தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய மசோதாவும் அதன் நிலையற்றத் தன்மையும் -அமிதாப் சின்ஹா

 தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு (National Disaster Management Authority (NDMA)) எந்த நிர்வாக அல்லது நிதி அதிகாரங்களும் இல்லை. இதனால், எந்தவொரு முடிவும் உள்துறை அமைச்சகத்தின் மூலமே செயல்படுத்த வேண்டும். இந்த செயல்முறை திறமையற்றதாகவும் மற்றும் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளுவதாகவும் உள்ளது.


பேரிடர் மேலாண்மை சட்டத்தை (Disaster Management Act), 2005  திருத்துவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்மசோதா, இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளுவதற்கு  மேற்கொள்ளும் செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாக இந்த கொண்டுள்ளது.


தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (National Disaster Management Authority (NDMA)) பங்கு மற்றும் பொறுப்புகளை விரிவுபடுத்த மசோதா பல முன்மொழிவுகளை முன்மொழிகிறது. பேரிடர்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து, மாநில அரசுகளுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) வழிகாட்டுவதும்,  பேரிடர்களை கையாள்வதில் மத்திய அரசு நிறுவனங்களுக்கும் இந்த ஆணையம்  உதவவும் என மசோதா பரிந்துரைக்கிறது.


இருப்பினும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) அந்தஸ்தை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை இந்த மசோதா நிவர்த்தி செய்யவில்லை. இது, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பங்களிப்பை வலுப்படுத்துவதுடன், அரசு நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதோடு, அதற்கு அதிக நிதி மற்றும் மனித வளங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவிற்குப் பிறகு, பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 (Disaster Management Act) உருவாக்கப்பட்டது. இருப்பினும், 1998-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒடிசா சூப்பர் சூறாவளியிலிருந்து (Odisha super cyclone) இந்த யோசனை பரிசீலனையில் இருந்தது. 


பேரிடர் மேலாண்மை சட்டம் மாநில அளவில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்களை (State Disaster Management Authority (SDMA)) உருவாக்க வழிவகுத்தது. இது தேசிய பேரிடர் மீட்புப் படை (National Disaster Response Force (NDRF)) மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (National Institute of Disaster Management (NIDM)) ஆகியவற்றையும் உருவாக்கியது. தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NIDM) என்பது பேரிடர் தொடர்பான ஆராய்ச்சி, பயிற்சி, விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான ஒரு நிறுவனம் ஆகும். இந்த சட்டத்தை 2009-ம் ஆண்டில் தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கை (National Disaster Management Policy) மற்றும் 2016-ம் ஆண்டில் தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம் (National Disaster Management Plan) ஆகியவற்றால் பின்பற்றப்பட்டன.


இந்த கட்டமைப்பு பேரிடர்களை கையாள்வதற்கும், உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், நிவாரணம் வழங்குவதற்கும் பயனுள்ளதாக உள்ளது. மேலும், காலநிலை மாற்றத்தால் இயற்கைப் பேரிடர்கள் அதிகரித்து வரும் நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) போன்ற அமைப்புகளுக்கு முன்பை விட தற்போது அதிக பொறுப்புகளும்,  அதிகாரங்களும் தேவைப்படுகின்றன.


பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கான திருத்த மசோதா பல முக்கிய மாற்றங்களை முன்மொழிகிறது:


நகர்ப்புற பேரிடர் மேலாண்மை ஆணையங்கள்


பேரிடர் மேலாண்மைக்கான நிறுவன அமைப்பானது மாவட்ட அளவில், மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் (district disaster management authorities) பேரிடர் மேலாண்மைக்காக செயல்படுகின்றனர். இருப்பினும், பல மாவட்டங்களை உள்ளடக்கிய பெரிய பெருநகரங்களின் சிறப்புத் தேவைகளை இந்த மசோதா அங்கீகரிக்கிறது. அத்தகைய நகரங்களில், அனைத்து மாநிலத் தலைநகரங்கள்  மற்றும் மாநகராட்சிகளைக் (municipal corporation) கொண்ட நகரங்கள், இப்போது முனிசிபல் ஆணையர் (municipal commissioner) தலைமையில் ஒரு நகர்ப்புற பேரிடர் மேலாண்மை ஆணையமும் இருக்கும். நகர்ப்புற வெள்ளம் போன்ற நகர அளவிலான பேரழிவுகளுக்கு ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கொண்டிருக்க இது உதவும்.


மாநில பேரிடர் மீட்புப் படை (State Disaster Response Force (SDRF)) : 


பல மாநிலங்கள் தேசிய பேரிடர் மீட்புப் படை (National Disaster Response Force (NDRF)) போன்ற மாநில பேரிடர் மீட்புப் படைகளை (SDRF) உருவாக்கியிருந்தாலும், 2005 சட்டத்தில்  மாநில பேரிடர் மீட்புப் படைகளை (SDRF) கட்டாயமாக்கப்படவில்லை. இந்த மசோதாவின்படி, ஒவ்வொரு மாநிலமும் மாநில பேரிடர் மீட்புப் படைகளை (SDRF) உருவாக்கி அவற்றை பராமரிக்க வேண்டும் என்று இந்த மசோதா முன்மொழிகிறது.


தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழு (NCMC) : 


கேபினட் செயலாளரின் தலைமையிலான, பேரிடர்கள் உட்பட அனைத்து வகையான தேசிய அவசரநிலைகளையும் கையாளுவதற்கு  தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழுவானது (NCMC) செயல்பட்டு வருகிறது. இந்த மசோதா  தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழுக்கு (NCMC) சட்ட அந்தஸ்தை வழங்குவதுடன், இது "தீவிரமான அல்லது தேசிய பாதிப்புகளுடன்" (serious or national ramifications) பேரிடர்களை கையாள்வதற்கான முக்கிய அமைப்பாக இது உருவாகிறது. 


தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மேம்படுத்தப்பட்ட பங்கு :

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) பங்கு மற்றும் பொறுப்புகள் கணிசமாக விரிவுபடுத்தப்பட வேண்டும். மேலும், வளர்ந்து வரும் பேரிடர்களின் அபாயங்கள் உட்பட, நாட்டிற்கு ஏற்படும் பேரழிவு தொடர்பான அபாயங்கள் முழுவதையும் அவ்வப்போது கணக்கெடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


பேரிடர் தரவுத்தளங்கள்


இது பேரிடர் மதிப்பீடு, நிதி ஒதுக்கீடு மற்றும் தயார்நிலை திட்டங்கள் பற்றிய விவரங்களுடன் ஒரு தேசிய பேரிடருக்கான  தரவுத்தளத்தை உருவாக்கி பராமரிக்கவும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) குறிப்பிடுகிறது. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் (SDMA) மாநில அளவிலான தரவுத்தளங்களையும் உருவாக்க வேண்டும்.


இழப்பீடுகள் : 


பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச தரநிலை நிவாரணத்திற்கான வழிகாட்டுதல்களை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) பரிந்துரைக்க வேண்டும் என்று மசோதா முன்மொழிகிறது. உயிர் இழப்புகள் (loss of lives), வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் (damage to homes and property), வாழ்வாதாரத்தை இழந்தால் (loss of livelihoods) இழப்பீடு தொகைகள் குறித்த பரிந்துரையும் இதில் அடங்கும்.


மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள்


பேரிடர்கள் தொடர்பான வரையறையை இந்த மசோதா தெளிவுபடுத்த விரும்புகிறது. உண்மையான சட்டத்தின் மூலம், பேரிடர்களை "எந்தவொரு பகுதியிலும் இயற்கை அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட காரணங்களால் எழும் பேரழிவுகள் (calamity), விபத்துகள் (mishap), பெரும் ஆபத்து (catastrophe) அல்லது கடுமையான நிகழ்வு (grave occurrence)" என்று விவரித்தது. "மனிதனால் உருவாக்கப்பட்ட காரணங்கள்" சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான சூழ்நிலைகளை உள்ளடக்குவதில்லை என்று மசோதா குறிப்பிடுகிறது. உதாரணமாக, கலவரம் ஏற்பட்டு உயிர் இழப்பு, துன்பம் அல்லது சொத்து சேதம் ஏற்பட்டால், இந்த சட்டம் பொருந்தாது.


துணைத் தலைவர் இல்லாதது


தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) தலைவராக பிரதமர் தலைமை வகிக்கிறார். கேபினட் அமைச்சராக இருக்க வேண்டிய துணைத் தலைவர், தினசரி நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவராவர். இருப்பினும், துணைத் தலைவர் பதவி சுமார் பத்தாண்டுகளாக காலியாக உள்ளது. இந்தத் திருத்த மசோதா, தலைவர் அல்லது துணைத் தலைவர் தினசரி நடவடிக்கைகளைக் கையாளுவதற்கு உறுப்பினரை நியமிக்க அனுமதிப்பதன் மூலம் இந்த நிலையை சட்டபூர்வமாக்குகிறது.


மசோதாவில் கவனிக்கப்படாத பிரச்சினைகள்


அதன் வளர்ந்து வரும் பங்கு மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு (NDMA) அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர். அதை அரசு துறையாகவோ அல்லது முழு அளவிலான அமைச்சகமாகவோ உயர்த்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) ஆண்டு முழுவதும் செயலில் உள்ளது மற்றும் மாநில அரசுகள் மற்றும் அவற்றின் முகமைகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இப்போது, ​​தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) முக்கிய அமைச்சகமான உள்துறை அமைச்சகத்தின் மூலம் இந்த ஒருங்கிணைப்பு நடைபெறுகிறது.


துணைத் தலைவர் இல்லாமல், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு (NDMA) தலைமைத்துவம் மட்டுமல்ல, மாநிலங்கள் மற்றும் பிற மத்திய அரசு நிறுவனங்களைச் சமாளிக்கத் தேவையான அரசியல் பலமும் இல்லாமல் போய்விட்டது.


தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு (NDMA) நிர்வாக மற்றும் நிதி அதிகாரங்கள் இல்லை. ஒவ்வொரு சிறிய முடிவும் உள்துறை அமைச்சகத்தின் மூலம் செல்ல வேண்டும், இது திறமையற்றது மற்றும் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் (NDMA) உயர்மட்டத்தில் மிகக் குறைந்த பணியாளர்களான மூன்று உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த காலத்தில், இது ஆறு முதல் ஏழு உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. இதில், ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு குறிப்பிட்ட வகை பேரிடருக்கு பொறுப்பானவர்கள் ஆவார்.


இந்தத் திருத்த மசோதா இப்போது பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை. சில விதிகள், குறிப்பாக மாநில அளவிலான மாற்றங்களை பாதிக்கும் விதிகள், எதிர்ப்பை எதிர்கொள்ளக்கூடும்.  



Original article:

Share: