இந்தியா வேகமாக நகரமயமாகி வருகிறது. 2050-ஆம் ஆண்டில், மக்கள் தொகையில் பாதிப் பேர் நகரங்களில் வசிப்பார்கள் என்று ஐக்கிய நாடுகள் (United Nations) சபை கணித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னா (Pradhan Mantri Awas Yojna (PMAY)) திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் கொண்ட வீடுகள் குறித்த பட்ஜெட் வாக்குறுதியை அரசாங்கம் காப்பாற்றும் என்று அறிவிக்கப்பட்டது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னா (Pradhan Mantri Awas Yojna (PMAY)) திட்டத்தின் கீழ் 30 கோடி வீடுகள் கட்டப்படும் என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நகர்ப்புறங்களில் 10 கோடி வீடுகள் கட்டப்படும் என்றும் அமைச்சரவைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் நகர்ப்புற பகுதியானது ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் (Union ministry of housing and urban affairs (MoHUA)) செயல்படுத்தப்படுகிறது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையை தொடர்ந்து வைத்திருக்கும் ஹர்தீப் சிங் பூரிக்கு பதிலாக ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு (Manohar Lal Khattar) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து வீட்டுத் திட்டங்களும் சரியான நேரத்தில் முடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக பயனுள்ள மாநில அளவிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று மனோகர் லால்கட்டார் கூறினார். தூய்மை இந்தியா திட்டம் (Swacch Bharat Mission) மற்றும் அம்ருத் திட்டங்களின் கீழ் முயற்சிகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.
இந்தியா வேகமாக நகரமயமாகி வருகிறது. 2050-ஆம் ஆண்டில், மக்கள் தொகையில் பாதிப் பேர் நகரங்களில் வசிப்பார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது. ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களை (Union ministry of housing and urban affairs (MoHUA)) கண்காணிக்கும் அமைச்சகத்திற்கு புதிய அமைச்சர் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வல்லுநர்கள் நம்பும் முக்கியப் பிரச்சினைகள் இங்கே உள்ளன.
மலிவு விலை வீடுகள் மற்றும் அடிப்படை சேவைகள்
இந்தியாவில், மலிவு விலை வீடுகளுக்கு அதிகத் தேவை உள்ளது. ஆனால், விநியோகம் குறைவாக உள்ளது. குறிப்பாக நகரங்களில் வசிக்கும் கிட்டத்தட்ட பாதி மக்கள் குடிசைகளில் வாழ்கின்றனர். டெல்லியில்கூட, 19 கோடி குடியிருப்பாளர்களில் 5 கோடி மக்களுக்கு அடிப்படை குடிமை வசதிகள் இல்லை என்று 2021-ன் பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey) வெளிப்படுத்தியுள்ளது.
"வீடுகளை வழங்கும் அரசின் நோக்கம் பாராட்டுக்குரியது. ஆனால், தற்போதைய முயற்சிகள் பெரும்பாலும் பயனற்றவை," நகர்ப்புற ஆய்வாளரும், கொள்கை நிபுணருமான அரவிந்த் உன்னி தனது கருத்தை தெரிவித்தார் . பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னா (Pradhan Mantri Awas Yojna (PMAY)) திட்டத்தின் துணைத் திட்டமான கட்டுப்படியாகக்கூடிய வாடகை வீட்டு வளாகங்கள் (Affordable Rental Housing Complexes (ARHCs)) அதிக நன்மையைப் பெறவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். ARHC-களுக்கு ஊக்கம் தேவை என்று அவர் பரிந்துரைத்தார் மற்றும் குடியேற்றம் அல்லாதவர்களையும் சேர்த்து வாடகைத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று வாதிட்டார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதில் இருந்து, மார்ச் மாதம் வரை இத்திட்டத்தின் கீழ் 5,648 வீடுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. அவரைப் பொறுத்தவரை, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னா (Pradhan Mantri Awas Yojna (PMAY)) திட்டத்தின் தற்போதைய கூறுகள் தங்கள் இலக்குகளை அடையவில்லை. குறிப்பாக சிறு குடிசைப் பகுதிகளுக்கு, பெரிய அளவில் குடியிருப்புகளை மேம்படுத்த ஒரு புதியமுறை தேவைப்படுகிறது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னா (Pradhan Mantri Awas Yojna (PMAY)) திட்டத்தின் ஒரு பகுதியாக நில உரிமையை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இதேபோல், உலக வள நிறுவனம் (World Resources Institute (WRI))-இந்தியாவின் நிலையான நகரங்களுக்கான நிர்வாகத் திட்ட இயக்குநர் ஜெயா திண்டாவ், முறைசாராக் குடியிருப்புகளில் தண்ணீர் மற்றும் சுகாதாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். கடந்த பத்தாண்டுகளாக தூய்மை இந்தியா திட்டம் (Swacch Bharat Mission) மற்றும் அம்ருத் திட்டங்களுக்கு கணிசமான பட்ஜெட் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.
காலநிலை மீள்தன்மை (Climate resilience) மற்றும் தகவமைப்பு (adaptability)
நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அதிக நிதி இருக்கும்போது, அதிகரித்து வரும் தீவிர வானிலை நிகழ்வுகள் காரணமாக திட்டமிடலில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று திண்டாவ் (Dhindaw) எடுத்துரைத்தார். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னா (Pradhan Mantri Awas Yojna (PMAY)) திட்டத்தின் வீடுகள் வெள்ளம், வெப்பம் மற்றும் பிற பேரிடர்களை உள்ளடக்கிய திட்டமிடல் மற்றும் பயனுள்ள வடிவமைப்பின் மூலம் எதிர்க்கும் தன்மையை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
மேம்பட்ட பேரிடர் மேலாண்மை (better disaster management) மற்றும் உள்கட்டமைப்பு, நிதி, மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளை சமாளிக்க நகரங்களுக்கு உதவ திட்டமிடல் ஆகியவற்றில் தயார்நிலையின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். கூடுதலாக, உள்கட்டமைப்புத் திட்டமிடல் மற்றும் மேலாண்மை போன்ற துறைகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் வேலைவாய்ப்பை உறுதிசெய்வதற்கும், பசுமைப் பொருளாதார நடைமுறைகளுக்கு அவர்கள் மாறுவதற்கு வசதி செய்வதற்கும் திண்டாவ் அழைப்பு விடுத்தார்.
சீர்மிகு நகரத் திட்டம் (Smart City Mission), முடிவடையும் தருவாயில், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நகர்ப்புற பின்னடைவு பணியாக மறுபெயரிடப்படும் என்று உன்னி கூறினார். இந்தப் பணியில் வெப்ப செயல் திட்டங்கள், காலநிலை செயல் திட்டங்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளை இலக்காகக் கொண்ட பிற நகரங்கள் சார்ந்த திட்டங்கள் இருக்க வேண்டும். மத்திய சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்துடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
நிலையான போக்குவரத்து
இ-ரிக்ஷாக்கள், ஷேர் ஆட்டோக்கள், சைக்கிள் ரிக்ஷாக்கள் போன்ற இடைநிலை பொதுப் போக்குவரத்து (Intermediate public transport (IPT) முறைகளுடன் இந்திய நகரங்கள் பல்வேறு வகையான வெகுஜன போக்குவரத்தை ஒருங்கிணைக்க வேண்டும் என்று இன்ஃப்ராவிஷன் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரியும், தேசிய நகர்ப்புற விவகார நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருமான ஜெகன் ஷா (Jagan Shah) வலியுறுத்தினார். இந்த அணுகுமுறை தனியார் வாகனங்களை நம்பியிருப்பதைக் குறைத்து, சாலை நெரிசலைக் குறைக்கும்.
பிரதமர் நரேந்திர மோடி அரசின் 10-ஆண்டு கால ஆட்சியில், இந்தியா முழுவதும் மெட்ரோ ரயில் கணினி கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் அனைத்து திட்டங்களும் நிறைவடைந்தால், உலகின் மிகப்பெரிய மெட்ரோ ரயில் கணினிக் கட்டமைப்பை இந்தியா பெற உள்ளது.
நகராட்சி நிதி சீர்திருத்தங்கள்
கடந்த பத்தாண்டுகளில், ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் (Union ministry of housing and urban affairs (MoHUA)) இந்தத் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. எவ்வாறாயினும், இந்த அதிக வரவு செலவுத் திட்டங்களில் கூட, வளர்ந்துவரும் மக்கள்தொகைக்கான உள்கட்டமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவை போதுமானதாக இல்லை என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஜனக்ரஹாவில் பொது நிதியை நிர்வகிக்கும் அபுலா சிங், நகரங்களுக்கு அதிக முதலீடுகள் தேவை என்று வலியுறுத்தினார். திரட்டப்பட்ட கடன்கள் மற்றும் பத்திரங்கள் போன்ற புதுமையான நிதி முறைகளை இன்னும் முழுமையாக ஆராய அவர் பரிந்துரைத்தார்.
தற்போதைய சூழலில் நிதி திரட்டுவதில் உள்ள சவாலை அவர் எடுத்துரைத்தார் மற்றும் கிடைக்கக்கூடிய நிதியை திறம்பட பயன்படுத்துவதற்கும் செலவினங்களுக்கு பொறுப்புணர்வை உறுதிசெய்வதற்கும் திறனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
"பத்திரங்கள் நகராட்சி நிதிகளுக்கான நிதி ஆரோக்கியத்தின் குறிகாட்டிகள் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளுக்கு நிதி திரட்ட நம்பகமான வழியாகும். நிதிக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்துதல், நிதித் துறை பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சந்தை சார்ந்த அணுகுமுறைகளைப் பின்பற்றுதல் ஆகியவை நிதியை மேம்படுத்த முடியும்” என்று ஜெகன் ஷா கூறுகிறார்.
நகர்ப்புற வாழ்வாதாரம்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் கடந்த இரண்டு தவணைகளாக பிரதான் மந்திரி தெரு வியாபாரிகளின் ஆத்மநிர்பர் நிதி (PM Street Vendor's AtmaNirbhar Nidhi (PM SVANidhi)) போன்ற மைக்ரோ-க்ரெடிட் முயற்சிகள் உட்பட தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (National Urban Livelihood Mission (NULM)) திட்டத்தின் கீழ் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மார்ச் 2024-ல் இடைநிறுத்தப்பட்டது. தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ((National Urban Livelihood Mission (NULM-2.0)) செயல்படுத்துவதில் அரசாங்கம் வேகமாக செயல்பட வேண்டும் என்று உன்னி பரிந்துரைத்தார். இது தற்போது உருவாக்கத்தில் உள்ளது மற்றும் அமைச்சரவை ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. மிகவும் பின்தங்கிய மக்களுக்கு சேவை செய்யும் நகர்ப்புற வீடற்றவர்களுக்கான தங்குமிடங்கள் (shelters for urban homeless (SUH)) போன்ற பிற துணைத் திட்டங்களின் செலவில் பிரதான் மந்திரி தெரு வியாபாரிகளின் ஆத்மநிர்பர் நிதியில் கவனம் செலுத்துவதற்கு எதிராக அவர் எச்சரித்தார். வீடற்ற நபர்களை சிறப்பாக ஆதரிப்பதற்காக நகர்ப்புற வீடற்றவர்களுக்கான தங்குமிடங்களை, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னா (Pradhan Mantri Awas Yojna (PMAY)) திட்டத்தில் ஒருங்கிணைக்க உன்னி பரிந்துரைத்தார்.