வாழ்வாதாரத்திற்கும் வருமானத்திற்கும் விவசாயத்தை சார்ந்திருப்பது இந்தியாவில் அதிகரித்து வருகிறதா? இந்தப் போக்கு கிராமப்புறங்களில் விவசாயத்திலிருந்து பல பத்தாண்டுகளாகப் பழமையான மாற்றத்தை மாற்றியமைக்கலாம்.
2021-22 ஆம் ஆண்டிற்கான அகில இந்திய கிராமப்புற நிதி உள்ளடக்க கணக்கெடுப்பு (All India Rural Financial Inclusion Survey) இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. இது, நாட்டில் 57% கிராமப்புற குடும்பங்கள் இப்போது "விவசாயம்" (agricultural) சார்ந்து இருப்பதாக கண்டறியப்பட்டது. இதில், 50,000-க்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நடுத்தர நகர்ப்புற மையங்களில் உள்ள குடும்பங்களும் இதில் அடங்கும். இந்த சதவீதம் 2016-17 முதல் முந்தைய கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்ட 48%-ஐ விட கணிசமாக அதிகமாகும்.
விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியின் (Agriculture & Rural Development (NABARD)) கணக்கெடுப்பில், "விவசாய குடும்பம்" என்பது இரண்டு அளவுகோல்களை பூர்த்தி செய்யும் ஒன்றாக வரையறுக்கப்பட்டுள்ளது : (i) விவசாயத்தின் மொத்த விளைபொருட்களின் மதிப்பு ரூ.6,500-க்கு அதிகமாக இருப்பதாக அது தெரிவித்துள்ளது. வயல் மற்றும் தோட்டக்கலை பயிர்கள், கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பு, அல்லது மீன் வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் தேனீ வளர்ப்பு ஆகியவை இதில் அடங்கும். (ii) ஜூலை 2021 முதல் ஜூன் 2022 வரையிலான குறிப்பு ஆண்டில் குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒரு உறுப்பினராவது இந்தச் செயல்பாடுகளில் சுயதொழில் செய்துள்ளார்கள். 2016-17 கணக்கெடுப்பில், உற்பத்தியின் குறைந்தபட்ச மதிப்பு ரூ.5,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
2016-17 முதல் 2021-22 வரை, கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் விவசாயம் என அடையாளம் காணப்பட்ட கிராமப்புற குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. (அட்டவணையைப் பார்க்கவும்)
மேலும், இந்தியாவில் விவசாயக் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் 2021-22ல் ரூ.13,661 ஆக இருந்தது. இது விவசாயம் அல்லாத கிராமப்புற குடும்பங்கள் ஈட்டிய ரூ.11,438 ஐ விட அதிகமாகும். 2016-17 கணக்கெடுப்பில், விவசாயம் அல்லாத கிராமப்புற குடும்பங்களின் ரூ.7,269 உடன் ஒப்பிடுகையில், விவசாயக் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் ரூ.8,931 ஆக இருந்தது.
2021-22ஆம் ஆண்டில், விவசாயக் குடும்பங்களுக்கான மொத்த வருமானத்தில் சாகுபடி மற்றும் கால்நடை வளர்ப்பு 45% பங்களித்துடன், இது 2016-17ல் 43.1% அதிகரித்துள்ளது. பெரும்பாலான நில அளவுகளில் விவசாய நடவடிக்கைகளின் வருமானத்தின் உயரும் பங்கு காணப்பட்டது:
- 0.01 ஹெக்டேருக்கும் குறைவான குடும்பங்களுக்கு, பங்கு 23.5% இலிருந்து 26.8% ஆக அதிகரித்துள்ளது.
- 0.41-1 ஹெக்டேர் உள்ளவர்களுக்கு, இது 38.2% லிருந்து 42.2% ஆக உயர்ந்துள்ளது.
- 1.01-2 ஹெக்டேர் கொண்ட குடும்பங்களுக்கு, இது 52.5%லிருந்து 63.9% ஆக உயர்ந்துள்ளது.
- 2 ஹெக்டேருக்கு மேல் உள்ளவர்களுக்கு, பங்கு 58.2% லிருந்து 71.4% ஆக அதிகரித்துள்ளது.
2016-17 மற்றும் 2021-22 க்கு இடையில் கிராமப்புற இந்தியாவில் விவசாயத்தை நம்பியிருக்கும் குடும்பங்களின் விகிதம் கடுமையாக அதிகரித்துள்ளது. விவசாயக் குடும்பங்களைப் பொறுத்தவரை, விவசாயத்தின் வருமானம் அவர்களின் மொத்த வருமானத்தின் ஒரு பகுதியாக வளர்ந்துள்ளது. இதன் விளைவாக, அரசு அல்லது தனியார் வேலைகள், சுயதொழில், கூலித் தொழிலாளர்கள், வாடகை, வைப்புத்தொகை மற்றும் முதலீடுகள் போன்ற விவசாயம் அல்லாத ஆதாரங்களின் வருமானம் குறைந்துள்ளது. இந்த போக்கு அனைத்து நில அளவு வகைகளுக்கும் பொருந்தும்.
சுருக்கமாக, சமீபத்திய காலத்தில் அதிக விவசாய குடும்பங்கள் உள்ளதால், கிராமப்புற இந்தியா அல்லது இந்தியாவில் விவசாயம் (கிரிஷி) அதிகரித்துள்ளது. மேலும், அவர்கள் விவசாயத்தின் மூலம் தங்கள் வருமானத்தில் பெரும் பங்கைப் பெறுகிறார்கள்.
சமீபத்திய கணக்கெடுப்புக்கான குறிப்பு ஆண்டாக 2021-22 ஆகும். இந்த காலகட்டம் கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட முழு ஊரடங்கை தொடர்ந்து இந்த ஆய்வு வந்தது. இதில், தொற்றுநோயின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது பொருளாதார நடவடிக்கை மீதான கட்டுப்பாடுகள் கணக்கெடுப்பின் கண்டுபிடிப்புகளை பாதித்திருக்கலாம். ஜூலை 2021-ம் ஆண்டில் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டாலும், பொருளாதாரம் மீண்டு வர கால அவகாசம் தேவைப்பட்டது.
குறிப்பாக, விவசாயம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு முழு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதன் விளைவாக, விவசாயத் துறை மற்ற பொருளாதாரத்தைப் போன்ற இடையூறுகளைச் சந்திக்கவில்லை. கூடுதலாக, இந்தியா 2019-ல் தொடங்கி தொடர்ந்து நான்கு நல்ல பருவமழை ஆண்டுகளை அனுபவித்தது. இதன் காரணமாக, 2021-22 கணக்கெடுப்பின் ஆய்வுகள் கிராமப்புற வாழ்வாதாரங்கள் மற்றும் வருமானங்களில் விவசாயத்தின் பங்கை அதிகப்படுத்தலாம். எனவே, இந்த ஆய்வுகளை 2016-17 கணக்கெடுப்புடன் ஒப்பிடும் போது, இந்த சூழலைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆனால், இந்தியர்கள் தோட்டக்கலையை விட்டு வெளியேறுவதைவிட மீண்டும் இந்த துறைக்கு திரும்புவது அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டும் கூடுதல் தரவு ஆதாரமும் உள்ளது.
தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் காலமுறை தொழிலாளர் ஆய்வுகளின் (Periodic Labour Force Surveys (PLFS)) படி, 1993-94ஆம் ஆண்டில் நாட்டின் தொழிலாளர்களில் 64.6% பேர் விவசாயத்தில் ஈடுபட்டனர். இதன் பங்கு 2004-05ல் 58.5%-ஆகவும், 2011-12ல் 48.9%-ஆகவும், 2018-19ல் 42.5%-ஆகவும் குறைந்தது. அதன்பிறகு, இதன் போக்கு தலைகீழாக மாறியுள்ளது. 2019-20ஆம் ஆண்டில் விவசாயத் துறையில் வேலைவாய்ப்பு பெற்ற தொழிலாளர்களின் பங்கு 45.6% ஆகவும், 2020-21 இல் 46.5% ஆகவும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டுகள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டன. PLFS குறிப்பு ஆண்டு ஜூலை முதல் ஜூன் வரை இயங்கும். மேலும் கோவிட் தொற்று முதலில் மார்ச் 2020-ம் ஆண்டில் தோன்றியது.
முரண்பாடு
2021-22 காலகட்டத்திற்குப் பிறகும் விவசாயத்தின் பங்கு அதிகமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பொருளாதாரம் தொற்றுநோயிலிருந்து மீண்டு, 2023-24ல் முடிவடைந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.3% வளர்ச்சியை அடைந்திருந்தாலும் இது உண்மைதான். 2023-24 ஆண்டிற்கான சமீபத்திய விகிதம் 46.1% ஆகும். இது 2018-19-ம் ஆண்டில் தொற்றுநோய்க்கு முந்தைய குறைந்த அளவான 42.5%-ஐ விட கணிசமாக அதிகமாகும்.
இந்த போக்கு கிராமப்புறங்களிலும் கவனிக்கத்தக்கது. 2018-19 ஆம் ஆண்டில், இந்திய கிராமப்புற தொழிலாளர்களில் 57.8% விவசாயத் துறை வேலைவாய்ப்பை அளித்துள்ளது. இது 2019-20 ஆம் ஆண்டில் 61.5%ஆகவும், 2020-21 ஆம் ஆண்டில் 60.8% ஆகவும் உயர்ந்துள்ளது. இது 2021-22 இல் 59% ஆகவும், 2022-23 இல் 58.4% ஆகவும் குறைந்தது. ஆனால், 2023-24 இல் மீண்டும் 59.8% ஆக உயர்ந்துள்ளது.
இந்திய பொருளாதாரம் 2016-17 மற்றும் 2023-24-க்கு இடையில் நிலையான ரூபாயில் 1.4 மடங்குக்கு மேல் வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி இருந்தபோதிலும், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தை சார்ந்திருப்பது அதிகரித்துள்ளது. இந்த போக்கு NABARD மற்றும் PLFS-ன் தரவுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது மற்றும் இதற்கான சில விளக்கங்கள் தேவைப்படும் முரண்பாட்டை அளிக்கிறது.
இந்த போக்குக்கு உற்பத்தித் துறையில் வேலைகள் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். 2023-24-ஆம் ஆண்டில், உற்பத்தித் துறையில் இந்தியாவின் பணியாளர்களில் 11.4% பேர் மட்டுமே பணியாற்றியுள்ளனர். இது 2011-12ல் 12.6% ஆகவும், 2018-19ல் 12.1% ஆகவும் குறைந்துள்ளது.
2023-24-ஆம் ஆண்டில், வர்த்தகம், தாங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் (12.2%) மற்றும் கட்டுமானம் (12%) ஆகியவற்றைவிட உற்பத்தித் துறையின் வேலைவாய்ப்பின் பங்கு குறைவாக இருந்தது. உபரி உழைப்பு விவசாயத்திலிருந்து வெளியேறுகிறது. ஆனால், இந்த உழைப்பு தொழிற்சாலைகளுக்கு செல்வதில்லை. மாறாக, விவசாயத்திற்கு இணையான துறைகளுக்கு நகர்கிறது. இந்தத் துறைகள் ஒரு தொழிலாளிக்கு குறைந்த உற்பத்தித்திறனைக் கொண்டுள்ளன, வாழ்வாதார ஊதியத்திற்குச் சற்று அதிகமாகக் கொடுக்கின்றன, மேலும் அவை பெரும்பாலும் முறைசாராவை.
2023-24 ஆம் ஆண்டில், வர்த்தகம், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் (12.2%) மற்றும் கட்டுமானம் (12%) ஆகியவற்றை விட உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பின் பங்கு குறைந்துள்ளது. விவசாயத்தின் அதிக உழைப்பு விவசாயத்திலிருந்து வெளியேறுகிறது. ஆனால், இந்த உழைப்பு தொழிற்சாலைகளுக்கு செல்வதில்லை. மாறாக, விவசாயத்திற்கு இணையான துறைகளுக்கு நகர்கிறது. இந்தத் துறைகள் ஒரு தொழிலாளிக்கு குறைந்த உற்பத்தித்திறனைக் கொண்டுள்ளன. வாழ்வாதார ஊதியத்திற்குச் சற்று அதிகமாகக் கொடுக்கின்றன. மேலும், அவை பெரும்பாலும் முறைசாராவை.
2023-24 ஆம் ஆண்டிற்கான PLFS தரவுகளின்படி, விவசாயத்தில் அதிக தொழிலாளர் பங்கைக் கொண்ட மாநிலங்களில் சத்தீஸ்கர் (63.8%), மத்தியப் பிரதேசம் (61.6%), உத்தரபிரதேசம் (55.9%), பீகார் (54.2%), இமாச்சலப் பிரதேசம் (54%), ராஜஸ்தான் (51.1%) மற்றும் ஜார்க்கண்ட் (50%) ஆகியவை அடங்கும். மறுபுறம், சில மாநிலங்கள் விவசாயத்தில் தொழிலாளர் சக்தியில் ஒப்பீட்டளவில் குறைந்த சதவீதத்தைக் கொண்டுள்ளன. கோவா 8.1%, கேரளா 27%, பஞ்சாப் 27.2%, ஹரியானா 27.5%, தமிழ்நாடு 28%, மேற்கு வங்கம் 38.2% ஆகியவை இதில் அடங்கும்.
2011-ம் ஆண்டில் 1.82 டிரில்லியன் டாலராக இருந்த ஒரு பொருளாதாரம் 2016-ம் ஆண்டில் 2.29 டிரில்லியன் டாலராகவும், 2023-ம் ஆண்டில் 3.55 டிரில்லியன் டாலராகவும் (உலக வங்கியின் தரவுகளின்படி) வளர்ந்துள்ளது. வேலைவாய்ப்புக்காக விவசாயத்தை அதிகம் சார்ந்திருக்க வேண்டியிருப்பதற்கான காரணங்கள் பொருளாதார வல்லுநர்களிடையே விவாதப் பொருளாக இருக்க வேண்டும்.
Original article: