தற்போதைய செய்தி?
கணிச்சார், கண்ணூரிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ளது. இது இந்தியாவின் முதல் கிராம பஞ்சாயத்து ஆகும். இங்கே காலநிலை உணர்திறனை அதிகரிப்பதற்கும் மக்களின் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கும் நேரடி ஆய்வக அணுகுமுறை (living lab approach) ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் தொடர்ச்சியான நிலச்சரிவுகளில் மூன்று பேர் உயிரிழந்து 36 ஹெக்டேர் விவசாய நிலம் அழிக்கப்பட்ட இந்த கிராமத்திற்கு இது ஒரு ஆறுதல் தரக்குரிய செய்தியாக உள்ளது.
முக்கிய அம்சங்கள்:
1. நேரடி ஆய்வக அணுகுமுறை (living lab approach) என்பது உண்மையான உலக அமைப்புகளை ஆராய்ச்சி மற்றும் புதுமையுடன் ஒருங்கிணைத்து தீர்வுகளை உருவாக்கி சோதிப்பதற்கான ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு ஆகும். முதலில் நெதர்லாந்தில் உருவாக்கப்பட்ட இந்த அணுகுமுறை, உண்மையான உலக தீர்வுகளைக் கண்டுபிடிக்க அரசாங்கம், நிபுணர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் குடிமைச் சமூகம் உட்பட பல பங்குதாரர்களின் ஈடுபாட்டால் குறிக்கப்படுகிறது.
2. இது கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (Kerala State Disaster Management Authority (KSDMA)) மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதன் ஒரே நோக்கம் பஞ்சாயத்தில் உள்ள 4,600-க்கும் மேற்பட்ட வீட்டு உரிமையாளர்களை இயற்கைப் பேரிடர்களுக்கு எதிராக வலுவாக்குவதாகும்.
3. நேரடி ஆய்வக அணுகுமுறை மக்களை நிலையான இயக்க நடைமுறைகள், அவசர உதவி அமைப்பு, வெளியேறும் வழிகள் மற்றும் பாதிப்புகள் பற்றி நன்கு அறிந்தவர்களாக்கியுள்ளது. அதிக உள்ளூர்மயமாக்கல் (Hyperlocalisation) என்றால் எச்சரிக்கைகள் மற்றும் பதில்கள் அந்த இடத்தின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்படுவது.
4. அனைத்து வீடுகளுக்கும் மழைப்பொழிவு, காற்றின் வேகம் மற்றும் வெப்பநிலை போன்ற தரவுகளைச் சேகரிக்க ஒரு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தரவுகளைச் சரிபார்க்கும் மக்கள் வார்டு அளவிலான புலன குழுக்கள் (WhatsApp groups) மூலம் மற்றவர்களுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
5. நிலச்சரிவு ஏற்படக்கூடிய பஞ்சாயத்தில் உள்ளூர் வானிலை தரவுகளை வழங்க கிராமத்தில் தற்போது ஒரு தானியங்கி வானிலை நிலையம் (automatic weather station) உள்ளது. கிராமத்தின் 13 வார்டுகளிலும் 12 நிலையங்களைச் சேர்க்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
6. உலக வானிலை அமைப்பின் கூற்றுப்படி, தானியங்கி வானிலை நிலையம் ((automatic weather station (AWS)) என்பது வானிலை நிகழ்வுகளை பதிவு செய்யது தானாகவே தகவல்களை சேகரிக்கும் ஒரு நிலையமாகும். ஒரு தானியங்கி வானிலை நிலையம் காற்று உணரிகள், வெப்பநிலை மற்றும் ஈரப்பத உணரிகள், அழுத்தம் உணரிகள் மற்றும் மழை உணரிகள் போன்ற நான்கு முக்கிய உணரிகளைக் கொண்டுள்ளது.
7. இந்த பஞ்சாயத்தில் விரைவில் நிலச்சரிவு எச்சரிக்கை அமைப்பும்(early landslide warning system) இருக்கும். ரூர்க்கியில் உள்ள மத்திய கட்டடக் கட்டுமான ஆராய்ச்சி நிறுவனத்துடன் (CSIR)) இணைந்து ரூர்க்கியால் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தால் உருவாக்கப்பட்டு அடுத்த மாதம் நிறுவப்பட இருக்கும் இந்த அமைப்பு, களத்திலிருந்து தகவல்களைச் சேகரிக்க உள்நாட்டில் உருவாக்கப்பட்ட உணர்திறன் கருவிகளையும் நிலச்சரிவு ஆரம்பகால எச்சரிக்கை அமைப்புக்காக செயற்கை நுண்ணறிவு/இயந்திர கற்றல் மாதிரியையும் (Artificial Intelligence/Machine Learning model) கொண்டிருக்கும்.
8. ஆரம்பகால எச்சரிக்கை அமைப்புகள் (Early Warning Systems (EWS)) நிலச்சரிவு நிகழ்வின் சாத்தியக்கூறுகளைக் கணிப்பது, தகவல்களைப் பரப்புவது மற்றும் சரியான நேரத்தில் பதிலளிப்பதை சாத்தியமாக்குவது போன்றவைகளை கண்காணிக்கும். இவை பிராந்தியம் சார்ந்ததாகவோ அல்லது தனிப்பட்ட சரிவுகளை இலக்காகக் கொண்டதாகவோ இருக்கலாம்.
9. சூறாவளி போன்ற சில இயற்கை நிகழ்வுகளுக்கு எதிராக தன்னைத் தயார்படுத்திக் கொள்ளவும் பாதுகாத்துக் கொள்ளவும் இந்தியா நல்ல முன்னெச்சரிகை நடவடிக்கைகளை செய்துள்ளது. இருப்பினும், நிலச்சரிவுகள் ஒரு பலவீனமான புள்ளியாக இருக்கின்றன.
குறிப்பிடத்தக்க வகையில், இந்தியப் புவியியல் ஆய்வகத்தின் (Geological Survey of India (GSI)) முன்முயற்சியின் பேரில், தேசிய நிலச்சரிவு முன்கணிப்பு மையம் (National Landslide Forecasting Centre) ஜூலை 2024இல் தொடங்கப்பட்டது. இது நிலச்சரிவுகளுக்கான பேரிடர் எதிர்ப்பு சக்தியில் ஒரு முக்கியமான படிநிலையாகும்.
நிலச்சரிவுகளும் அவற்றால் இந்தியா எதிர்கொள்ளும் பாதிப்புகள்
1. நிலச்சரிவுகள் என்பது பொதுவாக செங்குத்தான சரிவுகளைக் (steep slopes) கொண்ட மலைப்பகுதிகளில் நிகழும் இயற்கை நிகழ்வுகள் ஆகும். ஒரு நிலச்சரிவின் போது, பெரிய அளவிலான பாறைகள், கற்பாறைகள், தளர்வான சேறு, மண் மற்றும் குப்பைகள் போன்றவை மலைப்பகுதிகளில் கீழே சரிந்து, அதிக வேகத்தைப் பெற்று அடிக்கடி தாவரங்கள் அல்லது கட்டடங்களையும் தன்னுடன் அழைத்துச் செல்கின்றன.
2. நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தைத் தூண்டக்கூடிய கடுமையான மழைப்பொழிவு போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கையில் நிலையான அதிகரிப்புடன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (Indian Space Research Organisation (ISRO)) 2023இல் "இந்தியாவின் நிலச்சரிவு வரைபடம்" (Landslide Atlas of India) என்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய வரைபடத்தில், வரைபடமாக்கப்பட்ட நிலச்சரிவுகள் கடந்த கால நிகழ்வுகள் அடிப்படையிலும் பருவகாலத்தின் அடிப்படையிலும் உருவாக்கப்ட்டதாகும்.
3. பனி மூடிய பகுதிகளைத் தவிர்த்து, நாட்டின் புவியியல் நிலப்பரப்பில் (0.42 மில்லியன் சதுர கிமீ) 12.6 சதவீதம் நிலச்சரிவுகளுக்கு ஆளாகக்கூடியதாக உள்ளன. நிலச்சரிவுகளில் 66.5 சதவீதம் வடமேற்கு இமயமலையிலிருந்தும், 18.8 சதவீதம் வடகிழக்கு இமயமலையிலிருந்தும், 14.7 சதவீதம் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்தும் பதிவாகியுள்ளன.
4. 2019ஆம் ஆண்டு ஜூலை மாத நிலவரப்படி, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority (NDMA)) நிலச்சரிவுகளுக்கு ஆளாகக்கூடிய மாநிலங்களுக்கு குறிப்பிட்ட நிலச்சரிவு தணிப்புக்காக நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க நிலப் பதிவு மேலாண்மை அமைப்பை (Land Records Management System (LRMS)) தொடங்கியது. LRMS என்பது நிலச்சரிவு கண்காணிப்பு, விழிப்புணர்வு உருவாக்கம் மற்றும் திறன் மேம்பாடு/பயிற்சி போன்றவற்றுடன் சரிவு நிலைப்படுத்தலின் பல்வேறு முறைகளின் பயன்பாட்டின் மூலம் நிலச்சரிவு சிகிச்சை நடவடிக்கைகளின் நன்மைகளை வெளிக்காட்ட தொடங்கப்பட்ட ஒரு முன்னோடித் திட்டமாகும்.
5. தேசிய நிலச்சரிவு அபாய மேலாண்மை உத்தியானது (National Landslide Risk Management Strategy) செப்டம்பர் 27, 2019 அன்று இந்த அறிவிப்பை வெளியிடப்பட்டது.
இந்த உத்தி ஆபத்து வரைபடமாக்கல், கண்காணிப்பு மற்றும் ஆரம்பகால எச்சரிக்கை அமைப்புகள், விழிப்புணர்வு திட்டங்கள், திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி, ஒழுங்குமுறைகள் மற்றும் கொள்கைகள், நிலச்சரிவுகளின் நிலைப்படுத்தல் மற்றும் தணிப்பு போன்ற நிலச்சரிவு பேரிடர் அபாய குறைப்பு மற்றும் மேலாண்மையின் அனைத்து கூறுகளையும் நிவர்த்தி செய்கிறது.