வலது திருப்பம் : ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் குறித்து . . .

 ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களில் வலதுசாரிக் கட்சிகள் எதிர்பாராத வகையில் சிறப்பாக செயல்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பே, அவை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பிரான்ஸ் குடியரசுத்தலைவர் இம்மானுவேல் மக்ரோன் பிரான்சின் தேசிய சட்டமன்றத்தைக் கலைத்தார். மக்ரோனின் மறுமலர்ச்சிக் கட்சி, ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தீவிர வலதுசாரி தேசியப் பேரணிக் கட்சியிடம் வியக்கத்தக்க வகையில் தோல்வியை சந்தித்ததாக முடிவுகள் காட்டுகின்றன. இந்த முடிவு அவரை ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபட வழிவகுத்தது. ஜூன் 30 மற்றும் ஜூலை 7ல் புதிய தேர்தல் தேதிகளை அறிவித்தார். இந்தத் தேர்தல் மூலம் தனது கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வழங்கும் என்று மக்ரோன் நம்புகிறார். இருப்பினும், இது அவருக்கு மற்றொரு இழப்பை ஏற்படுத்தக்கூடும், இது அவரது ஜனாதிபதி பதவிக்கு ஆபத்தை ஏற்படுத்தும், இது 2027 வரை நீடிக்கும்.

இந்த எண்ணிக்கை தற்காலிகமானது 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பலவற்றில் இன்னும் வக்குகள் எண்ணப்பட்டு வருகிறது என்றாலும், இது ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 720 இடங்களில் மத்தியவாதக் கட்சி கூட்டணிகளுக்கு பெரும்பான்மையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவுகள் ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியாவில் வலது மற்றும் தீவிர தேசியவாத கட்சிகளுக்கு ஒரு ஊக்கத்தை அளித்துள்ளன. இது ஆளும் கட்சிகளுக்கு ஒரு பின்னடைவை அளித்துள்ளது, அதேவேளையில் இத்தாலிய பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனியின் தீவிர வலதுசாரி "இத்தாலியின் சகோதரர்கள்" கட்சிக்கான ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது. இதைத்தவிர, பசுமைக் கட்சிகளுக்கும் ஒரு பின்னைடைவு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயன் வாக்கு எண்ணிக்கையை விட, மீன்டும் ஆட்சியைப் பிடிக்க ஒரு கூட்டணியை உருவாக்கி வருகின்ற நிலையில், அதிதீவிர வலதுசாரி கட்சிகளுக்கான ஆதரவு அதிகரிப்புக்கு இட்டுச் சென்ற பிரச்சினைகள்தான் ஆய்வு செய்யப்பட வேண்டும். குடியேற்றம், பணவீக்கம், பொருளாதார மந்தநிலை மற்றும் இழப்புகள் சுற்றுச்சூழல் சீர்திருத்த  பின்னடைவு ஆகியவை இதில் அடங்கும்.

ஐரோப்பிய மக்கள் கட்சியின் பிரச்சார உரையில் – அது நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய தனிக்கட்சியாக உள்ளது – இந்த தேர்தல்களில் "ஐரோப்பிய மதிப்புகள்" பணயத்தில் இருப்பதாக அவர் எச்சரித்தார். "நமது அமைதியான மற்றும் ஐக்கியப்பட்ட ஐரோப்பா முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு ஜனரஞ்சகவாதிகளால், தேசியவாதிகளால், வாய்வீச்சாளர்களால் —அதிவலதில் இருந்து வந்தாலும் சரி அல்லது அதிஇடதில் இருந்தாக வந்தாலும் சரி— சவால் செய்யப்பட்டு வருகிறது," என்றார். ஐரோப்பாவிற்குள் இருந்து வரும் சவால்கள் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஆகியவற்றையும் அவர் சுட்டிக்காட்டினார்.

உலகைப் பொறுத்தவரை, ஐரோப்பிய வாக்குகள் கொள்கை திசையின் அடிப்படையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். அப்படியிருந்தும், புதுடில்லி இன்னும் நெருக்கமாக கவனிக்க வேண்டியது அவசியம். குடியேற்றம் குறித்த கவலைகள் பரவலாக உள்ளன, மேலும் இந்திய தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அதிக வேலைகளை எளிதாக்குவதற்காக இயக்கம் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து சிறந்த விதிமுறைகளுக்கு பேச்சுவார்த்தை நடத்தும் அதே வேளையில், இந்தியர்களின் சட்டவிரோதமாக குடியேறியவர்களையும் அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய வர்த்தக நாடாக இருந்து வருகிறது, மேலும் ஐரோப்பாவில் இப்போது நிலைப்பாட்டில் எந்தவொரு பாதுகாப்புவாத மாற்றமும் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய இருதரப்பு வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை தடம்புரளச் செய்யும். உக்ரைன் மற்றும் இஸ்ரேல் உட்பட மோதல்கள் மீது ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்குள் பிளவுகள் புதுடெல்லியை நேரடியாக பாதிக்காது, ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிளவுபடல் மற்றும் ஒற்றுமையின்மையின் ஒரு பெரிய போக்கு சர்வதேச ஒழுங்கைப் பாதிக்கும். ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா உச்சிமாநாடு இப்போது 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பார்க்கப்படுகிறது, அப்போது இந்த அனைத்து பிரச்சினைகளிலும் இந்தியா நெருக்கமான ஈடுபாட்டை நாடும்.

ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வியாழக்கிழமை இத்தாலியின் அபுலியா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, தனது ஐரோப்பிய நண்பர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களை சந்திக்க உள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமின்றி, எதிர்பாராத முடிவை ஏற்படுத்திய இந்தியத் தேர்தலையும் அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள்.

originallink: https://www.thehindu.com/opinion/editorial/right-turn-on-the-european-parliament-elections/article68280799.ece



Share: