இம்பாலில் குழப்பம், மாநில அரசு பின்வாங்குகிறது -HT தலையங்கம்

 மணிப்பூரில் இனக்கலவரம் நடைபெற்று ஒரு வருடம் ஆகிறது. மாநிலத்தில் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை, மேலும் மாநிலம் முழுவதும் இராணுவ கட்டுபட்டில்தான் உள்ளது.


இனக்கலவரம் வெடித்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த மார்ச் மாதம் மாநிலத்தின் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் பட்டியலில் மெய்ட்டி இனக் குழுக்களை சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டதால் இரு சமூகத்தினருக்கு இடையே வன்முறை ஏற்பட்டது, இது பல்வேறு குழுக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த மோதல்கள் முக்கியமாக இம்பால் பள்ளத்தாக்கில் வசிக்கும் மெய்தேயி இன மக்களுக்கும் மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி இன மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 225 பேர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர், அரசின் ஆயுதக் கிடங்குகளை கலவரக்காரர்கள் சூறையாடினர் குடியிருப்புகளும் அழிக்கப்பட்டது இதனால் மக்கள் பலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.


ஆண்டு முழுவதும், போரட்டக்காரர்கள், அரசு மற்றும் பொதுமக்களின் சொத்துக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர், கொலை மற்றும் கற்பழிப்பு போன்ற குற்றச் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. காவல்துறை மற்றும் இராணுவத்தின் முயற்சிகள் இருந்தபோதிலும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மீட்டெடுக்கப்படவில்லை. சமீபத்தில், பாதுகாப்புப் படையினர் கூட தாக்குதல்களை எதிர்கொண்டனர், கையெறி குண்டு தாக்குதலில் இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.


மக்களை ஒன்றிணைப்பதற்குப் பதிலாக, பிளவுபடுத்தும் கருத்துக்களால் பதற்றத்தை அதிகப்படுத்துவதாக முதல்வர் என் பிரேன் சிங் விமர்சிக்கப்பட்டார். மெய்தேய் சமூகத்தினரின் குறைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் அவர் அந்த மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தாலும், நிர்வாகத்தை மறுசீரமைப்பதில் அவர் தோல்வியடைந்துள்ளார்.

மாநிலத்திற்கு அடுத்து என்ன நடக்கும்? இயல்பு நிலைக்கு திரும்ப நீண்ட காலம் ஆகலாம். மெய்தேயி தீவிரவாதிகளால் வழிநடத்தப்படும் அரம்பாய் தெங்கோல் என்ற குழு கிட்டத்தட்ட ஒரு குட்டி அரசாங்கம் போல சக்திவாய்ந்ததாக மாறியுள்ளது. ஜனவரி மாதம், இம்பாலில் உள்ள காங்லா கோட்டையில் மெய்தேய் எம்.எல்.ஏக்கள் அங்கு வரவழைக்கப்பட்டு குழுவால் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டனர். மாநில அரசியலில் இந்தக் குழு எந்தளவுக்கு கட்டுப்பாட்டை வைத்திருக்கிறது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. இது சிவில் ஜனநாயகத்தின் வீழ்ச்சியையும், மணிப்பூரில் அதிகரித்து வரும் இராணுவ கட்டுப்பாட்டையும் எடுத்துக்காட்டுகிறது. கடந்த காலங்களில் போராளிக் குழுக்கள் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்து அவர்களை கொலை செய்த காலத்தை இது நமக்கு நினைவூட்டுகிறது, மேலும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின்  (Armed Forces (Special) Powers Act) கீழ் மாநில அரசு செயல்படுகிறது.


அரசானது வலுவாக செயல்படாததால், இராணுவமயமாக்கல் அதிகரிக்கும். மியான்மரில் உள்ள பிரச்சினைகளும் குழப்பத்தை அதிகரிக்கின்றன. மேலும் அகதிகள் ஆயுதங்களுடன் உள்ளே வருகிறார்கள். இந்த நிகழ்வை பார்க்கும் போது தேசிய அடையாளத்தை விட இனக் குழுக்களின் மீது அதிக அக்கறை உள்ளது.


இனம் மற்றும் அச்சத்திற்கு அப்பாற்பட்ட அரசியலைப் பற்றி சிந்திக்க மணிப்பூர் மாநிலத்திற்க்கு ஒரு புதிய வழி தேவைப்படுகிறது. இதில் ஒன்றிய அரசு விரைவாக செயல்பட வேண்டும். இல்லையெனில், கலவரம் மற்றும் வன்முறை அதிகரிக்கும், இவற்றை கட்டுபடுத்துவது கடினமாக இருக்கும்.




Original article:

Share: