சாதிய பாகுபாடுகளையும் (caste discrimination), தீண்டாமையையும் ஒழிப்பதில் (untouchability) காங்கிரஸ் உறுதியாக இல்லை என்று கூறி 1925-ல் காங்கிரசை விட்டு வெளியேறிய பெரியார் எடுத்த முடிவு முக்கியமான திருப்புமுனைகளில் ஒன்றாகும்.
பெரியார் என்றழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்கள், சிறு வயதிலிருந்தே பொது வாழ்வில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிளேக் (plague) நோயின் போது ஈரோடு மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றினார். உறவினர்கள் கைவிட்டுச் சென்றபோது அவர் இறந்த உடல்களை மரியாதையுடன் அடக்கம் செய்வதற்காக எடுத்துச் சென்றார். பெரியார் இந்து மதத் துறவி போல் உடையணிந்து இந்தியா முழுவதும் பயணம் செய்தார். வாரணாசி, கொல்கத்தா, அசன்சோல், பூரி, எல்லாூர், பெஜவாடா போன்ற இடங்களுக்குச் சென்றார். இந்து மதத்தின் மூடநம்பிக்கைகள், நடத்தைகள் மற்றும் பூசாரிகளின் நடத்தை உள்ளிட்டவற்றைப் பற்றி அறிய விரும்பினார். 1925-ஆம் ஆண்டில், சாதிய பாகுபாடு மற்றும் தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இல்லை என்று நம்பியதால், பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார். இந்த முடிவு மெட்ராஸ் மாகாணத்தில் சமூக நீதி இயக்கத்தின் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது மற்றும் தமிழ்நாட்டின் அரசியல் நிலப்பரப்பை வடிவமைத்தது.
காந்தியின் கொள்கைகள் மற்றும் சுதந்திர ஈடுபாட்டினால் ஈர்க்கப்பட்ட பெரியார் 1919-ல் காங்கிரஸில் சேர்ந்தார். பெரியார் காங்கிரசின் அர்ப்பணிப்புள்ள உறுப்பினராக இருந்தார். மிகுந்த ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் கதருக்காகப் பிரச்சாரம் செய்தார். ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்கான தேசிய இயக்கத்தை மேம்படுத்துவதற்காக காதி ஆடைகளை ஏந்தி, காதிக்காக தீவிர பிரச்சாரம் செய்தார். மெட்ராஸ் மாகாணத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் காதியின் முக்கியத்துவம் குறித்து ஊக்குவிப்பதற்கும் விழிப்புணர்வை பரப்புவதற்கும் இவர் தனது தோள்களில் கதர் ஆடைகளை சுமந்தார். திராவிட இயக்கத்தின் தந்தை (father of the Dravidian movement) என்று அழைக்கப்படும் பெரியார், 1916 நவம்பர் 20 அன்று நிறுவப்பட்ட நீதிக்கட்சியில் (Justice Party) முதலில் உறுப்பினராக இல்லை. நீதிக்கட்சி சி.நடேச முதலியார், டி.எம்.நாயர், பி.தியாகராய செட்டி, அலமேலு மங்கை தாயாரம்மாள் ஆகியோரால் நிறுவப்பட்டது. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் சென்னை மாகாணத்தின் நிர்வாகத்திலும் அரசியலிலும் பிராமணர் அல்லாதவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக நீதிக்கட்சி நிறுவப்பட்டது.
மெட்ராஸ் மாகாணத்தின் காங்கிரஸ் தலைவராக ஆன பிறகு, பெரியார் பிராமணர் அல்லாதவர்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வாதிட்டார். காங்கிரஸ் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் விரும்பினார. ஆனால், காங்கிரஸ் முறையாக பதிலளிக்காததால் பெரியார் விரக்தியடைந்தார். இடஒதுக்கீடுகளை வலியுறுத்தி திருச்சி (1919), திருநெல்வேலி (1920), தஞ்சாவூர் (1921), திருப்பூர் (1922), சேலம் (1923), மற்றும் திருவண்ணாமலை (1924) ஆகிய இடங்களுக்கு பயணம் செய்தார். இந்த இடங்களில் போதிய ஆதரவு இல்லாததால் ஏமாற்றமடைந்த அவர், ஆதிக்க சாதி மற்றும் வர்க்க நலன்களால் காங்கிரஸ் கட்டுப்படுத்தப்படுவதாக நினைத்தார்.
1924-ல் பெரியார் நடத்திய வைக்கம் போராட்டம் அவரது துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் காட்டியது. அவர் தீண்டாமை மற்றும் சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். சென்னை மாகாணத்தில் மட்டுமல்ல, மாகாணத்தை தாண்டி தனது போராட்டத்தை தொடர்ந்தார். பெரியாரும், ராஜாஜியும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், பெரியாரின் முயற்சிகளை ராஜாஜி பலமுறை தடுத்தார். பெரியாரின் வேண்டுகோள்கள் மற்றும் காந்தியுடனான சந்திப்புகளும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
1925-ல் காஞ்சிபுரம் காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் பெரியார் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டார். பிராமணர் அல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் கல்வி வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான தீர்மானத்தை அவர் முன்வைத்தார். இந்த கோரிக்கை பொது நலனுக்கு தீங்கு விளைவிப்பதாக கூறி காங்கிரஸ் இந்த கோரிக்கையை நிராகரித்தது. காங்கிரஸின் இந்த முடிவிற்கு பிறகு பெரியாரின் காங்கிரஸுடனான தொடர்பை முடிவுக்கு கொண்டு வந்தார். கட்சிக்கு திரும்ப மாட்டேன் என்றும் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பேன் என்றும் சபதம் செய்தார்.
காங்கிரஸுடனான அவரது உறவின் முடிவு, மெட்ராஸ் மாகாண அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தையும், தமிழகத்தில் சமூக நீதி இயக்கத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் ஏற்படுத்தியது. 1925-ல் பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் (self-respect movement) தொடங்கினார்.
1928-ல் டாக்டர் சுப்பராயன் தலைமையிலான அமைச்சரவையால் கொண்டுவரப்பட்ட சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை (caste based reservation) பெரியார் ஆதரித்தார். இதற்கு நீதிக்கட்சி ஆதரவு அளித்தது.
பிப்ரவரி 1929-ல், சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநில அளவிலான மாநாடு செங்கல்பட்டில் நடைபெற்றது. 34 தீவிர தீர்மானங்கள் (radical resolutions) நிறைவேற்றப்பட்டதால் இந்த மாநாடு வரலாற்று சிறப்பு மிக்கதாக கருதப்பட்டது. அந்த நேரத்தில், பிராமணர் அல்லாத சமூகங்களைச் சேர்ந்த மேல்மட்ட தலைவர்கள் நீதிக்கட்சியில் இடம்ப்பெற்று இருந்ததால் நீதிக்கட்சி விமர்சனங்களை எதிர்கொண்டது. 1930-களின் முற்பகுதியில் சுதந்திரத்திற்கான வளர்ந்து வரும் தேசியவாத போராட்டம் கட்சிக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தியது.
ஜனவரி 1937-ல், ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றது. நீதிக்கட்சி தோற்கடிக்கப்பட்டது. நீதிக்கட்சித் தலைவர்கள் தங்கள் ஆற்றலையும் தொலைநோக்கையும் காத்துக்கொள்ளவும், காலம் வரும் வரை காத்திருக்கவும் பெரியார் அறிவுறுத்தினார்.
1937-ல் ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அரசு பள்ளிகளில் ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக்கியது. இந்த முடிவு மாநில அரசியலுக்கு புதிய ஆற்றலையும் இயக்கவியலையும் கொண்டு வந்தது. அடையாளம் மற்றும் அதிகாரம் பற்றிய தேசிய விவாதத்தில் மொழி அரசியல் ஒரு முக்கியமான பரிமாணத்தைப் பெற்றது.
பெரியார், தமிழர் பிரதேசங்களுக்குத் தமிழர் சுயராஜ்யம் (self rule) வேண்டும் என்று வாதிட்டார். இந்தியாவின் அரசியல் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பு தமிழர் உரிமைகள் மற்றும் நலன்களை போதுமான அளவு பாதுகாக்க முடியாது என்று அவர் நம்பினார்.
1938 டிசம்பரில், சென்னை சிறையில் இருந்தபோது நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தி திணிப்பை பெரியார் தொடர்ந்து எதிர்த்தார். பிப்ரவரி 1940-ல் ஆளுநர் உத்தரவு மூலம் பள்ளிகளில் ஹிந்தியை கட்டாயப் பாடமாக நீக்கி கோரும் பெரியாரின் கோரிக்கை வெற்றிபெற்றது. முகமது அலி ஜின்னா, எம்.என்.ராய் போன்ற தேசிய தலைவர்கள் பெரியாரை கவனிக்க ஆரம்பித்தனர். யாரும் எதிர்பார்க்காத வகையில், ராஜாஜி பெரியாரின் தனிநாடு கோரிக்கையை ஆதரித்தார். மக்கள் இந்தக் கோரிக்கையை உண்மையாக ஆதரிப்பதாகக் அவர் கூறினார். ராஜாஜி 1942-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்த பின்னர் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்தார்.
1944-ஆகஸ்ட் மாதம் நீதிக்கட்சியின் சேலம் மாநாட்டில் பெரியார் ஒரு குறிப்பிடத்தக்க நகர்வைச் செய்தார். சுயமரியாதை இயக்கத்தை நீதிக்கட்சியுடன் இணைத்து "திராவிட கழகம்" (‘Dravida Kazhagam’) என்ற பரந்த மக்கள் இயக்கத்தை தொடங்கினார். இந்த நடவடிக்கை தமிழகத்தில் சமூக நீதி இயக்கத்தைத் மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்தது. தெற்கிலும் தமிழகத்திலும் திராவிட இயக்க வரலாற்றில் இது ஒரு முக்கிய தருணமாக இருந்தது.
பெரியார் தொடக்கத்தில் இருந்தே தேர்தல் அரசியலுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தார். தேர்தல் அரசியலின் மீதான அவரது வெறுப்பு அல்லது அலட்சியம் பின்னர் அவரது அரசியல் சீடரான அண்ணாதுரைடன் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியது. பெரியார் மற்றும் அண்ணாவிற்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், உண்மையான பிரச்சினை அண்ணாவும் அவரைப் பின்பற்றுபவர்களும் தேர்தல் அரசியலுக்கு வரத் துடித்ததை பெரியார் கவனித்தார். இதன் பின்னர் செப்டம்பர் 17, 1949 அன்று சென்னையில் உள்ள ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகம் (Dravida Munnetra Kazhagam) தோற்றுவிக்கப்பட்டது. இருபது ஆண்டுகளுக்குள், பெரியாரின் ஆரம்பப் போராட்டங்கள் பரவலான ஆதரவாக மாறியது. திராவிட முன்னேற்றக் கழகம் குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் மார்ச் 1967-ல் தமிழ்நாட்டில் முதல்முறையாக ஆட்சியமைத்தது.
பேராசிரியர் ராமு மணிவண்ணன் கல்வி, மனித உரிமைகள் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகிய துறைகளில் அறிஞராக உள்ளார்.