தாக்கத்தின் மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலமும், செயல்முறையை நிறுவனமயமாக்குவதன் மூலமும், தேவைப்படும்போது சரிசெய்தல் மற்றும் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடியும். இது பொருளாதாரத்தை மாற்றியமைப்பதில் மட்டுமல்லாமல், மில்லியன் கணக்கான வாழ்க்கையை மாற்றுவதில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகளின் (Digital Public Infrastructure (DPI)) வாக்குறுதியை நிறைவேற்ற உதவும்.
செப்டம்பர் 22, 2024-ம் ஆண்டு, ஐ.நா உச்சி மாநாட்டில் உலகளாவிய டிஜிட்டல் காம்பாக்ட் (Global Digital Compact (GDC)) ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது பல்வேறு பங்குதாரர்களை உள்ளடக்கிய மின்னணு நிர்வாகத்தில் உலகளாவிய ஒத்துழைப்பின் புதிய காலகட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையானது, அனைவருக்கும் பயன்தரும் வகையில் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு, நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்வதாக உறுதியளித்துள்ளது.
இது 2023-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புக்கான (DPI) உலகளாவிய பாதுகாப்புகள் என்ற முன்முயற்சியைப் பின்பற்றுகிறது. இது ஐ.நா. பொதுச்செயலாளரின் தொழில்நுட்பத் தூதுவர் (Office of the UN Secretary-General’s Envoy on Technology (OSET)) மற்றும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (United Nations Development Program (UNDP)) ஆகியவற்றால் தொடங்கப்பட்டது.
ஜி20 தலைவர் பதவியில் இந்தியா முக்கிய பங்காற்றியுள்ளது. இது பொருளாதார வளர்ச்சியை தீவிரப்படுத்துவதற்கான ஒரு வழியாக டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகளின் (DPI) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. குறிப்பாக, உலகளாவிய தெற்கில் உலகின் மிகப்பெரிய மின்னணு அடையாளத் திட்டமான ஆதார் திட்டத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது.
மேலும், ஆகஸ்ட் மாதத்தில் 14.96 பில்லியன் பரிவர்த்தனைகள் பதிவுசெய்யப்பட்டதன் மூலம், நிகழ்நேர டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் (digital payments) அதிகபட்ச அளவைக் கொண்டுள்ளது. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) பற்றிய உலகளாவிய விவாதங்களில் இந்தியா தீவிரமாக பங்கேற்று வருகிறது.
எவ்வாறாயினும், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) பற்றிய தீவிரம் சீராக வளர்ந்து வருகிறது. உலக வங்கியின் ID4D (வளர்ச்சிக்கான அடையாளம்) திட்டம் கிட்டத்தட்ட 60 நாடுகளுக்கு ஆதரவளிக்கிறது. மற்றொரு முன்முயற்சியான, G2Px திட்டம் (அரசாங்கத்திலிருந்து நபருக்கு பணம் செலுத்துவதை மின்னணு மயமாக்குதல்), 35 நாடுகளில் செயலில் உள்ளது. இந்தியாவின் இலாப நோக்கற்ற முன்முயற்சியான Modular Open Source Identity Platform (MOSIP), 11 நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது.
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) மற்றும் இதுபோன்ற முன்முயற்சிகள் இந்தியாவில் பல்வேறு துறைகளில் விரிவடைவதால், இதற்கான தாக்க மதிப்பீடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த மதிப்பீடுகள் கொள்கை வகுப்பாளர்களுக்கு இந்த திட்டத்தின் முயற்சிகளின் வெற்றியைக் கண்காணிக்க உதவுகின்றன. அவை டிபிஐகளின் வடிவமைப்பை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதலையும் வழங்குகின்றன. மேலும், DPI-கள் அணுகக்கூடியதாகவும், உள்ளடக்கியதாகவும் மற்றும் பயனுள்ளதாகவும் இருப்பதை உறுதி செய்கிறது. சரியான மதிப்பீடு இல்லாமல், அரசாங்கங்கள் தங்கள் இலக்குகளை அடையாத வேறுவொரு உள்கட்டமைப்பு அமைப்புகளில் முதலீடு செய்யலாம். இது இன்னும் மோசமானது, மேலும் இது பாகுபாடுகளை அதிகரிக்கலாம். DPI-கள் இந்தியாவில் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்த உதவியுள்ளன என்பதை ஆரம்பகால சான்றுகள் காட்டுகின்றன.
பெரியவர்களுக்கான வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை 2008-ம் ஆண்டில் 25%ஆக இருந்து, கடந்த ஆறு ஆண்டுகளில் 80%க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இந்த கணக்குகளில் 56% பெண்கள் வைத்துள்ளனர். மின்னணு பரிவர்த்தனைகள் 2022-23-ல் இந்தியாவின் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (nominal GDP) கிட்டத்தட்ட 50% ஐ எட்டின.
இந்த பரிவர்த்தனைகள் UPI-ல் முன் அங்கீகரிக்கப்பட்ட கடன்கள் மூலம் கிரெடிட்டை அணுகுவதை எளிதாக்கியது. இருப்பினும், DPI-கள் குடிமக்களின் வாழ்வாதாரம், வருமானம், நல்வாழ்வு மற்றும் சமூக நிறுவனத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்து ஆழமான கேள்விகள் உள்ளன. UPI மற்றும் வருமானம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள நேரடி இணைப்பை தெளிவாகக் காண்பிப்பது கடினம். விரிவான தரவு இல்லாமல், அவ்வாறு செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
கூடுதலாக, DPI-கள் தனியார் துறை மற்றும் அரசாங்கத்திற்கு, பயனர்கள் மற்றும் தொழில்நுட்ப வழங்குநர்கள் ஆகிய இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
தாக்க மதிப்பீடுகளை நடத்துவதில் உள்ள மிகப்பெரிய சவால்களில் ஒன்று தரவு இல்லாதது ஆகும். ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, UPI மூலம் செயல்படுத்தப்பட்ட மொத்த பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மற்றும் ஜன்தன் கணக்குகளின் எண்ணிக்கை ஆகியவை இதில் அடங்கும். இருப்பினும், இந்தத் தரவு மட்டும் ஒட்டுமொத்த தாக்கத்தை போதுமான அளவு பிரதிபலிக்கவில்லை. பயனர்களின் சமூக-பொருளாதார பின்னணிகள், பயன்பாட்டின் அதிர்வெண் அல்லது நடத்தை மாற்றங்கள் பற்றிய தரவு முக்கியமானது. எடுத்துக்காட்டாக, DPI-யால் இயங்கும் கடன் நிதி அமைப்பில் அபாயங்களை அதிகரித்ததா அல்லது குறைத்ததா என்பதை மதிப்பிடுவது முக்கியம்.
கிடைமட்டத் தரவு முக்கியமானது. இதில், பாலினம், வருமானம் மற்றும் கல்வி போன்ற மக்கள்தொகை காரணிகள் விளைவுகளை வடிவமைக்க எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது. அனைவருக்குமான பொது உள்கட்டமைப்பு (UPI) கிராமப்புற பெண்களின் நிதி சுதந்திரத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அளவிட முடியுமா என்பதை நாம் ஆராய வேண்டும். தற்போது, நாம் படிப்பதில் பெரும்பாலான தகவல்கள் முறையான தரவுகளைவிட தனிப்பட்ட நிகழ்வு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை.
தரவு சேகரிப்பு பற்றிய தனியுரிமை மற்றும் பாதுகாப்பு கவலைகள் மிகவும் முக்கியமானவை. இருப்பினும், நிகழ்வு ஆதாரம், விரிவான நுண்ணறிவுகளிலிருந்து பெறுவதற்கு நிறைய இருக்கிறது. இந்த தரவுகளை பகுப்பாய்வு செய்து, யார் பயனடைகிறார்கள்?, யார் பின்தங்கப்படுகிறார்கள்? மற்றும் இந்த வேறுபாடுகளுக்கான காரணங்களை இந்தத் தரவு காட்டலாம். கூடுதலாக, இந்த அணுகுமுறை சந்தைகள் மற்றும் நிர்வாகத்தை மதிப்பீடு செய்ய வேண்டும்.
இந்த சவால்களை எதிர்கொள்ளவும், இந்தியாவில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புக்கான (DPI) தாக்க மதிப்பீடுகளை வழக்கமான நடைமுறையாக மாற்றவும், வடிவமைப்பு, தரவு மற்றும் உரையாடல் ஆகிய மூன்று முக்கிய கூறுகளை நாம் முன்மொழிகிறோம். முதலாவதாக, தனியுரிமை மற்றும் பாதுகாப்பைக் கையாள்வது போன்றே, டிபிஐ-களின் வடிவமைப்பில் தாக்க மதிப்பீடுகளை ஆதரிக்க தரவுகளை சேகரிக்கக்கூடிய அமைப்புகளை உருவாக்குதல் வேண்டும்.
இது தொடர்ச்சியான மேம்பாட்டுக்கான பதில்விவரத்தை உருவாக்கும். இரண்டாவதாக, நம்பகமான மற்றும் நன்கு நிர்வகிக்கப்படும் முறைகள் மூலம் தரவை அணுக முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தற்போது, பல அரசு நிறுவனங்கள் தரவு கிடைப்பதைக் குறைக்க முனைகின்றன. இது தரவு தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் அதே வேளையில், இது மதிப்பீடுகளின் தரத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.
குடிமக்கள் மற்றும் தனியார் துறையுடன் நம்பிக்கையை வளர்ப்பது அவசியமாகும். இது, நன்கு வடிவமைக்கப்பட்ட தரவு சேகரிப்பு அமைப்புகள் இதை அடைய உதவும். இந்த அமைப்புகள் உயர்தர மதிப்பீடுகளை அனுமதிக்கின்றன. இதற்கான தரவை எளிதாகக் கண்டுபிடித்து பயன்படுத்துவதற்கு தொழில்நுட்ப வடிவமைப்புகளும் முக்கியமானவையாக உள்ளது.
கூடுதலாக, பங்குதாரர்களிடையே உரையாடலை வளர்ப்பது முக்கியம். இதில் மூன்றாம் தரப்பு மதிப்பீட்டு நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள், தனியார் துறை மற்றும் சிவில் சமூகத்தை ஈடுபடுத்துவது இதில் அடங்கும். இந்த குழுக்களைச் சுற்றி ஒரு சமூகத்தை உருவாக்குவது அவசியம். ஈடுபாட்டிற்கான நெறிமுறைகளை உருவாக்குவது பங்கேற்பு ஆளுகையை செயல்படுத்தும். இந்த அணுகுமுறை ஒட்டுமொத்த பொறுப்புணர்வையும் மேம்படுத்தும்.
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகளில் (DPIs) இந்தியாவின் நம்பிக்கை நியாயமானது. இந்த திட்டத்திற்கான வெற்றியை உறுதிப்படுத்த, தாக்க மதிப்பீடுகளில் கவனம் செலுத்துவது மற்றும் முறையான செயல்முறையை நிறுவுவது முக்கியம். இது தேவைப்படும் போது சரியான நேரத்தில் திருத்த நடவடிக்கைகளை அனுமதிக்கும். இத்தகைய நடவடிக்கைகள், பொருளாதாரங்களை மாற்றுவதற்கும், மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் DPI களின் வாக்குறுதியை நிறைவேற்ற உதவும். இதற்கான, பயணம் நன்றாகத் தொடங்கிவிட்டது. ஆனால், இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது.
கேடியா ICRIER இல் மூத்த ஃபெலோவாகவும், வாங்குரி ICRIER இல் ஆராய்ச்சி உதவியாளராகவும் உள்ளார்.