இந்தியாவில் ஒரு இயற்கை மறுசீரமைப்பு சட்டத்தை அமல்படுத்துவது பற்றி… -துஹின் ஏ. சின்ஹா, கவிராஜ் சிங்

 அண்மையில், ஐரோப்பிய ஒன்றியத்தால் இயற்றப்பட்ட சட்டம் பின்பற்றப்பட வேண்டிய ஒரு முன்மாதிரியாகும். 


இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளின் சீரழிவு ஒரு அவசர உலகளாவிய பிரச்சினையாகும். மேலும், இந்தியா இதன் பரந்த புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் பன்முகத்தன்மையுடன், இந்த சிக்கலையும் எதிர்கொள்கிறது. அதன் மொத்த புவியியல் பரப்பளவில் கிட்டத்தட்ட 30% நில சீரழிவைக் கொண்டிருப்பதால், இந்தியா ஒரு விரிவான இயற்கை மறுசீரமைப்பு சட்டத்தை (nature restoration law) ஏற்றுக்கொள்ள வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தால் இயற்றப்பட்ட இயற்கை மறுசீரமைப்பு சட்டம் (Nature Restoration Law (NRL)), இந்தியா தனது வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் நெருக்கடிகளைக் குறைக்க செயல்படுத்தப்படும் ஒரு எழுச்சியூட்டும் மாதிரியாகும். 


ஜூன் 17, 2024 அன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றுச்சூழல் அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இயற்கை மறுசீரமைப்பு சட்டம் (NRL), ஐரோப்பாவின் சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு சிறப்பான சட்டமாகும். 


ஐரோப்பிய ஒன்றிய மக்கள்தொகையில் 66.07%-ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளால் இந்த ஒழுங்குமுறை அங்கீகரிக்கப்பட்டது. இது, உலகளாவிய சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது. 2030-ம் ஆண்டிற்குள் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலம் மற்றும் கடல் பகுதிகளில் குறைந்தது 20% மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று சட்டம் கோருகிறது. இது, 2050-ம் ஆண்டுக்குள் மறுசீரமைப்பு தேவைப்படும் அனைத்து சுற்றுச்சூழல் அமைப்புகளையும் முழுமையாக மீட்டெடுப்பதே இதன் முக்கிய குறிக்கோளாகும்.


இயற்கை மறுசீரமைப்பு சட்டம் (NRL) என்பது 2030-ம் ஆண்டிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்லுயிர்க்கான உத்தி மற்றும் ஐரோப்பிய பசுமை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். ஐரோப்பாவின் 80% வாழ்விடங்கள் மோசமான நிலையில் இருப்பதால், பல்லுயிர்க்கான ஆபத்தான இழப்பின் போக்கை மாற்றியமைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. காடுகள், விவசாய நிலங்கள், ஆறுகள் மற்றும் நகர்ப்புற இடங்கள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளில் இயற்கை மறுசீரமைப்பு சட்டம் (NRL) கவனம் செலுத்துகிறது. 25,000 கிலோமீட்டர் ஆறுகளை மீட்டெடுப்பது போன்ற குறிப்பிட்ட நடவடிக்கைகளை செயல்படுத்துகிறது. கூடுதலாக, 2030-ம் ஆண்டுக்குள் மேலும் மூன்று பில்லியன் மரங்களை நடவும் திட்டமிட்டுள்ளது.


இந்தியாவுக்கான சுற்றுச்சூழல், பொருளாதாரம் தொடர்பானவை 


இந்தியா கடுமையான சுற்றுச்சூழல் தொடர்பான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (Indian Space Research Organisation (ISRO)) நிலச் சீரழிவு குறித்த அறிக்கையை வெளியிட்டது. இது, 2018-19 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 97.85 மில்லியன் ஹெக்டேர் அல்லது இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 29.7% பாதிப்பை சந்தித்துள்ளது என்பதை ஆய்வு காட்டுகிறது. 


இந்த ஒப்பீடு, 2003-05 ஆம் ஆண்டில் 94.53 மில்லியன் ஹெக்டேரில் இருந்து கடிமையான அதிகரிப்பாக உள்ளதால், பாலைவனமாக்கலாக மாறி வருவதை  இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. 2018-19 ஆம் ஆண்டில், இது 83.69 மில்லியன் ஹெக்டேர்களை பாதித்துள்ளது. இது, முக்கிய மாநிலமான குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் போன்றவற்றில் நிலப் பாதிப்பு என்பது  பொதுவானது என்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இமொத்தத்தில், இந்தியாவின் பாலைவனமான நிலப்பரப்பில் இதன் பங்கு 23.79% ஆகும்.


இந்தப் பிரச்சினைகளைச் சமாளிப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. பசுமை இந்தியா திட்டம் (Green India Mission), பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா (Pradhan Mantri Krishi Sinchayee Yojana), ஒருங்கிணைந்த நீர்நிலை மேலாண்மை திட்டம் (Integrated Watershed Management Programme), இது உலகின் இரண்டாவது பெரிய நீர்நிலை திட்டமாகும் மற்றும் தேசிய காடு வளர்ப்பு திட்டம் (National Afforestation Programme) உட்பட பல முயற்சிகளை இது வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. 


இருப்பினும், பாதிப்புகளின் அளவிற்கு ஏற்றாற்போல் ஒரு பரந்த உத்தி தேவைப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் NRL போன்ற இயற்கை மறுசீரமைப்புச் சட்டம் (Nature Restoration Law (NRL)) இந்தியாவுக்குத் தேவை. இது சுற்றுச்சூழல் அமைப்பு மறுசீரமைப்புக்கான சட்டப்பூர்வ இலக்குகளை அமைக்கிறது. இந்தச் சட்டம் பாதிப்படைந்த நிலப்பரப்புகளை மீட்டெடுப்பதை கட்டாயமாக்கும் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்கிறது.


இந்தியாவில் ஒரு சட்டம் எப்படி அமைக்க முடியும்? 


ஐரோப்பிய ஒன்றியத்தின் மாதிரியால் ஈர்க்கப்பட்ட இந்தியாவில் ஒரு இயற்கை மறுசீரமைப்பு சட்டம், பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கலாம். 


முதலில், மறுசீரமைப்புக்கான இலக்குகள் (restoration targets) உள்ளன. இந்தியா 2030-ம் ஆண்டுக்குள் 20% தரம் குறைந்த நிலத்தை மீட்டெடுப்பதை இலக்காகக் கொள்ள வேண்டும். மேலும், 2050-ம் ஆண்டிற்குள் அனைத்து சுற்றுச்சூழல் அமைப்புகளையும் மீட்டெடுப்பது நீண்ட கால இலக்கான திட்டமாகும். இதில் காடுகள், ஈரநிலங்கள், ஆறுகள், விவசாய நிலங்கள் மற்றும் நகர்ப்புற பசுமையான இடங்கள் ஆகியவை அடங்கும்.


இரண்டாவதாக, ஈரநில மறுசீரமைப்பு (wetland restoration) உள்ளது. இந்தியாவில் மக்கும் நிலங்கள் (peatlands) குறைவாகவே காணப்பட்டாலும், சுந்தரவனக் காடுகள் மற்றும் சிலிகா ஏரி போன்ற முக்கியமான ஈரநிலங்கள் பல்லுயிர் மற்றும் கார்பன் வரிசைப்படுத்தலுக்கு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. ஒரு புதிய சட்டம் 2030க்குள் 30% சிதைந்த ஈரநிலங்களை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


மூன்றாவதாக, விவசாயத்தில் பல்லுயிர் பெருக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். விவசாயம் இந்தியாவின் நிலத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கியது. வேளாண் காடுகள் மற்றும் நிலையான நடைமுறைகளை ஊக்குவிப்பது விவசாய நிலங்களை மீட்டெடுக்க உதவும். எங்களின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்தப்படும் பட்டாம்பூச்சி குறியீடு அல்லது பறவைக் குறியீடு போன்ற குறிபீடுகள் முன்னேற்றத்தைக் கண்காணிக்க உதவும்.


நான்காவது, ஆறுகளின் மறுசீரமைப்பு (river restoration) ஆகும். சுதந்திரமாக ஓடும் ஆறுகளை மீட்டெடுப்பதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். இந்த முயற்சியால் கங்கை, யமுனை போன்ற முக்கிய ஆறுகளில் தொடங்கி, மாசுபாட்டை நிவர்த்தி செய்வதிலும், தடைகளை அகற்றுவதிலும் கவனம் செலுத்தப்படும்.


ஐந்தாவது, நகர்ப்புற பசுமையான இடங்கள் (urban green spaces) ஆகும். நகர்ப்புறங்களின் பாதிப்பை எதிர்த்துப் போராட, பசுமையான இடங்களின் வனங்களின் நிகரளவில் இழப்பு இல்லை என்பதை இந்தியா உறுதி செய்ய வேண்டும். பெங்களூரு, டெல்லி போன்ற நகரங்களில் நகர்ப்புறங்களில் உள்ள  வனங்களை ஊக்குவிக்க வேண்டும். ஏனெனில், இந்த நகரங்கள் வெப்ப தீவுகள் மற்றும் காற்றின் தரம் குறைதல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன.


மறுசீரமைப்பின் பொருளாதார மற்றும் சமூக நன்மைகள் 


இத்தகைய சட்டத்தின் நன்மைகள் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பதற்கு அப்பாற்பட்டவை ஆகும். 2030ஆம் ஆண்டுக்குள் இயற்கை மறுசீரமைப்பு உலகளவில் 10 டிரில்லியன் டாலர் வரை பொருளாதார வருவாயை ஈட்டக்கூடும் என்று உலகப் பொருளாதார மன்றம் கூறுகிறது. இந்தியாவில், பாதிப்படைந்த நிலங்களை மீட்டெடுப்பது விவசாய உற்பத்தியை மேலும் அதிகரிக்கும். 


இது நீர் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, குறிப்பாக கிராமப்புறங்களில் மில்லியன் கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியா தனது நிலையான வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals (SDGs)) மேம்படுத்த இந்த சட்டம் உதவும். குறிப்பாக, இது இலக்கு 15-ஐக் குறிக்கிறது. இந்த இலக்கு காடுகளின் நிலையான மேலாண்மையில் கவனம் செலுத்துகிறது. மேலும், இது பாலைவனமாக்குதலை எதிர்த்துப் போராடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


சுற்றுச்சூழல் அமைப்புகளை மறுசீரமைப்பது காலநிலை மாற்றத்திற்கான விளைவுகளை குறைக்க உதவும். இந்த காலநிலை மாற்றம் நிலத்தின் மீதான பாதிப்பை மோசமாக்குகிறது. நிலம் பாதிப்படைவதால், கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் திறனை இழக்கிறது. இந்த இழப்பு புவி வெப்பமடைதலுக்கு பங்களிக்கிறது. சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதன் மூலம், இந்தியா தனது கார்பன் குளங்களை (carbon sinks) மேம்படுத்த முடியும். இது பாரீஸ் ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா தனது கடமைகளை நிறைவேற்ற உதவும்.


ஐரோப்பிய ஒன்றியத்தின் இயற்கை மறுசீரமைப்புச் சட்டம் உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டு ஆகும். இதில், நிலச் சீரழிவு மற்றும் பல்லுயிர் இழப்பு போன்ற கடுமையான பிரச்சினைகளை இந்தியா எதிர்கொள்கிறது. இந்தியாவில் இதேபோன்ற சட்டத்தை அமல்படுத்துவது, பாதிப்படைந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்க உதவும். 


இது சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கும், பருவநிலையை எதிர்க்கும் தன்மையை மேம்படுத்துவதற்கும் துணைபுரியும். காலநிலை தொடர்பான அவசரம் தெளிவாக உள்ளது. ஆனால், இதற்கான நடவடிக்கை இப்போது தேவை.


செய்தி தொடர்பாளராக துஹின் ஏ.சின்ஹா ​​உள்ளார். கவிராஜ் சிங் எர்த்வுட் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆவார்.




Original article:

Share: