வள-பகிர்வு குறித்த சொல்லாட்சிகள் ஒன்றியத்திற்கு உதவாது
கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று தென் மாநிலங்கள் வருவாய் எவ்வாறு பகிரப்படுகிறது என்பது குறித்து மத்திய அரசுக்கு எதிராக சிவப்புக் கொடியை உயர்த்தியுள்ளன. அவர்களின் புகார்களில் செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்களின் அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளும் அடங்கும். இது மாநிலங்களிடையே பகிர்ந்தளிக்கக்கூடிய மொத்த வரி வருவாயைக் குறைக்கிறது. நிதி ஆணையங்களின் (finance commission) வருவாய் பகிர்வுக்கான வழிமுறைகளையும் அவர்கள் விமர்சிக்கின்றனர். இது தங்கள் மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தவோ அல்லது வருமானத்தை திறம்பட அதிகரிக்கவோ நிர்வகிக்காத மாநிலங்களுக்கு வெகுமதி அளிப்பதாக அவர்கள் கருதுகின்றனர். இருப்பினும், 15 வது நிதி ஆணையம் 'மக்கள்தொகை செயல்திறனுக்கு' (demographic performance) 12.5% எடையை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்த கவலைகளை நிவர்த்தி செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டது. மேலும், இது மக்கள்தொகைக்கு வழங்கப்பட்ட 15% மற்றும் 45% மதிப்பீடானது மற்றும் மிக உயர்ந்த தனிநபர் வருமானத்திலிருந்து 'தூரம்' ஆகியவற்றை சமன் செய்வதாகும். இந்த பிரச்சினைகளை பதட்டங்கள் அதிகரிக்காமல் அமைதியான முறையில் தீர்க்க முடியும். சமீபத்தில் அமைக்கப்பட்ட 16-வது நிதிக்குழுவிடம் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க மாநில அரசுகளுக்கு வாய்ப்பு உள்ளது.
15வது நிதி ஆணையம், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்ப்பட்ட மொத்த பணமானது (அதிகாரப் பகிர்வு மற்றும் மானியங்கள் உட்பட) 2021-26 காலகட்டத்தில் பகிரக்கூடிய தொகுப்பில் பாதிக்கும் அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளது. இதில் 41% 'கட்டுப்பாடற்ற' (untied) அதிகாரப் பகிர்வாகவும், மீதமுள்ளவை மானியங்களாகவும் அடங்கும். நெருக்கடியான ஆண்டுகளில் நிதி சிக்கல்கள் இந்த மானியங்களை பாதித்திருக்கலாம், ஆனால் இதற்கு ஒன்றிய அரசை குறைகூற முடியாது. இருப்பினும், குறிப்பிட்ட நடைமுறைகளைப் பின்பற்றி மட்டுமே மானியங்கள் அல்லது கடன்களை வழங்க முடியும் என்பதை மாநிலங்கள் புரிந்துகொள்வது முக்கியம். செயல்திறன் இணைக்கப்பட்ட நிதிகள் (performance-linked funds) எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை மாநிலங்கள் சிறப்பாக கண்காணிக்க வேண்டும். கூடுதலாக, மாநிலங்கள் தங்கள் சொந்த வருவாயை அதிகரிப்பதிலும், பொறுப்பற்ற செலவினங்களைக் குறைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். அது நிதியளிக்கப்படாத மானியங்கள், இலவசங்கள் அல்லது பழைய ஓய்வூதியத் திட்டங்களுக்குத் திரும்புவது போன்ற கடமைகளாக இருந்தாலும் சரி, இது எதிர்காலத்தில் அவர்களின் நிதி நிலைத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும்.
மாநிலங்கள் தங்கள் சொந்த வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை ஆராய்வதற்கான விருப்பம் உள்ளது. மேலும், ஒரு வழியாக, பசுமை வரிகள் (green tax) உட்பட மோட்டார் வாகன வரிகளை மறுபரிசீலனை செய்து சரிசெய்வது, அத்தகைய மாற்றங்களுக்கு இடமுள்ளது. மாநிலங்கள் தங்கள் வரி அல்லாத வருவாயை அதிகரிக்க இயலாமை ஒரு தொடர்ச்சியான பிரச்சினையாக உள்ளது. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா போன்ற கனிமங்கள் நிறைந்த மாநிலங்கள் தங்கள் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) வரி அல்லாத வருவாயிலிருந்து 4% முதல் 6% வரை உற்பத்தி செய்கின்றன. மேலும், தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற பெரிய மாநிலங்கள் தங்கள் மாநில மொத்த உற்பத்தியில் 1%க்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றன. இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, மாநிலங்களின் மொத்த வருவாயில் வரி அல்லாத வருவாயின் பங்கு 2004 நிதியாண்டு முதல் 2009 ஆம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் 12 சதவீதத்திலிருந்து 7.6 சதவீதமாக இருந்தது. 2021 நிதியாண்டு முதல் 2023 நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் குறைந்துள்ளது. நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது மாநிலங்களுக்கு வரி அல்லாத வருவாயை அதிகரிக்கும்.
மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதிலும், வருமானத்தை அதிகரிப்பதிலும் வெற்றி பெற்றதற்கு வெகுமதி கிடைக்காதது குறித்து தென் மாநிலங்கள் அவர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளன. அவர்கள் ஒன்றியத்திற்கு பங்களிப்பதை விட குறைவான வரிகளைப் பெறுகிறார்கள் என்று அவர்கள் வாதிடுகின்றனர். இது ஒரு ஒன்றியத்தில் வலுவான மற்றும் பலவீனமான பிராந்தியங்களுக்கு இடையிலான வள-பகிர்வு கொள்கையை புறக்கணிக்கிறது. இருப்பினும், இந்த மாநிலங்கள் மலிவான உழைப்பு மற்றும் கனிமங்கள் போன்ற வளங்கள் மூலம் வடக்கு பிராந்தியங்களால் பயனடைந்துள்ளன. 14 மற்றும் 15 வது நிதி ஆணையங்களுக்கு இடையில் பகிர்ந்தளிக்கக்கூடிய தொகுப்பில் கர்நாடகாவின் பங்கு 4.7% முதல் 3.6% வரை கணிசமாகக் குறைந்துள்ளதால் இவற்றின் கவலைகள் விவாதத்திற்கு உரியவை. இந்த விவாதங்கள் வெறும் சொல்லாடல்கள் மூலம் நடத்தப்படாமல், வருவாய் அதிகாரப் பகிர்வைச் சுற்றியுள்ள சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதுடன், புதிய நிதிக் குழுவின் முன் பேச்சுவார்த்தை மூலம் நிதி பகிர்வுக்கான தீர்வுக்க்காக நடத்தப்பட வேண்டும்.