இது உற்பத்தித்திறனை அதிகரிப்பது மட்டும் இல்லாமல், முறைசாரா தொழிலாளர்களுடன் ஒப்பிடும்போது ஊதிய இடைவெளியைக் குறைக்கவும் உதவும்.
கடந்த 10 ஆண்டுகளில் 17 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக அரசாங்கம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. வேலைவாய்ப்பு உருவாக்கம் முக்கியமானது என்றாலும், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா $36 டிரில்லியன் பொருளாதாரமாக மாற, முறையான மற்றும் முறைசாரா தொழிலாளர்களுக்கு இடையிலான உற்பத்தித்திறனில் உள்ள பெரிய இடைவெளியைக் குறைக்க வேண்டும்.
2022-23ஆம் ஆண்டு தொழில்துறை கணக்கெடுப்பு (Annual Survey of Industries (ASI)) அறிக்கை மற்றும் 2022-23ஆம் ஆண்டு இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of Unincorporated Sector Enterprises (ASUSE)) அறிக்கையின்படி, முறைசாரா தொழில்துறை தொழிலாளர்கள் ஆண்டுக்கு ரூ.11.9 லட்சம் மொத்த மதிப்பு கூட்டப்பட்ட (Gross Value Added (GVA)) வருமானத்தை ஈட்டுகிறார்கள். அதே நேரத்தில் முறைசாரா தொழிலாளர்கள் ரூ.1.4 லட்சம் மட்டுமே உற்பத்தி செய்கிறார்கள்.
இது முறையான மற்றும் முறைசாரா வேலைவாய்ப்புக்கிடையே இந்த பரந்த உற்பத்தித் திறன் இடைவெளி, வருமான வளர்ச்சி மற்றும் பொருளாதார உள்ளடக்கம் இரண்டையும் பின்னுக்குத் தள்ளுகிறது. இந்தியாவின் பொருளாதார இடைவெளியைக் குறைக்க, தொழிலாளர் சந்தையில் ஒரு பெரிய மாற்றம் தேவை. அதிக உற்பத்தித்திறனை சிறந்த ஊதியங்களுடன் இணைத்தல், திறன்களை வேலை வாய்ப்புகளுடன் பொருத்துதல் மற்றும் முறைசாரா வேலைத் துறையை சீர்திருத்துதல் போன்ற பணிகளை செய்ய வேண்டும்.
உற்பத்தித் திறன் இடைவெளி:
2022-23ஆம் ஆண்டு தொழில்துறை கணக்கெடுப்பு, முறையான தொழில்துறை துறையில் ஒரு தொழிலாளிக்கான மொத்த மதிப்பு கூட்டப்பட்ட அளவு ஆண்டுக்கு ரூ.12 லட்சம் என மதிப்பிடுகிறது. இதற்கு முற்றிலும் மாறாக, ASUSE-ன் தரவுகள் முறைசாரா துறையில் ஒரு தொழிலாளிக்கான வருடாந்தர GVA வெறும் சுமார் ரூ.1.5 லட்சம் என்று காட்டுகிறது. உற்பத்தித் திறனில் எட்டு மடங்கு இடைவெளி உள்ளது.
இந்தியாவின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சமாக இருந்தால், பெரும்பாலான தொழிலாளர்கள் இன்னும் குறைந்த ஊதியம் பெறும் முறைசாரா வேலைகளில் இருப்பதைக் காட்டுகிறது. கடந்த ஆண்டு, தோராயமான மதிப்பீட்டின் படி, 91% தொழிலாளர்கள் முறைசாரா துறையில் உள்ளனர். அதே நேரத்தில் 9 சதவீதம் பேர் மட்டுமே முறையாக வேலை செய்கிறார்கள்.
இந்த மதிப்பீடு பொருளாதாரத்தை எளிமையாக்குகிறது. சேவைகள், பொது நிர்வாகம், மற்றும் பிற முறையான தொழிலல்லாத துறைகளைத் தவிர்க்கிறது என்றாலும், இது முறையான மற்றும் முறைசாரா தொழிலாளர்களுக்கு இடையிலான உற்பத்தித்திறனில் உள்ள பெரிய இடைவெளியை இன்னும் தெளிவாகக் காட்டுகிறது.
ஊதியங்கள் உற்பத்தித்திறனைப் பின்பற்ற வேண்டும். ஆனால் Neoclassical economic கோட்பாடு போட்டியுள்ள சந்தைகளில், ஊதியங்கள் தொழிலின் குறை உற்பத்திக்குச் சமமாக இருக்கும் என வாதிடுகிறது. ஒரு தொழிலாளி உற்பத்தி செயல்முறையில் அவர்/அவள் சேர்ப்பதுதான் ஊதியம் பெறுகிறார்.
இருப்பினும், அதிக வேலையின்மை மற்றும் ஒரு பெரிய ‘தொழிலாளர்களின் இருப்பு இராணுவம்’ (reserve army of labour) உள்ள பொருளாதாரங்களில் இந்த சமநிலை பெரும்பாலும் சீர்குலைக்கப்படுகிறது. இது கார்ல் மார்க்ஸால் பயன்படுத்தப்பட்டது. இதுபோன்ற அமைப்புகளில், உற்பத்தித்திறன் அதிகரித்தாலும், அதிகப்படியான தொழிலாளர் வழங்கல் ஊதியங்களில் கீழ்நோக்கிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
மேலும், இந்தியாவில் 42% தொழிலாளர்கள் இன்னும் விவசாயத்தில் உள்ளனர். ஆனால், அது பொருளாதாரத்தில் 18% மட்டுமே உள்ளது என்று 2024-25ஆம் ஆண்டு பொருளாதார கணக்கெடுப்பு கூறுகிறது. இந்த இடைவெளி பல தொழிலாளர்கள் தங்கள் பங்களிப்பு சிறிதளவு அல்லது எந்த மதிப்பையும் சேர்க்காத வேலைகளில் இருப்பதைக் காட்டுகிறது. வேலை உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கவோ அல்லது அதிக ஊதியத்தை நியாயப்படுத்தவோ இல்லை.
முறைப்படுத்தல் ஏன் கொள்கை முன்னுரிமையாக இருக்க வேண்டும்:
தேசிய உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும், ஊதியத்தை உற்பத்தியுடன் இணைப்பதற்கும் தொழிலாளர்களை முறையான நிலைக்குக் கொண்டுவருவது மிகவும் முக்கியம். முறைப்படுத்தல் (Formalisation) சமூகப் பாதுகாப்பு, நிலையான வேலைவாய்ப்பு, செயல்படுத்தக்கூடிய ஒப்பந்தங்கள் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் ஊதிய முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறுகளை அணுக உதவுகிறது.
e-Shram, ஊழியர் மாநில காப்பீட்டுக் கழகம் ‘(Employees' State Insurance Corporation (ESIC)) மற்றும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees’ Provident Fund Organisation (EPFO)) போன்ற கொள்கை கருவிகள் அனைவருக்குமானதாக மாற்றப்பட வேண்டும்.
அதே நேரத்தில், சிறு நிறுவனங்கள் மற்றும் நிகழ்ச்சித் தளங்கள் முறையான ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்வதற்கு எளிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் வரிச் சலுகைகள் போன்ற சலுகைகள் தேவைப்படுகிறது. தேசிய மற்றும் துணை தேசிய மட்டங்களில் "முறைப்படுத்தல் குறியீடு" (Formalisation Index) மூலம் இந்த மாற்றத்தைக் கண்காணிப்பது முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், தடைகளை அடையாளம் காணவும், சீர்திருத்தங்களை ஊக்குவிக்கவும் உதவும்.
திறன்-உற்பத்தித்திறன் இணைப்பை சரிசெய்தல்:
முறைப்படுத்தல் மட்டும் போதுமான நடவடிக்கையாக இருக்காது. உற்பத்தித்திறன் மேம்பாட்டிற்கு ஒரு பெரிய தடையாக நாட்டின் கடுமையான திறன் பற்றாக்குறை உள்ளது. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் தொடர்பான தேசிய கொள்கையின்படி, இந்தியாவின் பணியாளர்களில் 4.7 சதவீதம் பேர் மட்டுமே முறையான திறமையானவர்கள், அமெரிக்காவில் 52 சதவீதம், ஜப்பானில் 80 சதவீதம் மற்றும் தென் கொரியாவில் 96 சதவீதம் பேர் உள்ளனர். இந்த பொருத்தமின்மை, தொழிலாளர்கள் அதிக உற்பத்தித்திறன் கொண்ட பணிகளுக்கு, குறிப்பாக சேவைகள் மற்றும் உற்பத்தித் துறைகளுக்குச் செல்வதைத் தடுக்கிறது.
தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (National Skill Development Corporation (NSDC)) மற்றும் தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் (Industrial Training Institutes (ITIs)) குறிப்பாக ஊரக மற்றும் சிறு நகர்ப்புற பகுதிகளில் அதிகரிக்கப்பட வேண்டும். டிஜிட்டல் சேவைகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் பசுமை தொழில்நுட்பங்கள் போன்ற வளர்ந்து வரும் துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பாடத்திட்டங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். பயிற்சி பொருத்தமானதாகவும் உண்மையான வேலைவாய்ப்புக்கு வழிவகுக்கும் என்பதையும் உறுதி செய்வதற்கு வலுவான தொழில்-கல்வி கூட்டாண்மை முக்கியமாகும்.
