ஜப்பானிய நகரத்தின் மீது குண்டு வீசப்பட்டதைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஹிரோஷிமா தினம் (Hiroshima Day) அனுசரிக்கப்படுகிறது. உலக அமைதி மற்றும் ஆயுதக் குறைப்புக்கான முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது.
'லிட்டில் பாய்' (Little Boy) என்று பெயரிடப்பட்ட முதல் அணுகுண்டு ஆகஸ்ட் 6, 1945 அன்று ஹிரோஷிமாவில் வீசப்பட்டது. இந்த குண்டுவீச்சு நகரத்தை அழித்து 70,000-80,000 மக்களைக் கொன்றது. இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா முதல் முறையாக அணுகுண்டைப் பயன்படுத்தியது. இந்த அணுகுண்டு பெரும் இழப்பு மற்றும் வரலாறு காணாத அழிவை ஏற்படுத்தியது. இந்த குண்டுவீச்சின் விளைவுகள் இன்றும் உணரப்படுகின்றன.
இந்த சோகமான நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஹிரோஷிமா தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன் 79 வது ஆண்டு நிறைவில், உலக அமைதி மற்றும் ஆயுதக் குறைப்பின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது, கதிரியக்க தனிமங்களின் பிளவு பண்புகள் முதல் முறையாக பேரழிவு ஆயுதத்தை உருவாக்க பயன்படுத்தப்பட்டன. எனோலா கே (Enola Gay) என்ற பி-29 குண்டுவீச்சு விமானத்தால் ஹிரோஷிமா மீது வீசப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பின்னர், ஆகஸ்ட் 9, 1945 அன்று, அமெரிக்கா "ஃபேட் மேன்" (Fat Man) என்ற பெயரில் இரண்டாவது அணுகுண்டை நாகசாகி மீது வீசியது.
1939-ஆம் ஆண்டு செப்டம்பரில் ஹிட்லரின் போலாந்து படையெடுப்புடன் தொடங்கியதை இந்த கொடூரமான முடிவை இந்த குண்டுவீச்சு குறித்தது. இரண்டாம் உலகப் போர் பல சித்தாந்தங்களின் மோதலால் வகைப்படுத்தப்பட்டது. ஜெர்மனியில் அடால்ஃப் ஹிட்லரின் (Adolf Hitler) ஆட்சி, இத்தாலியில் பெனிட்டோ முசோலினியின் (Benito Mussolini) ஆட்சி, ஜப்பானில் ஜெனரல் ஹிடெகி டோஜோ (Hideki Tojo), போர்ச்சுகலில் அன்டோனியோ சலாசர் (Antonio Salazar), அர்ஜென்டினாவில் ஜுவான் பெரோனின் (Juan Peron) மற்றும் ஸ்பெயினில் பிரான்சிஸ்கோ பிராங்கோவின் (Francisco Franco) ஆட்சி போன்ற சர்வாதிகார ஆட்சிகள் கிரேட் பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகளால் எதிர்க்கப்பட்டன.
சில நாடுகள் சர்வாதிகார ஆட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய, அதே வேளையில் மற்ற நேச நாடுகள் ஜனநாயக ஆட்சி மற்றும் தன்னாட்சிக்கு உறுதிபூண்டன. மே 1945-ஆம் ஆண்டு ஜெர்மனி சரணடைந்த போதிலும், செப்டம்பர் 1943-ஆம் ஆண்டு இத்தாலி சரணடைந்த போதிலும், ஜப்பான் மீது அணுகுண்டைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை அமெரிக்கா உணர்ந்தது.
இத்தாலி மற்றும் ஜெர்மனி சரணடைந்த பின்னர் போர் பசிபிக் பெருங்கடலுக்கு மாறியது, அமெரிக்கா ஜப்பானை எதிர்த்துப் போராடியது. டிசம்பர் 7, 1941-ஆம் ஆண்டு பேர்ல் ஹார்பர் மீதான தாக்குதல், போரை அமெரிக்காவிற்கு கொண்டு வந்தது. 353 ஜப்பானிய இம்பீரியல் விமானப்படை விமானங்களால் இந்த தளம் தாக்கப்பட்டதில் 2,404 பேர் கொல்லப்பட்டனர்.
1945-ஆம் ஆண்டு முதல் பாதியில் ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது. பிப்ரவரி 1945-ஆம் ஆண்டு, அமெரிக்கா இவோ ஜிமா மீது படையெடுத்து கைப்பற்றியது. இதில் 30,000 பேர் உயிரிழந்தனர். ஏப்ரல் 1945-ஆம் ஆண்டு, அமெரிக்கா, ஒகினாவா மீது படையெடுத்தது, இதன் விளைவாக சுமார் 50,000 பேர் உயிரிழந்தனர். இந்த இழப்புகள் இருந்தபோதிலும், அமெரிக்காவின் பதிலடி தாக்குதல்களால் ஜப்பானின் விமானப்படை மற்றும் கடற்படை கடுமையாக குறைக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் மன்ஹாட்டன் திட்டம் (Manhattan Project) நடந்து கொண்டிருந்தது.
ஜூலை 16, 1945-ஆம் ஆண்டு, நியூ மெக்ஸிகோவில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் 'கேஜெட்' என்று புனைப்பெயர் கொண்ட ஏவுகணை புளூட்டோனியம் சாதனத்தின் வெற்றிகரமான வெடிப்புக்குப் பிறகு, ராபர்ட் ஓப்பன்ஹைமர் (Robert Oppenheimer) பகவத்கீதையை மேற்கோள் காட்டி, "இப்போது நான் மரணமாகிவிட்டேன்" (Now I have become death) என்று கூறினார். ஓப்பன்ஹைமரின் வார்த்தைகள் ஜெனரல் எல்.ஆர்.க்ரோவ்ஸால் என்பவரால் பதிவு செய்யப்பட்டன.
இந்த திட்டத்தின் வெற்றி அமெரிக்காவிற்கு குறிப்பிடத்தக்க இராணுவ வெற்றியை அளித்தது. இந்த புதிய ஆயுதத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இராஜதந்திர விவாதங்கள் தொடங்கின. ஜூலை 26, 1945-ஆம் ஆண்டு, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகியவை போட்ஸ்டாம் (Potsdam) மாநாட்டில் நிபந்தனையற்ற சரணடைதலுக்காக ஜப்பானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தன.
அணுகுண்டுகளைப் பயன்படுத்த முடிவு செய்வதற்கு முன்னர் பிற விருப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. டோக்கியோவின் கடற்கரையில் ஒரு ஆர்ப்பாட்டம் அல்லது அக்டோபர் 1945-ஆம் ஆண்டு, ஒலிம்பியா என்று பெயரிடப்பட்ட ஜப்பான் மீதான முழு அளவிலான படையெடுப்பு ஆகியவை இதில் அடங்கும். அதிபர் ஹாரி ட்ரூமனின் தனிப்பட்ட விருப்பங்களும் இந்த முடிவில் செல்வாக்கு செலுத்தின. ட்ரூமன் முதலாம் உலகப் போரில் பணியாற்றினார் மற்றும் இரண்டாம் உலகப் போரில் குடும்ப உறுப்பினர்களை இழந்தார். நீடித்த அமைதிக்காக சரணடையும் நிபந்தனையை கோரும் ஜனாதிபதி பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டின் மரபையும் அவர் முன்னெடுத்துச் சென்றார்.
பின்பு, ட்ரூமன் நிர்வாகம் ஆகஸ்ட் 3, 1945-ஆம் ஆண்டுக்கு பின்னர் எந்த நேரத்திலும் அணு ஆயுதங்களை பயன்படுத்த ஒப்புதல் கொடுத்தது. இது போட்ஸ்டாம் அறிவிப்பை ஜப்பான் நிராகரித்ததை தொடர்ந்து நடந்தது. அமெரிக்க பத்திரிகையாளரான நார்மன் கசின்ஸ் (Norman Cousins) தனது 'நவீன மனிதன் காலாவதியானவன்' (Modern Man is obsolete) என்ற கட்டுரையில் அணு ஆயுதப் போரின் தொடக்கங்களைப் பற்றி விவாதித்தார். இந்த கட்டுரை ஆயுதக் குறைப்பு மற்றும் ஒரு புதிய உலக ஒழுங்கை நிறுவுவதற்கான எதிர்கால இராஜதந்திர முயற்சிகளில் செல்வாக்கு செலுத்தியது.
இன்று, உலகளவில் சுமார் 13,400 அணு ஆயுதங்கள் உள்ளன, 2,000 க்கும் மேற்பட்ட அணு ஆயுதச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. முதல் ஆயுதக் குறைப்பு முயற்சிகள் 1946-ஆம் ஆண்டு அணுசக்தி மற்றும் அதன் அமைதியான பயன்பாடு குறித்த ஐ.நா ஆணையத்துடன் தொடங்கியது. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (Non-Proliferation of Nuclear Weapons (NPT)), விரிவான அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தம் (Comprehensive Nuclear Test Ban Treaty (CTBT) மற்றும் அணு ஆயுதங்களைத் தடை செய்வதற்கான ஒப்பந்தம் (Treaty on Prohibition of Nuclear Weapons (TPNW)) உள்ளிட்ட பல அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தங்கள் நிறுவப்பட்டுள்ளன.
ஜெனீவாவில் நடைபெறும் ஆயுதக் குறைப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்கிறது. உலகளாவிய, அணு ஆயுதக் குறைப்பை இந்தியா ஆதரிக்கிறது. சர்வதேச அளவில் ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தை இந்தியா கோருகிறது.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (NPT), விரிவான அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தம் (CTBT) மற்றும் அணு ஆயுதங்களைத் தடை செய்வதற்கான ஒப்பந்தம் (TPNW) ஆகியவை இந்தியாவின் குறிப்பிடத்தக்க கொள்கை முடிவுகள். 1968-ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டஅணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (NPT), ஐ.நா பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களை (அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா) மட்டுமே அணுசக்தி சக்திகளாக அங்கீகரிக்கிறது. மற்ற நாடுகள் அணு ஆயுதம் இல்லாத நாடுகளாக மட்டுமே அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் சேர முடியும். இது தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிரானதாக இந்தியா கருதுகிறது.
மேலும், அணு ஆயுத சோதனைகளை தன்னார்வமாகவும் தன்னிச்சையாகவும் நிறுத்தி வைப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது. அணு ஆயுதங்கள் இல்லாமல் உலகின் பாதுகாப்பை மேம்படுத்துவதை இந்தியா ஆதரிக்கிறது.
அணுகுண்டு வீச்சில் இருந்து தப்பிய ஹிரோஷிமாவில் உள்ள ஜென்பாகு (Genbaku) தற்போது ஹிரோஷிமா அமைதி நினைவுச்சின்னமாக செயல்படுகிறது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மே 27, 2016 அன்று ஜென்பாகு டோமிற்கு சென்று, ஹிரோஷிமா குண்டுவெடிப்பில் இருந்து தப்பிய ஹிபாகுஷாவை (Hibakusha) சந்தித்தார். ஜென்பாகு குவிமாடம் மற்றும் ஜப்பானிய மக்கள் மீது அணு கதிர்வீச்சின் தொடர்ச்சியான தாக்கம் ஆகியவை அணு ஆயுதப் போரின் கொடூரங்களின் வாழும் நினைவூட்டல்களாக உள்ளன.