அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்குவதற்கு ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்ட திருத்தம்: இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் முன்பு கூறியது என்ன? -அமல் ஷேக், வினீத் பல்லா

 ஒரு அமைச்சரை எப்போது பதவியில் இருந்து நீக்க முடியும்? அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட திருத்தம் தற்போதைய நிலையை எவ்வாறு மாற்றுகிறது? சட்டம் மற்றும் நீதி தொடர்பான என்னென்ன கேள்விகள் இதில் அடங்கும். மேலும், உச்ச நீதிமன்றமும் சட்ட ஆணையமும் இதற்கு முன்பு என்ன கூறியுள்ளன?


ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, குறைந்தது 30 நாட்கள் தொடர்ந்து தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ஒன்றிய அல்லது மாநில அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் குறிப்பிடத்தக்க அரசியலமைப்பு திருத்தத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.


130வதுஅரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா, 2025 மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான முன்மொழியப்பட்ட மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் தொடர்புடைய இரண்டு சட்டத் திருத்தங்கள் பரிசீலனைக்காக நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழுவுக்கு (joint committee of Parliament)  அனுப்பப்பட்டுள்ளது.

திருத்தம் என்ன முன்மொழிகிறது?


இந்த மசோதா அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 75, 164 மற்றும் 239AA பிரிவுகளில் திருத்தங்களை முன்மொழிகிறது. அவை முறையே ஒன்றிய அமைச்சர்கள் குழு, மாநிலங்களில் உள்ள அமைச்சர்கள் குழு மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அமைச்சர்களைக் கையாள்கின்றன.


இந்த விதிகளில் ஒரு புதிய பிரிவு சேர்க்கப்படும்: ஒர் அமைச்சர், பதவியில் இருக்கும் போது, தொடர்ந்து 30 நாட்களுக்கு கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால், அந்த நேரத்தில் நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்தின் கீழும் ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றத்தை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டால், அவர் காவலில் எடுக்கப்பட்ட 31 நாளுக்குள் பிரதமரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவரால் அவரது பதவியில் இருந்து நீக்கப்படுவார்.


அமைச்சர் காவலில் இருந்து விடுவிக்கப்படும்போது இந்த பதவி நீக்கம் ரத்து செய்யப்படலாம். முதலமைச்சர்களும் பிரதமரும் முன்மொழியப்பட்ட இந்த சட்டத்தின் வரம்பிற்குள் இடம் பெறுவார்கள்.


மசோதாவின் நோக்கங்கள் மற்றும் காரணங்கள் அறிக்கையின்படி (Statement of Objects and Reasons), கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட ஒர் அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஒரு சட்டம் தேவை. அத்தகைய அமைச்சர்கள் அரசியலமைப்பு மதிப்புகள் மற்றும் நல்லாட்சியைத் தடுக்கலாம். இது அரசியலமைப்பின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் குறைக்கலாம்.

 

அரசியலமைப்புத் திருத்தத்திற்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பெரும்பான்மை தேவை மற்றும் வாக்களிக்க வேண்டும்.


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 8 இன் கீழ், (Representation of the People Act, 1951, (RPA)) சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடவோ அல்லது சில குற்றவியல் குற்றங்களுக்காக பதவியில் தொடரவோ தகுதியற்றவர்கள் மற்றும் குறைந்தது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுவார்கள்.


முன்மொழியப்பட்ட சட்டத்திருத்தம், குறிப்பிட்ட காலம் காவலில் கழித்த பின்னர் ஒரு அமைச்சரை நீக்குவது குறித்து கையாள்கிறது. அமைச்சர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து (மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை கையாளும்) வேறுபட்ட தகுதிகள் இல்லை. ஆனால், அவர்களுக்கு வெவ்வேறு பொறுப்புகள் உள்ளன.


மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில், தகுதிநீக்கத்திற்கான அளவுகோல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையாகும் (conviction). மேல்முறையீட்டில் உயர் நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்தால் தகுதி நீக்கத்தை நிறுத்தி வைக்கலாம்.


இந்தியாவின் அரசியலமைப்பு திட்டம் குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி என்ற அனுமானத்தை கருத்தில் கொள்கிறது மற்றும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் பொறுப்பை அரசுத் தரப்பின் மீது வைக்கிறது. காவல்துறையினர் கைது செய்த 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கின்றனர். அதன் பின்னர், நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை முடிவு செய்து, விசாரணை தொடங்குகிறது. இது விடுதலை அல்லது தண்டனையில் முடியலாம்.

முன்மொழியப்பட்ட மசோதா, ஒர் அமைச்சர் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக 30 நாட்கள் சிறையில் வைக்கப்பட்டால் அவரை நீக்க முடியும் என்று கூறுகிறது. ஆனால், கைது என்பது விசாரணையின் முதல் படி மட்டுமே என்பதால், ஒருவரை நீக்குவதற்கு இதைக் காரணமாகக் கூறுவது நியாயம் மற்றும் சரியான சட்ட செயல்முறை குறித்த கவலைகளை எழுப்புகிறது.

ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் எப்போது தகுதியற்றவராகலாம் என்ற விவாதம் என்னவாக இருந்துள்ளது? 


அரசியலில் குற்றமயமாக்கல் பிரச்சனை அதிகரித்து வருவதால், ஒரு சட்டமன்ற உறுப்பினர் குற்றவாளி என நிரூபிக்கப்படுவதற்கு முன்பே தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று பலர் நம்புகிறார்கள்.


தண்டனை வழங்குவதில் ஏற்படும் நீண்ட தாமதம் தகுதி நீக்கத்தை பயனற்றதாக்குகிறது என்று சிலர் வாதிடுகின்றனர். செப்டம்பர் 2013 முதல், குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களில் 27பேர் மட்டுமே தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


இருப்பினும், இயற்கை நீதியின் அரசியலமைப்பு கொள்கைகளின்படி (constitutional principles), ஒரு நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்பு, அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மேலும், தகுதி நீக்கம் சட்டமன்ற உறுப்பினரின் உரிமைகளை மட்டுமல்ல, சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுத்த மக்களின் விருப்பத்தையும் பாதிக்கிறது.

1999ஆம் ஆண்டில்  இந்திய சட்ட ஆணையத்தின் (Law Commission of India) 170வது அறிக்கையில், ஒரு நபர் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டால், அது தகுதி நீக்கத்திற்கான கூடுதல் காரணமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இந்த தகுதி நீக்கம் ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது அந்த நபர் விடுவிக்கப்படும் வரை, எது முதலில் நடக்கிறதோ அதுவரை நீடிக்கும்.


இந்த முன்மொழிவு 2004ஆம் ஆண்டில் இந்தியத் தேர்தல் ஆணையத்தாலும், 2014ஆம் ஆண்டில் சட்ட ஆணையத்தின் 244வது அறிக்கையிலும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

சட்ட ஆணையத்தின் 2014 அறிக்கை, ஒரு சட்டமன்ற உறுப்பினர் மீது நீதிமன்றத்தால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்போது அவர் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்று பரிந்துரைத்தது. ஏனெனில், குற்றச்சாட்டுகளை உருவாக்குவது, அந்த நபரை விசாரணைக்கு உட்படுத்த போதுமான ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் திருப்தி அடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.


காவல்துறையால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது அல்லது நீதிமன்றம் ஒரு சட்டப்பேரவை உறுப்பினருக்கு எதிரான குற்றத்தை அறிந்துகொள்வது தகுதியின்மைக்கான பொருத்தமான நிலைகள் என்ற பரிந்துரைகளை அறிக்கை நிராகரித்தது.


நீதிமன்றத்தின் சிந்தனையைப் பயன்படுத்துவதற்கு முன் ஒருவரை தகுதியிழக்கச் செய்வது என்பது, இயற்கை நீதியின் கோட்பாடுகளுக்கு எதிரானதாகும் என்றும் இதனால் ஒருவருக்கு எதிராக எந்த வழக்குச் செயல்பாடுகளும் தொடங்காமல், அவரைத் தண்டிப்பது போன்ற நிலை ஏற்படும் என்றும் ஆணையம் கூறியது.


ஒரு சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் குறித்த கேள்விக்கு உச்ச நீதிமன்றம் என்ன கூறியுள்ளது?


உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரு பொது நலன் வழக்கின் (Public Interest Litigation) 2018ஆம் ஆண்டு  தீர்ப்பில் இந்த பரிந்துரைகளை விவாதித்தது. பொது நலன் அறக்கட்டளையின் பொதுநல வழக்கு, கடுமையான குற்றங்களுக்கான குற்றச்சாட்டுகளை உருவாக்கும் கட்டத்தில் தகுதி நீக்கம் செய்யக் கோரியது.


நாடாளுமன்றம் வழங்கியதைத் தாண்டி தகுதிநீக்கத்திற்கான புதிய காரணங்களைச் சட்டம் இயற்றவோ அல்லது சேர்க்கவோ முடியாது என்று நீதிமன்றம் கூறியது. தகுதி நீக்கம் தொடர்பான சட்டங்களை இயற்றும் அதிகாரம் நாடாளுத்திற்கு மட்டுமே உள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்தியது.


எவ்வாறாயினும், ‘கொடூரமான மற்றும் கடுமையான குற்றங்களுக்காக’ (heinous and grievous offences) குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறுப்பினர் பதவியை அரசியல் கட்சிகள் ரத்து செய்வதற்கும், தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்பதற்காக "வலுவான சட்டத்தை" நாடாளுமன்றம் இயற்ற வேண்டும் என்று நீதிமன்றம் பரிந்துரைத்தது.


முன்னதாக, 2014ஆம் ஆண்டு,  மனோஜ் நருலா vs யூனியன் ஆஃப் இந்தியா (Manoj Narula v Union of India (2014)) வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், குற்றப் பின்னணி கொண்ட ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று கூறியது.


இருப்பினும், ‘அரசியலமைப்பு நம்பிக்கையின் களஞ்சியமாக’ (repository of constitutional trust), குற்றவியல் வரலாற்றை கொண்ட நபர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று பிரதமர் பரிசீலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் பரிந்துரைத்தது.


சமீபத்தில், பணமோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் இரண்டு அமைச்சர்களின் வழக்குகளில் உச்சநீதிமன்றம்,  தமிழ்நாட்டின் V.செந்தில் பாலாஜி மற்றும் அப்போதைய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்குகளில் சில கருத்துகளை தெரிவித்தது.


V.செந்தில் பாலாஜி 2023ஆம் ஆண்டு அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் வேலைக்கான பண மோசடியில் 14 மாதங்கள் காவலில் இருந்தார். ஆளுநர் மற்றும் எதிர்க்கட்சிகளின் கணிசமான அழுத்தத்தால் அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.


விசாரணை பல ஆண்டுகள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதால், செப்டம்பர் 2024 இல், உச்ச நீதிமன்றம் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது. அவர் விடுதலையான சில நாட்களுக்குப் பிறகு, அவர் மீண்டும் கேபினட் அமைச்சராகப் பதவியேற்றார். அவர் தனது அதிகாரப் பதவியைப் பயன்படுத்தி அவருக்கு எதிரான வழக்கில் செல்வாக்கு செலுத்தக்கூடும் என்று கூறி, அவரது ஜாமீனை ரத்து செய்யுமாறு அமலாக்க இயக்குநரகம் உச்ச நீதிமன்றத்தைக் கேட்டது.


பிணை  மனு விசாரணைக்கு முன்பே அவர் ராஜினாமா செய்ததால், அவரது அமைச்சர் பதவியை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. இதில் ​​நீதிமன்றத்தின் கருத்து தவறாக வழிநடத்தப்பட்டதாக கூறியது.


ஏப்ரல் 2025 இல், நீதிமன்றம் பாலாஜியிடம் பிணை அல்லது அவரது பதவி ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யச் சொன்னது. அவர் ராஜினாமா செய்யாமல் இருந்தால், அவரது பினையை இழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கும். எனினும், சில நாட்களுக்குப் பிறகு, பாலாஜி ராஜினாமா செய்தால், நீதிமன்றம் அவரது பினைத் தொடர அனுமதித்தது.


மதுபானக் கொள்கை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு பினை வழங்கப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் அவர் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் கையெழுத்திடுவதையோ, அரசு அலுவலகங்களுக்குள் நுழைவதையோ, சாட்சிகளைச் சந்திப்பதையோ அல்லது தொடர்புடைய கோப்புகளை அணுகுவதையோ தடுத்தது.


தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தும் அதிகாரம் தனக்கு இல்லை என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. பதவி விலகும் முடிவு கெஜ்ரிவாலிடம் விடப்பட்டது.


செப்டம்பர் 2024இல், நீதிமன்றம் அவருக்கு வழக்கமான ஜாமீன் வழங்கியது. விசாரணையில் முன்னேற்றம் இல்லாமல் அவரை நீண்ட காலம் சிறையில் வைத்திருப்பது நியாயமற்றது என்று கூறியது. அவர் பதவியில் இருப்பது குறித்து எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. அதன் பிறகு, கெஜ்ரிவால் தானாக ராஜினாமா செய்தார்.



Original article:

Share: