அரசியலமைப்பு நிர்வாகத்தில் ஒரு புதிய மைல்கல் -சி.ராஜ்குமார்

 அரசியலமைப்பு நிர்வாகத்தின் (constitutional governance) 75 ஆண்டை கொண்டாட இந்தியாவுக்கு பல காரணங்கள் உள்ளன.

 

நவம்பர் 26 அன்று, இந்தியா தனது அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட 75-வது நிறைவு விழாவை கொண்டாட இருக்கிறது. இந்த சாதனையை இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அனைவரும் கொண்டாட வேண்டும். இந்தியாவில் அரசியலமைப்பு நிர்வாகம் என்பது ஜனநாயக நிறுவனங்களுக்கு வழிகாட்டும் சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மட்டுமல்ல. பல்வேறு கலாச்சாரங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றை பொருட்படுத்தாமல், அனைத்து இந்தியர்களை பாதுகாக்கும் வலுவான அரசியலமைப்பு கலாச்சாரத்தை உருவாக்குவதும் இதில் அடங்கும். நிறுவனங்களுக்கான மரியாதை மற்றும் அதிகாரத்தின் சுமுகமான மாற்றங்கள் இதில் அடங்கும்."

 

அரசியலமைப்பு தினத்தை கொண்டாட நாடு தயாராகி வருவதால், இந்தியாவின் அரசியலமைப்பு கலாச்சாரத்தை வடிவமைத்துள்ள முக்கிய அரசியலமைப்பு மதிப்புகளை அடையாளம் காண வேண்டிய நேரம் இது. இந்த ஐந்து மதிப்புகளும் காலப்போக்கில் நீடித்து வருகிறது. 


முதலாவதாக, ஜனநாயக அமைப்புகளுக்கு மக்கள் மரியாதை செலுத்த வேண்டும். இந்திய அரசியலமைப்பு நவம்பர் 26, 1949-ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட போது, இந்தியாவில் சராசரி மனிதனின் ஆயுட்காலம் 32 ஆண்டுகளாக இருந்தது. இன்று, சராசரி மனிதனின் ஆயுட்காலம் 70 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.  ஜனநாயக அமைப்புகள் மக்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது. இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி கடந்த பத்தாண்டுகளாக பொதுக் கொள்கையை திறம்பட செயல்படுத்துவதை சுட்டி காட்டுகிறது. பல இந்தியர்கள் உள்ளூர், மாநில அல்லது தேசிய தேர்தல்களில் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் தங்கள் பிரதிநிதிகளிடமிருந்து சிறந்த செயல்திறனை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். உள்ளூர், மாநிலம் அல்லது பொதுத் தேர்தல் என ஒவ்வொரு தேர்தலிலும் இந்தியர்கள் ஏன் இவ்வளவு பெரிய மற்றும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தொடர்ந்து பங்கேற்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 1951-52 முதல் தேர்தல்களில் 60% இந்தியர்கள் பங்கேற்றுள்ளனர். 2024 பொதுத் தேர்தலில், 65.79% வாக்குகள் பதிவாகியிருந்தன. ஜனநாயகத்திற்கான மரியாதை மற்றும் ஜனநாயக நிறுவனங்களின் மீதான நம்பிக்கை ஆகியவை காலங்காலமாக நீடித்து வரும் இந்தியாவின் முக்கிய அரசியலமைப்பு மதிப்புகள் ஆகும். 


இரண்டாவதாக, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களில் சுமுகமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த எழுபது ஆண்டுகளில், இந்தியா தேசிய  மற்றும் அளவில் அளவில் பல தேர்தல் நடந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பல்வேறு முக்கிய பதவிகளை பெற்றுள்ளனர். பல்வேறு கொள்கைகளை கொண்ட அரசியல் தலைவர்கள் தேர்தல்களில் வெற்றி பெற்று மாநிலங்களிலும் தேசிய அளவிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். ஆனால், இந்தியாவின் ஜனநாயக மரபுகளின் தனித்துவம் என்னவென்றால், தேர்தலுக்குப் பிறகு ஆட்சியை சுமுகமாக நடத்துவதை உறுதி செய்ய ஒவ்வொரு அரசியல் கட்சியின்  வலுவான அர்ப்பணிப்பு ஆகும். 


தேர்தல்களில் தீவிர பிரச்சாரம் மற்றும் சில சமயங்களில் பிளவுபடுத்தும் செய்திகள் இருந்தாலும், தேர்தல் முடிவுகள் எப்போதும் சிறந்த அனுபவமாக இருக்கும். இருப்பினும், ஒவ்வொரு தேர்தலிலும், இறுதியில் வெற்றி பெறுபவர்கள் வாக்காளர்களாகிய மக்கள். இந்திய வாக்காளர்கள் தங்கள் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதே அவர்களின் வாக்களிக்கும் முடிவுகளை வடிவமைக்கிறது என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டாக உள்ளனர். இந்திய மக்கள் தேர்தலின் முக்கியத்துவத்தை மதிக்கிறார்கள் மற்றும் ஒரு அரசாங்கத்திடமிருந்து மற்றொரு அரசாங்கத்திற்கு அதிகாரத்தை சுமுகமாக மாற்றுவதை தங்களின் வாக்குகள் மூலம் உறுதி செய்கிறார்கள்.


உரிமைகளை நிலைநிறுத்துதல் 


மூன்றாவதாக, உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாப்பது நீதிமன்றங்கள் மூலம்  மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அரசியலமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட நிறுவனங்களான அடிப்படை உரிமைகள் மற்றும் நீதிமன்றங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதை அரசியலமைப்பு உறுதி செய்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்று சுதந்திரத்திற்கு முக்கிய பங்காற்றினார். ஆங்கிலேயரின் ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடி இந்திய நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தனர். அடிப்படை உரிமைகளுக்கான விதிகளை உருவாக்கும் போது, ​​அரசியலமைப்புச் சபையின் உறுப்பினர்கள் அரசு மற்றும் அதன் அமைப்புகளின் அதிகாரத்தைப் பற்றி தெரிந்து வைத்திருந்தனர்.


 அவர்கள் கருணையுள்ள அரசு (benevolent state) என்ற கருத்தை ஆதரித்திருக்கலாம். சுதந்திர இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர்களுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. இருப்பினும், அவர்கள் அரசின் அதிகாரத்தில் சந்தேகம் கொண்டிருந்தனர். தனிமனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் கவனமாக இருந்தனர். இது அவர்களின் நீண்ட காலப் பார்வையை சுட்டிக் காட்டியது. ஆனால், உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் மிக முக்கியமானவை என்பதை புரிந்துகொள்வதன் மூலம் அரசியலமைப்பின் மதிப்பு பல ஆண்டுகளாக வளர்ந்துள்ளது.


நான்காவதாக, கூட்டாட்சி (federalism) என்பது அரசியலமைப்பு நிர்வாகத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் நாட்டின் பல மொழிகள் மற்றும் கலாச்சார வேறுபாடுகள் உட்பட நாட்டின் பன்முகத்தன்மையை புரிந்து கொண்டனர். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தின் வரலாறு மற்றும் மரபுகளை அவர்கள் அறிந்திருந்தனர். இந்த விழிப்புணர்வு மாநிலங்களின் தனித்துவமான அடையாளம், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்க உதவியது, அதே நேரத்தில் தேசிய அடையாளத்தையும் உருவாக்கியது.


 பல்வேறு வகையான சுயாட்சி மற்றும் சிறப்பு சலுகைகளை உருவாக்கினார். ஒவ்வொரு மாநிலத்திற்கும், தனித்துவமான வரலாறுகள் மற்றும் கலாச்சாரங்களைக் கருத்தில் கொண்டு, சில பிராந்தியங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை திறம்பட நிவர்த்தி செய்ய, இந்திய அரசியலமைப்பு சட்டம் நேர்மை மற்றும் உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் சிறப்பு நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டுகிறது.


கடந்த ஏழுபது ஆண்டுகளாக, கூட்டாட்சி கொள்கை இரண்டு முக்கிய வழிகளில் வளர்ந்துள்ளது:


1. இந்தியாவில் மாநில அளவிலான அரசியல் கட்சிகளின் எழுச்சி தேசிய அளவில் விழிப்புணர்வை அதிகரிக்க உதவியுள்ளது. இந்த வலுவான மாநில கட்சிகள் மாநில மற்றும் தேசிய அளவில் கூட்டணி அரசாங்கங்களை அமைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளன.


2. கூட்டாட்சி (federalism) கொள்கை 73 மற்றும் 74 வது அரசியலமைப்பு திருத்தங்களை நிறைவேற்ற வழிவகுத்தது. இந்த திருத்தங்கள் கிராம சபை மற்றும் நகர சபைகளை (nagarpalikas) நிறுவ வழிவகுத்தது. 


ஊடகங்கள், குடிமை சமூங்கள் ஆற்றிய பங்கு 


ஐந்தாவதாக, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை வளர்ப்பதில் ஊடகங்களும் குடிமை சமூகமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்திய ஊடகங்கள் பல்வேறு மொழிகளில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு கண்ணோட்டங்களை வெளிக்காட்டுகிறது. அச்சிலிருந்து ஒளிபரப்பு ஊடகம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுக்கு மாறுவது தகவல்களை எளிதில் அணுகக்கூடியதாக மாற்றியுள்ளது. ஊடக நிறுவனங்களுக்கு  எவ்வாறு நிதியளிக்கப்படுகின்றன மற்றும் நிர்வகிக்கப்படுகின்றன என்பது தொடர்பான முக்கிய சவால்கள் உள்ளன. 


ஊடகங்களும் குடிமை சமூகமும் இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை வளர்க்க உதவுகின்றன. ஊடக சுதந்திரத்தை பாதிக்கும் பிரச்சினைகளை நாம் விமர்சிக்க வேண்டும். ஆனால், அதன் முக்கியத்துவத்தையும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். ஊடகக் கலாச்சாரத்தில் வெளிப்படைத்தன்மை, பல்வேறு ஊடக ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களின் மூலம், இந்திய வாக்காளர்கள் ஊடகங்கள் மற்றும் குடிமை சமூகத்தின் பாத்திரங்களைப் பற்றி நன்கு அறிந்துள்ளனர்.


அரசியலமைப்பு நிர்வாகத்தின் 75-வது நிறைவு விழாவை கொண்டாடுவதற்கு இந்தியர்கள் அனைவருக்கும் பல்வேறு காரணங்கள் உள்ளன.


சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய இராணுவத்தின் கடைசி ஆங்கிலேய தளபதியான ஜெனரல் கிளாட் ஆச்சின்லெக் (Claude Auchinleck), சீக்கியர்கள் ஒரு தனி ஆட்சியை உருவாக்க முயற்சி செய்யலாம் என்று கூறினார். இது ஒரு பொதுவான பரவலாக்கத்திற்கு வழிவகுக்கும் என்று அவர் நம்பினார். ஐரோப்பா ஒரு இத்தாலியனிலிருந்து வேறுபட்டது போல, பஞ்சாபி ஒரு மதராசியிலிருந்து வேறுபட்டது. ஆங்கிலேயர்கள் இந்த குழுக்களை ஒருங்கிணைக்க முயன்றனர். ஆனால், அவர்களின் முயற்சி வெற்றிபெறவில்லை. பல்வேறு நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு கண்டத்திலிருந்து நீங்கள் ஒரு தேசத்தை உருவாக்க முடியாது என்று கூறினார். 


அரசியலமைப்பு இலட்சியத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு தேசத்தின் தேசிய அடையாளத்தை உருவாக்குவதில் பலரை நாம் தவறென நிரூபித்தோம், ஆனால் அரசியலமைப்பை சமூக மனசாட்சியையும் அரசியல் உணர்வையும் வலுப்படுத்தும் கருவியாகவும் மாற்றியுள்ளோம்.

சி.ராஜ்குமார் ஓ.பி.ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்




Original article:

Share: