இந்தியாவின் ஆறுகள் மற்றும் பருவகால பருவமழைகள் இருந்தபோதிலும், நாட்டின் பெரும்பாலான உள்நாட்டு மற்றும் விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்வது நிலத்தடி நீர்தான். ஊரக பகுதிகளில் 85%க்கும் அதிகமானவை மற்றும் பாசன நீரில் 65% மேற்பரப்புக்குக் நிலத்தடி நீரிலிருந்து வருகிறது. இருப்பினும், இந்த முக்கிய வளத்தின் விரைவான மற்றும் பெரும்பாலும் கட்டுப்பாடற்ற பிரித்தெடுத்தல், அதிகரித்து வரும் கண்ணுக்குத் தெரியாத நெருக்கடியைத் நிலத்தடி நீர் மாசுபாடு அதிகரிக்க செய்துள்ளது. ஒரு காலத்தில் இயற்கையின் தூய்மையான இருப்பாகக் கருதப்பட்ட நிலத்தடி நீர், இப்போது நைட்ரேட்டுகள், கன உலோகங்கள், தொழில்துறை நச்சுகள் மற்றும் நோய்க்கிருமி நுண்ணுயிரிகளால் மாசுபட்டுள்ளது. அதனால் மில்லியன் கணக்கான மக்களுக்கு அமைதியான அச்சுறுத்தலாக உள்ளது.
மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் (Central Ground Water Board (CGWB)) 2024 வருடாந்திர நிலத்தடி நீர் தர அறிக்கை அதிர்ச்சிகரமான கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்துகிறது. 440 மாவட்டங்களில் இருந்து 20%க்கும் மேற்பட்ட மாதிரிகள் நைட்ரேட்டுகளால் மாசுபட்டிருந்தன. இதற்கு பெரும்பாலும் இரசாயன உரங்களின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் கழிவு நீர் தொட்டிகளில் இருந்து வெளி வரும் கசிவுகள் இதற்கு காரணமாகும். 9%-க்கும் மேற்பட்ட மாதிரிகளில் அதிகப்படியான ஃபுளோரைடு கண்டறியப்பட்டது. இது பரவலான பல் மற்றும் எலும்பு பிரச்சினைகளுக்கு (dental and skeletal fluorosis) வழிவகுத்தது.
குறிப்பாக, இராஜஸ்தான், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இது அதிகம் காணப்பட்டது. பஞ்சாப் மற்றும் பீகாரில், உலக சுகாதார அமைப்பு (World Health Organization (WHO)) நிர்ணயித்த பாதுகாப்பான வரம்பை விட ஆர்சனிக் அளவு மிக அதிகமாக இருந்தது. இது புற்றுநோய் மற்றும் மூளை தொடர்பான பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரித்தது. பஞ்சாப், ஆந்திரா மற்றும் இராஜஸ்தானில் உள்ள சில மாவட்டங்களிலும் அதிக யுரேனியம் அளவுகள் இருந்தன. இது ரசாயன உரங்கள் மற்றும் அதிகப்படியான நிலத்தடி நீர் பயன்பாடு காரணமாக இருக்கலாம். பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில் 13%-க்கும் அதிகமானவை இரும்பிற்கான பாதுகாப்பான வரம்புகளை மீறிவிட்டன. இது இரைப்பை குடல் (gastrointestinal) மற்றும் வளர்ச்சி கோளாறுகளுக்கு முக்கிய காரணியாக இருந்தது.
இந்த புள்ளிவிவரங்கள் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல. அவை முறையான புறக்கணிப்பு மற்றும் கொள்கை செயலற்ற தன்மையை பிரதிபலிக்கின்றன.
நிலத்தடி நீர் மரண மண்டலங்கள் (Groundwater death zones)
உத்தரப்பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் உள்ள புத்பூரில், இந்த ஆண்டு இரண்டு வாரங்களில் மட்டும் 13 பேர் சிறுநீரக செயலிழப்பு மற்றும் தொடர்புடைய பிரச்சனைகளால் இறந்தனர். அருகிலுள்ள காகிதம் மற்றும் சர்க்கரை ஆலைகளில் இருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகளால் இந்த இறப்புகள் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. இது உள்ளூர் ஆழ்துளை கிணறுகளை மாசுபடுத்தியுள்ளது. ஜலாவுனில், நிலத்தடி எரிபொருள் கசிவுகள் காரணமாக அடிகுழாய்களில் (handpumps) இருந்து பெட்ரோலியம் போன்ற திரவங்கள் வெளியேறுவதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். புவனேஸ்வரின் பைகாராபூரில், ஒரு பழுதடைந்த சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறிய கழிவுநீர் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு பல்வேறு நோய்களை ஏற்படுத்தியது.
இவை தனித்த சம்பவங்கள் அல்ல. இந்த நிகழ்வுகள் பலவீனமான செயலக்கம், நிறுவன அக்கறையின்மை (institutional apathy) மற்றும் வளர்ந்து வரும் ஒரு கடுமையான பிரச்சினையை பொதுமக்கள் கவனிக்காதது போன்ற கவலையளிக்கும் போக்கை இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.
உடல்நல பாதிப்புகள்: தரவு எதை வெளிப்படுத்துகிறது?
இந்தியாவில் நிலத்தடி நீர் மாசுபாடு தேசிய பொது சுகாதார நெருக்கடியாக அதிகரித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு (Indian Council of Medical Research (ICMR)) மற்றும் உலக சுகாதார அமைப்பு இந்தியாவின் ஆய்வுகள் குடிநீரில் உள்ள நச்சுப் பொருட்கள் காரணமாக பரவலான சுகாதார விளைவுகளை ஆவணப்படுத்தியுள்ளன.
ஃப்ளோரைடு மாசுபாடு 20 மாநிலங்களில் உள்ள 230 மாவட்டங்களை பாதிக்கிறது. ஏறக்குறைய 66 மில்லியன் மக்கள் எலும்புக்கூடு ஃப்ளோரோசிஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மூட்டு வலி, எலும்பு பிரச்சினைகள் மற்றும் குழந்தைகளின் மெதுவான வளர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு தீவிர நிலையாகும். ராஜஸ்தானில், 11,000-க்கும் மேற்பட்ட ஊரக பகுதிகளில் இந்த நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மத்தியப் பிரதேசத்தின் ஜபுவாவில், ஃப்ளோரைடு அளவு 5மி.கி/லிட்டரை விட அதிகமாக உள்ளது. இதனால், 40% பழங்குடி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் 3,000-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடு சிதைவு குறைபாடுகள் பதிவாகியுள்ளன.
தேசிய நீர் தர கணக்கெடுப்பில் கேரளத்தின் 10 மாவட்டங்களில் உள்ள கிணறுகளில் பாதி மாசுபட்டிருப்பது கண்டறியப்பட்டது. மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் 2024ஆம் ஆண்டு அறிக்கை, 15,259 நிலத்தடி நீர் மாதிரிகளில் 9.04% உலக சுகாதார அமைப்பின் 1.5 மி.கி/லி ஃப்ளோரைடு வரம்பை மீறியதாகக் கண்டறிந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள சோனேபத்ரா (உ.பி.) 52.3% பரவல் விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. மேலும், மத்தியபிரதேசத்தில் ஷிவ்புரில் அளவுகள் 2.92 மி.கி/லிட்டரை எட்டியுள்ளன. நீரிலிருந்து ஃவுளூரைடை (defluoridation) நீக்குதல், சிறந்த ஊட்டச்சத்தை வழங்குதல் மற்றும் சுத்தமான குடிநீரை வழங்குதல் ஆகியவை பயனுள்ள தீர்வுகளில் அடங்கும்.
ஹரியாணாவில் மாசுபட்ட நிலத்தடி நீருக்கு எதிராக தொட்டிகள் போரிடுகின்றன
மேற்கு வங்கம், பீகார், உத்தரபிரதேசம், ஜார்கண்ட் மற்றும் அசாம் உள்ளிட்ட கங்கை நதிப் பகுதியில் ஆர்சனிக் வெளிப்பாடு அதிகமாக உள்ளது. இது தோல் பிரச்சினைகள், திசு சேதம், சுவாசப் பிரச்சினைகள் மற்றும் பல்வேறு புற்றுநோய்களை ஏற்படுத்தும். பீகாரில் 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், இரத்தத்தில் அதிக ஆர்சனிக் உள்ள 100 பேரில் ஒருவர் தோல், சிறுநீரகம், கல்லீரல், சிறுநீர்ப்பை மற்றும் நுரையீரல் புற்றுநோய்கள் உள்ளிட்ட புற்றுநோய்க்கான அதிக ஆபத்தில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பல்லியாவில், ஆர்சனிக் செறிவுகள் 200 µg/L-ஐ எட்டின. இது உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த வரம்பை விட 20 மடங்கு அதிகமாக உள்ளது. 10,000க்கும் மேற்பட்ட புற்றுநோய் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். பீகாரின், போஜ்பூர் மற்றும் புக்ஸர் மாவட்டங்களில், இதே போன்ற தாக்கங்கள் காணப்படுகின்றன. ஆர்சனிக் நிலத்தடியில் இருந்து வருவது (geogenic) என்றாலும், நிலத்தடி நீர் அதிகமாக எடுப்பது, சுரங்கம் மற்றும் பாசனத்தால் அதன் இயக்கம் மோசமாகிறது. மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் (Central Ground Water Board (CGWB)) 2024ஆம் ஆண்டு அறிக்கை உத்தரப் பிரதேசத்தின் 29 மாவட்டங்களில் பாதுகாப்பற்ற ஆர்சனிக் அளவுகளை அடையாளம் காட்டியது. பாக்பட் பகுதி பாதுகாப்பான வரம்பை விட 40 மி.கி/லிட்டருக்கு 4,000 மடங்கு அதிகமாக பதிவு செய்துள்ளது.
நைட்ரேட் மாசுபாடு வட இந்தியாவில் பரவலாக உள்ளது மற்றும் குழந்தைகளுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. குழந்தை உணவு நைட்ரேட் கலந்த தண்ணீருடன் கலக்கப்படும்போது, அது ‘blue baby syndrome’ எனப்படும் மெத்தெமோகுளோபினீமியாவை ஏற்படலாம். 2023ஆம் ஆண்டு தேசிய சுகாதார விவரக்குறிப்பு (National Health Profile) ஐந்து ஆண்டுகளில், பஞ்சாப், ஹரியானா மற்றும் கர்நாடகாவில், கடுமையான நைட்ரேட் நச்சுத் தன்மை பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 28% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இன்று, இந்திய மாவட்டங்களில் 56% பாதுகாப்பான நைட்ரேட் அளவை விட அதிகமாக உள்ளன.
‘ blue baby syndrome‘ என்றால் என்ன?
blue baby syndrome என்பது பெரும்பாலும் குழந்தைகளைப் பாதிக்கும் ஒரு உடல்நலப் பிரச்சினையாகும். இது குழந்தைகள் அதிக மாசுப்பாடு உள்ள நைட்ரேட் தண்ணீரை குடிக்கும்போது இது நிகழ்கிறது. |
ஒரு காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புவியியல் மண்டலங்களுக்குள் மட்டுமே இருந்த யுரேனியம், அதிகப்படியான நிலத்தடி நீர் உறிஞ்சுதல் மற்றும் உர பயன்பாடு காரணமாக அடிக்கடி கண்டறியப்படுகிறது. மால்வா பகுதியில், மத்திய பஞ்சாப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் நிலத்தடி நீரில் யுரேனியம் அளவுகள் உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த வரம்பான 30 µg/L-ஐ மீறுவதைக் கண்டறிந்தது. இது நாள்பட்ட உறுப்பு சேதம் மற்றும் சிறுநீரகங்களை பாதிக்கும் நச்சுத்தன்மை (nephrotoxicity) ஆகியவற்றின் கடுமையான அபாயங்களை ஏற்படுத்துகிறது. முடிவுகள் 66% மாதிரிகள் குழந்தைகளுக்கும் 44% பெரியவர்களுக்கும் சுகாதார அபாயங்களை ஏற்படுத்துவதாகக் காட்டின.
கர்நாடகாவின் கடினமான பாறை நிலப்பரப்பில் நிலத்தடி நீர் நெருக்கடி ஆழமடைகிறது.
தொழில்துறை வெளியேற்றங்களிலிருந்து கன உலோகங்கள் ஈயம், காட்மியம், குரோமியம், பாதரசம் போன்றவை நிலத்தடி நீரில் நுழைகின்றன. இதனால் வளர்ச்சி தாமதங்கள், இரத்த சோகை, நோயெதிர்ப்பு அமைப்பு பிரச்சினைகள் மற்றும் நரம்பியல் பாதிப்பு ஏற்படுகிறது. கான்பூர் (உ.பி.) மற்றும் வாபி (குஜராத்) ஆகியவற்றில் உள்ள தொழில்துறை தொகுப்புகளுக்கு (industrial clusters) அருகிலுள்ள குழந்தைகளிடையே ஆபத்தான முறையில் அதிக இரத்த ஈய அளவுகள் இருப்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (Indian Council of Medical Research) தேசிய சுற்றுச்சூழல் சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் (National Institute for Research in Environmental Health (NIREH)) கண்டறிந்துள்ளது.
கசிவு ஏற்படும் கழிவுநீர் தொட்டிகள் மற்றும் கழிவுநீர் ஊடுருவல் ஆகியவற்றிலிருந்து காலரா, வயிற்றுப்போக்கு மற்றும் ஹெபடைடிஸ் A மற்றும் E ஆகியவை மீண்டும் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளன. புவனேஸ்வரின் பைகாராபூரில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் சமீபத்தில் கழிவுநீர் மாசுபட்ட நிலத்தடி நீரால் இணைக்கப்பட்ட நீர்வழி நோய் பரவலால் பாதிக்கப்பட்டனர்.
இந்தியா நிலத்தடி நீரை மிக ஆழமாக உறிஞ்சுகிறதா?
இந்த நெருக்கடி ஒரு பிளவுபட்ட ஒழுங்குமுறை அமைப்பில் வேரூன்றியுள்ளது. நீர் (தடுப்பு மற்றும் மாசுபாட்டுக் கட்டுப்பாடு) சட்டம், 1974 (Water (Prevention and Control of Pollution) Act) நிலத்தடி நீரை அரிதாகவே குறிக்கிறது. மத்திய நிலத்தடி நீர் வாரியத்திற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை. மேலும், மாநில மாசுபாட்டு கட்டுப்பாட்டு வாரியங்கள் (State Pollution Control Boards (SPCBs)) வளங்கள் குறைவாகவும் தொழில்நுட்ப ரீதியாக கட்டுப்படுத்தப்பட்டவையாகவும் உள்ளன. தொழிற்சாலைகள் மிகக் குறைந்த கண்காணிப்புடன் இயங்குகின்றன. மேலும், கிராமப்புற மற்றும் அருகிலுள்ள நகர்ப்புறங்களில் சுகாதார வசதிகள் இன்னும் பற்றாக்குறையாகவே உள்ளன.
முக்கிய கட்டமைப்பு சிக்கல்கள் பின்வருமாறு:
சிதறிய அமைப்பு (Institutional fragmentation):
மத்திய நிலத்தடி நீர் வாரியம், மாநில மாசுபாட்டு கட்டுப்பாட்டு வாரியங்கள் மற்றும் ஜல் ஷக்தி அமைச்சகம் போன்ற நிறுவனங்கள் தனித்தனியாக செயல்படுகின்றன. தொழிற்சாலைகள் குறைந்தபட்ச மேற்பார்வையுடன் இயங்குகின்றன. மேலும், சுகாதார உள்கட்டமைப்பு, குறிப்பாக ஊரக மற்றும் புறநகர்ப் பகுதிகளில், பற்றாக்குறையாகவே உள்ளன.
பலவீனமான சட்ட அமலாக்கம்:
நீர் சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால், அது சரியாக அமல்படுத்தப்படவில்லை. குறிப்பாக, நிலத்தடி நீர் வெளியேற்றத்திற்கு. பலவீனமான விதிகள் மற்றும் மோசமான கண்காணிப்பு மாசுபடுத்துபவர்கள் தங்கள் செயல்பாடுகளைத் தொடர அனுமதிக்கின்றன.
உண்மையான மற்றும் அணுகக்கூடிய தரவு இல்லாதது:
கண்காணிப்பு அரிதாகவே நிகழ்கிறது மற்றும் பரவலாகப் பகிரப்படுவதில்லை. முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் அல்லது பொது சுகாதார சோதனைகளுக்கான இணைப்புகள் இல்லாமல், மாசுபாடு பெரும்பாலும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்திய பின்னரே கண்டறியப்படுகிறது.
அதிகப்படியான நீர் பிரித்தெடுத்தல்:
அதிகமாக நீரை இறைப்பது நீர் மட்டத்தைக் குறைத்து மாசுக்களை அதிகரிக்கிறது, இதனால் நிலத்தடி நீர் இயற்கை நச்சுகள் மற்றும் உப்பால் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்துவது இந்தியாவின் நிலத்தை அமைதியாக மூழ்கடித்து வருகிறது.
மாற்ற வேண்டியவை
இந்தியாவின் நிலத்தடி நீர் நெருக்கடிக்கு கட்டுப்பாடு, தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் பொது பங்கேற்பை ஒருங்கிணைக்கும் ஒரு துணிச்சலான, ஒருங்கிணைந்த மற்றும் பல பரிமாண உத்தி தேவைப்படுகிறது.அவை:
ஒரு தேசிய நிலத்தடி நீர் மாசு கட்டுப்பாட்டு கட்டமைப்பு:
நிறுவனங்கள் முழுவதும் பொறுப்புகளை தெளிவாக வரையறுத்து, CGWB-ஐ ஒழுங்குமுறை அதிகாரத்துடன் அதிகாரம் அளிக்கிறது.
நவீனமயமாக்கப்பட்ட கண்காணிப்பு உள்கட்டமைப்பு:
நிகழ்நேர சென்சார்கள், ரிமோட் சென்சிங் மற்றும் திறந்த அணுகல் தளங்களைப் பயன்படுத்துதல், ஆரம்பகால கண்டறிதலுக்காக சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு (Health Management Information System (HMIS)) போன்ற சுகாதார கண்காணிப்பு அமைப்புகளுடன் நீர் தரத் தரவை ஒருங்கிணைக்க வேண்டும்.
இலக்கு வைக்கப்பட்ட தீர்வு மற்றும் சுகாதார தலையீடுகள்:
குறிப்பாக அதிக ஆபத்துள்ள பகுதிகளில் சமூக அளவிலான ஆர்சனிக் மற்றும் ஃவுளூரைடு அகற்றும் அமைப்புகளை நிறுவவும், குழாய் நீர் அணுகல் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை விரிவுபடுத்த வேண்டும்.
நகர்ப்புற மற்றும் தொழில்துறை கழிவு சீர்திருத்தங்கள்:
பூஜ்ஜிய திரவ வெளியேற்றத்தை (Zero Liquid Discharge (ZLD)) கட்டாயமாக்குதல், குப்பைக் கிடங்குகளை கண்டிப்பாக ஒழுங்குபடுத்துதல் மற்றும் சட்டவிரோத வெளியேற்றங்களுக்கு அபராதங்களை அமல்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வேளாண் வேதியியல் சீர்திருத்தம்:
கரிம விவசாயத்தை ஊக்குவித்தல், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாட்டை ஒழுங்குபடுத்துதல் மற்றும் சமநிலையான ஊட்டச்சத்து மேலாண்மையை ஊக்குவிக்க வேண்டும்.
குடிமக்களை மையமாகக் கொண்ட நிலத்தடி நீர் நிர்வாகம்:
பாதுகாப்பான நீர் நடைமுறைகளை சோதித்தல், கண்காணித்தல் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவற்றில் பஞ்சாயத்துகள், நீர் பயனர் குழுக்கள் மற்றும் பள்ளிகளின் ஈடுபாட்டை அதிகரிக்க வேண்டும்.
வேதியியல் ரீதியாக மாசுபட்ட இடங்களை நிவர்த்தி செய்வதற்கான நடைமுறை சட்டப்பூர்வமானது
இந்தியாவின் நிலத்தடி நீர் நெருக்கடி இப்போது அளவை விட பாதுகாப்பைப் பற்றியது. தினமும் 600 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதை நம்பியுள்ளனர். இது ஒரு சுற்றுச்சூழல் பிரச்சினையாக மட்டுமல்லாமல், பொது சுகாதார அவசரநிலையாகவும் மாறுகிறது. நாடு 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற இலக்கு வைத்தாலும், மில்லியன் கணக்கானவர்களுக்கு இன்னும் சுத்தமான தண்ணீர் இல்லை.
நிலத்தடி நீர் மாசுபாடு (Groundwater pollution) மெதுவான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. இது கண்ணுக்குத் தெரியாதது மற்றும் பரவக்கூடியது. இருப்பினும், அது அது ஏற்படுத்தும் சேதம் எப்பொழுதும் சரிசெய்ய முடியாததாக இருக்கும். நாம் விரைவாக ஒன்றிணைந்து செயல்படவில்லை என்றால், சுத்தமான தண்ணீரின் முக்கியத்துவத்தை அது இல்லாமல் போன பிறகுதான் நாம் உணர முடியும். அதற்கான விலை பணமாக இருக்காது. மாறாக, உயிர்கள் மற்றும் இழந்த எதிர்காலங்களாக இருக்கும்.
டாக்டர் சுதீர் குமார் சுக்லா ஒரு சுற்றுச்சூழல் விஞ்ஞானி மற்றும் நிலைத்தன்மை நிபுணர் (sustainability expert). தற்போது அவர் புது தில்லியில் உள்ள மோபியஸ் அறக்கட்டளையில் தலைமை சிந்தனையாளராகப் பணியாற்றுகிறார்.
Original article: