டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உலகமயமாக்குவதற்கான இந்தியாவின் உந்துதல் : ஆய்வுக்கான நேரம்

 இந்தியாவின் G20 தலைமைத்துவத்தின் முக்கிய கவனம் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புக்கான (Digital Public Infrastructure (DPI)) நமது அணுகுமுறையை உலகளாவியதாக மாற்றுவதாகும்.


G20 தலைமைப் பதவியின் முடிவில் அதன் தலைவர் குறிப்பிட்டது, குறைந்தது ஒரு டஜன் நாடுகள் DPI பயன்பாட்டை ஆராய்வதற்காக இந்தியாவுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. அந்த நேரத்தில், இந்த சர்வதேச உறுதிமொழிகளைப் பெறுவதில் நாங்கள் பெருமிதம் கொண்டோம். இருப்பினும், DPIஐக் கருத்தில் கொள்ள ஒப்புக்கொள்வது வெற்றியைக் குறிக்காது என்பதை நாங்கள் விரைவில் உணர்ந்தோம். DPI பயன்படுத்தப்பட்டதற்கான உண்மையான ஆதாரங்கள் இல்லாமல், எங்கள் அணுகுமுறை உண்மையிலேயே உலகளாவியதாகிவிட்டது என்று கூற முடியாது.


G20 தலைமைப் பொறுப்பை பிரேசிலுக்கு ஒப்படைத்த பிறகு, அவர்கள் எங்கள் DPI நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொள்ள அவ்வளவு ஆர்வமாக இல்லை என்பதைக் கண்டோம். அவர்கள் தங்கள் சொந்த முன்னுரிமைகளில் கவனம் செலுத்தினர். இந்த யோசனையை உயிருடன் வைத்திருக்க, அதை நாமே ஊக்குவிக்க வேண்டியிருந்தது.


2024ஆம் ஆண்டில், பலரின் கடின உழைப்பின் மூலம், உலகளாவிய வடக்கில் வளர்ந்த நாடுகள் DPI ஆதரிக்கத் தொடங்கின. சிலர் அதன் வெளியீட்டிற்கு நிதியளிப்பதில் உறுதியாக இருந்தனர். மேலும், குவாட் மற்ற நாடுகளில் DPI உருவாக்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் கொள்கைகளை அறிமுகப்படுத்தியது.


உலகளாவிய டிஜிட்டல் காம்பாக்டில் DPI முன்னுரிமை பெற்றபோது, ​​தொழில்நுட்பத்திற்கான ஐ.நா. சிறப்புத் தூதர் ஒரு "பாதுகாப்பு" முயற்சியைத் தொடங்கினார். இந்த முயற்சி அனைத்து DPI மேம்பாடுகளும் பின்பற்ற வேண்டிய அடிப்படை விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.


இறுதியாக, நாம் முன்மொழிந்ததைச் செய்ய உலகம் தயாராக இருப்பதாகத் தோன்றியது.


இதில் நேர்மறையான அறிகுறிகள் இருந்தபோதிலும், உண்மையான பயன்பாடுதான் முக்கியம் என்ற அளவில் செயல்படுவோம். இதை முயற்சித்த எவருக்கும்  DPI ஐ செயல்படுத்துவது எளிதான காரியம் அல்ல என்று தெரியும்.


முதலில், நாடு DPI திட்டத்திற்குப் பொறுப்பான அரசுத் துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


பல்வேறு அரசுத் துறைகளுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக, இது எப்போதும் தோன்றும் அளவுக்கு எளிமையானது அல்ல.


பின்னர் அவர்கள் அடிப்படை உள் திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலமும், கடினமான பணிகளைக் கையாள சரியான மூன்றாம் தரப்பினருடன் இணைந்து பணியாற்றுவதன் மூலமும் தீர்வை உருவாக்க வேண்டும்.


தீர்வு கட்டப்பட்டதும், அவர்கள் அதை தற்போதுள்ள நிர்வாக அமைப்புகளுடன் ஒருங்கிணைத்து, பொதுமக்களுக்கு அதன் விநியோகத்தை மேற்பார்வையிட வேண்டும். 


அரசு சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதில் ஏற்கனவே அனுபவம் பெற்றுள்ள உயர் அரசு திறன் கொண்ட நாடுகளும் கூட சவாலான செயலாகும். 


முதன்முறையாக டிஜிட்டல் மயமாக்கலைத் தொடங்கும் வளரும் நாடுகளுக்கு, அதை நிர்வகிப்பது சாத்தியமற்றது.


இந்த சிக்கலை தீர்க்க, நாங்கள் DPI-ஐ ஒரு தொகுக்கப்பட்ட சேவையாக (DPI as a packaged service (DaaS)) உருவாக்கியுள்ளோம். இது கிளவுட் மூலம் கிடைக்கும் ஆயத்த DPI கட்டுமானத் தொகுதிகளின் தொகுப்பை உள்ளடக்கியது. சரியான திறன்களைக் கொண்ட எவரும் இந்த தொகுதிகளைப் பயன்படுத்தி தனிப்பயன் DPI தீர்வை உருவாக்கலாம். 


சரியாகச் செய்தால், சிறிய மக்கள்தொகை கொண்ட நாடுகள், தாங்களாகவே அதை உருவாக்க தொழில்நுட்பத் திறன்கள் இல்லாவிட்டாலும், குறைந்த செலவில் DPI அணுகுமுறையின் பலன்களை அனுபவிக்க இது உதவும்.


2024ஆம் ஆண்டில், இந்த மாற்று வரிசைப்படுத்தல் மாதிரிகளை நாங்கள் உருவாக்கினோம். DPI-ஐச் சுற்றி உலகளாவிய ஒருமித்த கருத்தை உருவாக்கி சர்வதேச ஆதரவைத் திரட்டினோம். 


உள்ளூர் சவால்களை எதிர்கொள்வதற்கான புதிய வழிகளை நாங்கள் வகுத்துள்ளோம் மற்றும் DPI வரிசைப்படுத்துதலுக்கான DaaS அணுகுமுறைக்கு அமைப்பு ஒருங்கிணைப்பாளர்களின் ஆதரவைப் பெற்றோம். 


நமது முயற்சிகள் பலனளித்ததா என்பதைப் பார்க்க, நமது முயற்சிகளை மதிப்பாய்வு செய்ய வேண்டிய நேரம் இது.


DPI உலகமயமாக்கலில் நாங்கள் பணியாற்றத் தொடங்கியதிலிருந்து தொடங்கப்பட்ட சில DPI திட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளது. அவை:


கடந்த ஆண்டு, மடகாஸ்கர் அதன் குடியிருப்பாளர்களுக்கு சட்டப்பூர்வ அடையாளங்களை வழங்க eCRVS அமைப்பை உருவாக்கியது. இந்த DPI ஏற்கனவே 525 கம்யூன்களில் 8.4 மில்லியன் மக்களைச் சென்றடையும் திறன் கொண்டது. 


செப்டம்பர் 2024 நிலவரப்படி, நாட்டில் 400 சுகாதார வசதிகளையும் 1 மில்லியன் மக்களையும் உள்ளடக்கிய மின்னணு சுகாதார பதிவு உள்கட்டமைப்பில் ஜாம்பியா டிஜிட்டல் அடையாள சரிபார்ப்பு முறையை ஒருங்கிணைத்துள்ளது. 


மொசாம்பிக் மற்றும் நைஜீரியா ஆகிய இரண்டும் பல்நோக்கு தரத்தில் மிகவும் இயங்கக்கூடிய தளங்களை உருவாக்கியுள்ளன. அவை பல்வேறு சுகாதார பிரச்சாரங்களை வழங்குவதற்காக மக்கள்தொகையின் வெவ்வேறு பிரிவுகளில் விரைவாக வரிசைப்படுத்த முடியும். 


இரு நாடுகளிலும், இந்த தளங்கள் ஏற்கனவே கிட்டத்தட்ட 10 மில்லியன் மக்களை உள்ளடக்கியது. 


இலக்கை மேம்படுத்தவும், நகல்களை தவிர்க்கவும் வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பு திட்டம் லைபீரியாவின் ‘பெட்-நெட்’ (‘bed-net’) பிரச்சாரம் 7 மில்லியன் மக்களை சென்றடைந்துள்ளது.


பல DPI திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், வரும் ஆண்டில் சரியாக தொடங்கப்படும். 


இதில் ருவாண்டாவின் தேசிய டிஜிட்டல் விவசாய மதிப்பு அணுகுமுறையும் இதில் அடங்கும். இது வள ஒதுக்கீடு மற்றும் மானிய இலக்கை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 


கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கான பொதுச் சந்தை, 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எல்லை தாண்டிய உடனடி கட்டண முறையை இந்தப் பகுதியில் தொடங்க திட்டமிட்டுள்ளது.


டொமினிகன் குடியரசு குடிமக்களுக்காக ஓட்டுநர் உரிமங்கள் போன்ற அதிகாரப்பூர்வ ஆவணங்களைச் சேமிக்க ஒரு டிஜிட்டல் அமைப்பை உருவாக்கியுள்ளது. டோகோ அடுத்த ஆண்டு நாடு தழுவிய அளவில் கிடைக்கும் விரைவான கட்டண முறையை சோதிக்கத் தொடங்கியுள்ளது.


UNDPயின் "50 in 5" பிரச்சாரம் DPI-ஐப் பயன்படுத்துவதற்கான வலுவான உந்துதலாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் குறைந்தது 50 புதிய நாடுகளை DPIஐப் பயன்படுத்தத் தொடங்கச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


இது முதலில் அறிவிக்கப்பட்டபோது, ​​இது மிகவும் லட்சியமான திட்டமாகத் தோன்றியது. இருப்பினும், உலகளவில் DPI பயன்பாடுகளின் வேகமான போக்குடன், இப்போது இது மிகவும் சாத்தியமானதாகத் தெரிகிறது.




Original article:

Share:

வரி சிக்கல்கள் நிறுவனங்களைத் தொந்தரவு செய்கின்றன -ஹிமான்ஷு பரேக், மௌலிக் மேத்தா

 நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாகத் தீர்க்க இந்திய நிறுவனங்கள் விரும்புகின்றன.


கடந்த மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் வருமான வரிச் சட்டத்தை எளிமையாகவும் எளிதாகவும் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு பெரிய புதுப்பிப்பை பரிந்துரைத்தார். இது சட்ட மோதல்களைக் குறைத்து மேலும் தெளிவை அளிக்க உதவும். இந்த செயல்முறை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. 2025 மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சருக்கு முக்கிய நிறுவன வரி சிக்கல்களைத் தீர்க்கவும், வணிகங்கள் செயல்படுவதை எளிதாக்கவும் ஒரு வாய்ப்பு உள்ளது.


'இந்தியாவில் உற்பத்தி செய்வோம்' (Make in India) மற்றும் 'தன்னிறைவு பாரதம்' (Atmanirbhar Bharat) போன்ற சமீபத்திய முயற்சிகள் உற்பத்தி நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன. ஆனால், இந்தத் துறையில் அதிக முதலீட்டை ஊக்குவிக்க வரிச் சலுகைகள் இன்னும் தேவை. புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு 15% கார்ப்பரேட் வரி விகிதத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதும், மேம்பட்ட தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு சிறந்த விலக்குகளை வழங்குவதும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும்.


வணிகங்களுக்கு ஒரு முக்கியப் பிரச்சினையாக இருப்பது தொடர்ந்து நிலவும் வரி சிக்கல்கள் ஆகும். ஆனால், வரி அமைப்புகள்  மிகவும் மோசமாக உள்ளது. பல வழக்குகள் இன்னும் பல்வேறு நீதிமன்றங்கள் மற்றும் மன்றங்களில் முடிவு செய்யப்பட காத்திருக்கின்றன. 2024-25 நிதியாண்டுக்கான மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes (CBDT)) செயல் திட்டத்தின்படி, JCIT/CIT (மேல்முறையீடுகள்) சுமார் 5.49 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில வழக்குகள் தீர்க்கப்பட 20-25 ஆண்டுகள் ஆகலாம்.  இது வரி செலுத்துவோரின் நிதி திட்டமிடல் மற்றும் அரசாங்கத்தின் வருவாய் வசூல் ஆகிய இரண்டிற்கும் சவால்களை உருவாக்குகிறது. சிக்கல்களைத் தீர்க்கும் செயல்முறையை விரைவுபடுத்த சீர்திருத்தங்கள் அவசரமாக தேவை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.


இந்தச் சிக்கலைத் தீர்க்க, சிக்கல் தீர்வுக் குழு செயல்முறையைப் போலவே, மேல்முறையீடுகளை அகற்றுவதற்கான கட்டாய காலக்கெடுவை நிதி அமைச்சகம் செயல்படுத்த வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனுக்களுக்கு, ஆறு மாதங்களுக்குள் தீர்வுகாண உத்தரவிட வேண்டும். 1-3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மேல்முறையீடுகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும். மேலும், புதிய மேல்முறையீட்டு மனுக்களை தீர்ப்பதற்கு ஓராண்டு கால அவகாசம் விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.


முன்கூட்டிய விதிகளுக்கான வாரியம் (Board for Advance Rulings (BAR)) ஆனது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சிக்கல்களைத்  தீர்ப்பதற்கான ஒரு வழி   ஆகும். துரதிர்ஷ்டவசமாக, இருப்பினும், இந்த முறை மிகவும் வெற்றிகரமாக இல்லை. மேலும், உயர் நீதிமன்றத்தில், முன்கூட்டிய விதிகளுக்கான வாரியம் (BAR) தீர்ப்புகளை மேல்முறையீடு செய்ய அனுமதிப்பது என்பது, வரி செலுத்துவோருக்கு தெளிவான மற்றும் வரி விதிகளை வழங்குவதற்கான நோக்கத்திற்கு எதிரானது ஆகும். முன்கூட்டியே ஆளும் செயல்முறையானது உண்மையில் ஒரு பயனுள்ள பொறிமுறையாக செயல்பட, நிதி அமைச்சகம் ஆனது BAR அமைப்பின் முழுமையான மாற்றத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.


பல ஆண்டுகளாக, தாமதமான அல்லது திருத்தப்பட்ட வரி வருமானத்தை தாக்கல் செய்வதற்கான நேரம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. பரிமாற்ற விலை நிர்ணயத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு, அசல் வருமானத்திற்கான காலக்கெடுவிற்கும் திருத்தப்பட்ட அல்லது தாமதமான வருமானத்திற்கும் இடையில் இப்போது ஒரு மாத கால அவகாசம் மட்டுமே உள்ளது. இது வரி செலுத்துவோருக்கு அசல் வருமானத்தை தாக்கல் செய்த பிறகு தவறுகளைச் சரிசெய்ய அல்லது புதிய தகவல்களைக் கருத்தில் கொள்ள மிகக் குறைந்த நேரத்தையே வழங்குகிறது. எனவே, திருத்தப்பட்ட அல்லது தாமதமான வருமானத்தை தாக்கல் செய்வதற்கான கால வரம்பை குறைந்தபட்சம் மதிப்பீட்டு ஆண்டின் இறுதி வரை நீட்டிக்க வேண்டிய அவசியம் உள்ளது.


