கிரீன்வாஷிங் (Greenwashing) வழிகாட்டுதல்கள் நல்லது. ஆனால், அவை மோசடி செயல்முறையாக (sharper) இருக்கலாம்.
இந்திய நுகர்வோர்கள், மற்ற நாடுகளைப் போலவே, சுற்றுச்சூழலுக்கு குறைவான தீங்கு விளைவிக்கும் தயாரிப்புகளையும் சேவைகளையும் இப்போது விரும்புகிறார்கள். இந்த விருப்பங்களுக்கு பலர் அதிக பணம் செலுத்த தயாராக உள்ளனர். வணிக நிறுவனங்கள் சாதாரண தயாரிப்புகளுக்கு அதிக விலை வசூலிக்க 'கரிம' (‘organic), 'இயற்கை' (‘natural’), 'சுற்றுச்சூழல் மாசுபடுத்தாதவை (‘eco-friendly) அல்லது 'நிலையானவை' (‘sustainable’) என்று முத்திரையிடுகின்றன.
பிப்ரவரி 2024 இல், இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் (Advertising Standards Council of India (ASC)) பசுமை உரிமைகோரல்களைக் கொண்ட பெரும்பாலான விளம்பரங்கள் தெளிவற்றவை அல்லது தவறாக வழிநடத்துகின்றன என்பதைக் கவனித்தது. இதை நிவர்த்தி செய்ய, பசுமை உரிமைகோரல்கள் எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டனர். இப்போது, நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (Central Consumer Protection Authority (CCPA)), அவர்களுக்கு சட்ட அதிகாரத்தை வழங்கி இந்த வழிகாட்டுதல்களை வலுப்படுத்தியுள்ளது.
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் (CCPA) வழிகாட்டுதல்கள் குறிப்பாக கிரீன்வாஷிங் (Greenwashing) நடைமுறையை தடை செய்கின்றன. கிரீன்வாஷிங் (Greenwashing) என்பது சுற்றுச்சூழல் நன்மைகளை மிகைப்படுத்தும் அல்லது தவறாகக் வழிநடத்தும ஏமாற்றும் நடைமுறை என பரவலாக வரையறுக்கப்படுகிறது. ஒரு தயாரிப்பின் முக்கியமான தகவல்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் அம்சங்களை மறைப்பது அல்லது தவிர்ப்பதும் இதில் அடங்கும். தவறான படங்களைப் பயன்படுத்துவதும் கிரீன்வாஷிங் (Greenwashing) ஆகும்.
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் (CCPA) வழிகாட்டுதல்கள் பசுமை உரிமைகோரல்களைச் செய்யும் வணிகங்களுக்கு பல விதிகளை அமைக்கின்றன. முதலாவதாக, பசுமை, சுற்றுச்சூழல் நட்பு, கரிம, இயற்கை, நிலையான அல்லது கார்பன்-நடுநிலை (carbon-neutral) போன்ற சொற்களை ஆதாரம் இல்லாமல் பயன்படுத்தக்கூடாது. இந்த உரிமைகோரல்கள் சுயாதீன ஆய்வுகள் அல்லது மூன்றாம் தரப்பு சான்றிதழ்களால் ஆதரிக்கப்பட வேண்டும். அவை QR குறியீடு அல்லது URL மூலம் நுகர்வோருக்கு கிடைக்க வேண்டும்.
இந்த விதி தவறான அல்லது தெளிவற்ற உரிமைகோரல்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், இது ஒரு கேள்வியை எழுப்புகிறது. இந்த பசுமை உரிமைகோரல்கள் அனைத்தையும் சான்றளிக்கக்கூடிய அதிகாரப்பூர்வ அமைப்புகள் இந்தியாவில் உள்ளனவா? நுகர்வோருக்கு அவர்களைப் பற்றி தெரியுமா?
இரண்டாவதாக, ஒரு தயாரிப்பு சுற்றுச்சூழலுக்கு ஏற்றது அல்லது நச்சுத்தன்மையற்றது என்று ஒரு நிறுவனம் கூறினால், இதன் முழு தயாரிப்பு, உற்பத்தி செயல்முறை, பேக்கேஜிங் அல்லது அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது மற்றும் அகற்றப்படுகிறது என்பதை முழுமையாக விளக்க வேண்டும். இதன் மூலம் நிறுவனங்கள் செய்யும் மாற்றங்களையும் மற்றும் ஒரு தயாரிப்பை 'பசுமை' என்று அழைப்பதையும் தடுக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு அட்டை பெட்டியில் நெகிழி மூடப்பட்ட தயாரிப்பை மக்கும் என்று பெயரிட முடியாது.
மூன்றாவதாக, மக்கும் அல்லது மறுசுழற்சி செய்யக்கூடிய போன்ற கூற்றுக்கள் மற்றும் அறிவியல் சான்றுகள் போன்றவை மூன்றாம் தரப்பு சரிபார்ப்பால் ஆதரிக்கப்பட வேண்டும். விற்பனையாளர்கள் தங்கள் கூற்றுக்கு ஆதரவான ஆராய்ச்சி ஆய்வுகளின் பகுதிகளை எடுக்க முடியாது. அவர்கள் முழு ஆய்வையும் வெளிப்படுத்த வேண்டும்.
இந்த வழிகாட்டுதல்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் கிரீன்வாஷிங் (Greenwashing) எதிர்ப்பு விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டதாகத் தெரிகிறது. இருப்பினும், அவை குறைவான பாதிக்கப்பட கூடிவை. ஐரோப்பிய ஒன்றிய விதிகளுக்கு ஒரு தயாரிப்பின் வாழ்க்கைச் சுழற்சியை வெளிப்படுத்த வேண்டும். இதற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் (CCPA) முறையான வழிகாட்டுதல்கள் இல்லை.
இருப்பினும், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் (CCPA) வழிகாட்டுதல்கள் இன்னும் பரந்தவை மற்றும் அவை எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்த கவலைகளை எழுப்புகின்றன. அவை நுகர்வோருக்கு புகார்களை பதிவு செய்வதற்கான வழியை வழங்கவில்லை. விதி மீறல்களுக்கு அபராதமும் இல்லை. கூடுதலாக, இந்தியா இன்னும் முக்கிய நகரங்களில் சரியான கழிவுப் பிரிப்பை (waste segregation) செயல்படுத்தவில்லை. ஏனெனில் அவற்றிற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதி இல்லை.