அரசியலமைப்பின் வடிவமைப்பாளர்கள் நீண்ட விவாதத்திற்குப் பிறகு இந்த வார்த்தைகளை முன்னுரையில் சேர்க்க வேண்டாம் என்று முடிவு செய்ததாக கூறி வாதிட்டனர்.
1976-ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில் "சமதர்மம்" (socialist) மற்றும் "மதச்சார்பற்ற "(secular) சேர்க்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்து உச்சநீதிமன்றம் திங்களன்று தனது நிலைப்பாட்டை தெரிவித்தது. இந்த சொற்கள் மேற்கத்திய விளக்கங்களிலிருந்து வேறுபட்டவை என்றாலும், இந்திய சூழலில் ஒரு குறிப்பிட்ட பொருளைக் கொண்டுள்ளன என்று நீதிமன்றம் தெளிவுப்படுத்தியது.
அரசியலமைப்பில் உள்ள 'சமத்துவம்' (‘equality’) மற்றும் 'சகோதரத்துவம்' (‘fraternity’) போன்ற சொற்களை நீங்கள் ஆராயும்போது, முகவுரையில் அவற்றின் அர்த்தங்கள் தெளிவாகின்றன. மதச்சார்பின்மை (secularism) என்பது நமது அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதி என்றும் இந்த நீதிமன்றம் கூறியுள்ளது என்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது.
இந்திய ஜனநாயகம் இந்த கருத்துக்களை ஒரு நெகிழ்வான வழியில் விளக்கி சமநிலைப்படுத்தியுள்ளது என்று அமர்வு கூறியது. இந்தியாவில் மதச்சார்பின்மை மத நடுநிலைமைக்கு அப்பாற்பட்டது என்றும், மேலும், அது சட்ட கட்டமைப்பிற்குள் ஆழமான அர்த்தத்தைப் பெறுகிறது என்றும் குறிப்பிட்டது.
வழக்கறிஞர்கள் விஷ்ணு சங்கர் ஜெயின் மற்றும் அஸ்வினி உபாத்யாய் தலைமையிலான மனுக்கள், அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் இந்த சொற்களை முன்னுரையில் சேர்க்க வேண்டாம் என்று தேர்வு செய்தனர் என்று வாதிட்டனர். அரசியலமைப்பின் வரைவின் போது நடந்த விவாதங்கள் இந்த வார்த்தைகளை உள்ளடக்குவதற்கான முன்மொழிவுகளை நிராகரித்துள்ளன. இது வடிவமைப்பாளர்களின் தெளிவான முடிவைக் காட்டுகிறது என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஆனால், இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது மதச்சார்பின்மை (secularism) என்ற கருத்து இன்றைய காலத்துடன் ஒப்பிடும்போது வேறுபட்டது என்று நீதிபதி கன்னா கூறினார். மதச்சார்பின்மை குறித்த இந்தியாவின் புரிதல்கள் மற்றும் முக்கியமான தீர்ப்புகள் மதச்சார்பின்மையை அடிப்படை கட்டமைப்புக் கோட்பாட்டின் முக்கிய பகுதியாக அடையாளம் கண்டுள்ளன என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் மத விதிகளை ரத்து செய்வதன் மூலம் இந்திய அரசியலமைப்பு நீதிமன்றங்கள் மதச்சார்பின்மைக்கு குறிப்பிடத்தக்க அர்த்தத்தை அளித்துள்ளன என்று அமர்வில் தெரிவிக்கப்பட்டது. இந்த விதிமுறைகளை விளக்குவதிலும் சமநிலைப்படுத்துவதிலும் நீதிமன்றங்கள் நெகிழ்வுத்தன்மையுடன் உள்ளன என்றும் அமர்வு குறிப்பிட்டது.
"சமதர்மம்" (socialist) பிரச்சினையில், 1990-ஆம் ஆண்டுகளில் இந்தியா தனது பொருளாதாரத்தை தாராளமயமாக்கிய பிறகு, சமதர்மம் சமத்துவ வாய்ப்பு மற்றும் நியாயமான வள விநியோகம் பற்றியதாக மாறியது என்று அமர்வு விளக்கியது. இந்திய சமதர்மத்தை மேற்கத்தைய சோசலிசத்துடன் ஒப்பிடுவதற்கு எதிராக அது எச்சரித்தது. இந்தியா எப்பொழுதும் சமதர்மத்தை மிகவும் நெகிழ்வுத்தன்மையுடன் அணுகியுள்ளது என்று வலியுறுத்தியது.
"நமது பொருளாதாரக் கொள்கை 1990-ஆம் ஆண்டு முதல் தாராளமயமானது. நாட்டுக்கு தீங்கு விளைவித்ததா? இல்லை! "சமதர்மம்" ( socialist) என்பது சம வாய்ப்புகள் மற்றும் நியாயமான செல்வப் பகிர்வு என்றும் பொருள்படும். சமதர்மம் என்பதற்கு மேற்கத்திய அர்த்தத்தை நாம் பயன்படுத்தக்கூடாது என்று அமர்வு குறிப்பிட்டது.
இந்த வழக்கின் மனுதாரரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி, அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்ட நவம்பர் 26, 1949-ஆம் ஆண்டு தேதியிலிருந்து 1976-ஆம் ஆண்டில் முன்னுரையை திருத்தியிருக்க முடியாது என்று வேறு கோணத்தில் வாதிட்டார். இந்த நிர்ணயிக்கப்பட்ட தேதியானது "சமதர்மம்" (socialist) மற்றும் மதச்சார்பின்மை (secularism) போன்றவற்றை சேர்ப்பது போன்ற பிற்கால திருத்தங்களை அரசியலமைப்பு ரீதியாக செல்லாது என்று அவர் வாதிட்டார்.
சுவாமியின் வாதத்தை ஏற்க மறுத்த அமர்வு, திருத்தங்கள் அரசியலமைப்பு பரிணாமத்தின் ஒரு பகுதியாகும் என்று கூறியது. "அந்த நேரத்தில் செய்யப்பட்ட ஒரே திருத்தம் இதுவல்ல," என்றும் அமர்வு குறிப்பிட்டது. மாறிவரும் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசியலமைப்பில் பல திருத்தங்கள் உள்ளன.
இந்த தெளிவுபடுத்தல்கள் இருந்தபோதிலும், இந்திய முகப்புரையின் தனித்தன்மையை நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. இவை நவம்பர் 26, 1949 என்ற குறிப்பிட்ட தேதியைச் சேர்த்தது என்றும், பின்னர் மனுதாரர்களுக்கான குறிப்பிட்ட அறிவுறுத்தல்களுடன், மேலும் விரிவான விசாரணைக்காக வழக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்க அமர்வு ஒப்புக்கொண்டது. முன்னுரை ஏற்றுக்கொள்ளப்பட்ட தேதியை மாற்றாமல் இந்த சிக்கலைத் தீர்க்க முடியுமா? என்பது குறித்தும் மனுதாரர்களிடம் விளக்கம் கேட்டனர்.
42 வது அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்த்து சுவாமி மற்றும் சமூக சேவகர் பல்ராம் சிங் உள்ளிட்ட 2020-ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கியது. 1976-ஆம் ஆண்டில் இந்திரா காந்தியின் ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்ட இந்த திருத்தம், முகவுரையில் "சமதர்மம்" (socialist) மற்றும் மதச்சார்பின்மை (secularism) என்ற சொற்களைச் சேர்த்தது.
திருத்தத்திற்கு முன்பு, முன்னுரை இந்தியாவை ஒரு "இறையாண்மை ஜனநாயக குடியரசு" (“sovereign democratic republic”) என்று விவரித்தது. மாற்றத்திற்குப் பிறகு, அது "இறையாண்மை சமதர்ம மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு" (“sovereign socialist secular democratic republic”) என்று குறிப்பிடப்பட்டது.
இந்த மாற்றம் அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் அசல் நோக்கங்களுடன் முரண்படுவதாகவும், அவர்கள் வேண்டுமென்றே இந்த விதிமுறைகளை நிராகரித்ததாகவும் மனுதாரர்கள் கூறினர்.
அரசியலமைப்பு சபை விவாதங்களின் போது, "சமதர்மம்" (socialist) மற்றும் மதச்சார்பின்மை (secularism) என்ற சொற்கள் பல முறை முன்மொழியப்பட்டன. நவம்பர் 15, 1948 அன்று, பேராசிரியர் கே.டி.ஷா முன்னுரையில் "சமதர்மம்" (socialist) மற்றும் மதச்சார்பின்மை (secularism) ஆகியவற்றைச் சேர்க்க பரிந்துரைத்தார். ஆனால், சட்டமன்றம் அதை நிராகரித்தது.
பின்னர் பிரிவு 18-ல் "மதச்சார்பற்ற" சேர்க்கும் முயற்சிகளும் நிராகரிக்கப்பட்டன. இந்த நிராகரிப்புகள் அரசியலமைப்பின் மையத்தில் இந்த கருத்துக்களை சேர்க்க வேண்டாம் என்ற வடிவமைப்பாளர்களின் தெளிவான முடிவைக் காட்டுகின்றன என்று மனுதாரர்கள் வாதிட்டனர்.
வழக்கறிஞர் உபாத்யாய் மற்றும் பிற மனுதாரர்கள், 1976-ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்தம் இந்த வார்த்தைகளை சேர்த்தது அரசியலமைப்பின் உண்மையான பார்வையை மீறுவதாகக் கூறினர். குறிப்பாக, மத சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் பிரிவு 25 கருத்தில் கொண்டு. முகவுரையில் கூறப்பட்டுள்ளபடி, இந்தியாவில் மதச்சார்பின்மை என்பது மத நடுநிலை என்று தவறாக விளக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் வாதிட்டனர்.
அதற்கு பதிலாக, இந்தியாவில் மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் சமமாக மதிக்க வேண்டிய நேர்மறையான கடமை அரசுக்கு உள்ளது என்பதாகும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் 1989-ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தையும் மனுதாரர்கள் முறையீடு செய்தனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கு அரசியல் கட்சிகள் "சமதர்மம்" (socialist) மற்றும் மதச்சார்பின்மை (secularism) உறுதியளிக்க வேண்டும் என்று இந்த திருத்தம் கூறுகிறது. இது அரசியல் கட்சிகளை அவர்களின் மதிப்புகளை பிரதிபலிக்காத சித்தாந்தங்களை ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்துகிறது. இது அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a))-ன் கீழ் அவர்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை மீறுகிறது என்று அவர்கள் வாதிட்டனர்.