நிலைமை நிச்சயமற்றதாக இருப்பதால், வட்டி விகிதங்களைக் குறைப்பதை நிறுத்த இந்திய ரிசர்வ் வங்கி ஒரு நல்ல முடிவை எடுத்தது.
ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை குழு (Monetary Policy Committee), புதன்கிழமை அறிவித்தபடி, வட்டி விகிதக் குறைப்பை நிறுத்தியது சரியான முடிவாகும். கட்டணங்களைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகள் இன்னும் உருவாகி வருவதாகவும், பிப்ரவரி 2025 முதல் செயல்படுத்தப்பட்ட 100 அடிப்படைப் புள்ளிகள் விகிதக் குறைப்புக்கள் இன்னும் அமைப்பு முழுவதும் ஊடுருவி வருவதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா சரியாகச் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போதுள்ள 25% பரஸ்பர வரிகளுக்கு மேலாக கூடுதலாக 25% வரியை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளிப்பதற்கு முன்பு மல்ஹோத்ராவின் அறிக்கை வெளியிடப்பட்டது. இருப்பினும், இந்த விவாகரம் இன்னும் முடிவடையவில்லை என்ற அவரது மதிப்பீடு மிகவும் துல்லியமானது.
இந்தியா இன்னும் அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தையை நடத்தி கொண்டிருக்கிறது. மேலும், இறுதி வரிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதற்கிடையில், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கான "அபராதங்கள்" (penalties) போன்ற கூடுதல் வரிகள் மற்ற நாடுகளுக்கும் விதிக்கப்படலாம் என்று டிரம்ப் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளார்.
இது இந்தியாவின் ஒப்பீட்டு நன்மையை பாதிக்கும். இந்தியாவின் பொருளாதார நன்மையைப் பராமரிக்க, வட்டி விகிதக் குறைப்புகளை இடைநிறுத்த இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. கடந்த ஆறு மாதங்களில் முந்தைய 1% வட்டி விகிதக் குறைப்புகள் பயனுள்ளதா என்பதை மதிப்பிடுவதற்கு இந்த இடைநிறுத்தம் ரிசர்வ் வங்கியை அனுமதிக்கிறது. மேலும், இந்த குறைந்த விகிதங்களை கடன் வாங்குபவர்களுக்கு வழங்க வங்கிகளுக்கு நேரம் அளிக்கிறது. வங்கிகளில் போதுமான பணம் இருப்பதால், வங்கிகள் கடன்களை வழங்க முடியும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறினார்.
இருப்பினும், கேள்வி என்னவென்றால், போதுமான வளர்ச்சி தொடர்பான கடன் வாங்குதல் நடைபெறுகிறதா என்பதுதான். ஜூன் 2025ஆம் ஆண்டுக்கான ரிசர்வ் வங்கியின் தரவுகள், நுகர்வோர் சாதனங்களுக்கான கடன்கள் கடந்த ஆண்டை விட 3% குறைந்துள்ளதாகக் காட்டுகின்றன. வீட்டுக் கடன்கள் 36%இலிருந்து 9.6% ஆக மிகவும் மெதுவாக வளர்ந்தன.
இந்தக் குறைந்த தேவைக் கண்ணோட்டத்திற்கு ஏற்ப, நிறுவனங்களும் தங்கள் கடன் வாங்குவதைக் குறைத்து வருவதாகத் தெரிகிறது. தொழில்துறைக்கான கடன்கள் ஜூன் 2025இல் 5.5% வளர்ச்சியடைந்தன. இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 8.1%ஆக இருந்தது. எனவே, விகிதங்களைக் குறைப்பது மட்டும் போதுமான நடவடிக்கையாக இருக்காது. மேலும், இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவ, பண விவகாரங்களில் மட்டுமல்ல, பல துறைகளிலும் வலுவான கொள்கைகள் தேவை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறினார்.
அரசாங்கம் பல்வேறு துறைகளில் மூலதனச் செலவினங்களை அதிகரிப்பதை விட இலக்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வரி விதிப்பதன் மூலம் அதிக பணிகளை மேற்கொள்ள முடியும். பல முறை வாக்குறுதியளிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி விகித பகுத்தறிவு (Goods and Services Tax rate rationalisation) நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. எண்ணெய் விலைகள் குறையும் போது எரிபொருள் விலைகள் குறைக்கப்பட வேண்டும். இது நுகர்வோர் நம்பிக்கையை மேம்படுத்தும். ரிசர்வ் வங்கி, இப்போதைக்கு, நடவடிக்கைகளுக்காக காத்திருக்க முடியும். ஆனால், பொருளாதார சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் விரைவாக செயல்பட வேண்டும்.