புதுமை மூலம் உற்பத்தித்திறனுடன் ஊதியத்தை சீரமைத்தல்:
ஊதியங்களை உற்பத்தித் திறனுடன் சிறப்பாக இணைக்க இந்தியா செயல்திறன் அடிப்படையிலான ஊதிய மாதிரிகளை பாரிசோதித்துப் பார்க்க வேண்டும். மின்னணுவியல், நெசவு, மற்றும் வாகன உதிரி பாகங்கள் போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில், நிறுவனங்கள் இழப்பீட்டை உற்பத்தி தரம் அல்லது செயல்திறனுடன் இணைக்க முடியும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS)) போன்ற பொது திட்டங்கள் கூட சிறிய, செயல்திறன்-இணைக்கப்பட்ட சலுகைகளை அறிமுகம் செய்யலாம். தொழிலாளர் பாதுகாப்புகள் சமரசம் செய்யப்படாத வரை அந்த பணிகளை செய்யலாம்.
இந்த மாதிரிகள் முதலாளிகள், அரசுகள், மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகளிடையே ஒருமித்த கருத்து மூலம் உருவாக்கப்பட வேண்டும் மற்றும் செயற்கைப் நுண்ணறிவு மற்றும் இணைய வலையமைப்பின் பொருட்கள் போன்ற டிஜிட்டல் கருவிகளால் ஆதரிக்கப்பட வேண்டும். இவை நிகழ்நேரத்தில் உற்பத்தித் திறனை புறநிலையாக அளவிட உதவும்.
Aatmanirbhar Skilled Employee Employer Mapping (ASEEM)) மற்றும் DigiLocker போன்ற தளங்கள் ஊதிய வரலாறு, திறமை சான்றிதழ்கள், மற்றும் தொழில் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் ஒருங்கிணைந்த தொழிலாளர் விபரக்குறிப்புகளைக் கட்டமைக்க உதவும்.
மக்கள்தொகை ஈவுத்தொகையைப் பயன்படுத்துதல்:
இந்தியாவின் மக்கள்தொகை நன்மை ஒரு மகத்தான வாய்ப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஆனால், தொழிலாளர் சக்தி குறைந்த உற்பத்தித் திறன், முறைசாரா வேலைவாய்ப்பில் சிக்கித் தவித்தால் இது ஒரு பொறுப்பாகவும் மாறலாம். ஊதிய வளர்ச்சி இல்லாமல் பொருளாதார வளர்ச்சி என்பது விரிவடையும் சமத்துவமின்மை, சமூக அமைதியின்மை மற்றும் அரசியல் பின்னடைவுக்கு வழிவகுக்கிறது.
வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமென்றால், மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஊதியங்கள் உயர வேண்டும். இதற்கு மறுபகிர்வு (redistribution) மட்டுமல்ல, மாற்றமும் (transformation) தேவைப்படுகிறது. ஒவ்வொரு தொழிலாளியின் சராசரி உற்பத்தித்திறனை உயர்த்துவதும், பொருளாதாரத்தில் அவர்களுக்கு நியாயமான பங்கைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
முறைசாரா நிலையிலிருந்து முறைசாரா நிலைக்கு மாறுவது எளிதானதாக இருக்காது. இதற்கு முதலீடு, நிறுவன சீர்திருத்தம், மற்றும் அரசியல் விருப்பம் தேவைப்படும். இருப்பினும், செயலற்ற தன்மையின் காரணமாக அதற்கான விலை மிக அதிகம். முறைப்படுத்தல் இல்லாமல், இந்தியா குறைந்த வருமான சூழலில் சிக்கும் அபாயம் உள்ளது.
அங்கே ஒரு சிறிய முறையான துறை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை இயக்கும் அதேசமயம் பெரும்பான்மையான தொழிலாளர்கள் அதன் பலன்களிலிருந்து விலக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். முறைப்படுத்தல், அதிக உற்பத்தித்திறன் மற்றும் தெளிவான ஊதியங்களுடன் வேலைகளை முறைப்படுத்துவது பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல நாட்டின் முன்னேற்றத்திற்கும் அவசியமானதாக ஆகும்.
புது டெல்லியை தளமாகக் கொண்ட ஒரு கொள்கை சிந்தனைக் குழுவான பஹ்லே இந்தியா அறக்கட்டளையில் (Pahle India Foundation) குந்தலா ஒரு மூத்த உறுப்பினராகவும், சம்ரிதி ஒரு ஆராய்ச்சி கூட்டாளராகவும் உள்ளார்.