டிடிஎஸ் (TDS) முறையை எளிதாக்குங்கள்


இந்தியாவின் மூலத்தில் வரி விலக்கு (Tax Deducted at Source (TDS)) முறை வரி செலுத்துவோருக்கு கடினமாகிவிட்டது. இது பல்வேறு வகையான பரிவர்த்தனைகளை உள்ளடக்கிய 35 விதிகளைக் கொண்டுள்ளது. இது குழப்பத்திற்கும் பல சர்ச்சைகளுக்கும் வழிவகுக்கிறது. பல்வேறு வகையான பரிவர்த்தனைகளுக்கான விகிதங்களை வெறும் 3 அல்லது 4 ஆகக் குறைப்பதன் மூலம் TDS முறையை எளிதாக்க வேண்டிய அவசியம் உள்ளது. படிவம் 26AS-ல் காட்டப்பட்டுள்ள தொகைகளின் அடிப்படையில் TDS வரவுகள் இருக்க வேண்டும் என்றும் வரி செலுத்துவோர் விரும்புகிறார்கள். எனவே, அவர்கள் இனி தங்கள் கணக்குப் பதிவுகளுடன் பொருந்தக்கூடிய சிக்கலான மற்றும் நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயல்முறையை மேற்கொள்ள வேண்டியதில்லை.


வரவிருக்கும் பட்ஜெட் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும், வளர்ந்த இந்தியாவை நோக்கி முன்னேறுவதற்கும் சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் என்று பெருநிறுவனங்கள் நம்புகின்றன.


பரேக், KPMG-யின் வரித்துறையில் பங்குதாரராக உள்ளார். மேத்தா ஒரு பட்டயக் கணக்காளர் ஆவார். 




Original article:

Share:

வளர்ந்த இந்தியாவிற்கான "பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் (Beti Bachao Beti Padhao)" திட்டத்தின் பங்கு -அன்னபூர்ணா தேவி

 இந்தியாவின் பெண்கள் மாற்றத்தை உருவாக்குபவர்களாகவும், தொழில்முனைவோராகவும், தலைவர்களாகவும் மாறி வருகின்றனர். பெண்கள் மேம்பாட்டில் கவனம் செலுத்துவதிலிருந்து பெண்கள் மேம்பாட்டிற்கு தலைமை தாங்கும் நிலைக்கு அவர்கள் முன்னேற்றத்தை முன்னெடுத்து வருகின்றனர்.


2047ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த இந்தியாவிற்கான (Viksit Bharat) பாதைதையை நம்பிக்கையுடன் அணிவகுத்து வரும் நிலையில், "பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்"  (Beti Bachao Beti Padhao (BBBP)) திட்டத்தின் மாற்றத்தக்க தாக்கம், பெண்கள் மேம்பாட்டில் கவனம் செலுத்துவதில் இருந்து பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு நாம் எவ்வளவு தூரம் வந்துள்ளோம் என்பதற்கு சான்றாகும். சுவாமி விவேகானந்தர் ஒருமுறை, “பெண்களின் நிலை மேம்படாதவரை உலக நலனுக்கு வாய்ப்பில்லை. ஒரு பறவை ஒரே இறக்கையில் பறக்க முடியாது“ என்றார். இதன் மூலம் ஈர்க்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22, 2015 அன்று ஹரியானாவின் பானிபட்டில் இத்திட்டத்தை தொடங்கினார். இந்த முன்முயற்சி இந்தியாவில் குறைந்து வரும் குழந்தை பாலின விகிதத்தை (child sex ratio (CSR)) நிவர்த்தி செய்வதற்கும், நாடு முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவர்களுக்கு தகுதியான வாய்ப்புகள், கவனிப்பு மற்றும் கண்ணியம் இருப்பதை உறுதி செய்வதற்கும் முயன்றது.


2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் பிறப்பு பாலின விகிதம் (sex ratio at birth (SRB)) 918 ஆக கவலையளிக்கும் வகையில் இருப்பதை வெளிப்படுத்தியது.  இது வலுவான சமூக சார்புகளையும், கருவில் பாலினம் கண்டறியும் கருவிகளின் தவறான பயன்பாட்டையும் எடுத்துக்காட்டுகிறது. இந்தப் போக்கை மாற்ற வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திற்கும் குறிப்பிட்ட செயல்களில் இத்திட்டம் கவனம் செலுத்தியது. பெண்கள் வளர்ந்த தலைவர்களாக மாறக்கூடிய எதிர்காலத்திற்கான அடித்தளத்தையும் இது அமைத்தது.


கடந்த பத்து ஆண்டுகளில், இந்தத் திட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. பிறப்பு நேரத்தில் தேசிய பாலின விகிதம் (SRB) 2014-15 ஆண்டில் 918 ஆக இருந்தது. 2023-24 ஆண்டில் 930 ஆக மேம்பட்டது. குழந்தை பிறப்பு எண்ணிக்கை 2014-15-ல் 61% ஆக இருந்து 2023-24 ஆண்டில் 97.3% ஆக உயர்ந்தது. முதல் மூன்று மாத பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு பதிவுகள் 61% இலிருந்து 80.5% ஆக அதிகரித்தன.  இரண்டாம் நிலைப் பெண்களுக்கான மொத்த சேர்க்கை விகிதம் 2014-15 ஆண்டில் 75.51% இலிருந்து 2021-22 ஆண்டில் 79.4% ஆக உயர்ந்தது. மேலும், புதிதாகப் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கிடையேயான குழந்தை இறப்பு விகிதங்களில் உள்ள வேறுபாடு கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. இது உயிர்வாழ்வு மற்றும் பராமரிப்பில் நியாயத்தன்மைக்கான உறுதிப்பாட்டைக் காட்டுகிறது.


BBBP இயக்கம் எண்ணிக்கையை மேம்படுத்துவதைவிட அதிகமாகச் செய்துள்ளது. பெண்கள் அதிகாரமளிப்பது பற்றி நாம் எப்படி நினைக்கிறோம் என்பதை இது மாற்றியுள்ளது. எடுத்துக்காட்டாக, யஷஸ்வினி பைக் பயணம் (Yashaswini Bike Expedition) மூலம் அக்டோபர் 2023 ஆண்டில் 150 பெண் பைக்கர்கள் 10,000 கி.மீ பயணம் செய்தனர். இதன் மூலம் இந்தியாவின் பெண்களின் வலிமையையும் உறுதியையும் வெளிப்படுத்தினர். 


2022ஆம் ஆண்டில், கன்யா சிக்ஷா பிரவேஷ் உத்சவ் (Kanya Shiksha Pravesh Utsav) திட்டத்தின் மூலம்  கிட்டத்தட்ட 100,786 பள்ளி செல்லாத பெண் குழந்தைகளை  மீண்டும் பள்ளி செல்ல உதவியது. இதன் மூலம் இத்திட்டம் கல்வி எவ்வாறு வாழ்க்கையை மாற்றும் என்பதை நிரூபித்தது.  திறன் மேம்பாடு குறித்த ஒரு தேசிய மாநாடு, அதிகமான பெண்கள் பணியிடத்தில் சேர வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தது. இது பெண்கள் தலைமையிலான எதிர்காலத்தை நோக்கி நம்மை நகர்த்தியது.


இந்த மாற்றியமைக்கும் திட்டத்தின் 10 ஆண்டுகளை நாம் கொண்டாடும் போது, இதற்கான ​​பணி இன்னும் வெகு தொலைவில் உள்ளது என்பது தெளிவாகிறது. நாம் வளர்ந்த இந்தியாவாக மாற வேண்டுமென்றால், நம் தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் பெண்களும் பெண்களும் தொடர்ந்து நிலைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். பெண்கள் தங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்தும் வரை இந்தியா வளர்ச்சியடையாது. நாம் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. 


1994ஆம் ஆண்டின் முன் கருத்தரிப்பு மற்றும் பிறப்புக்கு முந்தைய நோயறிதல் நுட்பங்கள் (Pre-Conception and Pre-Natal Diagnostic Techniques (PCPNDT)) சட்டத்தின் அமலாக்கத்தை வலுப்படுத்த வேண்டும். மேலும், கல்வியில் இடைநிற்றல் விகிதங்களை நிவர்த்தி செய்ய வேண்டும். திறன் மேம்பாட்டு திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும் மற்றும் ஒரு பெண்ணின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் இலக்கு தலையீடுகளை வழங்க வேண்டும்.


2024 நிதியாண்டில் இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (Female Labour Force Participation (FLFP)) 41.7% ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என்றாலும், ஆண்களின் தொழிலாளர் பங்கேற்பைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. நகர்ப்புறங்களில் FLFP கிராமப்புறங்களைவிட குறைவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் ஊதியம் இல்லாத வீட்டு பராமரிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அதிகமான பெண்கள் தங்கள் வீட்டு சூழ்நிலைகளை விட்டு வெளியேறி, வீட்டை விட்டு வெளியில் வேலையில் ஈடுபடுவதற்கான சூழலை வளர்ப்பது மட்டுமல்லாமல், பராமரிப்புப் பணியை சரியான தொழிலாகவும், அதை மேம்படுத்துவதற்கான வழிமுறையை உருவாக்குவதும் நமது முயற்சியாக இருக்க வேண்டும்.  


பராமரிப்புப் பணியில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் அதைத் தொடர விரும்புவோர், நிதிச் சுதந்திரத்தைப் பெற்று, அவர்களின் முயற்சிகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதைக் காணும்போது அவ்வாறு செய்யலாம். உலகப் பொருளாதார மன்றம், தொழிலாளர் தொகுப்பில் பாலின இடைவெளியைக் குறைப்பதன் மூலம் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியை 20% அதிகரிக்க முடியும் என்று கூறுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, இது ஒரு வாய்ப்பு மட்டுமல்ல, அவசியமும் கூட. 2047ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவதற்கும், வளர்ந்த நாடாக மாறுவதற்கும் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி முக்கியமானது. BBBP திட்டம் ஒரு இயக்கமாக வளர்ந்து, மில்லியன் கணக்கானவர்களை ஊக்குவித்து, இந்தியாவின் முன்னேற்றத்தின் மையத்தில் பெண்களை நிறுத்துகிறது.


பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை சந்தித்து வருகிறது. பெண்கள் மேம்பாட்டிலிருந்து பெண்கள் மேம்பாட்டிற்குத் தலைமை தாங்குவது நோக்கி கவனம் திரும்பியுள்ளது. இந்தியப் பெண்கள் மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள், தொழில்முனைவோர் மற்றும் தலைவர்களாக மாறி வருகின்றனர். அவர்கள் தங்கள் முன்னேற்றத்திற்குத் தாங்களே பொறுப்பேற்கிறார்கள். அவர்களின் கனவுகளை ஆதரித்து அவர்கள் வெற்றிபெற உதவுவோம். இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் நேரத்தில், ஒவ்வொரு பெண்ணும் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் உள்ள முக்கியப் பங்கை உறுதி செய்வோம்.


அன்னபூர்ணா தேவி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ளார்.




Original article:

Share:

முக்கிய உலகளாவிய வர்த்தக நாணயமாக இருக்கும் டாலரை மாற்ற BRICS மற்றும் இந்தியா முயற்சி செய்கின்றனவா? - ரவி தத்தா மிஸ்ரா

 BRICS மீது 100% வரி விதிக்கப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். டாலர் மதிப்பிழப்பு மற்றும் ரூபாயின் சர்வதேசமயமாக்கலில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? இதில் உள்ள சிக்கல்கள் மற்றும் கவலைகள் என்ன?


உலகளாவிய வர்த்தகத்தில் டாலரின் பயன்பாட்டைக் குறைப்பதற்கு பிரிக்ஸ் நாடுகள் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், ஜனவரி 20 திங்கட்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிக்ஸ் நாடுகள் மீது 100% இறக்குமதி வரிகளை விதிக்கும் தனது திட்டத்தை மீண்டும் வலியுறுத்தினார். 


உலகளாவிய வர்த்தகத்தில் டாலரின் பங்கைக் குறைப்பது குறித்து பிரிக்ஸ் நாடுகள் பரிசீலித்தாலும் கூட 100% வரியை எதிர்கொள்ள நேரிடும் என்று டிரம்ப் கூறினார். ஓவல் அலுவலகத்தில் (Oval Office) நடந்த கையெழுத்து விழாவின் போது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்ததாக ANI செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.


முன்னதாக, கேபிடால் ரோட்டுண்டாவில் (capitol rotunda) சத்தியப்பிரமாணம் எடுத்த பிறகு அவர் தனது தொடக்க உரையை நிகழ்த்தினார். தனது உரையில், தனது நிர்வாகம் "வெளிப்புற வருவாய் சேவை"யை (External Revenue Service) அமைக்கும் என்று அவர் கூறினார். இந்த சேவை அனைத்து கட்டணங்கள், வரிகள் மற்றும் வருவாய்களையும் சேகரிக்கும். "நமது குடிமக்களை மேம்படுத்த வெளிநாடுகளுக்கு வரி விதிப்பதே" இலக்காக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தது.


கேபிடால் ரோட்டுண்டா (capitol rotunda) என்பது, அமெரிக்கக் நாடாளுமன்றக் கட்டிடத்தின் குவிமாடத்தால் மூடப்பட்ட சுற்று கட்டிடத்தைக் குறிக்கும்.


டிசம்பர் 2024-ம் ஆண்டில், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப் சமூக ஊடகங்களில் பதிவிட்டு அவர் குறிப்பிட்டதாவது, "பிரிக்ஸ் நாடுகளிடமிருந்து எங்களுக்கு ஒரு உறுதிப்பாடு தேவை. அவர்கள் ஒரு புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கக்கூடாது அல்லது சக்திவாய்ந்த அமெரிக்க டாலரை மாற்ற வேறு எந்த நாணயத்தையும் ஆதரிக்கக்கூடாது. அவர்கள் அவ்வாறு செய்தால், அவர்கள் 100 சதவீத வரிகளை எதிர்கொள்ள நேரிடும். அவர்கள் சிறந்த அமெரிக்க பொருளாதாரத்திற்கான அணுகலை இழக்க நேரிடும் என்றும் எதிர்பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.


BRICS நாடுகள் டாலருக்கு பதிலாக புதிய நாணயத்தை திட்டமிட்டுள்ளதா?


உலகெங்கிலும் உள்ள நாடுகள் அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைக்க முயற்சித்து வருகின்றன. அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய நிதி அமைப்பைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் அவர்கள் விரும்புகிறார்கள். அமெரிக்கா ரஷ்யாவை உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்பு சங்கத்திலிருந்து (Society for Worldwide Interbank Financial Telecommunication (SWIFT)) நீக்கிய பிறகு இந்த உந்துதல் தீவிரமாகிவிட்டது. சர்வதேச நிதி பரிவர்த்தனைகளில் SWIFT முக்கிய பங்கு வகிக்கிறது.


ஈரான் 2012-ம் ஆண்டில் SWIFT-லிருந்து நீக்கப்பட்டது. இந்த நடவடிக்கை 2015-ம் ஆண்டு தெஹ்ரானை பேச்சுவார்த்தைக்குக் கொண்டுவருவதற்கான ஒரு காரணியாகக் கருதப்பட்டது. 2018-ம் ஆண்டில், முதல் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா ஈரான் மீது எண்ணெய் மற்றும் நிதித் தடைகளை மீண்டும் விதித்தபோது, ​​SWIFT மீண்டும் அந்நாட்டில் உள்ள வங்கிகளுக்கான அணுகலை நிறுத்தியது.


ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 2023 பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், பிரேசிலின் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்குவது கட்டண விருப்பங்களை அதிகரிக்கும் என்றும் இதனால், தங்களின் பாதிப்புகளைக் குறைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


2024 அக்டோபரில் கசானில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், "டாலர் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நாம் தெளிவாகக் காணலாம். இதை நடைமுறைப்படுத்துபவர்களால் இது ஒரு பெரிய தவறு என்று நான் நம்புகிறேன்" என்று கூறினார்.


ஆம். 2022-ம் ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India (RBI)) சர்வதேச வர்த்தகத்திற்கான விலைப்பட்டியல் மற்றும் பணம் செலுத்துதல்களை இந்திய ரூபாயில் அனுமதித்தது. அமெரிக்க டாலரை நம்பியிருப்பதைக் குறைப்பதற்கும் இந்திய ரூபாயை சர்வதேசமயமாக்குவதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. உக்ரைனில் நடந்த போர் காரணமாக ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்பட்ட பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


கசானில் நடந்த ஒரு நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி, பிரிக்ஸ் நாடுகளிடையே நிதி ஒருங்கிணைப்பை அதிகரிப்பதற்கு இந்தியாவின் ஆதரவு குறித்து பேசினார். உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் மற்றும் சுமூகமான எல்லை தாண்டிய பணம் செலுத்துதல் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று அவர் வலியுறுத்தினார்.


நவம்பர் 2024-ம் ஆண்டில், மும்பையில் நடந்த இந்தியா-ரஷ்யா அரசுகளுக்கிடையேயான ஆணையக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசியதாவது, "தேசிய நாணயங்களில் வர்த்தகத்தை சரிசெய்வது மிகவும் முக்கியமானது, குறிப்பாக தற்போதைய சூழ்நிலையில்" என்று அவர் கூறினார்.


இல்லை, தீவிரமாகவோ அல்லது தீங்கிழைக்கும் நோக்கத்திலோ அல்ல. இருப்பினும், இந்தியா இந்த பிரச்சினை குறித்து இயல்பான கவலையைக் வெளிப்படுத்தியுள்ளது.


அக்டோபர் 2024-ம் ஆண்டில், அமெரிக்க கொள்கைகள் பெரும்பாலும் சில நாடுகளுடனான வர்த்தகத்தை சிக்கலாக்குகின்றன என்று ஜெய்சங்கர் தெளிவுபடுத்தினார். இந்தியா தனது வர்த்தக நலன்களைப் பாதுகாக்க "தீர்வுகளை" நாடுகிறது. இருப்பினும், டாலரை குறிவைப்பதையோ அல்லது அதிலிருந்து விலகிச் செல்வதையோ அது நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.


"நாங்கள் ஒருபோதும் டாலரை தீவிரமாக குறிவைத்ததில்லை. அது எங்கள் பொருளாதார, அரசியல் அல்லது இராஜதாந்திரக் கொள்கையின் ஒரு பகுதியாக இல்லை. வேறு சில நாடுகள் அவ்வாறு செய்திருக்கலாம். ஆனால், நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. இருப்பினும், எங்களுக்கு ஒரு இயல்பான கவலை உள்ளது. எங்கள் வர்த்தக கூட்டணி நாடுகளுடன் பலருக்கு பரிவர்த்தனைகளுக்கு டாலர்கள் இல்லை. இது அவர்களுடன் வர்த்தகத்தை நிறுத்துவதா அல்லது தீர்வு காண மாற்று வழிகளைக் கண்டுபிடிப்பதா என்பதை முடிவு செய்ய எங்களை கட்டாயப்படுத்துகிறது. டாலருக்கு எதிராக எந்த தீங்கிழைக்கும் நோக்கமும் இல்லை," என்று வாஷிங்டன் டிசியில் உள்ள அமெரிக்க சிந்தனைக் குழுவான கார்னகி எண்டோவ்மென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸில் ஒரு கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர் கூறினார்.


"டாலர் மதிப்பிழப்பு" (de-dollarisation) என்று அழைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு என்ன?


டிசம்பர் 2024-ம் ஆண்டில், அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், இந்தியா "டாலர் மதிப்பிழப்பு" (de-dollarisation) செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்று கூறினார். வோஸ்ட்ரோ கணக்குகளை (Vostro accounts) அனுமதிப்பது மற்றும் உள்ளூர் நாணய வர்த்தக ஒப்பந்தங்களை (local currency trade agreements) உருவாக்குவது போன்ற சமீபத்திய நடவடிக்கைகள் இந்திய வர்த்தகத்தை "ஆபத்தை குறைப்பதற்கு" (de-risk) நோக்கமாகக் கொண்டவை என்று அவர் விளக்கினார்.


பிரிக்ஸ் நாடுகள் பகிரப்பட்ட நாணயத்தை உருவாக்குவது பற்றிப் பேசியிருந்தாலும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தாஸ் குறிப்பிட்டார்.


"இது டாலர் மதிப்பிழப்பு (de-dollarisation) பற்றியது அல்ல. இது நமது வர்த்தகத்தில் அபாயங்களைக் குறைப்பது பற்றியது" என்று தாஸ் கூறினார். "வெவ்வேறு பிராந்தியங்களில் BRICS நாடுகளின் பரவல் முக்கியமானது. ஒன்றுக்கொன்று நெருக்கமான நாடுகளைக் கொண்ட யூரோ மண்டலத்தைப் (Eurozone) போலல்லாமல், BRICS நாடுகள் பரவியுள்ளன. இது தனித்துவமான சவால்களை உருவாக்குகிறது," என்று அவர் மேலும் கூறினார். இந்த அணுகுமுறையில் இந்தியா கவனமாக உள்ளது.


அமெரிக்க டாலருக்கு நிகரான போட்டியாளராக சீன யுவானின் (Chinese yuan) உயர்வு காரணமாக, இந்தியா டாலர் மதிப்பிழப்புக்கு ஆதரவளிக்கவில்லை. ரஷ்யா அதிகளவில் யுவானை ஏற்றுக்கொண்டாலும், ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதிக்கு யுவானைப் பயன்படுத்துவதை இந்தியா எதிர்த்தது.


ரஷ்யாவின் மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து, 300 பில்லியன் டாலர் ரஷ்ய வெளிநாட்டுப் பங்குகளை முடக்கம் உட்பட, யுவான் ரஷ்யாவின் அதிகம் வர்த்தகம் செய்யப்படும் நாணயமாக மாறியுள்ளது. ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகத்தில் 90%-க்கும் அதிகமானவை இப்போது ரூபிள்களில் (rubles) தீர்க்கப்படுவதாக ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது.


அதே நேரத்தில், இதற்கிடையில், டாலரை அதிகமாக நம்பியிருப்பது குறித்து இந்தியா எச்சரிக்கையாக உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India (RBI)) அதன் தங்கத்தின் கொள்முதலை (gold purchases) அதிகரித்துள்ளது. இதனால், வெளிநாட்டிலிருந்து நம்நாட்டிற்கு தங்கத்தை மீண்டும் கொண்டு வரவும் தொடங்கியுள்ளது.


உக்ரைனில் நடந்த போருக்குப் பிறகு அதிகரித்த நிச்சயமற்ற தன்மைகள் இந்த நிலைமைக்கு பங்களித்துள்ளன. இரண்டாம் நிலைத் தடைகள் குறித்து கவலை கொண்ட உலக மத்திய வங்கிகள் (global central banks) தங்கத்தை வாங்குவது இதற்கு ஒரு காரணமாகும்.


இந்தியாவின் முன்னணி வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பான இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பின் (Federation of Indian Export Organisations (FIEO)) இயக்குநர் ஜெனரலும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அஜய் சஹாய் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உடன் குறிப்பிட்டதாவது, உள்ளூர் நாணய முயற்சிகளை இந்தியா ஆதரிக்கும் அதே வேளையில், இதற்கான கட்டமைப்பு சீனாவை அதிகமாக ஆதரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். பிரிக்ஸ் நாடுகளிடையே பொருளாதார சக்தியில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வு இருப்பதால் இது நிகழ்கிறது.


சீனா ஒரு மேலாதிக்க நாடுகளின் பங்கை எடுத்து அமெரிக்காவிற்கு எதிராக கூட்டணியைப் பயன்படுத்த ஆர்வமாக உள்ளது என்று சஹாய் மேலும் கூறினார். இதற்கு நேர்மாறாக, இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றவும் பேச்சுவார்த்தைகள் மூலம் வேறுபாடுகளைத் தீர்க்கவும் விரும்புகின்றன.


இந்தியா தனது நிலைப்பாட்டை விளக்க அமெரிக்காவுடன் ராஜதந்திர ரீதியாக ஈடுபட வேண்டும். வர்த்தக வழிமுறைகளை பன்முகப்படுத்துவது அமெரிக்காவிற்கு எதிரானது அல்ல என்பதை வலியுறுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். மாறாக, இது பன்முகத்தன்மை மற்றும் நிதி நிலைத்தன்மையை நோக்கிய ஒரு படியாகும் என்று அவர் கூறினார்.


அஜய் ஸ்ரீவஸ்தவா, குளோபல் டிரேட் ரிசர்ச் முன்முயற்சி என்ற சிந்தனைக் குழுவின் தலைவரும், முன்னாள் இந்திய அரசாங்க வர்த்தக அதிகாரியுமானவர். அவர் முன்பு தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் குறிப்பிடுவதாவது, "அமெரிக்காவின் நடவடிக்கைகள்தான் பல நாடுகளை அமெரிக்க டாலருக்கு மாற்று வழிகளைத் தேடத் தூண்டியுள்ளன. SWIF வலையமைப்பு போன்ற உலகளாவிய நிதி அமைப்புகளின் மீது தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ஒருதலைப்பட்சத் தடைகளை விதித்த வரலாற்றை அமெரிக்கா கொண்டுள்ளது. ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் SWIF அமைப்பை அணுகுவதைத் தடுப்பதன் மூலம், அமெரிக்கா உலகளாவிய நிதி உள்கட்டமைப்பை திறம்பட ஆயுதமாக்கியுள்ளது. இது மற்ற நாடுகளை முறையான வர்த்தகத்தைத் தொடர மாற்று கட்டண முறைகளைக் கண்டறிய கட்டாயப்படுத்தியுள்ளது.




Original article:

Share:

முதல் நாளில் 80-க்கும் மேற்பட்ட ஆணைகளில் கையெழுத்திட்ட டிரம்ப்: செயலாக்க ஆணை (Executive Order) என்றால் என்ன? -அனகா ஜெயக்குமார்

 திங்களன்று தனது செயலாக்க ஆணைகளின் மூலம், டிரம்ப் மெக்சிகோவுடனான அமெரிக்க எல்லையில் தேசிய அவசரநிலையை அறிவித்தார் மற்றும் பிறப்புரிமை குடியுரிமையை (birthright citizenship) நிறுத்தினார். அத்தகைய ஆணைகள் எவ்வாறு சரியாக வேலை செய்கின்றன?


ஜனவரி 20 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராக பொறுப்பேற்றார். அவர் தொடர்ச்சியான செயலாக்க உத்தரவுகளை (executive orders) வெளியிட்டார் மற்றும் முந்தைய நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகளை ரத்து செய்தார்.


உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்குள், அவர் 80 செயலாக்க ஆணைகளில் கையெழுத்திட்டார். அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் தேசிய அவசரநிலையை அறிவித்தல், பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் உலக சுகாதார அமைப்பிலிருந்து (World Health Organization (WHO)) விலகுதல் மற்றும் பிறப்புரிமை குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவருதல் ஆகியவை இதில் அடங்கும்.


அத்தகைய ஆணைகள் கொள்கைகளை எவ்வாறு செயல்படுத்த உதவுகின்றன? அவற்றை நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியுமா? என்பதைக் கீழே  குறிப்பிட்டுள்ளன.


செயலாக்க ஆணைகள் (executive order) என்றால் என்ன?


அமெரிக்க வழக்கறிஞர் சங்கம் (American Bar Association) ஒரு செயலாக்க உத்தரவை "கூட்டாட்சி அரசாங்கத்தின் செயல்பாடுகளை நிர்வகிக்கும் அமெரிக்க அதிபரின் கையொப்பமிடப்பட்ட, எழுதப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட ஆணைகள்" என்று வரையறுக்கிறது.


அமெரிக்க அரசியலமைப்பின் பிரிவு II -ன் கீழ் அத்தகைய ஆணைகளை பிறப்பிக்க அதிபருக்கு அதிகாரம் உள்ளது. மேலும், பிரிவு II குறிப்பிடுவதாவது, "செயலாக்க அதிகாரம் அமெரிக்காவின் அதிபரிடம் இருக்கும்." இந்தப் பிரிவு அதிபர்  பதவியையும் மற்றும் அவரது அதிகாரங்களை கோடிட்டுக் காட்டுகிறது. இந்த அதிகாரங்களில் இராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருப்பது, மன்னிப்பு வழங்குதல் மற்றும் தண்டனைகளை குறைத்தல் ஆகியவை அடங்கும்.


செயலாக்க ஆணைகள் (Executive orders) எளிதான குறிப்புக்காக வரிசையில் எண்ணிடப்பட்டுள்ளன. அவை கூட்டாட்சி அரசாங்கத்தின் தினசரி இதழான ஃபெடரல் பதிவேட்டில் வெளியிடப்படுகின்றன. கூட்டாட்சி பதிவேட்டில் கூட்டாட்சி விதிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் உள்ளன. இந்த பதிவேட்டில் அதிபரால் வெளியிடப்பட்ட பிரகடனங்கள் மற்றும் செயலாக்க ஆணைககளும் உள்ளன. அறிவிப்புகள் விடுமுறை நாட்கள், நினைவுச் சின்னங்கள், கூட்டாட்சி அனுசரிப்புகள் மற்றும் வர்த்தகம் பற்றிய தகவல்களை வழங்குகின்றன. செயலாக்க உத்தரவுகள் கூட்டாட்சி அரசாங்கத்தின் குறிப்பிட்ட செயலாக்க விஷயங்களைக் குறிப்பிடுகின்றன.


செயலாக்க ஆணைகள் மற்றும் பிரகடனங்கள் இரண்டும் சட்டத்தின் அதிகாரத்தைக் கொண்டுள்ளன. அவை, கூட்டாட்சி நிறுவனங்களால் வழங்கப்பட்ட விதிமுறைகளைப் போன்றவை ஆகும்.


செயலாக்க ஆணையின் (executive order) தாக்கம் என்ன?


ஒரு செயலாக்க உத்தரவு உடனடியாக அல்லது சில மாதங்களுக்குள் நடைமுறைக்கு வரலாம். இது செயல்படுத்துவதற்கு ஒரு கூட்டாட்சி நிறுவனத்தின் உதவி தேவையா என்பதைப் பொறுத்தது. உதாரணமாக, 2022-ம் ஆண்டில், கருக்கலைப்பை அணுகுவதற்கான பாதுகாப்புகளை அமைக்குமாறு ஜோபைடன் சுகாதார நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார். கருக்கலைப்பு உரிமையைப் பாதுகாத்த ரோ vs வேட் (Roe vs Wade) என்ற வழக்கை அமெரிக்க உச்சநீதிமன்றம் ரத்து செய்த பிறகு இது நடைமுறைக்கு வந்தது. அடுத்த சில மாதங்களில், இதை ஆதரிக்க முகமைகள் மூலம் விதிமுறைகளை உருவாக்கின. இந்த விதிமுறைகளில் ஒன்று கருக்கலைப்பு செய்யும் நபர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கான விதியை உள்ளடக்கியது.


நிறைவேற்று அதிகாரம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையேயான அதிகாரப் பிரிவினைக்கு ஏற்ப, நிறைவேற்று ஆணையின் மூலம் அதிபர் புதிய சட்டங்களை உருவாக்க முடியாது.


செயலாக்க ஆணைகளை சட்டரீதியாக சவால் செய்ய முடியுமா?


செயலாக்க ஆணைகளுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை. ஏனெனில், இந்த ஆணைகள் சட்டங்களால் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல. நாடாளுமன்றத்தால் அவற்றை நேரடியாக ரத்து செய்ய முடியாது. தற்போதைய அமெரிக்க அதிபர் மட்டுமே புதிய ஆணையை வெளியிடுவதன் மூலம் செயலாக்க ஆணையை ரத்து செய்ய முடியும்.


எவ்வாறாயினும், ஒரு ஆணையானது அரசியலமைப்புக் கோட்பாடுகளை மீறுவதாக தோன்றினால் அல்லது அமெரிக்க அதிபரின் அதிகாரத்தை மீறுவதாக தோன்றினால் அவை நீதிமன்றங்களால் மறுபரிசீலனை செய்யப்படலாம். டிரம்ப் தனது முதல் அதிபர் பதவிக்கு 2017-ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தபோது, ​​அவர் தற்காலிகமாக பயணத் தடைக்கான உத்தரவில் கையெழுத்திட்டார். இந்தத் தடை ஏழு முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுத்தது. இருப்பினும், கூட்டாட் சி நீதிமன்றம் இந்த உத்தரவின் சில பகுதிகளை நிறுத்தி வைத்தது. பின்னர், இது 2018-ம் ஆண்டில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டது.


அரசாங்க செயல்திறன் துறை (Department of Government Efficiency (DOGE)) என்ற ஆலோசனை அமைப்பை உருவாக்க டிரம்ப் திங்களன்று ஒரு செயலாக்க உத்தரவை பிறப்பித்தார். இந்த அமைப்பு கோடீஸ்வரர் எலோன் மஸ்க் தலைமையில் இருக்கும். இந்த ஆணை ஏற்கனவே சட்ட சவால்களை எதிர்கொண்டுள்ளது. அரசு நிறுவனங்களுக்கான நிதியைக் குறைத்து ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க எலான் மஸ்க் முன்பு பரிந்துரைத்துள்ளார். ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, அரசு ஊழியர் சங்கங்கள், கண்காணிப்பு குழுக்கள் மற்றும் பொது நலன் அமைப்புகள் அறிவிப்புக்குப் பிறகு சிறிது நேரத்திலேயே இது தொடர்பான வழக்குகளைத் தாக்கல் செய்தன.


சில சந்தர்ப்பங்களில், செயலாக்க ஆணையை (executive order) மீறுவதற்கான சட்டத்தை நிறைவேற்றுவதற்கும், கொள்கை நடவடிக்கைகளை செயல்படுத்த தேவையான நிதியை வழங்க மறுப்பதற்கும் நாடாளுமன்றம் சட்டத்தை இயற்றலாம். இருப்பினும், அமெரிக்க அதிபர் அத்தகைய சட்டத்தை தடை (veto) செய்வதற்கு தற்போதும் நடைமுறையில் உள்ளது.


கடந்த காலத்தில் செயலாக்க ஆணைகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன?


செயலாக்க ஆணைகள் (executive order) அதிகாரப்பூர்வமாக ஆபிரகாம் லிங்கனின் அதிபர் பதவிக் காலத்தில் இருந்து வருகின்றன. அவர் 1861 முதல் 1865 வரை அதிபராக பணியாற்றினார். அக்டோபர் 1862-ம் ஆண்டில், அவர் "லூசியானாவில் ஒரு தற்காலிக நீதிமன்றத்தை நிறுவுவதற்கான செயலாக்க ஆணையை" வெளியிட்டார்.


அவருக்குமுன் இருந்த அதிபர்கள் இன்று செயலாக்க ஆணைகளாக அங்கீகரிக்கக்கூடிய அதிகாரப்பூர்வ உத்தரவுகளை வெளியிட்டனர். வில்லியம் ஹென்றி ஹாரிசனைத் தவிர, ஒவ்வொரு அதிபரும் ஏதோ ஒரு வகையில் செயலாக்க உத்தரவுகளை இயற்றியுள்ளனர். மிக நீண்ட காலம் அதிபராக இருந்த பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் (1933-45) 3,721 ஆணைகளை வெளியிட்டார். உட்ரோ வில்சன் மற்றும் கால்வின் கூலிட்ஜ் முறையே 1,803 மற்றும் 1,203 போன்ற குறிப்பிட்ட ஆணைகளுக்கு  கையொப்பமிட்டனர்.


டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் 220 செயலாக்க ஆணைகளில் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




Original article:

Share:

பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 (Prevention of Money Laundering Act (PMLA), 2002)

 1. பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 ((Prevention of Money Laundering Act (PMLA))) ஆனது ஜாமீன் வழங்குவதற்கான தரத்திற்கு விதிவிலக்கு அளித்தாலும், பணமோசடி வழக்குகளில் கடுமையான ஜாமீன் பெறுவதற்கான தேவைகள் பெண்களுக்குப் பொருந்தும் என்று அமலாக்க இயக்குநரகத்தை (Enforcement Directorate) உச்ச நீதிமன்றம் விமர்சித்தது.


2. பணமோசடி வழக்குகளில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) பிரிவு 45 ஜாமீன் பெற அனுமதிக்கிறது. இருப்பினும், 1967-ம் ஆண்டின் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act(UAPA)) கடுமையான ஜாமீன் வழங்கும் தரத்தைப் போலவே, குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் கோரும்போது தங்களுக்கு எதிராக வலுவான வழக்கு எதுவும் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.


3. பிரிவு 45(1) குறிப்பிடுவதாவது, இந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை ஜாமீனில் அல்லது அவரது சொந்த பிணையில் விடுவிக்க முடியாது:


(i) அரசு வழக்கறிஞருக்கு ஜாமீன் விண்ணப்பத்தை எதிர்க்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


(ii) அரசு வழக்கறிஞர் ஜாமீனை எதிர்த்தால், அந்த நபர் அந்தக் குற்றத்தில் குற்றவாளி அல்ல என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன என்பதை நீதிமன்றம் நம்ப வேண்டும். கூடுதலாக, ஜாமீனில் இருக்கும் போது அந்த நபர் மற்றொரு குற்றத்தைச் செய்ய வாய்ப்பில்லை என்பதையும் நீதிமன்றத்திற்கு தெளிவுப்படுத்த வேண்டும்.


4. இருப்பினும், ஜாமீன் வழங்கும் தரத்திற்கு ஒரு முக்கியமான விதிவிலக்கு உள்ளது. "பதினாறு வயதிற்குட்பட்ட அல்லது ஒரு பெண் அல்லது நோய்வாய்ப்பட்ட அல்லது பலவீனமான ஒரு நபர், சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தினால், ஜாமீனில் விடுவிக்கப்படலாம்" என்று இந்தச் சட்டம் கூறுகிறது. இந்த விதிவிலக்கு பெண்கள் மற்றும் சிறார்களுக்கான இந்திய தண்டனைச் சட்டத்தின் (Indian Penal Code) கீழ் உள்ள விலக்குகளைப் போன்றது.




Original article:

Share:

இந்திய சட்டத்தில் 'அரிதினும் அரிது' என்றால் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 1. மேற்குவங்கத்தை உலுக்கிய இந்த வழக்கில் மரண தண்டனைக்கு சிபிஐ வலுவாக வாதிட்டது மற்றும் பல வாரங்கள் போராட்டங்கள் மற்றும் மருத்துவர்களின் வேலைநிறுத்தங்களுக்கு வழிவகுத்தது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொலையாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.


2. "அரிதினும் அரிதான" வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்தகைய தண்டனையை வழங்குவதற்கு முன் நீதிமன்றம் "மோசமாக்கும்" (aggravating) மற்றும் "தணிக்கும்" (mitigating) சூழ்நிலைகள் இரண்டையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த தீர்ப்பு 1980-ம் ஆண்டில் பச்சன் சிங் vs பஞ்சாப் மாநிலம் (Bachan Singh vs State of Punjab) வழக்கில் வழங்கப்பட்டது.


3. சூழ்நிலைகளைத் தணிப்பது மற்றும் மோசமாக்குவது பற்றிய புரிதல் காலப்போக்கில் மாறிவிட்டது. பல்வேறு முடிவுகள் மூலம் பட்டியலில் புதிய காரணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் பின்வருவன அடங்கும்:


குற்றம் சாட்டப்பட்டவர்களின் வயது (AGE OF ACCUSED) : ராம்நரேஷ் மற்றும் பிறர் vs சத்தீஸ்கர் மாநிலம் 2012 (Ramnaresh and Ors vs State of Chhattisgarh) மற்றும் ரமேஷ் vs ராஜஸ்தான் மாநிலம் 2011 (Ramesh vs State of Rajasthan) உள்ளிட்ட பல வழக்குகளில், உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் இளம் வயதைக் கருத்தில் கொண்டது. இந்த வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். அவர்கள் சீர்திருத்தம் செய்யப்படலாம் என்பதற்கான அறிகுறியாக உச்சநீதிமன்றம் கருதியது.


குற்றத்தின் தன்மை (NATURE OF OFFENCE) : சங்கர் காடேவில், தண்டனையை நிர்ணயிப்பதற்கு முன்பு நீதிமன்றங்கள் தற்போது இருக்கும் வழக்கை இதே போன்ற குற்றங்கள் சம்பந்தப்பட்ட பிற வழக்குகளின் தொகுப்போடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.

சீர்திருத்தத்தின் சாத்தியம் (POSSIBILITY OF REFORM) : பச்சன் சிங் வழக்கில், சீர்திருத்தத்திற்கான சாத்தியக்கூறு இல்லை என்பதை அரசாங்கம் நிரூபிக்க வேண்டும் என்றும், அத்தகைய தண்டனையை விதிப்பதற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது சந்தோஷ் பாரியார் vs மகாராஷ்டிரா மாநிலம் 2009 (Santosh Bariyar vs State of Maharashtra) வழக்கில், குற்றவாளி எந்த சீர்திருத்த அல்லது மறுவாழ்வுத் திட்டத்திற்கும் ஏன் பொருத்தமானவர் அல்ல என்பதைக் காட்ட நீதிமன்றம் தெளிவான ஆதாரங்களை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.


உங்களுக்குத் தெரியுமா?


1. பச்சன் சிங்கில், மரண தண்டனை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா என்பதை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்தது. பின், அது மரண தண்டனையை உறுதி செய்தது. ஆனால், சீர்திருத்தம் சாத்தியம் இல்லாத "அரிதினும் அரிதான" (rarest of rare) வழக்குகளில் மட்டுமே அது விதிக்கப்பட வேண்டும் என்று கூறியது.


2. ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு மரண தண்டனை எப்போது விதிக்கப்பட வேண்டும் என்பதற்கான குறிப்பிட்ட தரநிலைகளை அமைக்கவில்லை. இருப்பினும், நீதிமன்றங்கள் தங்கள் முடிவை எடுக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய "மோசமாக்கும்" (aggravating) மற்றும் "தணிக்கும்" (mitigating) சூழ்நிலைகளின் பட்டியலை அது வழங்கியது.


3. மோசமான சூழ்நிலைகள் நீதிமன்றத்தின் முடிவைப் பாதிக்கக்கூடிய காரணிகளாகும். இந்தக் காரணிகள் நீதிமன்றத்தை மரண தண்டனையைத் தேர்வு செய்ய வழிவகுக்கும். அவை,


- கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டு கணக்கிடப்பட்டு, மிகக் கொடூரமானதாகக் காட்டப்பட்டால்.


- கொலையில் "விதிவிலக்கான ஒழுக்கக்கேடு" இருந்தால்.


- குற்றம் சாட்டப்பட்டவர், ஒரு அரசு ஊழியர், காவல்துறை அதிகாரி அல்லது ஆயுதப்படையைச் சேர்ந்த ஒருவரை அவர்கள் பணியில் இருந்தபோது கொலை செய்ததாகவோ அல்லது தங்கள் கடமையைச் செய்யும்போது அவர்கள் செய்த சட்டப்பூர்வமான செயல்கள் காரணமாகவோ குற்றம் நிகழ்த்தினால் மரணதண்டனையாக தேர்வு செய்ய வழிவகுக்கும்.


4. சூழ்நிலைகளைத் தணிப்பது (Mitigating circumstances) ஒரு வழக்கைப் பாதிக்கும் மற்றும் மரண தண்டனைக்கான வாய்ப்பைக் குறைக்கும். இந்த காரணிகள் மரண தண்டனையிலிருந்து முடிவை மாற்ற உதவும்.


- குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் சாட்டப்பட்ட நேரத்தில் "தீவிர மன அல்லது உணர்ச்சி ரீதியான தொந்தரவின் கீழ்" இருந்தாரா?


- குற்றம் சாட்டப்பட்டவரின் வயது. அவர்கள் மிகவும் இளமையாகவோ அல்லது மிகவும் வயதானவராகவோ இருந்தால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படாது.


- குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்ந்து சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதற்கான வாய்ப்பு இருந்தால்.


- குற்றம் சாட்டப்பட்டவரை சீர்திருத்துவதற்கான வாய்ப்பு.


- குற்றம் சாட்டப்பட்டவர் வேறொரு நபரின் அறிவுறுத்தல்களின்படி செயல்பட்டாரா?


- குற்றம் சாட்டப்பட்டவர் தங்கள் செயல்கள் தார்மீக ரீதியாக நியாயமானவை என்று நம்பியாரா?


- குற்றம் சாட்டப்பட்டவர் தங்கள் செயல்களின் குற்றத்தன்மையைப் புரிந்துகொள்வதைத் தடுக்கும் மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளாரா? என்பதன் அடிப்படையில் மரண தண்டனையிலிருந்து முடிவை மாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது.




Original article:

Share: