முக்கிய அம்சங்கள் :
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், முன்னாள் சிறப்பு புலனாய்வுப் பிரிவு (Special Intelligence Bureau (SIB)) தலைவர் மற்றும் IPS அதிகாரி டி. பிரபாகர் ராவ், துணை காவல் கண்காணிப்பாளர் டி. பிரணீத் ராவ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் எம். திருப்பதண்ணா மற்றும் என். புஜங்க ராவ், முன்னாள் காவல் கண்காணிப்பாளர் பி. ராதாகிஷன் ராவ் மற்றும் தொலைக்காட்சி சேனல் உரிமையாளர் ஏ. ஷ்ரவன் குமார் ராவ் போன்றோர் ஆவர்.
ஆகஸ்ட் 5 வரை பிரபாகர் ராவை கைது செய்யாமல் உச்ச நீதிமன்றம் பாதுகாப்பு வழங்கியிருந்த நிலையில், பிரனீத் ராவ், திருப்பத்தண்ணா, புஜங்க ராவ் மற்றும் ராதாகிஷன் ராவ் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளனர். வேறு ஒரு வழக்கில் தொடர்புடைய ஷ்ரவன் குமார் ராவ் ஹைதராபாத்தில் உள்ள மத்திய சிறையில் உள்ளார்.
முன்பு தெலுங்கானா ராஷ்டிர சமிதி (Telangana Rashtra Samithi (TRS)) கட்சி என்று முன்னர் அழைக்கப்பட்ட BRS கட்சி, புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் 2014ஆம் ஆண்டு தொடங்கி 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. BRS தலைவரும் இரண்டு முறை முதலமைச்சருமான கே. சந்திரசேகர ராவ் டிசம்பர் 3, 2023 அன்று பிஆர்எஸ் காங்கிரஸிடம் தேர்தலில் தோல்வியடைந்தபோது, ஆறு பேர் மீதான வழக்கு தொடங்கியது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, டிசம்பர் 4 அன்று, SIB தலைவர் பிரபாகர் ராவ் தனது அதிகாரப்பூர்வ பதவியை ராஜினாமா செய்தார்.
உங்களுக்குத் தெரியுமா? :
நிலையான இணைப்பு தொலைபேசிகளின் (fixed-line phones) காலத்தில், இயந்திர பரிமாற்றங்கள் (mechanical exchanges), அழைப்பிலிருந்து ஆடியோ சிக்னலை அனுப்ப சர்க்யூட்களை ஒன்றாக இணைக்கும். இதற்கான பரிமாற்றங்கள் டிஜிட்டல் ஆனதும், கணினி மூலம் ஒட்டுக்கேட்கப்பட்டது. இன்று, மொபைல் ஃபோன்கள் மூலம் பெரும்பாலான உரையாடல்கள் நடக்கும்போது, அதிகாரிகள் சேவை வழங்குநருக்கு ஒரு கோரிக்கையை அனுப்புகிறார்கள். வழங்குநர் கொடுக்கப்பட்ட எண்ணின் உரையாடல்களைப் பதிவு செய்ய சட்டப்பூர்வமாக கடமைப்பட்டுள்ளார். அவர்கள் இணைக்கப்பட்ட கணினி மூலம் இந்த பதிவுகளை நிகழ்நேரத்தில் வழங்க வேண்டும்.
மாநிலங்களில், தொலைபேசிகளை ஒட்டுக்கேட்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. ஒன்றியத்தில், புலனாய்வுப் பணியகம் (Intelligence Bureau), CBI, அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate), போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (Narcotics Control Bureau), மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes), வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (Directorate of Revenue Intelligence), தேசிய புலனாய்வு நிறுவனம் (National Investigation Agency), R&AW, சிக்னல் புலனாய்வு இயக்குநரகம் (Directorate of Signal Intelligence) மற்றும் டெல்லி காவல் ஆணையர் (Delhi Police Commissioner) ஆகிய 10 முகமைகள் இதைச் செய்ய அங்கீகரிக்கப்பட்டுள்ளன. வேறு முகமையால் ஒட்டுகேட்பது சட்டவிரோதமாக கருதப்படும். இந்தியாவில் தொலைபேசி ஒட்டுக்கேட்பது இந்திய தந்தி சட்டம், 1885-ன் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.
பிரிவு 5(2) பொது அவசரநிலையின் போது அல்லது பொதுப் பாதுகாப்பிற்காக தொலைபேசி ஒட்டுக்கேட்பு செய்யப்படலாம் என்று கூறுகிறது. மத்திய அரசு அல்லது மாநில அரசுகள் பொதுப் பாதுகாப்புக்கு அவசியம் என்று நம்பினால் அதை அனுமதிக்கலாம். இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, மாநிலத்தின் பாதுகாப்பு, வெளிநாட்டு நாடுகளுடனான நட்புறவு அல்லது பொது ஒழுங்கைப் பாதுகாக்கவும் இது செய்யப்படலாம். ஒரு குற்றத்தைச் செய்யத் தூண்டுவதைத் தடுக்கவும் இதைப் பயன்படுத்தலாம்.
இந்திய தந்தி (திருத்தம்) விதிகள் (Indian Telegraph (Amendment) Rules), 2007 இன் விதி 419A, தொலைபேசி ஒட்டுக்கேட்பு உத்தரவுகளை உள்துறை அமைச்சகத்தில் உள்ள இந்திய அரசின் செயலாளரால் மட்டுமே பிறப்பிக்க முடியும் என்று கூறுகிறது. ஒரு மாநிலத்திற்கு, உள்துறைக்கு பொறுப்பான மாநில அரசின் செயலாளரால் உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். சேவை வழங்குநருக்கு எழுத்துப்பூர்வமாக உத்தரவு அனுப்பப்பட வேண்டும். இந்த எழுத்துப்பூர்வ உத்தரவு கிடைத்த பின்னரே ஒட்டுக்கேட்பு தொடங்க முடியும்.