நெகிழி (plastic) பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது குறித்த பேச்சுக்கள் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட வேண்டும்.
நெகிழி மாசுபாட்டை ஒழிப்பதற்கான ஒரு உலகளாவிய ஒப்பந்தத்திற்கு எதிரான உலகளாவிய எதிர்ப்பு பிடிவாதமாகவும் (stubborn) பெரியதாகவும் இருந்து வருகிறது. கடந்தவாரம், நெகிழி மாசுபாட்டை நிவர்த்தி செய்வதற்கான ஒரு ஒப்பந்தத்தில் உறுப்பு நாடுகளை உடன்படச் செய்ய ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (United Nations Environment Programme (UNEP)) 2022 முதல் ஆறாவது முறையாக முயற்சித்தது. இருப்பினும், அது மீண்டும் அதே பழைய எதிர்ப்பை எதிர்கொண்டது. நெகிழி மாசுபாட்டை விரிவாக நிவர்த்தி செய்வதற்கு நெகிழி உற்பத்தியையே ஒழிப்பது அவசியமா என்பது குறித்து முக்கிய நாடுகளின் கூட்டணிகள் மத்தியில் கருத்து வேறுபாடு இருந்தது. பாலிதீன் பைகள் மலிவானவை மற்றும் பயனுள்ளவை என்றாலும், நகரங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளன என்பதை அனைத்து நாடுகளும் ஒப்புக்கொள்கின்றன. இந்தியா 3.4 மில்லியன் டன் (million tonnes (MT)) நெகிழிக் கழிவுகளை உருவாக்குகிறது. ஆனால், அதில் 30% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. நெகிழி நுகர்வு 2016-17-ஆம் ஆண்டில் 14 மில்லியன் டன்னிலிருந்து 2019-20ஆம் ஆண்டில் 20 மில்லியன் டன்னிற்கு மேல் 9.7% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (Compounded Annual Growth Rate (CAGR)) உயர்ந்துள்ளது. இந்தியாவில் கோப்பைகள், குடிநீர் குழாய், கரண்டிகள் போன்ற 20 ஒற்றைப் பயன்பாட்டு நெகிழி பொருட்களுக்கு உற்பத்தித் தடை உள்ளது. நெகிழிப் பை தடைகள் காகிதம் மற்றும் துணி பைகளை (cloth bags) அதிகமாகப் பயன்படுத்த வழிவகுத்தன. ஆனால், அவை கழிவு மேலாண்மை அல்லது மறுசுழற்சி செய்வதை பெரிதாக மேம்படுத்தவில்லை. உலகளவில், ஆண்டு தோறும் 430 மில்லியன் டன்களுக்கும் அதிகமான நெகிழி உற்பத்தி செய்யப்படுகிறது. மூன்றில் இரண்டு பங்கு விரைவாக கழிவுகளாக மாறுகிறது. இதில், 46% குப்பைக் கிடங்குகளுக்குச் செல்கிறது. மேலும், 22% குப்பைகளாக மாறுகிறது. 2019ஆம் ஆண்டில், புதைபடிவ கச்சா எண்ணெயின் வழித்தோன்றலான நெகிழி, 1.8 பில்லியன் மெட்ரிக் டன் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை (greenhouse gas emissions) அல்லது உலகளாவிய மொத்தத்தில் சுமார் 3.4%-ஐ உருவாக்கியது.
எனவே, நெகிழியை ஒரு கழிவு மேலாண்மை பிரச்சனையாக பார்க்கலாம். மேலும், கழிவுகளைச் சேகரித்து மறுசுழற்சி செய்வதில் சந்தை சிறப்பாகச் செயல்பட ஊக்கத்தொகைகளை மேம்படுத்துவதன் மூலம் இந்த பிரச்சனையை தீர்க்க முடியும். இருப்பினும், பல ஆண்டுகளாக இந்த வழிகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறைந்த லாபத்துடன் இருப்பதாகச் சுட்டிக்காட்டும் நாடுகள் உள்ளன. அதற்கு மேல், மக்காத நெகிழி, மனித, விலங்கு மற்றும் கடல் உணவு அமைப்புகளில் நுழைகிறது என்பதற்கான சான்றுகள் அதிகம் உள்ளன. தீவு நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் தங்கள் கரைகளில் கழுவப்படும் நெகிழிக் கழிவுகளால் மூழ்கடிக்கப்படுகின்றன. பின்னர், மைக்ரோபிளாஸ்டிக் எனப்படும் சிறிய நெகிழித் துண்டுகளும் தீங்கு விளைவிக்கும். எனவே, நெகிழிப் பயன்பாட்டை ஆரம்பத்திலிருந்தே குறைப்பதே இதற்கு சிறந்த தீர்வாகும். இருப்பினும், நெகிழியின் நச்சுத்தன்மை குறித்து அனைத்து நாடுகளும் ஒருமித்த கருத்து தெரிவிக்கவில்லை. எனவே, ஒப்பந்தத்துடன் தொடர்புடைய பேச்சுவார்த்தைகளில், உற்பத்தியைக் குறைப்பதற்கான அழைப்புகளை வர்த்தகத் தடைகளை விதிப்பதற்கும், பொதுவான வரி நிச்சயமற்ற சூழலுக்குச் சேர்ப்பதற்கும் ஒரு யுக்தியாக அவர்கள் கருதுகின்றனர். இது போன்ற பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் நாடுகள் அதிக நம்பிக்கையை வளர்த்து, திறந்த மனதுடன் ஒருவருக்கொருவர் கேட்காவிட்டால், அதிகக் கூட்டங்களை நடத்துவது பயனற்றதாகவே இருக்கும். ‘பொது நன்மை’ (common good) குறித்து அனைவரும் ஒப்புக்கொண்டதாகக் கருதி, நாடுகள் சுற்றுச்சூழல் தீர்மானங்களை எளிதாக நிறைவேற்றக்கூடிய காலம் முடிந்துவிட்டது.