ஏற்கெனவே ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஒவ்வொரு ஆண்டும் உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. எந்த வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் எவ்வாறு தீர்மானிக்கிறது?
கடந்த ஒரு மாதமாக, சிறப்பு விடுப்பு மனுக்களுக்கு (special leave petitions (SLPs)) உச்சநீதிமன்றம் முன்னுரிமை அளித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக நீதிமன்றம் சம்மந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கும். ஆனால், அதன் மேல் இன்னும் விசாரனை நடத்தாத (அனுமதி வழங்கவோ அல்லது மேல்முறையீடு செய்ய அனுமதியோ இல்லாத) வழக்குகள் இவை.
வாரத்தின் மூன்று நாட்களாக இந்த வழக்குகளை விசாரித்து வரும் நீதிமன்றம், புதிய வழக்குகளுக்கு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளை மட்டுமே ஒதுக்கி வைத்துள்ளது. இதன் விளைவாக, விரிவான விசாரணை தேவைப்படும் வழக்குகளின் பட்டியலை உச்ச நீதிமன்றம் கட்டுப்படுத்துகிறது.
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பெரிய அளவிலான வழக்குகளுக்கு தீர்வு காண இந்திய தலைமை நீதிபதி (Chief Justice of India (CJI)) சஞ்சீவ் கண்ணாவின் திட்டத்தின் ஒரு பகுதியாக இது உள்ளது. காலவரிசைப்படி (master of the roster) என்ற முறையில், அடுத்தடுத்து வந்த தலைமை நீதிபதிகள் நிலுவையில் உள்ள சிக்கலை பல்வேறு வழிகளில் சமாளிக்க முயன்றனர்.
வாராந்திர வழக்கு அட்டவணை
நவம்பர் 16 அன்று, நீதிபதி சஞ்சீவ் கன்னா 51 வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஐந்து நாட்களுக்குப் பிறகு, நிர்வாகத் தரப்பில் உச்சநீதிமன்றம் செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் "நோட்டீஸுக்குப் பிறகு பல்வேறு விஷயங்கள்" விசாரிக்கப்படும் என்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.
மேலும், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில், "மறு உத்தரவு வரும் வரை வழக்கமான விசாரணைகள் எதுவும் பட்டியலிடப்படாது" என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அறிவிப்புக்குப் பிறகு இதர விஷயங்கள் என்பது ஒரு "புதிய விஷயத்தில்" நீதிமன்றம் மற்ற தரப்பினருக்கு "அறிவிப்பை" வழங்கும் வழக்குகள் ஆகும். ஒரு வழக்கு "ஒப்புக்கொள்ளப்பட்ட" பிறகு "வழக்கமான விசாரணை விஷயமாக" மாறும்.
இரு தரப்பிலிருந்தும் முழுநீள வாதங்கள் தேவைப்படும் வழக்குகளைவிட விரைவாக ஒப்புக்கொள்ளக்கூடிய அல்லது நிராகரிக்கக்கூடிய வழக்குகளுக்கு முன்னுரிமை அளிப்பது, நீதிமன்றத்தில் அதிகரித்து வரும் வழக்குகளை சமாளிக்க இது முயல்கிறது. தேசிய நீதித்துறை தரவின் படி (National Judicial Data Grid), தற்போது உச்சநீதிமன்றத்தில் 82,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அறிவிப்புக்குப் பிறகு இதர வழக்கின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொள்வதா அல்லது தள்ளுபடி செய்வதா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும். இது பெரும்பாலும் சுருக்கமான விசாரணைகளில் விரைவாக செய்யப்படுகிறது.
வழக்கு வகைகள் மற்றும் எண்கள்
இந்தியப் பல்கலைக்கழகத்தின் தேசிய சட்டப் பள்ளி (National Law School of India University) பெங்களூரு, பேராசிரியர் அபர்ணா சந்திரா இணைந்து எழுதிய கோர்ட் ஆன் ட்ரையல்: எ டேட்டா-டிரைவன் அக்கவுண்ட் ஆஃப் தி சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்தியா (According to the book Court on Trial: A Data-Driven Account of the Supreme Court of India) என்ற புத்தகத்தின் படி, உச்ச நீதிமன்றம் தாக்கல் செய்யப்பட்ட SLPகளில் 14% மட்டுமே உச்ச நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்கிறது.
SLPக்கள் அடிப்படையில் மேல்முறையீடுகளின் போது, (உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக) உச்சநீதிமன்றம் அவற்றை விசாரிக்க "விடுப்பு" வழங்க வேண்டும். இதன் மூலம் வழக்குகளை தள்ளுபடி செய்வது என்பது நிலுவையில் உள்ள வழக்குகளை உடனடியாக குறைப்பதாகும்.
இருப்பினும், புத்தகத்தில் உள்ள தரவுகளின்படி, 2010 முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில், உச்சநீதிமன்றம் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 60,000-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்தது.
மேல்முறையீடுகள், இவற்றில் பெரும்பகுதி SLPகள் ஆகும். இவை நீதிமன்றத்தின் ஆவணத்தில் தோராயமாக 92.4% ஆகும். மேலும், SLPயை ஒப்புக்கொள்ள வேண்டுமா என்பது குறித்த வழக்கமான விசாரணை சராசரியாக 1 நிமிடம் 33 வினாடிகள் மட்டுமே நீடிக்கும் என்று புத்தகம் கூறுகிறது.
ஆனால் நீதிமன்றத்தால் ஒரு வழக்கு முழு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவுடன், தீர்ப்பு வழங்கப்படுவதற்கு சராசரியாக நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகும். பல வழக்குகளில் "இரண்டு மடங்கு அல்லது அதற்கு மேல்" கூட காலம் எடுக்கும்.
மறுபுறம், வழக்கமான விசாரணை விஷயங்கள் ஏற்கனவே பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. மேலும், இந்த அணுகுமுறை நிலுவையில் உள்ள வழக்குகளை மட்டும் எடுத்துக் கொள்கிறது.
பிற தலைமை நீதிபதிகளின் அணுகுமுறைகள்
சஞ்சீவ் கண்ணாவின் முன்னோடிகள் நிலுவையில் உள்ள பிரச்சினையை வித்தியாசமாக அணுகினர். இவர் சேர்க்கை நிலை வழக்குகளுக்கு முன்னுரிமை அளித்தாலும், அவரது முன்னோடிகள் வழக்கமான விசாரணைகள் மற்றும் அரசியலமைப்பு அமர்வு விசாரணைகள் தேவைப்படும் வழக்குகளைக் கையாள்வதில் கவனம் செலுத்தினர்.
பிப்ரவரி 2023-ஆம் ஆண்டு முதல் முன்னாள் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட்டின் பதவிக்காலம் முடியும் வரை, உச்சநீதிமன்றம் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் வழக்கமான விசாரணை வழக்குகளை மட்டுமே விசாரித்தது. இந்த இரண்டு நாட்களிலும் "நோட்டீஸுக்குப் பிந்தைய இதர விஷயங்கள்" எதுவும் பட்டியலிடப்படவில்லை.
நீதிபதி சந்திரசூட் மற்றும் அவரது முன்னோடி முன்னாள் தலைமை நீதிபதி லலித் (மூன்று மாத குறுகிய பதவிக்காலத்தைக் கொண்டிருந்தவர்) இருவரும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள அரசியலமைப்பு வழக்குகளை விசாரிப்பதில் கவனம் செலுத்தினர்.
நீதிபதி சந்திரசூட் தனது பிரியாவிடை உரையில், தனது பதவிக்காலத்தில் (நவம்பர் 2022 முதல் நவம்பர் 2024 வரை), வழக்கமான வழக்குகளின் நிலுவை 28,682 முதல் 22,000 வரை குறைந்துள்ளது என்று கூறினார்.
இருப்பினும், தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பதவிக்காலத்தில் நீதிமன்றத்தில் அவசர விசாரணைக்காக வழக்கறிஞர்கள் தங்கள் வழக்குகளை "குறிப்பிடுவதையும்" காண முடிந்தது.
உச்சநீதிமன்றத்தில் வழக்குகளின் பயணம்
விசாரணைகளை நடத்துவது, தீர்ப்புகளை எழுதுவது மற்றும் பொது தோற்றங்களை உருவாக்குவது உள்ளிட்டவை பொதுவாக உச்சநீதிமன்றம் எதிர்கொள்ளும் செயல்பாடுகளுக்குப் பின்னால் உள்ள நடைமுறையாக உள்ளது.
உச்சநீதிமன்ற பதிவேட்டில் நிர்வாகம் மற்றும் நீதித்துறை என இரண்டு பிரிவுகள் உள்ளன. இப்பிரிவுகள் ஒவ்வொன்றும் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, வழக்குப் பட்டியல், தொழில்நுட்பம், நீதிமன்றங்கள் மற்றும் கட்டடங்கள் தொடர்பான பிரச்சினைகள், மனிதவளம் போன்ற நிருவாகப் பொறுப்புகளைக் கொண்டுள்ளன.
ஒவ்வொரு பிரிவும் ஒரு பதிவாளரின் தலைமையின் கீழ் உள்ளது. மேலும், பதிவகம் ஒட்டுமொத்தமாக உச்சநீதிமன்றத்தின் மிக உயர்ந்த நிர்வாக அதிகாரியான பொதுச்செயலாளரால் வழிநடத்தப்படுகிறது. மேலும், தலைமை நீதிபதிக்கு அறிக்கை அளிக்கிறது.
அட்வகேட்-ஆன்-ரெக்கார்ட் (Advocate-on-Record (AoR)) என்பது ஒரு சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு உச்சநீதிமன்றத்தில் வாடிக்கையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த அங்கீகரிக்கப்பட்ட ஒரு வழக்கறிஞர். அவர்கள் தேவையான ஆதாரங்களுடன் வழக்குகளை தாக்கல் செய்கிறார்கள். இதை தாக்கல் செய்யும் முனையத்திலோ அல்லது நீதிமன்றத்தின் இணையவழித் தாக்கல் இடைமுகத்தின் மூலமாகவோ செய்யலாம்.
இந்த வழக்கு நீதிமன்றத்தின் "பிரிவு 1B" என்ற பிரிவில் உள்ள "டீலிங் உதவியாளருக்கு" வழக்கறிஞர்களால் அனுப்பப்படுகிறது. உதவியாளர் இரண்டு விஷயங்களைச் சரிபார்க்கிறார்: அட்வகேட் ஆன் ரெக்கார்டின் (AoR) அடையாளம் மற்றும் AoR கையொப்பமிடப்பட்ட வகலட்நாமா மூலம் அனுமதியைப் பெற்றுள்ளதா? என்பது சரிபார்க்கப்பட்டதும், உதவியாளர் வழக்குக்கு நிரந்தர "டைரி எண்ணை" ஒதுக்குகிறார்.
மனு மற்றும் அதன் துணை ஆவணங்கள் தவறான தகவல், கையொப்பங்கள் இல்லாதது அல்லது தவறான வடிவம் போன்ற ஏதேனும் குறைபாடுகளுக்காக ஆராயப்படுகின்றன. ரெஜிஸ்ட்ரி வெளியிட்ட 2018-ஆம் ஆண்டு சுற்றறிக்கையின்படி, குறைபாடுகள் 90 நாட்களுக்குள் சரிசெய்யப்பட வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பதிவேட்டின் உதவியாளர் மற்றும் ஒரு உயர் அதிகாரி இருவரும் மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சரிபார்த்து குறைபாடுகள் சரிசெய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துகிறார்கள்.
சரிபார்ப்பைத் தொடர்ந்து, வழக்கு பதிவு செய்யப்பட்டு பட்டியலிடும் துறைக்கு அனுப்பப்படுகிறது. இது சாதாரண சூழ்நிலைகளில், தானாகவே ஒதுக்கப்படும் தேதியில் விசாரணைக்கு பட்டியலிடுகிறது.
ஒரு வழக்கு "பட்டியலிடப்பட்டவுடன்", அது ஒரு "புதிய" வழக்காக ஒரு அமர்வின் முன் வருகிறது. உச்சநீதிமன்ற விதிகளின்படி, இந்த வழக்குகள் பல ஆண்டுகளாக திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விசாரிக்கப்படுகின்றன. இந்த நாட்கள் "இதர நாட்கள்" ("Miscellaneous days") என்று அழைக்கப்படுகின்றன.
நீதிமன்றம் உடனடியாக வழக்கை தள்ளுபடி செய்யாவிட்டால், அவர்களுக்கு எதிரான வழக்குக்கு பதில் கோரி மற்ற தரப்பினருக்கு "நோட்டீஸ்" அனுப்புகிறது. இந்த வழக்கு பின்னர் "அறிவிப்புக்குப் பிறகு இதர விஷயம்" என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகள் "இதர அல்லாத நாட்கள்" அல்லது NMDs என்றும் குறிப்பிடப்படுகின்றன.
இந்த நாட்களில், இரு தரப்பினரும் விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகளை நீதிமன்றம் பட்டியலிடுகிறது. மேலும், வழக்கை ஒப்புக்கொள்வதா? இல்லையா? என்பதை முடிவு செய்வதற்கு முன்பு எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை பரிசீலிக்கிறது.
சேர்க்கைக்குப் பிறகு, விரிவான இறுதி விசாரணையின் பின்னர் ஒரு தீர்ப்பு வழங்கப்படுகிறது.
நிலுவையில் உள்ள வழக்குகள் எவ்வாறு குவிந்துள்ளன என்பதைப் பொறுத்து, எந்த வகையான வழக்குகளை பட்டியலிட வேண்டும் என்பதை நீதிமன்றம் பரிசோதிக்கும் வழக்குகள் இவை. இந்த நாட்களில் தான் அரசியல் சாசன அமர்வு விசாரணைகளும் நடைபெறுகின்றன.
Original article: