உத்தரகாசி திடீர் வெள்ளத்திற்கு முதன்மையான காரணம், இப்பகுதியின் நிலப்பரப்பு ஆகும். அங்கு பெய்யும் கனமழை பெரும்பாலும் நிலச்சரிவுகளுக்கு வழிவகுக்கிறது. இதனால், ஆறுகளில் சேறு மற்றும் கான்கிரீட் குப்பைகள் அனுப்பப்படுகிறது.
உத்தரகாசி திடீர் வெள்ளம் 2025 : உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் மண் சரிவில் குறைந்தது நான்கு பேர் இறந்தனர். மேலும் இதில் பல கட்டிடங்கள், கடைகள் மற்றும் ஹோட்டல்கள் சேதமடைந்தன.
உத்தரகாண்டின் மேல் மலைப்பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்குகள் ஏற்படுவது பொதுவானது. அவை பெரும்பாலும் மேக வெடிப்பால் (cloudburst) ஏற்படுகின்றன. இது உ தீவிர மழைப்பொழிவை ஏற்படுத்தும். இருப்பினும், தொழில்நுட்ப ரீதியாக மேக வெடிப்பு (cloudburst) செவ்வாய்க்கிழமை திடீர் வெள்ளத்திற்கு வழிவகுக்கவில்லை. இருப்பினும் கடந்த மூன்று நாட்களாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ததுதான் காரணமாகும்.
முதன்மையாகக் காரணம், இப்பகுதியின் நிலப்பரப்பு ஆகும். இங்கு கனமழை பெரும்பாலும் நிலச்சரிவுகளுக்கு வழிவகுப்பதுடன், சேறு மற்றும் கான்கிரீட் குப்பைகளால் ஆறுகளில் பரவுகிறது. இந்தப் பொருட்கள் மிகுந்த ஆற்றலுடன் கீழே பாய்ந்து, அதிக வேகத்தைப் பெறுகிறது. இதனால், கீழ் பகுதிகளில் திடீர் வெள்ளத்திற்கு வழிவகுக்கிறது.
உத்தர்காசியின் நிலப்பரப்பு என்ன?
உத்தர்காசி மாவட்டம் சராசரி கடல் மட்டத்திலிருந்து 800 முதல் 6,900 மீட்டர் வரை உயரத்தில் அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் பெரிய புவியியல் பகுதிகள் பனியால் மூடப்பட்டிருக்கும். மேலும், மாவட்டத்தின் பல பகுதிகளில் பனிப்பாறைகள் உள்ளன.
இவை மாவட்டத்தில் கங்கை மற்றும் யமுனை நதிகளின் மேல் பகுதிகள் உள்ளன. அவற்றின் மூலங்கள் கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி அருகே பனி மூடியிருக்கும்.
உத்தர்காசியில் உயரமான முகடுகள், ஆண்டு முழுவதும் பாயும் ஆறுகள் மற்றும் பள்ளத்தாக்குகள் உள்ளன. அதன் நிலம் கரடுமுரடானது, செங்குத்தான மலைகள், குறுகிய பள்ளத்தாக்குகள் மற்றும் ஆழமான பள்ளத்தாக்குகள் உள்ளன.
நிலம் தென்மேற்கை நோக்கி சாய்வாக உள்ளது, சில பள்ளத்தாக்குகளில் உயரம் சுமார் 800 மீட்டர் கூர்மையாக குறைகிறது.
உத்தர்காசி ஆண்டுதோறும் எவ்வளவு மழைப்பொழிவைப் பெறுகிறது?
மாவட்டத்தின் பெரும்பகுதி இமயமலையின் தெற்கு சரிவில் அமைந்திருப்பதால், பருவமழை நீரோட்டங்கள் பொதுவாக ஆழமான பள்ளத்தாக்குகள் வழியாக ஊடுருவுகின்றன. தென்மேற்கு பருவமழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை), குறிப்பாக மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் மழைப்பொழிவு அதிகபட்சமாக இருக்கும்.
உத்தரகாசியில் ஒரு வருடத்தில் சராசரியாக 1,289 மிமீ மழை பெய்யும். கடந்த கால பதிவுகள் 1969ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 2,436 மிமீ (இயல்பை விட 189 சதவீதம் அதிகம்) மழை பதிவாகியுள்ளது என்பதைக் காட்டுகிறது. ஜூலை மாதம் இங்கு மிகவும் மழை பெய்யும் மாதமாகும். இந்த நேரத்தில் சராசரியாக சுமார் 312 மிமீ மழை பெய்தது. மலைப்பகுதிகளில் அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்யும் மாவட்டமாக இருக்கும்.
செவ்வாய்க்கிழமை திடீர் வெள்ளப்பெருக்குக்கு வழிவகுத்தது எது?
நிலத்தின் வடிவம், சமீபத்திய நாட்களில் தொடர்ந்து பெய்த மழை, செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மண்சரிவுகள், இடிபாடுகள் போன்றவை திடீர் வெள்ளப் பெருக்குகிற்கு காரணமாக இருக்கலாம்.
காலநிலை மாற்றம் மழையின் தீவிரத்தை அதிகரித்துள்ளது. இது பனிப்பாறைகள் மற்றும் குளிர்காலத்தில் சேகரிக்கும் பனியின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக இப்பகுதியில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன.
உத்தர்காசி மழைப்பொழிவு தொடர்ச்சியாக இருந்தால், பேரிடரை ஏற்படுத்தும். ஏனென்றால், இந்தப் பகுதி கடந்த பல நூற்றாண்டுகளாக உருவாகியுள்ள பழைய மண் சரிவுகளின் அடுக்குகளில் இப்பகுதி கட்டப்பட்டுள்ளது.
உத்தர்காசி மாவட்டம் தெற்கு இமயமலை சரிவில் அமைந்துள்ளது. அங்கு குறைந்த தாவரங்கள் உள்ளன மற்றும் குறிப்பிடத்தக்க தடைகள் எதுவும் இல்லை. மழைப்பொழிவு அல்லது பூகம்பங்கள் போன்ற லேசான தூண்டுதல்கள் கூட தளர்வான மொரைன் மற்றும் மண் எளிதில் கீழ்நோக்கி சரிந்து, அதன் பாதையில் வீடுகளையும் சாலைகளையும் விழுங்கச் செய்யலாம்.
இந்த மழை ஏன் 'மேக வெடிப்பு' (cloudburst) அல்ல?
மேக வெடிப்புக்கு ஒரு குறிப்பிட்ட வரையறை உள்ளது. இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department (IMD)) படி, தோராயமாக 10 கிமீ x 10 கிமீ பரப்பளவில் ஒரு மணி நேரத்திற்கு 100 மிமீ அல்லது அதற்கு மேற்பட்ட மழைப்பொழிவு மேக வெடிப்பு நிகழ்வாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (India Meteorological Department (IMD)) 24 மணி நேர மழைப்பொழிவு தரவு, உத்தரகாசியில் 2.7 மிமீ மழை பெய்துள்ளதாகக் கூறியது. மேலும், காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை, உத்தரகாசியில் உள்ள பல்வேறு வானிலை ஆய்வு நிலையங்களில் மழைப்பொழிவு மேக வெடிப்புக்கு வரையறுக்கப்பட்ட வரம்பை விட மிகக் குறைவாக இருந்ததாக இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) தரவு காட்டுகிறது.
இதற்கு நேர்மாறாக, கடந்த மூன்று நாட்களில் உத்தரகண்டின் பிற பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது. உதாரணமாக, ஹரித்வார் சமவெளிகளில் செவ்வாய்க்கிழமை 24 மணி நேரத்தில் 300 மிமீ மழை பதிவாகியுள்ளது.