1977 மக்களவைத் தேர்தல் இந்தியாவுக்கு அதன் முதல் காங்கிரஸ் அல்லாத அரசாங்கத்தைக் கொண்டுவந்தது. குஜராத்தில் மாணவர் இயக்கம் (students’ movement in Gujarat) மற்றும் 1971 போருக்குப் பிறகு ஜெயப்பிரகாஷ் நாராயணனின் முழு புரட்சிக்கான அழைப்பு விடுத்ததால் இந்திரா காந்தியின் புகழ் குறைந்தது. 1975 ஆம் ஆண்டில் தேர்தல் மோசடி காரணமாக அலகாபாத் உயர் நீதிமன்றம் அவரது 1971 தேர்தல் வெற்றியை செல்லாது என்று அறிவித்தபோது, அவர் அவசரநிலையை (Emergency) அறிவித்தார். பின்னர், அவசர நிலை முடிவுக்கு வந்த பிறகு, தேர்தலில் இந்திரா காந்தி கடுமையான தோல்வியைச் சந்தித்தார். இதில், மொரார்ஜி தேசாய் பிரதமரானார்.
வளாகங்களில் அமைதியின்மை
டிசம்பர் 1973 இல், அகமதாபாத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் விடுதி உணவகக் கட்டணத்தை உயர்த்துவதை எதிர்த்தனர். இந்த போராட்டம் குஜராத்திலும் அதற்கு அடுத்துள்ள மற்ற வளாகங்களுக்கும் விரைவாக பரவியது. இது தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு குழுக்களின் ஆதரவைப் பெற்று, பொருளாதார சிக்கல்கள் மற்றும் ஊழலுக்கு எதிராக 'நவநிர்மான் அந்தோலன்' என்ற பரந்த இயக்கத்தை உருவாக்கியது.
மார்ச் 1974 இல், பீகார் மாணவர்கள் 72 வயதான சோசலிசத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் உதவியை நாடினர். தங்கள் இயக்கத்தை அவரே வழிநடத்த வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். முதல் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அரசியலில் இருந்து விலகி இருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் 1974 பிப்ரவரியில் குஜராத் முதல்வர் சிமன்பாய் படேலை பதவி விலகுமாறு குஜராத் இளைஞர்கள் எவ்வாறு கட்டாயப்படுத்தினர் என்பதைக் கவனித்தார். இது ஒரு புதிய வகையான அரசியலுக்கான தனது பார்வையுடன் இணைந்து, மாணவர்களால் மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை அவர் கண்டார்.
ஜூன் 5, 1974 அன்று, பாட்னாவில் நடந்த ஒரு பேரணியில், ஜெயப்பிரகாஷ் நாராயணன் தனது புகழ்பெற்ற "சம்பூர்ண கிராந்தி" (Sampoorna Kranti) அல்லது முழுப் புரட்சிக்கான (Total Revolution) அறைகூவலை விடுத்தார். இது அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார, அறிவுசார், கல்வி மற்றும் ஆன்மீக அம்சங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான மாற்றத்தை குறிப்பிட்டது.
இந்திராவின் தகுதி நீக்கம்
1971-ல் ரேபரேலி தொகுதி தேர்தலில் ராஜ் நாராயணனை எதிர்த்து போட்டியிட்ட இந்திரா காந்தி 1,11,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் மனமுடைந்த ராஜ் நாராயண் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்தார். ஜூன் 12, 1975 அன்று, உயர்நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா (Jagmohan Lal Sinha), ராஜ் நாராயண் வெற்றி பெற்றதாக அறிவித்து, இந்திராவை மக்களவையிலிருந்து நீக்கினார்.
அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை இந்திரா ஏற்கவில்லை. எனவே, இந்திரா காந்தி அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது ஜூன் 24, 1975 அன்று, நீதிபதி வி ஆர் கிருஷ்ண ஐயர் அவரை தகுதி நீக்கத்தை உறுதி செய்தார். ஆனால், அவரது மேல்முறையீடு தீர்ப்புவரும்வரை அவர் பதவியில் இருக்க முடியும் என்று கூறினார்.
அவசர கால மாதங்கள்
ஜூன் 25, 1975 அன்று, ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது (Fakhruddin Ali Ahmed) பிரதமரின் ஆலோசனையின் பேரில் அவசரநிலையை அறிவித்தார். போர், வெளிப்புற ஆக்கிரமிப்பு (war or external aggression) அல்லது உள்நாட்டு குழப்பங்களால் (internal disturbance) தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களாக அரசியலமைப்பின் பிரிவு 352(1)-யை மேற்கோள் காட்டினார். பின்னர், 44-வது திருத்தச்சட்டம் 1978 ஆம் ஆண்டில் அரசியலமைப்பு திருத்தப்பட்டது, இது "உள்நாட்டு குழப்பம்" (internal disturbance) என்பதற்கு பதிலாக "ஆயுதக் கிளர்ச்சி" (armed rebellion) என்று மாற்றப்பட்டது.
அவசரநிலைப் பிரகடனத்தைத் தொடர்ந்து, ஒரு லட்சத்துக்கும் அதிகமான எதிர்ப்பாளர்கள் மற்றும் அரசாங்கத்தை விமர்சித்தவர்கள், கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் உட்பட, உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (Maintenance of Internal Security Act (MISA)) மற்றும் இந்திய பாதுகாப்பு விதிகளின் கீழ் (Defence of India Rules) கைது செய்யப்பட்டனர். இதனால், பத்திரிகைகளால் சுதந்திரமாக பேச முடியவில்லை. ஊடகவியலாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்திராவின் இளைய மகன் சஞ்சய் காந்தி, 21 மாத அவசர நிலையின் போது முக்கிய பங்கு வகித்தார். இதில், 20 அம்ச திட்டங்கள் கண்டிப்பாக பின்பற்றப்பட்டது. இந்த திட்டத்தில் சஞ்சய் காந்தி ஐந்து அம்ச அறிக்கைகளுடன் தனது சொந்த திட்டத்தை வைத்திருந்தார். இது கருத்தடையை கட்டாயப்படுத்தியது. இதனால், நாடு முழுவதும் பரவலான அமைதியின்மையை ஏற்படுத்தியது.
டெல்லியில் ஜனதா பிரச்சாரம். ஜனதா கட்சியின் தொடக்கம்
1976 தொடக்கத்தில் மக்களவைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. புதிய சட்டம் மற்றும் அரசியலமைப்பு மாற்றங்களுடன் தற்போதுள்ள மக்களவையின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 18, 1977 அன்று திடீரென மக்களவையை கலைக்குமாறு இந்திரா காந்தி திடீரென குடியர்சுத் தலைவரிடம் கூறினார். பின்னர், ஆறாவது மக்களவைத் தேர்தலானது மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.
அந்த நேரத்தில், இந்தியாவில் ஏழு தேசிய கட்சிகள் மற்றும் 18 மாநிலக் கட்சிகள் இருந்தன. தேர்தல் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, மொரார்ஜி தேசாயின் காங்கிரஸ் (O), சவுத்ரி சரண் சிங்கின் பாரதிய லோக் தளம் (Bharatiya Lok Dal (BLD)), அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் எல் கே அத்வானியின் பாரதிய ஜன சங்கம் (Bharatiya Jana Sangh (BJS), precursor of the BJP)) மற்றும் சோசலிஸ்ட் கட்சி (Socialist Party) ஆகிய நான்கு தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து ஜனதா கட்சியை (Janata Party) உருவாக்கின.
இந்திய தேர்தல் ஆணையம், ஜனதா கட்சியை அங்கீகரிக்காததால், அதன் கூட்டணி கட்சிகள் பாரதிய லோக் தளத்தின் (Bharatiya Lok Dal (BLD)) சின்னமான 'சக்கரத்திற்குள் ஏர்க்கலப்பை' (Haldhar within Wheel) சின்னத்தின் கீழ் போட்டியிட முடிவு செய்தன. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் காங்கிரஸ்(ஓ) வின் 'ஒரு பெண்ணால் அரசு இயக்கப்படுகிறது' (Charkha being plied by a Woman) என்ற தலைப்பில் ஜனதா கட்சி போட்டியிட்டது.
அவசர நிலையை ஆதரித்ததால் ஜனதா கட்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேரவில்லை. ஆனால், ஜனதாவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது தொகுதி மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டது.
வரலாற்று சிறப்புமிக்க தேர்தலும் முடிவுகளும்
1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகளைப் பிரித்த பிறகு, புதிய மக்களவையானது 543 உறுப்பினர்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டது. மார்ச் 16 முதல் 20, 1977 வரை வாக்குப்பதிவு நடைபெற்றதுடன், உடனே வாக்குகளை எண்ணும் பணியும் தொடங்கியது. இதில், 32.11 கோடி வாக்காளர்களில் 60.53% பேர் வாக்களிப்பில் கலந்து கொண்டனர். அதிகபட்சமாக கேரளாவில் 79.21 சதவீதமும், ஒரிசாவில் 44.32 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி வாக்குப் பெட்டிகள் மற்றும் ஆவணங்களை சேதப்படுத்திய சில சம்பவங்களும் இதில் பதிவாகியுள்ளன.
பாரதிய லோக் தளம் (BLD) என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் ஜனதா கட்சி 298 இடங்களுடன் அதிக இடங்களை வென்றது. மே 11, 1977 அன்று, தேர்தல் ஆணையம் ஜனதாவை ஒரு தேசிய கட்சியாக அங்கீகரித்தது. பாரதிய லோக் தளத்தின் சின்னத்தை ஏற்றுக்கொண்டது. ஜூலை 16, 1969 அன்று துணைப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மொரார்ஜி தேசாய் தனது 81 வயதில், மார்ச் 24, 1977 அன்று பிரதமராக பதவியேற்றார்.
காங்கிரஸ் 154 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 22 இடங்களிலும், இந்தியப் பொதுவுடமைக் கட்சி 7 இடங்களிலும் வெற்றி பெற்றன. ரேபரேலி தொகுதியில் ராஜ் நாராயணிடம் இந்திரா காந்தி தோல்வி அடைந்தார். வட இந்தியாவில் காங்கிரஸானது இழப்புகளைச் சந்தித்தது. ஆனால், தெற்கில் அதற்கான இடங்களை தக்கவைத்துக்கொண்டது. இதில், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும், அத்துடன் மகாராஷ்டிரா மற்றும் அசாமிலும் வென்றது.
சூரத்தில் மொராஜி தேசாய் வெற்றி பெற்றார். அவரது உள்துறை அமைச்சர் சரண் சிங் பாக்பத்தில் வெற்றி பெற்றார். உத்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் எச் என் பகுகுணா லக்னோவில் வெற்றி பெற்றார். புதுதில்லியில் வாஜ்பாய் வெற்றி பெற்றார். பல்ராம்பூரில் நானாஜி தேஷ்முக் வெற்றி பெற்றார். ஜக்ஜீவன் ராம் பிப்ரவரி 3, 1977 இல் காங்கிரஸில் இருந்து விலகி, நந்தினி சத்பதியுடன் ஜனநாயக காங்கிரஸில் சேர்ந்தார். பின்னர், அவர் சசரத்தில் இருந்து பாரதிய லோக் தளத்தின் (BLD) தொகுதியில் வெற்றி பெற்றார்.
நிறைவேற்றப்படாத வாக்குறுதி
ஜனதா ஒரு புதிய யோசனையையும், நம்பிக்கையையும் அளித்தது. ஆனால் அது பல முரண்பாடுகளை எதிர்கொண்டது. ஜூலை 1978 இல், மொரார்ஜி தேசாயின் தலைமைக்கு சுமார் ஒரு வருடம் கழித்து, சரண் சிங் விலகினார். பின்னர், ஜனவரி 1979 இல் நிதியமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் மீண்டும் வந்தார். ஆனால் இது நீடிக்கவில்லை. அரசியலானது விரைவாக மாறியது. 1978 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், அசாம்கரில் மோஷினா கித்வாயின் வெற்றி காங்கிரஸ் கட்சி திரும்புவதைக் குறிக்கிறது. 1978 நவம்பரில் சிக்மகளூரில் இந்திரா காந்தி வெற்றி பெற்றார். காங்கிரஸ் சரண்சிங்கை மீண்டும் ராஜினாமா செய்யத் தூண்டி, மதச்சார்பற்ற ஜனதா கட்சியை உருவாக்கியது.
காங்கிரசின் ஆதரவுடன், மொரஜி தேசாய்க்குப் பதிலாக சரண் சிங் ஜூலை 28, 1979 அன்று பிரதமரானார். ஆனால், ஒரு மாதத்திற்குள் காங்கிரஸ் அவரது அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெற்றதால் அவருக்கு நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்திய ஜனநாயகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சோதனை தொடங்கி இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, தேசம் மீண்டும் தேர்தலுக்குச் சென்றது.
Original article: