பிரதமரின் சுதந்திர தின உரையின் சிறப்பம்சங்கள் -ரோஷ்னி யாதவ்

 பிரதமர் நரேந்திர மோடியின் 79வது சுதந்திர தின விழா உரையானது 103 நிமிடங்கள் நீடித்தது, இது இதுவரை எந்தவொரு இந்திய பிரதமரின் சுதந்திர தின உரையிலும் மிக நீளமானதாகும். பிரதமர் மோடி, சுதந்திரத்திற்கு 88 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் நிலையை விரிவாக விளக்கியதோடு, தொழில்நுட்பம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு துறைகளில் சில முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். 



முக்கிய அம்சங்கள் :


1. பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா (PM-VBRY) : பிரதமர் மோடி இந்திய இளைஞர்களுக்காக பிரதான் மந்திரி விக்ஸித் பாரத் ரோஜ்கர் யோஜனாவைத் (Pradhan Mantri Viksit Bharat Rojgar Yojana(PM-VBRY)) தொடங்கினார். இது ரூ.1 லட்சம் கோடி திட்டமாகும். இதன் கீழ், தனியார் நிறுவனங்களில் வேலை பெறும் இளைஞர்களுக்கு அரசாங்கம் ரூ.15,000 வழங்கும் திட்டமாகும்.


PM-VBRY பல்வேறு துறைகளில் புதிய வேலைகளை உருவாக்குவதற்கு ஊக்கமளிக்கிறது. இது உற்பத்தி துறையில் சிறப்பு கவனம் செலுத்துகிறது மற்றும் பதிவுசெய்யப்பட்ட முதலாளிகளுக்கு நிதி நன்மைகளை வழங்குகிறது.


2. சுதர்சன் சக்ரா மிஷன் (Sudarshan Chakra Mission) : பிரதமர் மோடி சுதர்சன் சக்ரா திட்டத்தையும் அறிவித்தார். இது ஒரு பெரிய பாதுகாப்பு தொடர்பான முயற்சியாகும். இந்தியாவின் பாதுகாப்புத் தளங்கள், பொதுமக்கள் பகுதிகள் மற்றும் மத இடங்களை எதிரிகளின் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதே இதன் நோக்கம்.


"எதிரிகளின் எந்தவொரு தாக்குதல் முயற்சியையும் முறியடிக்க சக்திவாய்ந்த ஆயுத அமைப்பை உருவாக்க இந்தியா மிஷன் சுதர்சன் சக்ராவைத் தொடங்க உள்ளது," என்று அவர் கூறினார். 2035-ம் ஆண்டுக்குள் அனைத்து பொது இடங்களும் நாடு தழுவிய பாதுகாப்புக் கவசத்தால் மூடப்படும் வகையில், சமீபத்திய தொழில்நுட்பக் கருவிகளை ஒருங்கிணைக்க அரசு நோக்கமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.


3. அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் : தீபாவளிக்குள் சரக்கு மற்றும் சேவை வரியில் (Goods and Services Tax (GST)) அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் செய்யப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். இந்தச் சீர்திருத்தங்கள், சாமானியர்களுக்கு ‘கணிசமான’ வரிச் சலுகை அளிக்கும் என்றும், அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் மீதான வரியைக் குறைப்பதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குப் பலன் அளிக்கும் என்றும் அவர் கூறினார்.


மோடி தனது உரையில், ஜிஎஸ்டி முறை இப்போது 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது என்றும், சீர்திருத்தங்களுக்கான நேரம் வந்துவிட்டது என்றும் மோடி கூறினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜிஎஸ்டியின் அடிப்படை சீரமைப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்த சீர்திருத்தங்கள் மூலம் மக்கள் மீதான வரிச்சுமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


4. 2047-க்குள் அணுசக்தியில் பத்து மடங்கு உயர்வு : இந்தியா 10 புதிய அணு உலைகளை விரைவாகச் செய்து வருவதாகவும், 2047-க்குள் அதன் அணுசக்தித் திறனை பத்து மடங்கு அதிகரிக்க உறுதியளித்திருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார். 


அரசாங்கம் 2047-ம் ஆண்டிற்குள் 100 GW அணுசக்தி திறனை இலக்காக நிர்ணயித்துள்ளது. இது தற்போதைய 8.18 GW-ல் இருந்து பெரிய அதிகரிப்பாகும். இதை அடைவதற்காக, உள்நாட்டுத் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, வளர்ந்த இந்தியாவுக்கான (Viksit Bharat) அணுசக்தி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இது COP 21-ல் அறிவிக்கப்பட்ட இந்தியாவின் பஞ்சாமிர்த் காலநிலை செயல் திட்டத்துடனும் (Panchamrit climate action plan) இணைக்கப்பட்டுள்ளது.


குறிப்பிடத்தக்க வகையில், சூரிய அல்லது காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்கவை போலல்லாமல், அணுசக்தியானது தேவைக்கேற்ப மின் உற்பத்திக்கான நம்பகமான ஆதாரத்தை வழங்குகிறது. மேலும், வானிலை தொடர்பான குறுக்கீடுகளுக்கு இது எளிதில் பாதிக்கப்படாது.


5. ஒரு வளர்ச்சியடைந்த இந்தியாவின் அடித்தளம் மற்றும் ஒரு தன்னம்பிக்கை கொண்ட பாரதம் : பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய அமெரிக்கா விதித்த வரிவிதிப்புகளின் பின்னணியின் மத்தியில், பாதுகாப்பு, விண்வெளித் துறை, முக்கியமான தாதுக்கள், எரிசக்தி, குறைமின்கடத்திகள் முதல் உரம், மருந்து உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு என அனைத்துத் துறைகளிலும் தன்னம்பிக்கைக்கு மோடி அதிக அழுத்தம் கொடுத்தார். ஒரு வளர்ந்த இந்தியாவின் அடித்தளமும் ஒரு தன்னம்பிக்கையான பாரதமாகும்" (the bedrock of a Viksit Bharat is also a self-reliant Bharat) மற்றும் ஒரு நாடு மற்றவர்களை எவ்வளவு அதிகமாகச் சார்ந்திருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக அதன் சுதந்திரம் கேள்விக்குறியாகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.


6. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குறைமின்கடத்தி சில்லுகள் : இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குறைமின்கடத்தி சில்லுகள் (semiconductor chips) சந்தைக்கு வரும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.  குறைமின்கடத்தி திட்ட (semiconductor mission) முறையில் முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்றார். மேலும், ஆறு புதிய அலகுகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.


பெரும்பாலான நவீன குறைக்கடத்திகள் ஒருங்கிணைந்த சுற்றுகள், அவை 'சிப்ஸ்' (chips) என்றும் அழைக்கப்படுகின்றன. இவை மிகச் சிறிய மின்னணு சுற்றுகளின் தொகுப்புகள். அவற்றில் டிரான்சிஸ்டர்கள், டையோட்கள், மின்தேக்கிகள், மின்தடையங்கள் மற்றும் பல இடைத்தொடர்புகள் அடங்கும்.


குறைமின்கடத்திகள் முக்கியமாக சிலிக்கானால் ஆனவை. அவை மில்லியன் கணக்கான அல்லது பில்லியன் கணக்கான டிரான்சிஸ்டர்களைக் கொண்டுள்ளன. இந்த டிரான்சிஸ்டர்கள் சிறிய மின் சுவிட்சுகள் போல செயல்படுகின்றன. படங்கள், ரேடியோ அலைகள் மற்றும் ஒலிகள் போன்ற தரவுகளை செயலாக்க அவை ஆன் மற்றும் ஆஃப் செய்கின்றன.


குறைமின்கடத்திகள் மின்னணு சாதனங்களின் இன்றியமையாத அங்கமாகும். தகவல்தொடர்பு, கணினி, சுகாதாரம், இராணுவ அமைப்புகள், போக்குவரத்து, சுத்தமான ஆற்றல் மற்றும் எண்ணற்ற பிற பயன்பாடுகளில் முன்னேற்றங்களைச் செயல்படுத்துகிறது.


7. உயர் அதிகாரம் கொண்ட மக்கள்தொகை ஆய்வுப் பணி : பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், எல்லைப் பகுதிகளில் ஊடுருவல் மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தால் ஏற்படும் மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு அபாயங்களை எடுத்துரைத்தார். 


8. பிரத்யேக சீர்திருத்த பணிக்குழு : அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை (next-generation reforms) முன்னெடுத்துச் செல்ல பிரத்யேக சீர்திருத்த பணிக்குழுவை (Reform Task Force) உருவாக்குவதாகவும் பிரதமர் மோடி அறிவித்தார். இந்த பணிக்குழுவின் ஆணை பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவது, சிவப்பு நாடாவை விலக்குவது, நிர்வாகத்தை நவீனமயமாக்குவது மற்றும் 2047-க்குள் 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கான கோரிக்கைகளுக்கு இந்தியாவை தயார்படுத்துவதாகும்.


இந்தியா குறைமின்கடத்தி திட்டம் மற்றும் ஜிஎஸ்டி


1. இந்திய குறைமின்கடத்தி திட்டம் 2021-ல் தொடங்கப்பட்டது. இது உள்நாட்டு குறைக்கடத்தி தொழிலை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு இராஜதந்திர முயற்சியாகும். உள்நாட்டில் குறைக்கடத்தி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி திறன்களை மேம்படுத்துவது மற்றும் புதுமை, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது இதன் இலக்காகும்.


2. இந்திய குறைமின்கடத்தி திட்டம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology (MeitY)) மற்றும் பிற தொடர்புடைய அரசு அமைப்புகளின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகிறது.


சரக்கு மற்றும் சேவை வரி


1. சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) என்பது இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய பொருளாதார மற்றும் வரிவிதிப்பு சீர்திருத்தங்களில் ஒன்றாகும்.


2. இது 2017-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. பழைய வரி முறையை எளிமைப்படுத்துவதே இதன் நோக்கமாகும், அங்கு மத்திய மற்றும் மாநிலங்கள் இரண்டும் பலவிதமான வரிகளை வசூலித்தன. இந்த முறையை சீரானதாக மாற்றுவதே ஜிஎஸ்டியின் நோக்கமாகும்.


3. ஜிஎஸ்டி என்பது அடிப்படையில் ஒரு நுகர்வு வரியாகும், மேலும் இது இறுதி நுகர்வு புள்ளியில் விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரிவிதிப்பில் பயன்படுத்தப்படும் கொள்கை, இலக்கு கொள்கையாகும். இது மதிப்பு கூட்டலின் மீது விதிக்கப்படுகிறது மற்றும் வரி விலக்குகளை வழங்குகிறது. இதன் விளைவாக, இறுதி நுகர்வோர் மீதான வரிச்சுமையை அதிகரிகக் கூடிய வரி மீது வரி என்று அழைக்கப்படும் அடுக்கடுக்கான விளைவைத் தவிர்க்கிறது.



Original article:

Share: