ஆண்டுக்கு ஒருமுறை மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். கல்விக்கான சேர்க்கைகான அமர்வு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) முடிவு, பல்கலைக்கழகங்கள் ஜூலை/ஆகஸ்ட் மற்றும் மீண்டும் ஜனவரி/பிப்ரவரி மாதங்களில் என ஆண்டுக்கு இருமுறை மாணவர்களை சேர்க்க அனுமதிக்கிறது. இது இளங்கலை (undergraduate), முதுகலை (postgraduate) மற்றும் முனைவர் பட்டங்களுக்குப் (PhD programmes) பொருந்தும்.
பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஆண்டுக்கு இரண்டு முறை ஜூலை/ஆகஸ்ட் மற்றும் ஜனவரி / பிப்ரவரி மாதங்களில் மாணவர்களை சேர்க்க பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ஆண்டுக்கு இருமுறை சேர்க்கை பல்கலைக்கழகங்களுக்கு கிடைக்கக்கூடிய உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்களின் அடிப்படையில் அவர்களின் சேர்க்கை சுழற்சிகளை தீர்மானிக்க நெகிழ்வுத்தன்மையை வழங்கும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. இந்த புதிய முறையை பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயமில்லை.
தற்போதுள்ள செயல்முறை, மாற்றம்
மாணவர்கள் இப்போது ஆண்டுக்கு ஒருமுறை, ஜூலை/ஆகஸ்ட் மாதங்களில் தொடங்கும் ஒரே கல்வி அமர்வில் அனுமதிக்கப்படுகிறார்கள். பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) முடிவானது, ஜூலை/ஆகஸ்ட் மற்றும் ஜனவரி/பிப்ரவரி மாதங்களில் இளங்கலை, முதுகலை மற்றும் பிஎச்டி திட்டங்களுக்கு இரண்டு சுழற்சிகளில் மாணவர்களை சேர்க்க பல்கலைக்கழகங்களை அனுமதிக்கும்.
வருடத்திற்கு இரண்டு முறை மாணவர்களை அனுமதிக்கும் சில நாடுகளில் உள்ள சேர்க்கை சுழற்சிகளை பல்கலைக்கழகங்கள் பின்பற்ற அனுமதிக்கலாம். மேலும், இந்த வெவ்வேறு சேர்க்கை சுழற்சிகளில் கிடைக்கும் படிப்புகளும் மாறுபடலாம். உதாரணமாக, அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்கள் இலையுதிர் காலத்திலும் (ஆகஸ்ட்/செப்டம்பரில் தொடங்கும் அமர்வு) மற்றும் வசந்த காலத்திலும் (ஜனவரியில் தொடங்கும் அமர்வு) 'சேர்க்கைகளைக்' கொண்டுள்ளன.
காரணம் மற்றும் பயனாளிகள்
பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஏற்கனவே திறந்த மற்றும் தொலைதூரக் கற்றல் மற்றும் ஆன்லைன் திட்டங்களுக்கான இரு ஆண்டு சேர்க்கை செயல்முறையை முயற்சித்துள்ளது. மேலும் "ஒரு வருடத்தில் இரண்டாவது கல்வி அமர்வுக்கு அனுமதிப்பது கிட்டத்தட்ட 500,000 மாணவர்கள் ஒரு முழு கல்வியாண்டு வரை காத்திருக்காமல் தங்கள் பட்டப்படிப்புகளில் சேர உதவியது" என்று கண்டறிந்துள்ளது. .
இது, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் கருத்துப்படி, உடல்நலப் பிரச்சினைகள், வாரியத் தேர்வு முடிவுகள் தாமதம் அல்லது தனிப்பட்ட காரணங்களால் ஜூலை/ஆகஸ்ட் அமர்வில் சேர்க்கையைத் தவறவிட்ட மாணவர்கள் பயனடையலாம். ஆண்டுக்கு இரண்டு முறை சேர்க்கை தொடங்குவதால், அவர்கள் மீண்டும் விண்ணப்பிப்பதற்கு ஒரு வருடம் முழுவதும் காத்திருக்க வேண்டியதில்லை.
வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஆண்டுக்கு இருமுறை சேர்க்கை முறையைப் பின்பற்றுகின்றன என்றும், இந்திய நிறுவனங்களில் இந்த முறை "அவர்களின் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாணவர் பரிமாற்றங்களை மேம்படுத்த முடியும்" என்றும் குமார் கூறினார்.
இந்த அமைப்பு ‘மொத்தப் பதிவு விகிதத்தை’ (gross enrollment ratio(GER)) அதிகரிக்கவும் உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். உயர்கல்விக்கு, GER என்பது உயர்கல்விக்கு தகுதியான வயதினரின் மக்கள்தொகையுடன் சேர்ந்த மாணவர்களின் விகிதமாகும்.
ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கையைத் துவங்கும் முடிவு பல்கலைக்கழகங்களிடம் உள்ளது. அவர்களின் கல்வி மற்றும் நிர்வாகக் குழுக்கள் முடிவு செய்ய வேண்டும். பல்கலைக்கழகங்கள் ஆண்டுக்கு இருமுறை சேர்க்கைக்கு எந்தெந்த படிப்புகளைத் துவக்கலாம் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். இரண்டு விதமான சேர்க்கை சுழற்சிகளில் மாணவர்களைச் சேர்ப்பதை தீர்மானிப்பதில் உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்களின் கிடைக்கும் தன்மை முக்கியமானதாக இருக்கும்.
வரும் கல்வியாண்டு முதல் உயர்கல்வி நிறுவனங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர்களை சேர்க்க பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அனுமதித்துள்ள நிலையில், டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தர் யோகேஷ் சிங், வரவிருக்கும் அமர்வுக்கான சேர்க்கை ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று சுட்டிக்காட்டினார்.
‘இது நாங்கள் வழங்கும் ஒரு வழிவகை, இது உடனடியாக நடக்காது என்பது மிகவும் சாத்தியம். பல்கலைக்கழகங்கள் அவற்றின் உள்கட்டமைப்புத் தேவைகள், ஆசிரியத் தேவைகள் ஆகியவற்றில் வேலை செய்ய வேண்டும், பின்னர் அதை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் திட்டமிட வேண்டும்’ என்று தலைவர் குமார் கூறினார்.
பல்கலைக்கழகம் இந்த செயல்முறைக்கு வாய்ப்பைத் திறந்திருப்பதாகவும், மற்றவர்களுக்கு விரிவுபடுத்துவதற்கு முன்பு சில திட்டங்களுக்கு ஆரம்பத்தில் அதை செயல்படுத்தலாம் என்றும் சிங் கூறினார்.
நுழைவுத் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை குறித்த கேள்வியும் உள்ளது. அவை ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட்டால் அது "மாணவர்களுக்கு பயனளிக்கும்" என்று குமார் கூறினார்.