நீதி தேவதையின் கதை : கிரேக்க மூலத்திலிருந்து இன்று வரை - அஜய் சிஹ்னா கற்பூரம்

 நீதிபதிகளின் நூலகத்தில் உள்ள புதிய ஆறு அடி உயர சிலையாகவும், சேலை அணிந்ததாகவும், கண்கள் கட்டப்படாமல், தராசுகளை வைத்திருக்கிறது மற்றும் வாளுக்கு பதிலாக இந்திய அரசியலமைப்பின் நகலை வைத்திருக்கிறார். 


உச்ச நீதிமன்றம் "நீதி தேவதையின்" (Lady Justice) புதிய சிலையை திறந்து வைக்கப்பட்டது. இந்த புதிய சிலை பாரம்பரிய பிரதிநிதித்துவத்தை மறுவடிவமைக்கிறது. பொதுவாக, நீதி தேவதை சிலை தராசுகளின் தொகுப்பையும், மற்றொரு கையில் வாளையும் வைத்திருக்கும் ஒரு கண்ணைக் கட்டிய நிலையில் இருக்கும். இது உலகெங்கிலும் உள்ள சட்ட நடைமுறையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


நீதிபதிகள், நூலகத்தில் புதிய ஆறு அடி உயரமுள்ள சிலையானது, சேலை அணிந்து, கண்ணை கட்டப்படாமல், தராசு வைத்திருக்கும் இந்த நீதி தேவதை சிலையில் வாளுக்கு பதிலாக இந்திய அரசியலமைப்பின் நகல் புத்தகம் வைத்திருப்பதைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 


பாரம்பரிய நீதி தேவதையின் சிலையில் கண்மூடிய நிலையில், பொதுவாக பாரபட்சமற்ற நீதியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. மாறாக, புதிய சிலை தெளிவான பார்வையைக் கொண்டுள்ளது. இந்த மாற்றம், “சட்டம் குருடானது அல்ல; அது அனைவரையும் சமமாகப் பார்க்கிறது” என்று சிலையை நிறுவிய இந்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் கூறுகிறார்.


டெல்லியில் உள்ள கலைக் கல்லூரியின் சுவரோவியரும், ஆசிரியருமான வினோத் கோஸ்வாமி இந்த புதிய நீதி தேவதையின் வடிவமைப்பை உருவாக்கியுள்ளார். இது புதிய குற்றவியல் விதிமுறைகள் (new criminal codes) உட்பட சமீபத்திய சட்ட சீர்திருத்தங்களை பிரதிபலிக்கிறது மற்றும் இந்தியாவின் சட்ட கட்டமைப்பை "காலனித்துவ நீக்கத்தை" நோக்கமாகக் கொண்டுள்ளது.


மறுவடிவமைப்பினால் மாறும் அர்த்தம் 


”நீதி தேவதை”  உருவகத்தை கிரேக்க மற்றும் ரோமானிய புராணங்களில் காணலாம்.  கிமு 700-களில் வாழ்ந்த கிரேக்க கவிஞர் ஹெசியோடின் கற்பனை படைப்புகளின்படி, கயா (Gaea) மற்றும் யுரேனஸுக்கு (Uranus) பிறந்த 12 டைட்டன்களில் ஒருவரான தெமிஸ் (Themis) நீதி, ஞானம் மற்றும் நல்ல ஆலோசனையின் தெய்வம் என்று அழைக்கப்படுகிறது. மேலும், இது பெரும்பாலும் ஒரு கையில் தராசுகளையும், மற்றொரு கையில் வாளையும் வைத்திருக்கும் நீதி தேவதையாக தெமிஸ் (Themis) சித்தரிக்கப்படுகிறது. 


முதல் ரோமானியப் பேரரசர் அகஸ்டஸ் கிமு 27 முதல் கிபி 14 வரை ஆட்சி செய்தவராவர். அவர் நீதி வழிபாட்டை ஜஸ்டிடியா (அல்லது இயுஸ்டிடியா) என்ற நீதியின் தெய்வமாக அறிமுகப்படுத்தினார். இங்கு, தெமிஸ் போல், ஜஸ்டிடியா கண்களை கட்டப்படவில்லை.


ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த சட்ட அறிஞர் டெஸ்மண்ட் மாண்டர்சன் 2020-ல் ஒரு கட்டுரையை எழுதினார். இந்த ஆய்வறிக்கையில், "கண்களை மூடிக்கொண்டு நீதியைக் காட்டும் முதல் படம் மர ஒவியத்திலிருந்து வருகிறது" என்று அவர் குறிப்பிட்டார். பதினைந்தாம் நூற்றாண்டின் வழக்கறிஞர் செபாஸ்டியன் பிராண்டின் வஞ்சப்புகழ்ச்சியாக நையாண்டி கவிதைகளின் தொகுப்பான "முட்டாள்களின் கப்பல்களில்" (Ship of Fools) இந்த படம் வெளியிடப்பட்டது.


           1494-ம் ஆண்டிலிருந்து இந்த படம், மாண்டர்சன் குறிப்பிட்டது போல், கண்களை மூடிக்கொண்டு நடத்தும் நீதியின் கொண்டாட்டம் அல்ல. மாறாக, அது ஒரு விமர்சனமாகவே பார்க்கப்படுகிறது. மர ஒவியம் பெரும்பாலும் ஜெர்மன் மறுமலர்ச்சி கலைஞரான ஆல்பிரெக்ட் டியூரர் முக்கிய காரணமாக இருந்தார். இதற்கு "கண்மூடித்தனமான நீதி" (The Fool Blindfolding Justice) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில், ஒரு 'முட்டாள்' நீதி தேவதை போல தோற்றமளிக்கும் ஒரு பெண்ணின் கண்களைக் கட்டுகிறார். இந்த பெண் ஒரு கையில் வாளையும், மறு கையில் தராசையும் பிடித்திருக்கிறார்.


17-ம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்த படம் அதன் நையாண்டிக்கான அர்த்தத்தை இழந்துவிட்டது என்று மாண்டர்சன் விளக்கினார். அது, பின்னர் நீதியின் அடித்தளமாகப் பார்க்கப்பட்டது.


இந்தியாவில் நீதி தேவதை 


இந்தியாவின் நீதித்துறை பொதுவான சட்ட அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இந்த முறை பிரிட்டிஷ் ஆட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சட்ட அமைப்புடன், ஆங்கிலேயர்கள் நீதி தேவதையின் உருவப்படத்தையும் அறிமுகப்படுத்தினர். இந்த அடையாளம் இன்னும் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் காணப்படுகிறது.


1872-ம் ஆண்டில் முதன்முதலில் கட்டப்பட்ட கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதி தேவதையின் உருவங்கள் கட்டிடத்தின் தூண்களில் செதுக்கப்பட்டன. சில சமயங்களில் நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டதையும், மேலும், சில சந்தர்பங்களில் கண்கள் திறந்திருப்பதையும் சித்தரிப்புகள் காட்டுகின்றன. மும்பை உயர் நீதிமன்றத்தின் கட்டிடம் ஒன்றில் கண்கள் கட்டப்படாத நிலையில் பெண் நீதி தேவதை சிலை உள்ளது. 


உச்ச நீதிமன்றத்தின் வளாகத்தில், உள்ள புதிய சிலை மற்றொரு கலைப்பொருளைப் போலவே உள்ளது. நீதிபதிகளின் நுழைவாயிலுக்கு அருகிலுள்ள ஒரு சுவரோவியம் ஒரு சக்கரத்தின் இருபுறமும் மகாத்மா காந்தி மற்றும் நீதி தேவதையின் சிலை ஆகியவற்றைக் காட்டுகிறது. இந்த சித்தரிப்பில் நீதி தேவதை ஒரு சேலை அணிந்து, ஒரு வாளுக்கு பதிலாக தராசு மற்றும் ஒரு புத்தகத்தை வைத்திருக்கிறார். 



வங்காளதேசத்தில் போராட்டம் 


டிசம்பர் 2016-ல், வங்காளதேசத்தின் உச்ச நீதிமன்றத்தின் வளாகத்தில், தெமிஸ் பெண் தெய்வத்தின் பெரிய சிலை நிறுவப்பட்டது. இந்த சிலைக்கு புடவை மற்றும் கண்கள் மூடப்பட்டிருந்தது. மேலும், தராசையும், வாளையும் வைத்திருந்தது.


இந்த சிலை முஸ்லீம் பழமைவாதிகளிடமிருந்து எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது. மேலும், அவர்கள் சிலை வழிபாடு என்று கூறியதை எதிர்த்தனர். மே 2017-ல், இந்த சிலை உச்ச நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களின் பார்வையில் இருந்து விலக்கி வேறொரு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டது. ஆகஸ்ட் 2024-ல், ஷேக் ஹசீனா அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்த சிலையானது இடிக்கப்பட்டது.




Original article:

Share: