அதிகரித்து வரும் அமெரிக்க வர்த்தக நடவடிக்கைகளுக்கு மத்தியில் மருந்துத் துறை வரிவிதிப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. -ANI

 இந்திய மருந்து தயாரிப்பாளர்களுக்கு அமெரிக்கா ஒரு முக்கியமான சந்தையாகும். மேலும், புதிய வரிகள் முழுத் துறையையும் பாதிக்கலாம்.


மருந்துகள் இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி வருவாய் ஈட்டும் துறைகளில் ஒன்றாகும். ஆனால் ஃபிட்ச் மதிப்பீடுகள், ஒரு புதிய அறிக்கையில், அமெரிக்கா புதிய வரிகளை அறிவித்தால் இந்தத் தொழில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது. இந்திய நிறுவனங்கள் பொதுவாக தற்போதைய அமெரிக்க வரிகளுக்கு குறைவான வெளிப்பாட்டைக் கொண்டுள்ளன. ஆனால், மருந்துத் தொழில் இன்னும் எதிர்கால வர்த்தக நடவடிக்கைகளால் ஆபத்தில் உள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

உயிரியல் மருந்துகளை உருவாக்கும் பயோகான் பயோலாஜிக்ஸ் லிமிடெட், அதன் வருவாயில் சுமார் 40% அமெரிக்காவிலிருந்து வருவதால், மிகவும் பாதிக்கப்படக்கூடியது. அதன் பெரும்பாலான தயாரிப்புகள் இந்தியா மற்றும் மலேசியாவில் தயாரிக்கப்படுகின்றன.


மருந்து ஏற்றுமதிக்கான அமெரிக்க உயர் வரிகள் பயோகானின் வணிகத்தை பாதிக்கக்கூடும் என்று ஃபிட்ச் எச்சரித்தது. போட்டி நிறைந்த சந்தையில், அதன் மருந்துகளுக்கான தேவை சீராக இருந்தாலும், நிறுவனம் அதிக செலவுகளை நுகர்வோருக்கு மாற்றுவது கடினமாக இருக்கலாம். ஆகஸ்ட் 7, 2025 முதல் இந்தியப் பொருட்களுக்கு 25% பரஸ்பர வரியையும், ஆகஸ்ட் 27 முதல் ரஷ்ய எண்ணெய் தொடர்பான இறக்குமதிகளுக்கு 25% வரியையும் விதிக்க வாஷிங்டன் எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை வந்துள்ளது.


இந்த வரிகள் ஏற்கனவே பல இந்தியத் தொழில்களுக்கு சிக்கல்களை உருவாக்கியுள்ளன. ஆட்டோமொபைல்கள் மற்றும் இரசாயனத் துறைகளும் ஆபத்தில் உள்ளன. ஆட்டோமொபைல் பாகங்கள் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனமானது, அதன் விற்பனையில் சுமார் 20% அமெரிக்காவிலிருந்து பெறுகிறது. இருப்பினும் அதில் பெரும்பகுதி அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் உள்ள உற்பத்தி  அமைப்புகளிலிருந்து வருகிறது.


உலகளாவிய ஆட்டோமொபைல் துறையின் கட்டணங்களால் ஏற்படும் நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் நிறுவனத்தின் பார்வையை நேர்மறையானது என்பதிலிருந்து "நிலையானது" என்று மாற்றியுள்ளதாக ஃபிட்ச் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலிருந்து அதன் வருவாயில் சுமார் 10-12% சம்பாதிக்கும் பயிர் பாதுகாப்பு நிறுவனமான UPL நிறுவனமும் பாதிக்கப்படலாம். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இணையான வரிகளை, இந்தியாவில் தயாரிக்கும் பொருட்களுக்கும் விதிக்க வாய்ப்புள்ளது.


உற்பத்தியைவிட அதிகமானவற்றை வரிகள் பாதிக்கின்றன. இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் ரஷ்ய கச்சா எண்ணெய் 30–40% ஆகும். மேலும், இது அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் லாபம் ஈட்ட உதவுகிறது. இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை முற்றிலுமாக நிறுத்தினால், இந்த நிறுவனங்கள் தங்கள் வருவாயில் சுமார் 10% இழக்க நேரிடும் என்று ஃபிட்ச் மதிப்பிடுகிறது. இருப்பினும், அரசாங்க ஆதரவு அவர்களுக்கு நிலையான கடன் மதிப்பீடுகளை பராமரிக்க உதவும்.


தற்போது, ஐடி சேவைகள், சிமென்ட், தொலைத்தொடர்பு மற்றும் பயன்பாடுகள் போன்ற துறைகளில் வரிகளின் ஒரு சிறிய நேரடி தாக்கத்தை மட்டுமே ஃபிட்ச் எதிர்பார்க்கிறது. ஆனால் இந்தியாவில் வரிகள் மற்ற ஆசிய நாடுகளைவிட அதிகமாக இருந்தால், 2026-ஆம் ஆண்டுக்கான 6.5% என்று கணகிடப்பட்ட பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படலாம் என்று அறிக்கை எச்சரிக்கிறது.



Original article:

Share:

நகர்ப்புற மற்றும் கிராமப்புற செலவினம் இந்தியாவின் வளர்ச்சியை உயர்த்துகிறது, முதலீடு பின்தங்கியுள்ளது -ANI

 ஜூலை மாதத்தில் நகர்ப்புற தேவை அதிகரித்ததற்கு காரணம், பயணிகள் வாகன விற்பனை அதிகரிப்பு, பெட்ரோல் பயன்பாடு அதிகரிப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வசூல் சிறப்பாக இருந்ததே ஆகும்.


சமீபத்திய பொருளாதார தரவுகளைக் கண்காணிக்கும் கோல்ட்மேன் சாக்ஸ் அறிக்கையின்படி (Goldman Sachs report), முதலீட்டு வளர்ச்சி இன்னும் சீரற்றதாக இருந்தாலும், இந்தியாவின் மாதாந்திர நுகர்வு செயல்பாடு வலுவடைந்துள்ளது.


ஜூலை மாதத்தில் அதிக வாகன விற்பனை மற்றும் பெட்ரோல் தேவையுடன் நகர்ப்புற நுகர்வு அதிகரித்ததாக அறிக்கை குறிப்பிட்டது. ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது மொத்த ஜிஎஸ்டி வசூலும் மேம்பட்டது. ஆனால், ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி 7.5% என்ற அளவில் இருந்தது. ஆகஸ்ட் மாதத்தின் முதல் பாதியில் விமானப் பயணிகள் போக்குவரத்து குறிப்பிடத்தகுந்த உயர்வைக் கண்டது, இதற்குக் காரணம் சுதந்திர தினத்தன்று விடுமுறை பயணங்கள் தான்.


கிராமப்புற மறுமலர்ச்சி


கிராமப்புறங்களில், ஒட்டுமொத்த செயல்பாடு மேம்பட்டது. கடந்த ஆண்டைவிட டிராக்டர் பதிவுகள் சுமார் 14% மற்றும் விவசாய ஏற்றுமதிகள் சுமார் 13% அதிகரித்தன. கிராமப்புற வருமானங்களும் அதிகரித்தன, மே மாதத்தில் உண்மையான விவசாய ஊதியங்கள் 4.5% அதிகரித்தன. இது எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். கோல்ட்மேன் சாக்ஸின் கூலிப்படி, நல்ல குளிர்கால பயிர் அறுவடைகள், குறைந்த உணவு பணவீக்கம் மற்றும் அதிக நலத்திட்ட செலவுகள் வரும் மாதங்களில் கிராமப்புற நுகர்வுக்கு மேலும் உதவக்கூடும்.


ஆனால், வானிலை பிரச்சினைகள் குறித்தும் அறிக்கை எச்சரித்தது. பல பகுதிகளில் அதிகரித்துவரும் வெப்பநிலை ஜூலை மாதத்தில் காய்கறி விலைகளில் கூர்மையான அதிகரிப்புக்கு வழிவகுத்தது.




கலப்பு முதலீடுகள்


நுகர்வு அதிகரிப்பைப் போலன்றி, முதலீட்டு செயல்பாடு கலவையான முடிவுகளைக் காட்டியது. பருவமழை காரணமாக ஜூலை மாதத்தில் நிலக்கரி உற்பத்தி கடுமையாகக் குறைந்தது. ஆனால், ஆட்டோமொபைல் மற்றும் எஃகு உற்பத்தி அதிகரித்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, எஃகு உற்பத்தி 11 சதவீத வளர்ச்சியுடன் வலுவாக இருந்தது.


போக்குவரத்து சீரற்ற வடிவங்களைக் காட்டியது. டீசல் தேவை அதிகரித்தது. ஆனால், துறைமுக சரக்கு இயக்கம் கிட்டத்தட்ட அப்படியே இருந்தது. கோல்ட்மேன் சாக்ஸின் முதலீட்டு குறியீடு 2025-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 6.7 சதவீத வளர்ச்சியுடன் சிறிது மந்தநிலையைக் காட்டியது. இது முந்தைய காலாண்டில் 7.7 சதவீதமாக இருந்தது.


ஒட்டுமொத்தமாக, வீட்டு மற்றும் கிராமப்புற செலவினங்கள் இன்னும் வளர்ச்சியை ஆதரிப்பதாக கோல்ட்மேன் சாக்ஸ் குறிப்பிட்டார். ஆனால், முதலீட்டு செயல்பாடு பருவகால காரணிகள் மற்றும் துறை சார்ந்த சிக்கல்களால் அழுத்தத்தை எதிர்கொள்கிறது.



Original article:

Share:

இந்தியாவின் அணுசக்தி கோட்பாடு என்ன? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


  • அணு ஆயுத நாடுகள் இதுவரை அணு ஆயுத தடையை பின்பற்றி வருவது நிம்மதி அளிக்கிறது. ஆனால், அணு ஆயுதங்களின் 80வது ஆண்டு நிறைவை நெருங்கி வரும் நிலையில், இந்த தடை எதிர்பாராத வழிகளில் பலவீனமடைந்து வருவதாகத் தெரிகிறது. அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான அணு ஆயுத அச்சுறுத்தல்களால் நிரம்பிய சமீபத்திய வார்த்தைப் போர், உலகளாவிய நிலைத்தன்மைக்கு கவலை அளிக்கிறது.


  • அமெரிக்காவும் ரஷ்யாவும் (சோவியத் யூனியனின் அணு ஆயுதங்களைக் கைப்பற்றியது) பனிப்போரின்போது வல்லரசுகளாக இருந்தன. இருவரும் ஆயிரக்கணக்கான அணு ஆயுதங்களை உருவாக்கியிருந்தனர். அக்டோபர் 1962ஆம் ஆண்டு கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பிறகு, அவர்கள் ஒருவருக்கொருவர் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஒப்புக்கொண்டனர். இது Mutual assured destruction (MAD) கோட்பாட்டிற்கு வழிவகுத்தது, அதாவது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது இரு தரப்பினரையும் அழிக்கும் என்பதாகும்.


  • அணு ஆயுதங்களின் பரவலைக் கட்டுப்படுத்த, அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் 1970-ல் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை (Non-Proliferation Treaty (NPT)) அறிமுகப்படுத்தின. இது சட்டப்பூர்வமாக பிணைக்கப்படவில்லை என்றாலும், அது உலகை இரண்டு குழுக்களாகப் பிரித்தது. அவை: அணு ஆயுத நாடுகள் (அமெரிக்கா, USSR/ரஷ்யா, UK, பிரான்ஸ், சீனா) அணு ஆயுதம் தயாரிக்காத நாடுகள் என்பதாகும். இதில் அணு ஆயுதங்களை உருவாக்கும் விருப்பத்தை கைவிட வேண்டியிருந்தது.


  • அணு ஆயுதம் அல்லாத நாடுகளுக்கு  அணு தொழில்நுட்பத்தை அணுகவும், அணு ஆயுத அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பை வழங்கவும் உறுதியளிக்கப்பட்டது. அணு ஆயுதங்களை அகற்றுவதற்கு பாடுபடுவதாகவும் அணு ஆயுதங்கள் உறுதியளித்தன. ஆனால், இந்த இலக்கு நிறைவேற்றப்படவில்லை. இதில் இரண்டு முக்கிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டன:


  1. பிராந்திய மோதல்களைத் தீர்க்க அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படாது (எடுத்துக்காட்டாக, 1999 கார்கில் போரின்போது பாகிஸ்தான் அவ்வாறு செய்ததற்காக எச்சரிக்கப்பட்டது).


  1. அணு ஆயுதம் இல்லாத நாடுகள் முறையான அனுமதியின்றி தங்கள் இறையாண்மையை மீறாது.


  • 1991 முதல் 2022-ஆம் ஆண்டு வரை, பெரிய அணு ஆயுத அச்சுறுத்தல் எதுவும் இல்லை. ஆனால் 2022-ல், ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்து, அதன் அணு ஆயுதத் திறனைப் பயன்படுத்துவதைக் குறித்தது. இது ஐரோப்பாவின் எல்லைகளைப் பாதுகாத்த 1975-ஆம் ஆண்டு ஹெல்சின்கி ஒப்பந்தங்கள் (Helsinki Accords) போன்ற கடந்தகால ஒப்பந்தங்களை பலவீனப்படுத்தியது.


  • ஜூன் 2025-ல், இஸ்ரேல் (NPT-ன் ஒரு பகுதியாக இல்லாதது) அணு ஆயுதம் அல்லாத நாடான ஈரானை தாக்கியது. ஈரான் அதன் NPT வாக்குறுதியை மீறி ரகசியமாக அணு ஆயுதங்களை வாங்கப் போகிறது என்று கருதியது.


  • இப்போது மிகப்பெரிய ஆபத்து அமெரிக்க-ரஷ்ய உறவுகளின் முறிவு உள்ளது. இரு நாடுகளும் இன்னும் மிகப்பெரிய அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன. ரஷ்யாவில் 5,459 அணு ஆயுதங்களும், அமெரிக்காவிடம் 5,177 அணு ஆயுதங்களும் உள்ளன (அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு, 2025 படி).


  • ஒரு சிறிய அணு ஆயுதப் போர் கூட ஏராளமான மக்களைக் கொல்லக்கூடும். 2019ஆம் ஆண்டில், அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போர் முதல் சில மணி நேரங்களுக்குள் சுமார் 91.5 மில்லியன் இறப்புகளையும் காயங்களையும் ஏற்படுத்தக்கூடும் என்று பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் மதிப்பிட்டுள்ளது. அதன் பிறகு, கதிரியக்க பாதிப்பானது உலகளாவிய குளிர்ச்சி நிலைமைகளை இன்னும் மோசமாக்கும்.


உங்களுக்குத் தெரியுமா?


  • அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் (Non-Proliferation Treaty (NPT)) அணு ஆயுத பரவலைத் தடுப்பது, அணுசக்தியின் அமைதியான பயன்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் ஆயுதக் குறைப்பை நோக்கிச் செயல்படுவது உள்ளிட்ட குறிக்கோள்களை உடையது.


  • அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் 1968-ல் உருவாக்கப்பட்டது. ஜனவரி 1, 1967-ஆம் ஆண்டுக்கு முன்பு அணு ஆயுதங்களை உருவாக்கி சோதனை செய்த நாடுகள் மட்டுமே அணு ஆயுத நாடுகளாக அங்கீகரிக்கப்படுகின்றன என்று அது கூறுகிறது. இவை அமெரிக்கா, ரஷ்யா (முந்தைய சோவியத் ஒன்றியம்), இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா. வேறு எந்த நாடும் அணு ஆயுதங்களைப் பெற அனுமதிக்கப்படவில்லை.


  • உலகில் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஆனால், இந்தியா கையெழுத்திடவில்லை.



Original article:

Share:

கடுமையான மூளைக்காய்ச்சல் நோய் அறிகுறி (Acute encephalitis syndrome (AES)) பற்றி… -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :


"மூளை உண்ணும் அமீபா" (brain-eating amoeba) என்று அழைக்கப்படும் நெக்லேரியா ஃபௌலேரி-யால் (Naegleria fowleri) அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (Amoebic meningoencephalitis) ஏற்படுகிறது. இது வெதுவெதுப்பான, நன்னீர் மற்றும் மண்ணில் காணப்படும் ஒரு சுதந்திரமான அமீபா ஆகும். மேலும், இது மூக்கு வழியாக உடலில் நுழையும்போது மக்களை பாதிக்கிறது. இந்த ஆண்டு, கேரளாவில் எட்டு உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் மற்றும் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன. இதில், ஆகஸ்ட் 14 அன்று கோழிக்கோட்டின் தாமரச்சேரியில் ஒரு இறப்பு பதிவாகியுள்ளது.


மாவட்டத்தின் வெவ்வேறு கிராமங்களில் இருந்து பதிவாகிய மூன்று வழக்குகளில் பொதுவான காரணி எதுவும் இல்லை என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 


மெனிங்கோஎன்செபாலிட்டிஸின் (meningoencephalitis) மூலக்கூறு நோயறிதலைச் செய்தபோது, நெக்லேரியா ஃபோலேரியைத் தவிர, மற்றொரு இனமான அகந்தமோபாவும் (Acanthamoeba) நோயை ஏற்படுத்துகிறது என்று ஆதாரங்கள் தெரிவித்தன. 


இந்தியாவில் PAM-ன் முதல் வழக்கு 1971-ல் பதிவாகியது, மற்றும் கேரளாவில் முதல் வழக்கு 2016-ல் பதிவாகியது. 2016 முதல் 2023 வரை, மாநிலத்தில் எட்டு வழக்குகள் மட்டுமே இருந்தன. கடந்த ஆண்டு, கேரளாவில் 36 நேர்மறை வழக்குகள் மற்றும் ஒன்பது இறப்புகள் இருந்தன.


PAM - Primary Amoebic Meningoencephalitis (PAM) : முதன்மை அமீபிக் மூளைக்காய்ச்சல் (PAM)


உலகளவில் நோயின் இறப்பு 97 சதவீதமாக இருந்தால், கேரளாவால் அதை 25 சதவீதமாகக் குறைக்க முடிந்தது. இந்தியாவில் பதிவான அனைத்து பாதிப்புகளும் ஜூலை 2024 வரை நோயாளியின் மரணத்திற்கு வழிவகுத்தன. கோழிக்கோடு மாவட்டத்தில் 14 வயது சிறுவன் நோயிலிருந்து தப்பிய முதல் இந்தியன் ஆனார். உலகில் PAM நோயால் பாதிக்கப்பட்ட 11-வது அறியப்பட்ட நபரும் இவரே.


கேரளாவில் வழக்குகள் அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்று, மூளைக்காய்ச்சல் நோய் அறிகுறிக்கான (acute encephalitis syndrome (AES)) அதிக பரிசோதனையுடன் தொடர்புடையது. அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் ஏற்படக்கூடிய ஒரு நிலை, அத்துடன் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற பிற காரணிகளால் ஏற்படக்கூடிய தன்மையின் அடிப்படையில் உள்ளது. கடந்த ஆண்டு கேரளாவில் திடீரென வழக்குகள் அதிகரித்தபோது, அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் வழக்குகளை நிர்வகிப்பதற்கான ஒரு சிறப்பு சிகிச்சை நெறிமுறை மற்றும் நிலையான இயக்க நடைமுறையை மாநிலம் வெளியிட்டது. இந்தியாவில் அவ்வாறு செய்த முதல் மாநிலமாக இது ஆனது.


உங்களுக்குத் தெரியுமா :


PAM-ன் ஆரம்ப அறிகுறிகளில் தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை அடங்கும். பின்னர், நோயாளி ஒரு கழுத்து விறைப்பு, குழப்பம், வலிப்புத்தாக்கங்கள், மாயத்தோற்றங்கள் மற்றும் கோமா நிலைக்குச் செல்லலாம்.


இந்த நோய்க்கு ஆராய்ச்சியாளர்கள் இன்னும் ஒரு பயனுள்ள சிகிச்சையைக் கண்டுபிடிக்கவில்லை. தற்போது, மருத்துவர்கள் மருந்துகளின் கலவையுடன் இதற்கு சிகிச்சை அளிக்கின்றனர். இவற்றில் ஆம்போடெரிசின் பி, அசித்ரோமைசின், ஃப்ளூகோனசோல், ரிஃபாம்பின், மில்டெஃபோசின் மற்றும் டெக்ஸாமெதாசோன் ஆகியவை அடங்கும்.


அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (Centers for Disease Contro(CDC)), ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளன. உலக வெப்பநிலை அதிகரிப்பதால், நெய்க்லீரியா ஃபோலேரி தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்று அது கூறுகிறது. ஏனெனில், அமீபா சூடான நன்னீர் உடல்களில் செழித்து வளரும். இது 46°C வரை வெப்பநிலையில் சிறப்பாக வளரும். சில சந்தர்ப்பங்களில், இது அதிக வெப்பநிலையில்கூட உயிர்வாழும்.



Original article:

Share:

பிரதமரின் சுதந்திர தின உரையின் சிறப்பம்சங்கள் -ரோஷ்னி யாதவ்

 பிரதமர் நரேந்திர மோடியின் 79வது சுதந்திர தின விழா உரையானது 103 நிமிடங்கள் நீடித்தது, இது இதுவரை எந்தவொரு இந்திய பிரதமரின் சுதந்திர தின உரையிலும் மிக நீளமானதாகும். பிரதமர் மோடி, சுதந்திரத்திற்கு 88 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் நிலையை விரிவாக விளக்கியதோடு, தொழில்நுட்பம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு துறைகளில் சில முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். 



முக்கிய அம்சங்கள் :


1. பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா (PM-VBRY) : பிரதமர் மோடி இந்திய இளைஞர்களுக்காக பிரதான் மந்திரி விக்ஸித் பாரத் ரோஜ்கர் யோஜனாவைத் (Pradhan Mantri Viksit Bharat Rojgar Yojana(PM-VBRY)) தொடங்கினார். இது ரூ.1 லட்சம் கோடி திட்டமாகும். இதன் கீழ், தனியார் நிறுவனங்களில் வேலை பெறும் இளைஞர்களுக்கு அரசாங்கம் ரூ.15,000 வழங்கும் திட்டமாகும்.


PM-VBRY பல்வேறு துறைகளில் புதிய வேலைகளை உருவாக்குவதற்கு ஊக்கமளிக்கிறது. இது உற்பத்தி துறையில் சிறப்பு கவனம் செலுத்துகிறது மற்றும் பதிவுசெய்யப்பட்ட முதலாளிகளுக்கு நிதி நன்மைகளை வழங்குகிறது.


2. சுதர்சன் சக்ரா மிஷன் (Sudarshan Chakra Mission) : பிரதமர் மோடி சுதர்சன் சக்ரா திட்டத்தையும் அறிவித்தார். இது ஒரு பெரிய பாதுகாப்பு தொடர்பான முயற்சியாகும். இந்தியாவின் பாதுகாப்புத் தளங்கள், பொதுமக்கள் பகுதிகள் மற்றும் மத இடங்களை எதிரிகளின் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதே இதன் நோக்கம்.


"எதிரிகளின் எந்தவொரு தாக்குதல் முயற்சியையும் முறியடிக்க சக்திவாய்ந்த ஆயுத அமைப்பை உருவாக்க இந்தியா மிஷன் சுதர்சன் சக்ராவைத் தொடங்க உள்ளது," என்று அவர் கூறினார். 2035-ம் ஆண்டுக்குள் அனைத்து பொது இடங்களும் நாடு தழுவிய பாதுகாப்புக் கவசத்தால் மூடப்படும் வகையில், சமீபத்திய தொழில்நுட்பக் கருவிகளை ஒருங்கிணைக்க அரசு நோக்கமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.


3. அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் : தீபாவளிக்குள் சரக்கு மற்றும் சேவை வரியில் (Goods and Services Tax (GST)) அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் செய்யப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். இந்தச் சீர்திருத்தங்கள், சாமானியர்களுக்கு ‘கணிசமான’ வரிச் சலுகை அளிக்கும் என்றும், அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் மீதான வரியைக் குறைப்பதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குப் பலன் அளிக்கும் என்றும் அவர் கூறினார்.


மோடி தனது உரையில், ஜிஎஸ்டி முறை இப்போது 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது என்றும், சீர்திருத்தங்களுக்கான நேரம் வந்துவிட்டது என்றும் மோடி கூறினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜிஎஸ்டியின் அடிப்படை சீரமைப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்த சீர்திருத்தங்கள் மூலம் மக்கள் மீதான வரிச்சுமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


4. 2047-க்குள் அணுசக்தியில் பத்து மடங்கு உயர்வு : இந்தியா 10 புதிய அணு உலைகளை விரைவாகச் செய்து வருவதாகவும், 2047-க்குள் அதன் அணுசக்தித் திறனை பத்து மடங்கு அதிகரிக்க உறுதியளித்திருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார். 


அரசாங்கம் 2047-ம் ஆண்டிற்குள் 100 GW அணுசக்தி திறனை இலக்காக நிர்ணயித்துள்ளது. இது தற்போதைய 8.18 GW-ல் இருந்து பெரிய அதிகரிப்பாகும். இதை அடைவதற்காக, உள்நாட்டுத் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, வளர்ந்த இந்தியாவுக்கான (Viksit Bharat) அணுசக்தி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இது COP 21-ல் அறிவிக்கப்பட்ட இந்தியாவின் பஞ்சாமிர்த் காலநிலை செயல் திட்டத்துடனும் (Panchamrit climate action plan) இணைக்கப்பட்டுள்ளது.


குறிப்பிடத்தக்க வகையில், சூரிய அல்லது காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்கவை போலல்லாமல், அணுசக்தியானது தேவைக்கேற்ப மின் உற்பத்திக்கான நம்பகமான ஆதாரத்தை வழங்குகிறது. மேலும், வானிலை தொடர்பான குறுக்கீடுகளுக்கு இது எளிதில் பாதிக்கப்படாது.


5. ஒரு வளர்ச்சியடைந்த இந்தியாவின் அடித்தளம் மற்றும் ஒரு தன்னம்பிக்கை கொண்ட பாரதம் : பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய அமெரிக்கா விதித்த வரிவிதிப்புகளின் பின்னணியின் மத்தியில், பாதுகாப்பு, விண்வெளித் துறை, முக்கியமான தாதுக்கள், எரிசக்தி, குறைமின்கடத்திகள் முதல் உரம், மருந்து உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு என அனைத்துத் துறைகளிலும் தன்னம்பிக்கைக்கு மோடி அதிக அழுத்தம் கொடுத்தார். ஒரு வளர்ந்த இந்தியாவின் அடித்தளமும் ஒரு தன்னம்பிக்கையான பாரதமாகும்" (the bedrock of a Viksit Bharat is also a self-reliant Bharat) மற்றும் ஒரு நாடு மற்றவர்களை எவ்வளவு அதிகமாகச் சார்ந்திருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக அதன் சுதந்திரம் கேள்விக்குறியாகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.


6. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குறைமின்கடத்தி சில்லுகள் : இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குறைமின்கடத்தி சில்லுகள் (semiconductor chips) சந்தைக்கு வரும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.  குறைமின்கடத்தி திட்ட (semiconductor mission) முறையில் முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்றார். மேலும், ஆறு புதிய அலகுகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.


பெரும்பாலான நவீன குறைக்கடத்திகள் ஒருங்கிணைந்த சுற்றுகள், அவை 'சிப்ஸ்' (chips) என்றும் அழைக்கப்படுகின்றன. இவை மிகச் சிறிய மின்னணு சுற்றுகளின் தொகுப்புகள். அவற்றில் டிரான்சிஸ்டர்கள், டையோட்கள், மின்தேக்கிகள், மின்தடையங்கள் மற்றும் பல இடைத்தொடர்புகள் அடங்கும்.


குறைமின்கடத்திகள் முக்கியமாக சிலிக்கானால் ஆனவை. அவை மில்லியன் கணக்கான அல்லது பில்லியன் கணக்கான டிரான்சிஸ்டர்களைக் கொண்டுள்ளன. இந்த டிரான்சிஸ்டர்கள் சிறிய மின் சுவிட்சுகள் போல செயல்படுகின்றன. படங்கள், ரேடியோ அலைகள் மற்றும் ஒலிகள் போன்ற தரவுகளை செயலாக்க அவை ஆன் மற்றும் ஆஃப் செய்கின்றன.


குறைமின்கடத்திகள் மின்னணு சாதனங்களின் இன்றியமையாத அங்கமாகும். தகவல்தொடர்பு, கணினி, சுகாதாரம், இராணுவ அமைப்புகள், போக்குவரத்து, சுத்தமான ஆற்றல் மற்றும் எண்ணற்ற பிற பயன்பாடுகளில் முன்னேற்றங்களைச் செயல்படுத்துகிறது.


7. உயர் அதிகாரம் கொண்ட மக்கள்தொகை ஆய்வுப் பணி : பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், எல்லைப் பகுதிகளில் ஊடுருவல் மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தால் ஏற்படும் மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு அபாயங்களை எடுத்துரைத்தார். 


8. பிரத்யேக சீர்திருத்த பணிக்குழு : அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை (next-generation reforms) முன்னெடுத்துச் செல்ல பிரத்யேக சீர்திருத்த பணிக்குழுவை (Reform Task Force) உருவாக்குவதாகவும் பிரதமர் மோடி அறிவித்தார். இந்த பணிக்குழுவின் ஆணை பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவது, சிவப்பு நாடாவை விலக்குவது, நிர்வாகத்தை நவீனமயமாக்குவது மற்றும் 2047-க்குள் 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கான கோரிக்கைகளுக்கு இந்தியாவை தயார்படுத்துவதாகும்.


இந்தியா குறைமின்கடத்தி திட்டம் மற்றும் ஜிஎஸ்டி


1. இந்திய குறைமின்கடத்தி திட்டம் 2021-ல் தொடங்கப்பட்டது. இது உள்நாட்டு குறைக்கடத்தி தொழிலை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு இராஜதந்திர முயற்சியாகும். உள்நாட்டில் குறைக்கடத்தி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி திறன்களை மேம்படுத்துவது மற்றும் புதுமை, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது இதன் இலக்காகும்.


2. இந்திய குறைமின்கடத்தி திட்டம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology (MeitY)) மற்றும் பிற தொடர்புடைய அரசு அமைப்புகளின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகிறது.


சரக்கு மற்றும் சேவை வரி


1. சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) என்பது இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய பொருளாதார மற்றும் வரிவிதிப்பு சீர்திருத்தங்களில் ஒன்றாகும்.


2. இது 2017-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. பழைய வரி முறையை எளிமைப்படுத்துவதே இதன் நோக்கமாகும், அங்கு மத்திய மற்றும் மாநிலங்கள் இரண்டும் பலவிதமான வரிகளை வசூலித்தன. இந்த முறையை சீரானதாக மாற்றுவதே ஜிஎஸ்டியின் நோக்கமாகும்.


3. ஜிஎஸ்டி என்பது அடிப்படையில் ஒரு நுகர்வு வரியாகும், மேலும் இது இறுதி நுகர்வு புள்ளியில் விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரிவிதிப்பில் பயன்படுத்தப்படும் கொள்கை, இலக்கு கொள்கையாகும். இது மதிப்பு கூட்டலின் மீது விதிக்கப்படுகிறது மற்றும் வரி விலக்குகளை வழங்குகிறது. இதன் விளைவாக, இறுதி நுகர்வோர் மீதான வரிச்சுமையை அதிகரிகக் கூடிய வரி மீது வரி என்று அழைக்கப்படும் அடுக்கடுக்கான விளைவைத் தவிர்க்கிறது.



Original article:

Share:

உலகளாவிய பட்டினியை முடிவுக்குக் கொண்டுவருவதில் இந்தியாவின் பங்கு -மாக்சிமோ டோரெரோ கல்லன்

 உலகப் பட்டினிக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் வலுவானப் பங்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தில் அதன் கொள்கை முதலீடுகளின் விளைவாகும்.


உலகளாவிய நாள்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு இப்போது சரிவைக் காட்டுவதால், பசிக்கு எதிரான போராட்டத்தில் உலகம் முன்னேற்றம் அடையத் தொடங்கியுள்ளது என்பதை இது காட்டுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் புதிதாக வெளியிடப்பட்ட ”உலகில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை 2025” (The State of Food Security and Nutrition in the World 2025) அறிக்கையின்படி, 2024-ல் 673 மில்லியன் மக்கள் (உலக மக்கள் தொகையில் 8.2%) ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் உள்ளனர். 


2023-ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 688 மில்லியனாக இருந்தது. எனவே, நிலைமை மேம்பட்டுள்ளது. இருப்பினும், நாம் இன்னும் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்குத் திரும்பவில்லை. 2018-ம் ஆண்டில், 7.3% மக்கள் மட்டுமே ஊட்டச்சத்து குறைபாடுடன் இருந்தனர். இருப்பினும், COVID-19-ன் போது ஏற்பட்ட கூர்மையான அதிகரிப்புடன் ஒப்பிடும்போது இந்தப் புதிய போக்கு ஒரு நேர்மறையான மாற்றமாகும்.


இந்த உலகளாவிய முன்னேற்றத்தில் இந்தியா முக்கியப் பங்காற்றியுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பம், சிறந்த நிர்வாகம் மற்றும் மேம்பட்ட சேவை வழங்கல் ஆகியவற்றால் பெருகிய முறையில் இயக்கப்படும் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான கொள்கை முதலீடுகளின் விளைவாக இந்த ஆதாயங்கள் உள்ளன.


வீட்டு நுகர்வு குறித்த சமீபத்திய தேசிய மாதிரி ஆய்வுத் தரவைப் (National Sample Survey data) பயன்படுத்தி திருத்தப்பட்ட மதிப்பீடுகள், இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு 2020-22-ல் 14.3%-ல் இருந்து 2022-24-ல் 12%-ஆகக் குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. 

உண்மையில், இதன் பொருள் 30 மில்லியன் குறைவான மக்கள் பசியுடன் வாழ்கிறார்கள். மக்கள்தொகையின் அளவு மற்றும் COVID-19 தொற்றுநோயால் ஏற்படும் கடுமையான இடையூறுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகப் பார்க்கப்படுகிறது.


பொது விநியோக முறையின் (PDS) மாற்றம்


பொது விநியோக முறை (Public Distribution System (PDS)) இந்த முன்னேற்றத்தின் மையமாக உள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் ஒரு பெரிய மாற்றத்தை அடைந்துள்ளது. டிஜிட்டல் மயமாக்கல், ஆதார் அடிப்படையிலான இலக்கு, நிகழ்நேர சரக்கு கண்காணிப்பு மற்றும் பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் இந்த அமைப்பு புத்துயிர் பெற்றுள்ளது. 


மின்னணு விற்பனை புள்ளி இயந்திரங்கள் (Electronic point-of-sale machines) மற்றும் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை இயங்குதளம் (One Nation One Ration Card platform) ஆகியவை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த சீர்திருத்தங்கள் இந்தியா முழுவதும் குடிமைப் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடியதாக மாற்றியுள்ளன. இது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு மிகவும் முக்கியமானது.


இந்த கண்டுபிடிப்புகள் தொற்றுநோய் காலத்தில் இந்தியாவானது உணவுக்கான ஆதரவை விரைவாக விரிவுபடுத்த உதவியது. 800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொடர்ந்து மானிய விலையில் உணவுப் பொருட்களைப் பெறுவதையும் அவர்கள் உறுதி செய்தனர்.


இப்போது, கலோரிகளின் முன்னேற்றம் ஊட்டச்சத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும். இந்தியாவில், 60%-க்கும் அதிகமான மக்களுக்கு ஆரோக்கியமான உணவு இன்னும் போதுமான அளவில் பூர்த்தியடையவில்லை. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் விலை உயர்ந்தவையாகவும், குளிர்பதனச் சங்கிலிகள் பலவீனமாகவும் உள்ளன. மற்றும் சந்தை இணைப்புகள் திறமையற்றவை என்பதே இதற்கு முக்கிய காரணமாகும். 


கலோரிகளின் தரத்தை மேம்படுத்த இந்தியா முதலீடு செய்யத் தொடங்கியுள்ளது. எடுத்துக்காட்டாக, 2021-ல் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி போஷன் சக்தி நிர்மான் (Pradhan Mantri Poshan Shakti Nirman (PM POSHAN)) பள்ளி-உணவுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் இப்போது உணவுப் பன்முகத்தன்மை மற்றும் ஊட்டச்சத்து உணர்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன. இது குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் பொது சுகாதாரத்தில் நீண்டகால முன்னேற்றங்களுக்கு அடித்தளம் அமைக்கிறது.


ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் புதிய தரவு, உணவுப் பணவீக்கம் இருந்தபோதிலும் ஆரோக்கியமான உணவுகளை மிகவும் மலிவு விலையில் மாற்றுவதில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தைக் காட்டுகிறது.


என்ன நடக்கிறது என்பது குறித்து ஒரு தீவிரமான கட்டமைப்பு சவாலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதில் பட்டினியின் அளவு குறைந்து வந்தாலும், ஊட்டச்சத்து குறைபாடு, உடல் பருமன் மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகள் அதிகரித்து வருகின்றன. இந்த போக்கு பெரும்பாலும் ஏழை நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களிடையே காணப்படுகிறது.


வேளாண் உணவு முறையில் மாற்றம் தேவை


இந்தியா தனது வேளாண் உணவு முறையை மாற்றுவதன் மூலம் இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்ய முடியும். இதன் பொருள் பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் மற்றும் விலங்கு சார்ந்த மூலப் பொருட்கள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளின் உற்பத்தி மற்றும் மலிவு விலையில் வழங்கப்பட வேண்டும். இவை பெரும்பாலும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அணுகமுடியாததாக உள்ளது. 


இது அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்புகளான குளிர்ப்பதன சேமிப்பு மற்றும் டிஜிட்டல் தளவாட அமைப்புகள் போன்றவற்றில் முதலீடு செய்வதையும், வேளாண் மற்றும் சந்தைக்கு இடையே இழக்கப்படும் உணவில் 13% குறைக்கப்படுவதையும் குறிக்கிறது. இத்தகைய இழப்புகள் நேரடியாக உணவின் கிடைக்கும் தன்மை மற்றும் மலிவு விலை இரண்டையும் குறைக்கின்றன.


கூடுதலாக, பெண்கள் தலைமையிலான உணவு நிறுவனங்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (Farmer Producer Organizations (FPO)) உள்ளிட்ட உள்ளூர் கூட்டுறவு நிறுவனங்களுக்கு இந்தியா மேலும் ஆதரவை வலுப்படுத்த வேண்டும். குறிப்பாக, காலநிலைக்கு ஏற்ற பயிர்களை பயிரிடுபவர்கள், இவை ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்.


இந்தியா அதன் வேளாண் உணவு முறைகளை மாற்றுவதற்கு அதன் டிஜிட்டல் பலன்களில் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். AgriStack, e-NAM மற்றும் புவிசார் தரவுக் கருவிகள் போன்ற தளங்கள் சந்தை அணுகலை வலுப்படுத்தலாம், விவசாயத் திட்டமிடலை மேம்படுத்தலாம் மற்றும் ஊட்டச்சத்து-உணர்திறன் தலையீடுகளின் விநியோகத்தை மேம்படுத்தலாம்.


நம்பிக்கையின் சின்னம்


ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (Food and Agriculture Organization(FAO)) குறிப்பிடுகையில், வேளாண் உணவு முறை மாற்றத்தில் இந்தியாவின் முன்னேற்றம் என்பது தேசியத் தேவைகள் மட்டுமல்ல, அவை உலகளாவிய பங்களிப்புகள் ஆகும். வளரும் நாடுகளில் முன்னணியில் உள்ள இந்தியா, டிஜிட்டல் ஆளுகை, சமூகப் பாதுகாப்பு மற்றும் தரவு சார்ந்த விவசாயம் போன்றவற்றில் அதன் கண்டுபிடிப்புகளை உலகளாவிய தெற்கில் உள்ள மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நல்ல நிலையில் உள்ளது. இந்தியாவின் அனுபவம் பசியைக் குறைப்பது சாத்தியம் மட்டுமல்ல, அரசியல் விருப்பம், புத்திசாலித்தனமான முதலீடு மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றால் ஆதரிக்கப்படும்போது அதை அளவிட முடியும் என்பதைக் காட்டுகிறது.


பசியை ஒழிப்பதில் நிலையான வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals (SDG)) அடைய இன்னும் ஐந்து ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில், இந்தியாவின் சமீபத்திய முன்னேற்றம் நம்பிக்கையை அளிக்கிறது. இருப்பினும், இந்த முன்னேற்றத்தைத் தக்கவைக்க, ஊட்டச்சத்தை வழங்குதல், மீள்தன்மையை உருவாக்குதல் மற்றும் வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.


பசிக்கு எதிரான போராட்டத்தில் நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தியா தனக்குத்தானே உணவளிக்கும் கட்டத்தை கடந்துவிட்டது. இப்போது, பசியை ஒழிக்கும் உலகளாவிய இலக்கு இந்தியாவின் பங்கைப் பெரிதும் சார்ந்துள்ளது. இந்த இலக்கை அடைவதில் அதன் தலைமை மிக முக்கியமானதாக இருக்கும்.


மாக்சிமோ டோரெரோ கல்லன் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (FAO) தலைமைப் பொருளாதார நிபுணர் ஆவார்.



Original article:

Share:

தேவையான சீர்திருத்தங்கள் : GST அமைப்பில் சீர்திருத்தங்கள் குறித்து . . .

 நுகர்வை அதிகரிக்க சில வருவாயை இழப்பது பொருளாதாரத்திற்கு உதவும்.


ஒன்றிய அரசின் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி (Goods and Services Tax(GST)) முறையில் சீர்திருத்துவதற்கான முன்மொழிவுகள் தைரியமானவை மற்றும் சரியான நேரத்தில் உள்ளன. அவை அரசாங்கம் கூறுவதுபோல், இந்த சீர்திருத்தங்கள் நடுத்தர வர்க்கத்தினருக்கும் வணிக சமூகத்திற்கும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 12% வரி வரம்பில் உள்ள 99% பொருட்களை 5% வரி விகிதத்திற்கு மாற்றுவதும், 28% வரி வரம்பில் உள்ள 90% பொருட்களை 18% விகிதத்திற்கு மாற்றுவதும் பெரும்பாலான நுகர்வோர்களின் மீதான வரி சுமையை கணிசமாக குறைக்கும். 


வரி வரம்புகளின் எண்ணிக்கையை ஒழுங்குபடுத்துவதும் ஒரே மாதிரியான பொருட்களை ஒரே வரி பிரிவில் வைப்பதும் தற்போதைய GST அமைப்பில் வணிகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளான வரிவரம்பு குழப்பத்தையும் மற்றும் வழக்குகளையும் குறைக்கும். மேலும், வரி விகித மறுசீரமைப்பு முன்மொழிவுகளில் பெரும்பாலான கவனம் இருந்தாலும், பதிவு, வருவாய் தாக்கல் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுதல் தொடர்பான நடைமுறை சீர்திருத்தங்களும் சமமாக முக்கியமானவை. 


GST-ஐ எளிமையாக்குவது என்பது குறைவான வரி விகிதங்களைப் பற்றியது மட்டுமல்ல. இது வரி செலுத்துவோருக்கு அமைப்பை எளிதாக்குவது மற்றும் குறைந்த நேரத்தை எடுத்துக்கொள்வது பற்றியது. எனவே பதிவை எளிதாக்குவது, வருவாய் தாக்கலை எளிமையாக்குவது மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுவதை விரைவுபடுத்துவது ஆகியவை ஒன்றிய அரசு தொடரும் வரவேற்கத்தக்க மேம்பாடுகளாகும். 


புதிய வருமான வரி மசோதா (Income Tax Bill) மற்றும் இந்த ஆண்டின் பட்ஜெட்டில் வருமான வரி பிரிவுகளின் மறுசீரமைப்புடன் இணைந்து, இந்த GST சீர்திருத்தங்கள் 2025-ஐ வரி சீர்திருத்தத்தில் ஒரு முக்கிய ஆண்டாக மாற்றும். இதில், நேரடி மற்றும் மறைமுக வரி இரண்டிலும்  முன்னிலைப்படுத்தும்.


இந்த மாற்றங்களிலிருந்து வருவாய் இழப்பு குறித்த அதிகாரப்பூர்வ மதிப்பீட்டை அரசாங்கம் வழங்கவில்லை. இருப்பினும், சில இழப்புகள் எதிர்பார்க்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய ரிசர்வ் வங்கி சராசரி ஜிஎஸ்டி விகிதத்தை 11.6% என மதிப்பிட்டுள்ளது. இந்த சராசரி இப்போது கடுமையாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  


எனினும், நுகர்வு அதிகரிப்பு மற்றும் வரி அடிப்படையின் விரிவாக்கம் பெரும்பாலான வருவாய் இழப்பை ஈடுசெய்யும் என்று அரசு நம்பிக்கையுடன் உள்ளது. ஏராளமான பொருட்கள் வெறும் 5% வரி விதிக்கப்படுவதால், உள்ளீட்டு வரி கடன் மோசடிகள் (input tax credit scams) மற்றும் வரி ஏய்ப்புக்கான ஊக்குவிப்புகளும் கணிசமாக அகற்றப்படும்.


ஏற்றுமதி தேவையின் அடிப்படையில் வரிவிதிப்புகளின் நிச்சயமின்மைகள் காரணமாக பலவீனமாக இருக்கும் இந்த நேரத்தில், உள்நாட்டு நுகர்வை அதிகரிக்க சில வருவாயை இழக்கும் ஆபத்தை எடுக்கும் விருப்பம் பொருளாதாரத்திற்கு நல்லது. இந்த முன்மொழியப்பட்ட வருவாய் இழப்பிற்கு மாநில அரசுகள் எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன என்பதைப் பார்க்க வேண்டும். 


அவர்கள் ஏற்கனவே 16-வது நிதி ஆணையம் (Sixteenth Finance Commission) மத்திய வரிகளில் மாநிலங்களின் பங்கை அதிகரிக்குமாறு வற்புறுத்தி வருகின்றனர். இந்த வரி குறைப்புகள் மாநிலங்களின் முக்கிய வருவாய் மூலமான பெட்ரோலியம் பொருட்கள் எந்த நேரத்திலும் விரைவில் GST இல் சேர்க்கப்படுவதை மேலும் சாத்தியமற்றதாக மாற்றும். 

அரசியல் ரீதியாக, மாநிலங்கள் இந்த வரிவிகிதக் குறைப்புகளை நேரடியாக எதிர்ப்பது கடினமாக இருக்கும். ஆனால் அதற்குப் பதிலாக அவர்கள் மீண்டும் இழப்பீடு வழங்க மத்திய அரசின் மீது அழுத்தம் கொடுக்கலாம். முக்கியமாக, மத்திய அரசு தனது வாதத்தை முன்வைக்க அடுத்த சில வாரங்களில் மாநிலங்களை அணுகும். அவர்களின் கவலைகளையும் கருத்தில் கொள்வது முக்கியம்.



Original article:

Share:

சுங்கச்சாவடி வசூல் நடைமுறைகள் எவ்வாறு சீர்திருத்தப்பட வேண்டும்? -ஜக்ரிதி சந்திரா

 நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு என்ன பரிந்துரை செய்துள்ளது? FASTags பற்றி அதில் என்ன சொல்லப்பட்டது?


தற்போதைய செய்தி: நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (Public Accounts Committee (PAC)) தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை பரிந்துரைத்துள்ளது. இந்த அறிக்கை ஆகஸ்ட் 12-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.


முக்கிய பரிந்துரைகள் என்ன?


காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.வேணுகோபால் தலைமையிலான பொதுக் கணக்குக் குழு, மூலதனச் செலவுகள் மற்றும் பராமரிப்புச் செலவுகள் முழுமையாக மீட்கப்பட்டவுடன் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தை நிறுத்த வேண்டும் அல்லது கணிசமாகக் குறைக்க வேண்டும் என்று வாதிட்டது. தற்போதைய, சுங்கச்சாவடி நடைமுறைகள், சாலையின் தரம், போக்குவரத்து அளவு அல்லது பயனரின் மலிவு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் காலவரையின்றி வசூலிக்க அனுமதிக்கின்றன என்று குழு கவலை தெரிவித்தது. செலவு வசூலைத் தாண்டி சுங்க வசூலைத் தொடர, முன்மொழியப்பட்ட தன்னிச்சையான மேற்பார்வை அலுவலரின் தெளிவான நியாயப்படுத்தல் மற்றும் ஒப்புதலுடன் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று குழு வலியுறுத்தியது. சுங்கச்சாவடி நிர்ணயம், வசூல் மற்றும் ஒழுங்குமுறை ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்வதற்காக ஒரு சிறப்பு ஒழுங்குமுறை ஆணையத்தை நிறுவுவதற்கு குழு முன்மொழிந்தது. சுங்கச்சாவடி கட்டணங்கள் தற்போது ஆண்டுதோறும் நிலையான 3% அதிகரிப்பு மற்றும் மொத்த விலைக் குறியீட்டின் பகுதி குறியீட்டுடன் அதிகரிக்கும் அதே வேளையில், உண்மையான செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு செலவுகள் அல்லது எதிர்கால சேவைத் தேவைகளுக்கு ஏற்ப இந்தக் கட்டணங்கள் நியாயமானதா என்பதை தன்னிச்சையாக மதிப்பீடு செய்ய எந்த நிறுவன வழிமுறையும் இல்லை என்று நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு குறிப்பிட்டது. சாலை கட்டுமானப் பணி நடைபெற்று, அதை முறையாகப் பயன்படுத்த முடியாவிட்டால், மக்கள் சுங்கக் கட்டணத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று குழு வலியுறுத்தியுள்ளது.


கூடுதலாக, தேவைப்படும்போது தானாகவே கட்டணங்களைத் திரும்பப் பெற அல்லது தள்ளுபடி செய்ய, தற்போதுள்ள டிஜிட்டல் FASTag முறையைப் பயன்படுத்தி, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகமும் (Ministry of Road Transport and Highways) தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் (National Highways Authority of India (NHAI)) தெளிவான, தொழில்நுட்ப அடிப்படையிலான அமைப்பை அமைக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்தது. FASTags அதிகமாகப் பயன்படுத்தப்பட்டாலும், வருடி கருவிகள் (scanner) சில நேரங்களில் சரியாக வேலை செய்யாததால் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகின்றன என்று குழு கூறியது. 


ஓட்டுநர்கள் FASTags வாங்க, ரீசார்ஜ் செய்ய அல்லது பரிமாறிக்கொள்ளக்கூடிய சுங்கச்சாவடிகளில் சேவைகளை வழங்க அவர்கள் பரிந்துரைத்தனர். திறமையான சுங்கச்சாவடி நிர்வாகம் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் சான்றுகள் அடிப்படையிலான முடிவெடுப்பதை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும், இதன் விளைவாக, நிகழ்நேர போக்குவரத்து இயக்கம், காத்திருப்பு வரிசை நீளம், தனிப்பட்ட பாதை பயன்பாடு மற்றும் திட்டமிடப்பட்ட தாமத காலங்களை ஒருங்கிணைக்கும் ஒரு நேரடி சுங்கச்சாவடி கண்காணிப்பு அமைப்பை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உருவாக்க வேண்டும் என்றும் குழு  கூறுகிறது.


சுங்கச்சாவடி கட்டணம் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?


தேசிய நெடுஞ்சாலைச் சட்டம், 1956-ன் பிரிவு 7, தேசிய நெடுஞ்சாலைகளில் வழங்கப்படும் சேவைகள் அல்லது சலுகைகளுக்கு கட்டணம் வசூலிக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.  அதே நேரத்தில் பிரிவு 9, இது தொடர்பாக விதிகளை உருவாக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. அதன்படி, பயனர் கட்டணத்தை வசூலிப்பதற்கான கொள்கை, தேசிய நெடுஞ்சாலை கட்டணம் விகிதங்கள் மற்றும் வசூல் நிர்ணயம் விதிகள், 2008ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு தற்போது வரை நடைமுறையில் உள்ளது. நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள் அமைச்சக கட்டண விதிகளின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை விகிதங்களை அடிப்படையாகக் கொண்டு பயனர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், இது கட்டுமான செலவு அல்லது அதன் மீட்புடன் தொடர்புடையது அல்ல.


ஏப்ரல் 1, 2008 முதல், ஒவ்வொரு ஆண்டும் கட்டணங்கள் 3% அதிகரித்து வருகின்றன. நெடுஞ்சாலைகளை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் மாறிவரும் செலவுகளை ஈடுகட்ட, வருடாந்திர மொத்த விலை குறியீட்டில் (Wholesale Price Index (WPI)) கட்டணங்களும் 40% அதிகரிக்கின்றன. ஒரு நெடுஞ்சாலை பொது நிதியுதவி பெற்றால் ஒன்றிய அரசால் அல்லது கட்டமைத்தல்-செயல்படுத்துதல்-பரிமாற்றம் (Build Operate Transfer (BoT)), சுங்கச்சாவடி பரிமாற்றம் (Toll-Operate-Transfer (ToT)) அல்லது உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளையின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த மாதிரிகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றினால் சலுகையாளரால் (concessionaire) கட்டணம் வசூலிக்கப்படும்.


2008-ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு திருத்தம் பயனர் கட்டணங்களை நிரந்தரமாக வசூலிக்க அனுமதித்தது. எனவே, சலுகைக் காலம் முடிந்தால், நெடுஞ்சாலை NHAI-யிடம் ஒப்படைக்கப்படும். மேலும், வசூலிக்கப்படும் கட்டணம் நேரடியாக இந்திய ஒருங்கிணைந்த நிதியத்திற்குச் (Consolidated Fund of India) செல்லும். 2005-06ஆம் ஆண்டில் ரூ.1,046 கோடியாக இருந்த சுங்க வசூல் 2023-24-ஆம்  நிதியாண்டில் ரூ.55,000 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் ரூ.25,000 கோடி இந்திய ஒருங்கிணைந்த நிதியத்திற்கும், மீதமுள்ள தொகை சலுகை பெற்ற சுங்கச்சாவடிக்கும் செல்லும்.


சுங்கச்சாவடியிலிருந்து 20 கிலோமீட்டருக்குள் வசிக்கும் பயனர்களுக்கு அவர்களின் ஆதார் அட்டை அல்லது வேறு ஏதேனும் சான்றுகள் இருந்தால் தள்ளுபடிகள் கிடைக்கும், அதன்பிறகு அவர்கள் மாதாந்திர பாஸ் ரூ.340 பெறுவார்கள். குடியரசுத்தலைவர், குடியரசு துணைத்தலைவர், பிரதமர், ஆளுநர்கள், இந்திய தலைமை நீதிபதி, பாதுகாப்பு அமைச்சக பணியாளர்கள், சீருடையில் உள்ள ஒன்றிய மற்றும் மாநில ஆயுதப்படைகள், துணை ராணுவப் படைகள் மற்றும் காவல்துறை, அவசர கால வாகனங்கள், இறுதிச் சடங்கு வேன்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக மாற்றியமைக்கப்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட 23 வெவ்வேறு பிரிவுகளுக்கும் விதிகளின் கீழ் விலக்கு அளிக்கப்படுகிறது.


அமைச்சகம் எவ்வாறு பதிலளித்தது?


சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக (Ministry of Road Transport and Highways) குழுவின் கவலைகளை ஒப்புக்கொண்டது மற்றும் பயனர் கட்டண நிர்ணய கட்டமைப்பை திருத்துவதற்காக நிதி ஆயோக் உடன் ஒரு விரிவான ஆய்வைத் தொடங்கியுள்ளதாக பொது கணக்குக் குழுவிடம் தெரிவித்தது. அமைச்சக பிரதிநிதிகள் இந்த ஆய்வின் எல்லை இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அது வாகன இயக்க செலவு, வாகன பயன்பாட்டினால் நெடுஞ்சாலைக்கு ஏற்படும் சேதம் மற்றும் பயனரின் பணம் செலுத்தும் விருப்பம் போன்ற அளவுருகளை உள்ளடக்கும் என்றும் சுட்டிக்காட்டினர். மலிவு விலை கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக, அரசு ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு வந்த வருடாந்திர FASTag pass-ஐ அறிமுகப்படுத்தியது. இது வணிக நோக்கற்ற வாகனங்களுக்கு ரூ.3,000 விலையில் கிடைக்கிறது. இது 12 மாதங்களில் 200 சுங்க சாவடி கடப்புகளுக்கு அணுகலை வழங்குகிறது — இது ஒரு சுங்க சாவடிக்கு ரூ.15 என செலவைக் குறைக்கிறது.


சுங்கச் சாவடிகளில் சீரான போக்குவரத்து ஓட்டம் தொடர்பாக, மிகச்சிறந்த FASTag வாசிப்பு கருவிகளை தானியங்கி வாகன எண் பதிவு கண்டறியும் காமிராக்களுடன் (ANPR) இணைக்கும் தடையில்லா சுதந்திரமான சுங்கக் கட்டண அமைப்பை உருவாக்கி வருவதாகவும் இது வாகனங்கள் டோல் மையங்களை நிறுத்தாமல் கடந்து செல்வதற்கு உதவுகிறது என்றும் அமைச்சகம் தெரிவித்தது.



Original article:

Share: