தலைவர்கள் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான தேவைகளுடன் நிலைத்தன்மையை சமநிலைப்படுத்த வேண்டும்.
நிலைத்தன்மைக்கான மாற்றம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதமாக கையாள்கிறது. இந்த மாற்றத்திற்கும் நமது வர்த்தகக் கொள்கைக்கும் இடையே வேறுபாடு உள்ளது. கூடுதலாக, நடைமுறை நிர்வாகத் தேவைகளுக்கும் நிலையான வளர்ச்சிக்கான நெறிமுறை இலக்குகளுக்கும் இடையே முரண்பாடு உள்ளது.
பசுமை ஆற்றல் மாற்றம் (green energy transition) முக்கியமாக பசுமை மின்சாரத்திற்கு மாறுவதை பற்றி குறிப்பிடுகிறது. புதைபடிவ எரிபொருட்களிலிருந்து தூய்மையான ஆற்றலுக்கு நகரும் வேகமும் அளவும் போக்குவரத்து, தொழில், கட்டிடங்கள் மற்றும் வீடுகளை மின்மயமாக்குவதைப் பொறுத்தது. மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால் கையாளப்படுவதால், பசுமை எரிசக்தி மாற்றத்தை திறம்பட செயல்படுத்துவதில் இருவருக்கும் பொறுப்பு உள்ளது.
ஒன்றிய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Ministry of New and Renewable Energy) அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கண்டுள்ளது. 2030-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் ஆற்றல் தேவைகளில் 50% புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரமாக உள்ளனர். 2030-ஆம் ஆண்டுக்குள் 500-ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை உருவாக்குவதே இந்த அமைச்சகத்தின் இலக்காக உள்ளது. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் 50-ஜிகாவாட் சூரிய மின் உற்பத்தி திறனை ஏலம் விடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் 2023-ல் இந்த இலக்கை கிட்டத்தட்ட 25% தாண்டியது.
மேலும், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் மின் அமைச்சகம், அதன் ஒழுங்குமுறை நிறுவனங்களான-ஒன்றிய மின்சார ஆணையம் (Central Electricity Authority (CEA)), ஒன்றிய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (Central Electricity Regulatory Commission (CERC)), ஒன்றிய பரிமாற்ற பயன்பாடு (Central Transmission Utility (CTU)), மற்றும் மின்சக்தி அமைப்பு செயல்பாடு உற்பத்தி நிறுவனம் (Power System Operation Corporation Ltd (POSCO)) ஆகியவை ஆகிய பல ஒழுங்குமுறை நிறுவனங்களுடனும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் இணைந்து செயல்ப்பட்டு வருகிறது.
அதிக வேலை தேவைப்படுகிறது. பரிமாற்ற இணைப்பு (Transmission connectivity) போதுமானதாக இல்லை. அளவை அதிகரிக்க, கட்ட அளவிலான ஆற்றல் சேமிப்பு (grid-scale energy storage) தேவை. செலவுகள் மற்றும் தொழில்நுட்பம் மேம்பட்டாலும், இது நீண்ட கால பிரச்சினையாகவே உள்ளது. பசுமை நிதி வரம்புக்குட்பட்டது மற்றும் பெரும்பாலும் குறுகிய காலத்திற்கு மட்டும் செயல்படும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் பல ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் இருந்தாலும், "பொறுமையான" பசுமை மூலதனத்தின் (“patient” green capital) பற்றாக்குறை உள்ளது. பெரும்பாலான முதலீட்டாளர்கள் 6-7 ஆண்டுகளுக்குள் லாபத்தைப் பார்க்க விரும்புகிறார்கள். ஆனால், 25 ஆண்டு கால நிர்ணயத்துடன் முதலீடு செய்ய வேண்டியது அவசியம்.
மாநில அரசுகளைக் கருத்தில் கொள்ளும்போது ஆற்றல் மாற்றம் மாறுபாடுகளுடன் உள்ளது. தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா, ஒடிசா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்கள் விரைவாக முன்னேறியுள்ளன. அவர்கள் ஆதரவு கொள்கைகள், சாதகமான புள்ளிவிவரங்கள் மற்றும் செயலில் உள்ள உண்மையான உபகரண உற்பத்தியாளர்கள் (original equipment manufacturer (OEM)) ஆகியவற்றிலிருந்து பயனடைகிறார்கள். ஹரியானா ஆதரவான கொள்கைகளைக் கொண்டுள்ளது. ஆனால், குறைந்த முன்னேற்றம் அடைந்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை திறம்பட பயன்படுத்தாததே இதற்குக் காரணம். ராஜஸ்தான் நிதி நெருக்கடியில் உள்ளது மற்றும் புதைபடிவ எரிபொருட்களில் இருந்து விலகிச் செல்ல தேவையான ஊக்குவிப்புகளை வழங்குவதில் சிரமம் உள்ளது. மாநிலங்கள் தூய்மையான ஆற்றல் மாற்றத்திற்கு ஒரே மாதிரியான முறையை பின்பற்றுவதில்லை. வெவ்வேறு மாநிலங்கள் வெவ்வேறு வேகத்தில் முன்னேற்றமடைகின்றன.
இறுதியில், இந்த மாற்றம் அனைவரையும் பாதிக்கும் என்பதால், அனைத்து குழுக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதில் ஒன்றியஅரசு, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் உள்ளனர். இதை அடைவதற்கு ஏற்கனவே உள்ள கட்டமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பெரிய மாற்றங்கள் தேவைப்படும்.
வர்த்தகக் கொள்கை தேசிய நலன்களை ஆதரிக்க வேண்டும். இருப்பினும், தேசிய நலனுக்கான பல்வேறு அம்சங்களை எவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது சவாலான பணியாகும். ஆற்றல் மாற்றத்தில், இது ஒரு கொள்கை சிக்கலை உருவாக்குகிறது. குறிப்பாக சுத்தமான எரிசக்தி சந்தையில் சீனாவின் முக்கிய பங்கு காரணமாக இந்த சிக்கல் ஏற்படுகிறது.
சர்வதேச ஆற்றல் முகமையின் (International Energy Agency (IEA)) கூற்றுப்படி, 2023-ல் சேர்க்கப்பட்ட புதிய உலகளாவிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனில் 63% சீனாவில் உள்ளது. சீனா உலகளவில் 473 ஜிகாவாட்டில் 298 ஜிகாவாட்டை சேர்த்தது. பாலிசிலிக்கா, செதில்கள், செல்கள் மற்றும் தொகுதிகள் உட்பட சூரிய மற்றும் காற்றாலை ஆற்றல் விநியோகச் சங்கிலியில் இது வலுவான இருப்பைக் கொண்டுள்ளது. சீனாவும் குறைந்த விலையில் உலகத்தரம் வாய்ந்த சோலார் பேனல்கள், காற்றாலை விசையாழிகள் மற்றும் பேட்டரிகளை உற்பத்தி செய்கிறது. எடுத்துக்காட்டாக, சீன சோலார் பேனல்கள் அமெரிக்காவை விட 85% மற்றும் தென்கிழக்கு ஆசியாவை விட 55% மலிவானவை என்று ப்ளூம்பெர்க் (Bloomberg) தெரிவிக்கிறது.
இந்திய உற்பத்தியாளர்கள் குறைவான சீன தயாரிப்புகளுக்கு கட்டுப்பாடற்ற பயன்பாட்டை கொண்டிருந்தால், சுத்தமான எரிசக்தி மற்றும் புதைபடிவ எரிபொருட்களுக்கு இடையேயான செலவு இடைவெளி குறையும். இது சுத்தமான ஆற்றலுக்கான மாற்றத்தை துரிதப்படுத்தும். இருப்பினும், புவிசார் அரசியல் காரணங்களால் இந்த யோசனை நடைமுறையில் இல்லை. இந்தியா சீனாவை அதிகம் நம்பியிருக்க முடியாது. ஏனெனில் அது தேசிய பாதுகாப்பு அபாயங்களை உருவாக்கலாம். இதே போன்ற பிரச்சனை, குறைவான வெளிப்படையானது என்றாலும், பொருளாதார வளர்ச்சியுடன் நிலையான தன்மையை சமநிலைப்படுத்துகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து ஆகியவை இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் கார்பன் மீது விதிக்க திட்டமிட்டுள்ள கார்பன் வரிகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதைக் கருத்தில் கொள்ளும்போது சிக்கல் எழுகிறது.
தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன் நிலையான தன்மையை சமநிலைப்படுத்துவதே நமது தலைவர்களுக்கு மிக பெரிய சவாலாகவுள்ளது. அவர்கள் வர்த்தகம் மற்றும் காலநிலை கொள்கைகளை சீரமைக்க வேண்டும்.
உலகம் ஒரு நெறிமுறை சிக்கலை எதிர்கொள்கிறது. புவி வெப்பமடைதல் ஒவ்வொரு நாளும் வெப்பம்மடைகிறது. உதாரணமாக, உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ. சமீபத்தில், லடாக்கின் தலைநகரான லேயில் 11,000 அடியில் வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை எட்டியதால் விமானப் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டது. தற்போது, கனமழையால் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை நாடு எதிர்கொள்கிறது. காலநிலை மாற்றத்தின் மனித மற்றும் பொருளாதார செலவுகள் அதிகரித்துள்ளன. எவ்வாறாயினும், நமது நிர்வாக கட்டமைப்புகள் இன்னும் காலாவதியான, சுய சேவை தேசியவாத அணுகுமுறைகளில் சிக்கித் தவிக்கின்றன.
"தேசிய நலன்கள் வெற்றிக்காக எப்போதாவது சமரசம் செய்யப்படுகின்றன." இறையாண்மையுள்ள அரசுகளின் கண்ணோட்டத்தில் பிரச்சினைகளைப் பார்க்கும்போது இது பெரும்பாலும் உண்மையாக இருக்கிறது என்று ஹென்றி கிஸ்ஸிங்கர் (Henry Kissinger) ஒருமுறை எழுதினார்.
இருப்பினும், புவி வெப்பமடைதலை குறுகிய பார்வையில் பார்க்கக்கூடாது. மாறாக, மனிதநேயம், நெறிமுறைகள் மற்றும் கூட்டுறவு நிர்வாகத்தின் (cooperative governance) பரந்த சூழலில் நாம் அதை கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும்.
எழுத்தாளர், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையத்தின் (Centre for Social and Economic Progress (CSEP)) தலைவராக உள்ளார்.