முன்பதிவு காலத்தை குறைக்கும் இந்திய இரயில்வேயின் முடிவு குறித்து... -மைத்ரி போரேச்சா

 இதற்கு முன்பு, முன்பதிவு காலத்தை இரயில்வே குறைத்துள்ளதா? நீண்டகால முன்பதிவு காத்திருப்பு எவ்வாறு மோசடிகளுக்கு வழிவகுக்கின்றன? இந்த விதிகள் வெளிநாட்டு பயணிகளுக்கும் பொருந்துமா?


பயணிகள் நீண்ட தூரப் பயணங்களுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே இரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி இருந்தது. இருப்பினும், இந்த விதியானது மாறிவிட்டது. இப்போது, ​​இரண்டு மாதங்களுக்கு முன்பே இரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பதை, இரயில்வே வாரியம் இந்த மாத தொடக்கத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்கூட்டிய முன்பதிவுக் காலம் (Advance Reservation Period (ARP)) எப்போது நடைமுறைக்கு வரும்? 


புதிய முன்கூட்டிய முன்பதிவு காலம் (Advance Reservation Period (ARP)) விதிகள் நவம்பர் 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் என்றும், பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 60 நாட்களுக்கு முன்பே (உண்மையான பயண நாளைத் தவிர) திறக்கப்படும் என்றும் சுற்றறிக்கை கூறுகிறது. இருப்பினும், ஒரு பயணி அக்டோபர் 31-ம் தேதிக்கு முன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தால், அந்த முன்பதிவுகள் செல்லுபடியாகும். இது முந்தைய 120 நாள் கால விதிக்கு பொருந்தும். பயணிகள் எப்போது வேண்டுமானாலும் இந்த டிக்கெட்டுகளை ரத்து செய்து கொள்ளலாம்.


முன்பதிவு காலத்தை 60 நாட்களாகக் குறைப்பதன் மூலம், 2008 மே 1 முதல் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் 16 ஆண்டு கால கொள்கையை இரயில்வே வாரியம் மாற்றியுள்ளது. இதற்கு முன்பு, 1995 முதல் 2007-ம் ஆண்டு வரை, முன்பதிவுக்கான அவகாசம் 60 நாட்களுக்கு குறைக்கப்பட்டது. சுவாரஸ்யமாக, 1988 முதல் 1993-க்கு இடையில், இரயில்வே டிக்கெட்டுக்கான முன்பதிவு அவகாசம் 45 நாட்களுக்குள் குறைக்கும் முயற்சியை மேற்கொண்டது. இதற்கு முன், 1981 முதல் 1985-ம் ஆண்டு வரை, இரயில்வே 90 நாள் அவகாசமாக முன்கூட்டிய முன்பதிவு காலத்தை (ARP) திறந்து வைத்தது.


ஏன் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டது? 


பொதுவாக, பயணிகள் தங்கள் பயணங்களைத் திட்டமிடுவதற்கு 120 நாட்கள் என்பது மிக நீண்ட காலம் என்றும், இது அதிக அளவு டிக்கெட்டுகளை ரத்து செய்ய வழிவகுத்தது என்றும் இரயில்வே அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போது, ​​டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளில் 21% நபர்கள் வரை டிக்கெட்டை ரத்து செய்கிறார்கள்." இருக்கைகள் / படுக்கைகளை முன்பதிவு மூலம் ஒதுக்கும்போது, பயணிகள் குறித்த நேரத்தில் பயணங்களுக்கு வராததால் இருக்கைகள் / படுக்கைகள் வீணாவதையும், அதே நேரத்தில் டிக்கெட்டுகளை ரத்து செய்யவதை பயணிகள் கவலைப்படாததையும் அதிகாரிகள் குறிப்பிடிருந்தனர். 4% முதல் 5% பயணிகள் முன்பதிவு செய்து குறித்த நேரத்தில் வருவதில்லை என்றும், இது ஒரு தொடர்ச்சியான நிகழ்வாகக் கருதப்படுகிறது என்று அதிகாரி மேலும் கூறினார். "இரயில்வே வாரியம் மேற்கொண்ட மற்றொரு போக்கு என்னவென்றால், 88% முதல் 90% வரை இரயில் முன்பதிவுகள் 60 நாட்களாக குறைத்துள்ளது சரியான போக்காக கருதப்பட்டது" என்று மற்றொரு மூத்த அதிகாரி தி இந்துவிடம் தெரிவித்திருந்தார். 


நீண்ட முன்பதிவு காத்திருப்பு மோசடிகளை அதிகரிக்குமா? 


புதிய முன்கூட்டிய முன்பதிவு காலத்தை (Advance Reservation Period (ARP)) குறைக்க அதிகாரிகள் கூறிய காரணம் என்னவென்றால், பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை ரத்து செய்யாமலும், பயணத்திற்கு வராமலும் இருந்தால், அது மோசடிக்கான வாய்ப்பை உருவாக்குகிறது. ஆள்மாறாட்டம் மற்றும் ரயில்வே அதிகாரிகள் காலிப் படுக்கைகளை ஒதுக்க சட்டவிரோதமாக பணம் பெறுவது போன்ற சிக்கல்களை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். முன்பதிவு மூலம், ஒதுக்கீடு செய்யப்படும்  இருக்கைகள் நீண்ட காலத்தை குறைப்பதன் மூலம் இதைத் தடுக்க முடியும்" என்று அந்த அதிகாரி கூறினார். 


விபத்துகளைத் தடுக்க இரயில்வே வாரியம் என்ன செய்ய வேண்டும்?  


இரண்டாவதாக, இரயில்வே நெட்வொர்க்கில் செயல்படும் தரகர்களைக் (touts) கட்டுப்படுத்துவதில் பெரும் சவால் உள்ளது. "முன்பதிவு காலம் நீண்டதாக இருக்கும்போது, தரகர்கள் கணிசமான அளவு டிக்கெட்டுகளைத் தடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிய முன்கூட்டிய முன்பதிவு காலத்தை (ARP)  குறைப்பது உண்மையான பயண நேரத்தில் பயணிகள் அதிக டிக்கெட்டுகளை வாங்குவதை ஊக்குவிக்கும்" என்று அந்த அதிகாரி மேலும் கூறினார். 


இதேபோல், முன்கூட்டிய முன்பதிவு காலத்தை (ARP) குறைப்பது அல்லது அதிகரிப்பது என்ற முடிவு ஆலோசிக்கப்பட்டு வருவதாக இரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். "ARP-க்கான காத்திருப்பு நேரத்தை எவ்வாறு சரிசெய்வது என்று விவாதிக்கும் இரண்டு எதிரெதிர் முகாம்கள் உள்ளன. அமைச்சகத்தில் ஒரு முன்பதிவு செய்வதற்கான இரயில்வே முகாம் உள்ளது. இது, ஆண்டு முழுவதும் முன்கூட்டியே முன்பதிவு செய்வதை உறுதிபடுத்துகிறது. மேலும், பயணிகள் 365 நாட்களில் ஆண்டு முழுவதும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும், ரத்து செய்யவும் அனுமதிக்கப்பட வேண்டும். ஆண்டு முழுவதும் முன்பதிவு செய்வதன் மூலம் இரயில்வேக்கு முன்கூட்டியே வருமானம் கிடைக்கும் என்று இந்த முகாம் நம்புகிறது. தற்போது, ​​இந்த விருப்பம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே கிடைக்கிறது. அவர்கள், இந்தியாவில் தங்கள் இரயில் பயணத்தைத் திட்டமிட குறிப்பிட்ட ஒதுக்கீட்டைக் பெற்றுள்ளனர் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.


ஏஆர்பி-யின் விதியிலிருந்து எந்த பயணிகளின் குழுக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது? 


வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் பொது வகுப்பு டிக்கெட்டுகள் (General class tickets) பாதிக்கப்படாது என மத்திய இரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த டிக்கெட்டுகள் பொதுவாக இவர்களின் பயணத்திற்கு முன்பே வாங்கப்படும் என்பதால் இது சாத்தியம். தாஜ் எக்ஸ்பிரஸ் மற்றும் கோமதி எக்ஸ்பிரஸ் போன்ற சில ரயில்களுக்கு இந்த அமர்ந்து பயணிக்கும் ரயில்களில் பயணிக்க விரும்பும் பயணிகள் உடனடியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது தெரிய வந்தது என்றும் அது கூறியுள்ளது. "இந்த ரயில்களில் பயணிக்க விரும்பும் பயணிகள் உடனடியாக ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதால் அவர்களுக்கு ஏஆர்பி விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது" என்று முதல் அதிகாரி மேலும் கூறினார்.




Original article:

Share: