை நிர்வகிக்கின்றனர்.


டாடா குடும்பத்தைப் பற்றிய இந்த பார்வை வெறும் குடும்பத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பேரரசை வெளிப்படுத்துகிறது. ஒரு டாடா ஊழியர், "என்னிடம் டாடா குடும்பப்பெயர் இல்லாமல் இருக்கலாம். ஆனால்,  நான் அந்த குடும்பத்தின் ஒரு பகுதியாக உணர்கிறேன்" என்றார்.


ஹைதராபாத்தில் உள்ள முன்னணி பயனர் அனுபவ வடிவமைப்பாளரான (User Experience Designer) சத்யகி போஸ் என்பவரின் குடும்பம் மூன்று தலைமுறைகளாக டாடா நிறுவனத்தில் பணியாற்றி வருகிறது. “டாடா குழுமத்தில் பணிபுரியும் ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறையுடன் இந்த அமைப்பில் சேருவதை உறுதிசெய்கிறது. டாடா நிறுவனர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் காட்டிய அன்பையும் அக்கறையையும் திரும்பக் கொடுப்பதற்காக அவர்கள் இதைச் செய்கிறார்கள்  என குறிப்பிடுகிறார்.




Original article:

Share:

இந்தியாவில் ஒரு புத்தொழில் (start-up) புரட்சி -மன்பிரீத் சிங் பாதல்

 புதிய கண்டுபிடிப்புகளுக்கான அரசின் நடவடிக்கைகள், தொழில்முனைவோரை முதல் நிலை (Tier-1) நகரங்களையும் தாண்டி எடுத்துச் சென்றுள்ளது. 


இந்தியா இப்போது தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவுக்கான மையமாக உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா புதுமையான நாடுகளின் குழுவில் இருந்தது. அதன் பின்னர் நாட்டில் கண்டுபிடிப்புகள் அதிகரித்துவிட்டது. இந்தியா இப்போது உலகளவில் படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது.


இந்தியாவின்  புத்தொழில், சுற்றுச்சூழல் அமைப்பு வளர்ந்து வருகிறது. நாடு இப்போது உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் மையமாக உள்ளது. தொழில்நுட்ப புத்தொழில்களின் எண்ணிக்கை 2023-ல் 68,000ல் இருந்து 2030-க்குள் 180,000 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை இந்தியாவில் 111 யூனிகார்ன் புத்தொழில் நிறுவனங்கள் $350 பில்லியனுக்கும் அதிகமாக இருந்தன. 


பொருளாதாரம் பல துறைகளில் மதிப்புமிக்க நிறுவனங்களை உதவ முடியும் என்பதை இது காட்டுகிறது. அடுக்கு-2 மட்டுமல்ல, அடுக்கு-3 நகரங்களில் புத்தொழில் நிறுவனங்களின் செயல்பாடு அதிகரித்து வருகிறது. தொழில்முனைவு என்பது அதிகமான மக்களுக்கு அணுகக்கூடியதாகி வருவதை இது காட்டுகிறது.


ஐந்து முக்கிய முயற்சிகள் மூலம் உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் இந்தியா தனது நிலையை மேம்படுத்தியுள்ளது. இந்தியா ஒரு வலுவான கண்டுபிடிப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பில் அறிவு வளங்கள், செயலில் உள்ள தொடக்கங்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் ஆராய்ச்சி குழுக்களுக்கு இடையேயான குழுப்பணி ஆகியவை அடங்கும். 


அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை புதுமைகளை உருவாக்குதல் மற்றும் பயன்படுத்துவதற்கான தேசிய முயற்சி (National Initiative for Developing and Harnessing Innovations (NIDHI)) திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டம் இந்தியா முழுவதும் பல தொழில்நுட்ப வணிக மையங்களை உருவாக்கியுள்ளது. இந்த மையங்கள் பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு புதிய யோசனைகளை தயாரிப்புகளாக மாற்ற உதவுகின்றன.


இரண்டாவதாக, புதுமைகளை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, உயிரி தொழில்நுட்ப துறை (biotechnology) மற்றும் அடல் புத்தாக்கத் திட்டம் (Atal Innovation Mission) ஆகியவற்றின் பணிகள் இதில் அடங்கும். 


மூன்றாவதாக, மின்சார வாகனங்கள், உயிரி தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் மாற்று எரிசக்தி போன்ற முக்கியமான பகுதிகளை மேம்படுத்த கொள்கை சார்ந்த கண்டுபிடிப்புகளை NITI ஆயோக் முன்னெடுத்து வருகிறது. 


நான்காவதாக, இந்தியா தனது தொழில்களை பல்வகைப்படுத்துதல், காப்புரிமைகளை உருவாக்குதல் மற்றும் கலாச்சார மற்றும் ஆக்கப்பூர்வமான சேவைகளை ஏற்றுமதி செய்வதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இறுதியாக, குறைந்த-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில், இந்தியா மிக உயர்ந்த கண்டுபிடிப்புகளைக் கொண்டதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


சில உதாரணங்களைப் பார்ப்போம். நிதி ஆயோக் ரயில்வே அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுகிறது. பொது-தனியார் கூட்டாண்மை மூலம் ரயில் நிலையங்களை மேம்படுத்தி வருகின்றனர். இந்திய மருந்து நிறுவனங்கள் இப்போது உலக நிறுவனங்களுக்காக மருந்துகளை தயாரிக்கின்றன. அவர்கள் இந்த நிறுவனங்களுக்கு மருத்துவ பரிசோதனைகளையும் நடத்துகிறார்கள்.


அடிமட்ட அளவில் புதுமையை ஊக்குவிப்பதன் மூலம் முந்தைய திட்டங்களால் சாதிக்க முடியாததை அடல் புத்தாக்கத் திட்டம் சாதித்தது. இது 650-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 4,880 அடல் பழுதுநீக்க ஆய்வகங்களை (Atal Tinkering Labs) அமைத்து, இரண்டு கோடிக்கும் அதிகமான மாணவர்களுக்கு புதுமையான கருவிகளை வழங்கியது. அடல் புத்தாக்க வளர் மையங்களை (Atal Incubation Centres) உருவாக்க அடல் புத்தாக்கத் திட்டம் 102 பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களையும் தேர்ந்தெடுத்தது. 


இவற்றில் 50-க்கும் மேற்பட்ட மையங்கள் இப்போது 900-க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்களை வளர்த்து வருகின்றன. கூடுதலாக, ஐந்து யூனியன் அமைச்சகங்களுடன் 24 அடல் நியூ இந்தியா சவால்களை அடல் புத்தாக்கத் திட்டம் எதிர்கொண்டு, 950 விண்ணப்பங்களைப் பெற்றது. இவர்களில் 52 பேர் மானியம் மற்றும் ஆதரவிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


இந்தியா இப்போது உலகின் முன்னணி குறைந்த-நடுத்தர வருமானம் கொண்ட பொருளாதாரமாக உள்ளது. இந்த வருமானக் குழுவில் உள்ள 37 நாடுகளில் இது முதலிடத்திலும், மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் உள்ள 10 நாடுகளில் முதலிடத்திலும் உள்ளது. 2015-ல் 81-வது இடத்தில் இருந்த இந்தியா, இன்று 40வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ICT சேவைகள் ஏற்றுமதியில் ஐந்தாவது இடத்திலும், பெறப்பட்ட மூலதனத்தில் ஆறாவது இடத்திலும், அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகளில் பதினொன்றாவது இடத்திலும், உலகளாவிய பெருநிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதலீட்டாளர்களில் பதின் மூன்றாவது இடத்திலும் உள்ளது.


இந்த முயற்சிகள் புதுமையான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. இந்த மாற்றம் இப்போது பள்ளிகளில் காணப்படுகிறது. இந்த இயக்கம் முக்கிய நகரங்களை தாண்டி, இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது மற்றும் பொருளாதாரத்தில்  முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. 

 



Original article:

Share:

நீதி தேவதையின் கதை : கிரேக்க மூலத்திலிருந்து இன்று வரை - அஜய் சிஹ்னா கற்பூரம்

 நீதிபதிகளின் நூலகத்தில் உள்ள புதிய ஆறு அடி உயர சிலையாகவும், சேலை அணிந்ததாகவும், கண்கள் கட்டப்படாமல், தராசுகளை வைத்திருக்கிறது மற்றும் வாளுக்கு பதிலாக இந்திய அரசியலமைப்பின் நகலை வைத்திருக்கிறார். 


உச்ச நீதிமன்றம் "நீதி தேவதையின்" (Lady Justice) புதிய சிலையை திறந்து வைக்கப்பட்டது. இந்த புதிய சிலை பாரம்பரிய பிரதிநிதித்துவத்தை மறுவடிவமைக்கிறது. பொதுவாக, நீதி தேவதை சிலை தராசுகளின் தொகுப்பையும், மற்றொரு கையில் வாளையும் வைத்திருக்கும் ஒரு கண்ணைக் கட்டிய நிலையில் இருக்கும். இது உலகெங்கிலும் உள்ள சட்ட நடைமுறையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


நீதிபதிகள், நூலகத்தில் புதிய ஆறு அடி உயரமுள்ள சிலையானது, சேலை அணிந்து, கண்ணை கட்டப்படாமல், தராசு வைத்திருக்கும் இந்த நீதி தேவதை சிலையில் வாளுக்கு பதிலாக இந்திய அரசியலமைப்பின் நகல் புத்தகம் வைத்திருப்பதைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 


பாரம்பரிய நீதி தேவதையின் சிலையில் கண்மூடிய நிலையில், பொதுவாக பாரபட்சமற்ற நீதியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. மாறாக, புதிய சிலை தெளிவான பார்வையைக் கொண்டுள்ளது. இந்த மாற்றம், “சட்டம் குருடானது அல்ல; அது அனைவரையும் சமமாகப் பார்க்கிறது” என்று சிலையை நிறுவிய இந்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் கூறுகிறார்.


டெல்லியில் உள்ள கலைக் கல்லூரியின் சுவரோவியரும், ஆசிரியருமான வினோத் கோஸ்வாமி இந்த புதிய நீதி தேவதையின் வடிவமைப்பை உருவாக்கியுள்ளார். இது புதிய குற்றவியல் விதிமுறைகள் (new criminal codes) உட்பட சமீபத்திய சட்ட சீர்திருத்தங்களை பிரதிபலிக்கிறது மற்றும் இந்தியாவின் சட்ட கட்டமைப்பை "காலனித்துவ நீக்கத்தை" நோக்கமாகக் கொண்டுள்ளது.


மறுவடிவமைப்பினால் மாறும் அர்த்தம் 


”நீதி தேவதை”  உருவகத்தை கிரேக்க மற்றும் ரோமானிய புராணங்களில் காணலாம்.  கிமு 700-களில் வாழ்ந்த கிரேக்க கவிஞர் ஹெசியோடின் கற்பனை படைப்புகளின்படி, கயா (Gaea) மற்றும் யுரேனஸுக்கு (Uranus) பிறந்த 12 டைட்டன்களில் ஒருவரான தெமிஸ் (Themis) நீதி, ஞானம் மற்றும் நல்ல ஆலோசனையின் தெய்வம் என்று அழைக்கப்படுகிறது. மேலும், இது பெரும்பாலும் ஒரு கையில் தராசுகளையும், மற்றொரு கையில் வாளையும் வைத்திருக்கும் நீதி தேவதையாக தெமிஸ் (Themis) சித்தரிக்கப்படுகிறது. 


முதல் ரோமானியப் பேரரசர் அகஸ்டஸ் கிமு 27 முதல் கிபி 14 வரை ஆட்சி செய்தவராவர். அவர் நீதி வழிபாட்டை ஜஸ்டிடியா (அல்லது இயுஸ்டிடியா) என்ற நீதியின் தெய்வமாக அறிமுகப்படுத்தினார். இங்கு, தெமிஸ் போல், ஜஸ்டிடியா கண்களை கட்டப்படவில்லை.


ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த சட்ட அறிஞர் டெஸ்மண்ட் மாண்டர்சன் 2020-ல் ஒரு கட்டுரையை எழுதினார். இந்த ஆய்வறிக்கையில், "கண்களை மூடிக்கொண்டு நீதியைக் காட்டும் முதல் படம் மர ஒவியத்திலிருந்து வருகிறது" என்று அவர் குறிப்பிட்டார். பதினைந்தாம் நூற்றாண்டின் வழக்கறிஞர் செபாஸ்டியன் பிராண்டின் வஞ்சப்புகழ்ச்சியாக நையாண்டி கவிதைகளின் தொகுப்பான "முட்டாள்களின் கப்பல்களில்" (Ship of Fools) இந்த படம் வெளியிடப்பட்டது.


           1494-ம் ஆண்டிலிருந்து இந்த படம், மாண்டர்சன் குறிப்பிட்டது போல், கண்களை மூடிக்கொண்டு நடத்தும் நீதியின் கொண்டாட்டம் அல்ல. மாறாக, அது ஒரு விமர்சனமாகவே பார்க்கப்படுகிறது. மர ஒவியம் பெரும்பாலும் ஜெர்மன் மறுமலர்ச்சி கலைஞரான ஆல்பிரெக்ட் டியூரர் முக்கிய காரணமாக இருந்தார். இதற்கு "கண்மூடித்தனமான நீதி" (The Fool Blindfolding Justice) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில், ஒரு 'முட்டாள்' நீதி தேவதை போல தோற்றமளிக்கும் ஒரு பெண்ணின் கண்களைக் கட்டுகிறார். இந்த பெண் ஒரு கையில் வாளையும், மறு கையில் தராசையும் பிடித்திருக்கிறார்.


17-ம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்த படம் அதன் நையாண்டிக்கான அர்த்தத்தை இழந்துவிட்டது என்று மாண்டர்சன் விளக்கினார். அது, பின்னர் நீதியின் அடித்தளமாகப் பார்க்கப்பட்டது.


இந்தியாவில் நீதி தேவதை 


இந்தியாவின் நீதித்துறை பொதுவான சட்ட அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இந்த முறை பிரிட்டிஷ் ஆட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சட்ட அமைப்புடன், ஆங்கிலேயர்கள் நீதி தேவதையின் உருவப்படத்தையும் அறிமுகப்படுத்தினர். இந்த அடையாளம் இன்னும் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் காணப்படுகிறது.


1872-ம் ஆண்டில் முதன்முதலில் கட்டப்பட்ட கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதி தேவதையின் உருவங்கள் கட்டிடத்தின் தூண்களில் செதுக்கப்பட்டன. சில சமயங்களில் நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டதையும், மேலும், சில சந்தர்பங்களில் கண்கள் திறந்திருப்பதையும் சித்தரிப்புகள் காட்டுகின்றன. மும்பை உயர் நீதிமன்றத்தின் கட்டிடம் ஒன்றில் கண்கள் கட்டப்படாத நிலையில் பெண் நீதி தேவதை சிலை உள்ளது. 


உச்ச நீதிமன்றத்தின் வளாகத்தில், உள்ள புதிய சிலை மற்றொரு கலைப்பொருளைப் போலவே உள்ளது. நீதிபதிகளின் நுழைவாயிலுக்கு அருகிலுள்ள ஒரு சுவரோவியம் ஒரு சக்கரத்தின் இருபுறமும் மகாத்மா காந்தி மற்றும் நீதி தேவதையின் சிலை ஆகியவற்றைக் காட்டுகிறது. இந்த சித்தரிப்பில் நீதி தேவதை ஒரு சேலை அணிந்து, ஒரு வாளுக்கு பதிலாக தராசு மற்றும் ஒரு புத்தகத்தை வைத்திருக்கிறார். 



வங்காளதேசத்தில் போராட்டம் 


டிசம்பர் 2016-ல், வங்காளதேசத்தின் உச்ச நீதிமன்றத்தின் வளாகத்தில், தெமிஸ் பெண் தெய்வத்தின் பெரிய சிலை நிறுவப்பட்டது. இந்த சிலைக்கு புடவை மற்றும் கண்கள் மூடப்பட்டிருந்தது. மேலும், தராசையும், வாளையும் வைத்திருந்தது.


இந்த சிலை முஸ்லீம் பழமைவாதிகளிடமிருந்து எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது. மேலும், அவர்கள் சிலை வழிபாடு என்று கூறியதை எதிர்த்தனர். மே 2017-ல், இந்த சிலை உச்ச நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களின் பார்வையில் இருந்து விலக்கி வேறொரு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டது. ஆகஸ்ட் 2024-ல், ஷேக் ஹசீனா அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்த சிலையானது இடிக்கப்பட்டது.




Original article:

Share:

இஸ்ரேல் vs ஐக்கிய நாடுகள் சபை : டெல் அவிவின் நடவடிக்கைகள் மற்றும் இந்தியாவின் பதில்

 இந்தியாவின் நிலைப்பாடு, உலக அரங்கில் ஐ.நா.வின் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ள வேண்டும். 


ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸை ஆதரித்தும், அவரை நாட்டிலிருந்து தடை செய்யும் இஸ்ரேலின் முடிவை விமர்சித்தும் ஐக்கிய நாடுகள் சபையின் கடிதத்துடன் இந்தியா தன்னை இணைத்துக் கொள்ளாதது புதிராகவும் கவலைக்குரியதாகவும் உள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு சிலி நாடு பகிர்ந்து கொண்ட கடிதத்தில், ஐ.நா மற்றும் அதன் தலைவர்கள் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியது. இதில், இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்கள் பாரபட்சமாக இருப்பதாக குற்றம் சாட்டியதோடு, குட்டெரெஸ் "இஸ்ரேலிய மண்ணில் காலடி எடுத்து வைக்க தகுதியற்றவர்" என்று கூறியதை அடுத்து இந்த விவாதம் வந்தது. இந்த மோதல் ஒரு வருடத்திற்கும் மேலாக கவனித்து வரும் நிலையில், டெல் அவிவ் அக்டோபர் 7, 2023 ஹமாஸ் பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து, இஸ்ரேல் காசா மீது கடுமையான குண்டுவீச்சு மூலம் பழிவாங்க முயன்றது. 


இதில், லெபனான் மற்றும் ஏமனில் உள்ள முக்கியமான இலக்குகளைத் தாக்கியதுடன், அதன் எல்லைகளைத் தாண்டியும் தாக்குதல்களை நடத்தியது. இதில், டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது குண்டுவீச்சு, தெஹ்ரானில் ஹமாஸ் தலைவரைக் கொன்றது, லெபனானில் ஹெஸ்புல்லாவை குறிவைக்க பேஜர் குண்டுகளைப் பயன்படுத்துவது போன்ற இரகசிய நடவடிக்கைகளை இஸ்ரேல் நடத்தியது. எவ்வாறாயினும், கடந்த ஆண்டில் ஐ.நா அமைப்பின் மீதான அதன் தாக்குதல்தான் தனித்து நிற்கிறது. 


இஸ்ரேல் வேண்டுமென்றே இந்தியா ஆதரிக்கும் அமைப்பான, ஐக்கிய நாடுகள் அவையின் நிவாரண முகமையை (United Nations Relief and Works Agency(UNRWA)) குறிவைத்தது. ஐ.நா. பொதுச் சபையில், இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு இந்த அமைப்பை "யூத எதிர்ப்புக்கான" (anti-semitic) சதுப்பு நிலம் (swamp) என்று குறிப்பிட்டார். மிக சமீபத்தில், லெபனானில் உள்ள ஐ.நா அமைதி காக்கும் படை மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல்களை நடத்தின. இதில், 50 நாடுகளின் 10,000 பேர் கொண்ட வலுவான படையின் ஒரு பகுதியாக 903 இந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். 


அக்டோபர் 1 அன்று இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதற்குப் பிறகு, இஸ்ரேலின் வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எனபவர், ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இஸ்ரேல் மீதான தாக்குதல்களை தெளிவாகக் கண்டிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். இதன் விளைவாக, 104 நாடுகள், ஆப்பிரிக்க ஒன்றியத்துடன் இணைந்து ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டன. மற்றொரு கடிதத்தில் 34 ஐ.நா அமைதி காக்கும் நாடுகள் கையெழுத்திட்டன. அதில் இந்தியா முதலில் கையெழுத்திடவில்லை, ஆனால் பின்னர் ஆதரித்தது. உலகளாவிய தெற்கிலும், ஐரோப்பாவிலும் உள்ள அமைதியின்மை, நாடுகளுக்கிடையேயான மோதல் பிரச்சினைகளைத் தீர்க்க உலக அமைப்பின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் கவலையை அளிக்கிறது.


மோதல்களின் நிலைமை மற்றும் இந்திய வீரர்களுக்கு ஏற்படும் அபாயத்தை கருத்தில் கொண்டு, ஐ.நா.வுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகளை விமர்சிப்பதில் இருந்து இந்தியா விலகி இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. சமீபத்தில் வியாழன் அன்று வெளிவிவகாரத் துறை அமைச்சர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியபோதும் கூட, இஸ்ரேலின் நடவடிக்கைகளை விமர்சிப்பதைத் தவிர்த்தது. 


ஐ.நா.வில் இந்தியா ஒரு முன்னணி உறுப்பினராக உள்ளதுடன், ஆரம்பத்தில் இருந்தே அதற்குப் பெரும் பங்களிப்பை அளித்து வருகிறது. ஐ.நா  உலக நாடுகளுக்கு முக்கியமான சேவைகளையும் மற்றும் தளங்களையும் வழங்குகிறது. அனைத்து உறுப்பு நாடுகளும் இதன் மூலம் பயனடைகின்றன. ஐ.நா. பொதுச்செயலாளர் அலுவலகத்திற்கு அனைத்து உறுப்பு நாடுகளும் மதிக்க வேண்டும் என்று ஐ.நா சாசனத்தின் பிரிவு 100 (2) கூறுகிறது. 


இஸ்ரேலுடன் இந்தியா வலுவான உறவைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, அரசாங்கத்தில் உள்ள சிலர் மௌனம் காக்கும் அவர்களின் முடிவை ‘உண்மையான அரசியல்’ (realpolitik) கட்டுப்பாட்டின் ஒரு வடிவமாகக் கருதலாம். எவ்வாறாயினும், ஐநா அடிப்படையிலான சர்வதேச சட்டம் மற்றும் உலகளாவிய ஒழுங்குமுறையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ளும்போது, ​​எந்த சமரசமும் இருக்க கூடாது.




Original article:

Share:

2024-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பற்றி..

 2024-ஆம் ஆண்டு  நோபல் பரிசு "உள்ளடக்கிய" (‘inclusive’) நிறுவனங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.


2024-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்காக வழங்கப்பட்ட நோபல் பரிசு முக்கியமானது. ஏனெனில் இது ஒரு நாட்டின் நீண்டகால பொருளாதார வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளை எடுத்துக்காட்டுகிறது. ஒரு நாட்டில் உள்ள நிறுவனங்களின் தரம் எவ்வாறு பொருளாதார வளம் அல்லது வறுமைக்கு வழிவகுக்கும் என்பது குறித்த ஆராய்ச்சிக்காக அமெரிக்கப் பொருளாதார வல்லுநர்களான டேரன் அசெமோக்லு, சைமன் ஜான்சன் மற்றும் ஜேம்ஸ் ஏ. ராபின்சன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. 


பல்வேறு நாடுகளின் நிறுவனங்களின் தரம் மற்றும் காலனித்துவத்திற்குப் பிந்தைய வளர்ச்சியில் காலனித்துவத்தின் தாக்கம் குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர். சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும் மற்றும் சொத்துரிமைகளை அமல்படுத்தும் நிறுவனங்களைக் கொண்ட நாடுகள் தனிநபர்களுக்கு நீண்ட காலத்திற்கு வேலை செய்யவும், சேமிக்கவும், முதலீடு செய்யவும் வலுவான ஊக்கத்தை வழங்குகின்றன என்பதை அவர்கள் கண்டறிந்தனர். 


மறுபுறம், அதிகாரத்தை குவிக்கும் மற்றும் அரசியல் சுதந்திரங்களை கட்டுப்படுத்தும் பிரித்தெடுக்கும் நிறுவனங்களைக் கொண்ட நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றன. சில விமர்சகர்கள், ஆசிரியர்கள் காலனித்துவத்தின் கடுமையான தன்மையை போதுமான அளவு விமர்சிக்கவில்லை என்றும், மேற்கத்திய நிறுவனங்களின் வளர்ச்சியை அவர்கள் விமர்சித்திருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். இருப்பினும், அவர்களின் பகுப்பாய்வு இன்னும் முக்கியமானது.

 

நோபல் பரிசு பெற்றவர்கள் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம் என்று கூறும் "நிறுவனங்கள்" பல்வேறு விதிகளைக் குறிப்பிடுகின்றன. இந்த விதிகள் சமூகத்தில் மக்கள் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதை வழிகாட்டும் வெளிப்படையான சட்டங்கள் அல்லது மறைமுகமான சமூக விதிமுறைகளாக இருக்கலாம். குடிமக்கள் தங்கள் சொத்துக்களை அரசாங்கத்தால் எடுக்காமல் பாதுகாக்கும் சட்டங்களும் அவற்றில் அடங்கும். 


சீனாவும் இந்தியாவும் பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகு விரைவான பொருளாதார வளர்ச்சி அடைந்தது இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சீனா தனது பொருளாதார தாராளமயமாக்கலை 1970-களின் பிற்பகுதியில் தொடங்கியது, அதே நேரத்தில் இந்தியா பொருளாதார தாராளமயமாக்கலை (economic liberalisation) 1990-களின் முற்பகுதியில் தொடங்கியது. இரு நாடுகளும் தங்கள் பொருளாதாரங்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள் அல்லது  விதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்த பின்னர் முன்னேறின.


நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்த கட்டமைப்பு சீர்திருத்தங்கள் முக்கியம். மேற்கத்திய நாடுகளில் அதிக வருமானம் கொண்ட வளர்ந்த நாடுகளில் உள்ளதைப் போன்ற பொருளாதாரங்கள் வாழ்க்கைத் தரத்தை அடைய இந்த சீர்திருத்தங்கள் அவசியம். உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் வலுவான ஆளுமைகளால் வழிநடத்தப்படும் ஜனரஞ்சக இயக்கங்களால் (populist movements) கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நேரத்தில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.


நோபல் பரிசு பெற்றவர்கள் ஜனநாயகம் என்பது நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் ஒரு முக்கியமான "உள்ளடக்கிய" (‘inclusive’) நிறுவனம் என்பதை வலியுறுத்துகின்றனர். இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் பாதுகாப்புவாத பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்ட தாராளவாத ஜனநாயகங்கள் (illiberal democracies) அதிகரித்து வருகின்றன. 


பலருக்கு உதவி செய்து வளர்ச்சியை ஊக்குவிக்கும் தாராளமய நிறுவனங்கள் கடுமையான ஆபத்தில் இருப்பதை இது காட்டுகிறது. குறுகிய கால ஜனரஞ்சகக் கொள்கைகளில் கவனம் செலுத்தும் ஜனநாயகம் சர்வாதிகார (autocracy) ஆட்சியைப் போலவே தீங்கு விளைவிக்கும். ஒரு சர்வாதிகார ஆட்சி பெரும்பாலும் அதிகாரத்தில் நெருக்கமாக இருப்பவர்களுக்கு அதிக பலன்களை அளிக்கும்.




Original article:

Share: