மற்றவர்களுக்கு முன்மாதிரியாக மாறும் வகையில் சொந்த மாதிரியை நாம் உருவாக்க வேண்டும்.
ஒவ்வொரு தேர்தல் ஆண்டிலும், வளர்ச்சியடைந்த பாரதம் 2047 (Viksit Bharat) ஒரு புதிய திட்டத்தை முன்வைக்கிறது. 100-வது சுதந்திர தினமான 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த இலக்கு உற்சாகமாகத் தெரிகிறது. ஆனால், இந்த பெரிய கனவு காணும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு கேள்விக்கு பதிலளிப்பதன் மூலம் ஆரம்பிக்கலாம்: வளர்ச்சி என்றால் என்ன? நம்மில் பலர் அமெரிக்கா அல்லது இங்கிலாந்து போன்ற ஒரு நாட்டை கற்பனை செய்கிறோம். இந்த நாடுகளில் உயர்மட்ட உள்கட்டமைப்பு, மேம்பட்ட நகர்ப்புற வசதிகள் மற்றும் உயர்தர பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான அணுகல் உள்ளது. ஐரோப்பாவும் அமெரிக்காவும் தலைமைத்துவத்திற்கு தக்கவைத்ததன் மூலம் தொழிற்புரட்சியின் போது இந்த வளர்ச்சி பற்றிய சிந்தனை தோன்றியது. தீவிரமான உற்பத்தி பொருட்களை மேலும் அணுகக்கூடியதாக ஆக்கியது, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியது.
ஆனால் தொழிற்புரட்சிக்கு முன்பு என்ன நடந்தது? வித்தியாசமாகவும் மகிழ்ச்சியாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட சமூகங்கள் இருந்தனவா? இந்தியாவின் ஹரப்பா நாகரிகம் (Harappan Civilisation) ஆரம்பகால ஒழுங்கமைக்கப்பட்ட சமூகங்களில் ஒன்றாகும். வரலாற்று ரீதியாக, இந்தியா பணக்கார மற்றும் புத்திசாலித்தனமான நாடுகளில் ஒன்றாகும். இந்தியாவின் வளர்ச்சி குறித்த நமது தற்போதைய கருத்துக்கு சவால் விடும் வகையில் இந்திய மற்றும் வெளிநாட்டு வரலாற்றின் பின்னணிகளிலும் உள்ளனவா?
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பல காரணிகள் உள்ளன. அதில், ஒரு முக்கியமான காரணி நகர்ப்புற திட்டமிடலாகும். கிமு 3000 ஆம் ஆண்டில் சிந்து சமவெளி நாகரிகத்தின் போது இந்தியா முதல் திட்டமிடப்பட்ட நகரங்களில் ஒன்றை உருவாக்கியது. இந்த நகரத்தில், கழிவுநீர் கால்வாய் அமைப்பையும், அதை மூடி வைத்திருந்தனர். சுவாரஸ்யமாக, இன்று இந்தியாவின் பல நகரங்களில் இது இல்லை. கடந்த காலத்தில், இந்தியா மிகவும் செல்வந்தர்களாக இருந்தது. முகலாய பேரரசர் அக்பர் ஆட்சி செய்தபோது, இந்தியா உலகளவில் பணக்கார நாடாக கருதப்பட்டது. சூரிய ஒளி மற்றும் காற்று போன்ற இயற்கை கூறுகளின் ஆற்றல் ஓட்டத்தை மையமாகக் கொண்ட பண்டைய அறிவியலான "வாஸ்து" (vaastu)-ஐப் பின்பற்றி இந்தியாவில் வீடுகள் கட்டப்பட்டன. காலையில் சூரிய ஒளியில் இருந்து வரும் ஆற்றலுக்காக படுக்கைகள் கிழக்கு நோக்கி இருந்தன. தீ விபத்தில் இருந்து தப்பிக்க காற்று குறைவாக இருக்கும் இடங்களில் சமையலறைகள் அமைக்கப்பட்டன. பாரம்பரியமான இந்திய வீடுகளில் பெரும்பாலும் முற்றங்கள் இருந்தன. இவை வசதியான காலநிலையை உருவாக்க துல்லியமான கணக்கீடுகளைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டன. இதனால், வீடுகளில் முற்றங்கள் குடும்ப தொடர்புகளை ஊக்குவித்தன. இந்திய வீடுகள் வழக்கமாக மண்ணால் கட்டப்பட்டன. அவை கோடையில் குளிர்ச்சியாகவும் குளிர்காலத்தில் கதகதப்பாகவும் இருக்க வழிவகுக்கும். இந்தியாவில் பாரம்பரிய நகர்ப்புற திட்டமிடல் சிறந்த ஞானத்தைக் காட்டியது. இந்தியாவை செல்வத்தில் மட்டுமல்ல, அறிவிலும் வளமாக்கியது.
வளர்ந்து வரும் நமது மக்கள்தொகைக்கு ஏற்ப உயரமான கண்ணாடி மற்றும் எஃகு கட்டிடங்களைக் கொண்ட மேற்கு நகர்ப்புறங்களைப் போல நமது நகரங்களை மாற்றும்போது நமது பாரம்பரிய ஞானத்தை நாம் பேணுகிறோமா? மும்பையில் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான (slum) தாராவி உள்ளது. இது, மற்ற குடிசைப் பகுதி திட்டங்களுடன் மறுவடிவமைப்புக்கு தயாராக உள்ளது. அருகருகே சிறிய குடிசைகளில் வசிக்கும் குடிசைவாசிகள், உயரமான கட்டிடங்களில் பெரிய இடங்களைப் பெறுவார்கள். அவர்களுக்கு தண்ணீர், மின்சாரம் போன்ற வசதிகளும், நிரந்தர வீட்டுப் பாதுகாப்பும் கிடைத்தால், அவர்கள் அதிக இடத்திற்கு செல்ல விரும்புவார்களா? இந்த பகுதியிலிருந்து நகர்வது என்பது அவர்களின் சமூகத்துடனான நெருக்கத்தை இழப்பதையும், இயற்கையை எளிதாக அணுகுவதையும் குறிக்கும். இயற்கையிலிருந்து தனிமைப்படுத்தப்படுவது மனச்சோர்வு, பதட்டம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற மன மற்றும் உடல் ஆரோக்கிய பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. நமது பாரம்பரிய நகர்ப்புற திட்டமிடல் முறைகளில் உயரமான கட்டிடங்கள் தேவைப்படாமல் வளர்ந்து வரும் மக்கள் தொகையை கையாள ஒரு வழி இருக்கிறதா?
சவுதி அரேபியா சமீபத்தில் பாலைவனத்தில் ஒரு எதிர்கால நகரமான NEOM-க்கான திட்டங்களை வெளிப்படுத்தியது. NEOM ஒரு மேம்பட்ட நகரமாக இருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பூங்காக்கள் உட்பட அனைத்தும் ஒரு கட்டமைப்புக்குள் கட்டப்பட்டுள்ளன. அத்தகைய நகரத்தை உருவாக்க பில்லியன் கணக்கான டாலர்கள் தேவைப்படும். சவுதி அரேபியாவில் 34.2 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் பலருக்கு ஏற்கனவே சொந்த வீடுகள் உள்ளன. NEOM யாருக்கு சேவை செய்யும்: உள்ளூர் மக்களுக்கா அல்லது சுற்றுலாப் பயணிகளுக்கா? உயர்தர பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான அணுகல் மற்றும் வளர்ச்சியின் பாரம்பரிய கருத்துக்கள் என்று வரும்போது, அவர்களின் குடிமக்கள் ஏற்கனவே அதைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் NEOM அல்லது ஒரு சுதந்திர சமூகத்தை விரும்புவார்களா? சவுதி அரேபியாவின் உண்மையான வளர்ச்சி என்ன? இந்த கேள்விகள் சவுதி அரசாங்கத்தை அதன் NEOM திட்டங்களை குறைக்க தூண்டியிருக்கலாம். மறுபுறம், பூட்டானின் முன்னேற்றமானது பொருள் வளர்ச்சி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியால் அளவிடவில்லை. ஆனால், மொத்த தேசிய மகிழ்ச்சி (Gross National Happiness(GNH)) மூலம் அளவிடுகிறது. சவூதி அரேபியாவும் பூட்டானும் வளர்ச்சிக்கான வெவ்வேறு அணுகுமுறைகளை எடுத்துக்காட்டுகின்றன.
வளர்ச்சியடைந்த பாரதம் (viksit bharat) பற்றி நாம் பேசும்போது, "விக்சித்" என்றால் என்ன என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நாம் வளர்ச்சியடைய விரும்புகிறோம், ஆனால் நாம் அதை ஆழமாக பரிசீலிக்கிறோமா? வளர்ச்சி பற்றி நாம் விவாதிக்கும் போது நமது வரலாற்றையும் ஏனைய நாடுகளையும் ஆராய வேண்டும். மகிழ்ச்சியான, செழிப்பான சமுதாயத்தை உருவாக்குவதும், வளர்ச்சியடைந்த பாரதத்தை (viksit bharat) உலகளாவிய முன்மாதிரியாக மாற்றுவதும் நம் நோக்கமாக உள்ளது.
எழுத்தாளர் ஆர்பிஜி அறக்கட்டளையின் இயக்குநராகவும், பெஹ்லே அக்ஷர், தி ஹெரிடேஜ் திட்டத்தின் நிறுவனராகவும் உள்ளார்