விவசாயிகள், பெரும்பாலும், வாங்குபவர்களின் சந்தையில் (buyer’s market) செயல்படுகின்றனர். அவர்களின் பயிர்கள், ஒருவேளை, பால் தவிர, அறுவடை செய்யப்பட்டு அதிக அளவில் விற்கப்படுகின்றன. இது தேவையுடன் ஒப்பிடும்போது திடீரென விநியோகம் அதிகரிக்க வழிவகுப்பதால் அடிக்கடி விலையும் குறையும்.
இத்தகைய சந்தை, விற்பனையாளர்களை விட வாங்குபவர்களுக்கு சாதகமாக இருப்பதால், விவசாயிகள் வாங்குபவர்கள் கொடுக்கும் விலையை ஏற்றுக்கொள்வார்கள். தங்கள் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் அவர்களிடம் இல்லை. பல நிறுவனங்கள் செய்வது போல் அவர்களால் அதிகபட்ச சில்லறை விலையை (Maximum retail price (MRP)) நிர்ணயிக்க முடியாது. எனவே, அவர்கள் தங்கள் பயிர்களை வழங்கல் மற்றும் தேவைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்கிறார்கள். மேலும், விவசாயிகள் மற்றொரு சிக்கலை எதிர்கொள்கின்றனர். அவர்கள் தங்கள் பயிர்களை மொத்த விலைக்கு விற்கிறார்கள். ஆனால், விதைகள், பூச்சிக்கொல்லிகள், டீசல்கள், டிராக்டர்கள் என தங்களுக்குத் தேவையான அனைத்தையும் சில்லறை விலையில் வாங்குகிறார்கள். இதில் விவசாய பொருட்கள் மட்டுமின்றி, சிமெண்ட், மருந்துகள், பற்பசை மற்றும் சோப்பு போன்ற பொருட்களும் அடங்கும்.
விவசாயிகள் பெரும்பாலும் தங்கள் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை கேட்கிறார்கள். சந்தையில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களே இதற்குக் காரணம். மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால், மேலும் பல கோரிக்கைகள் எழலாம். கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் "குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம்" (legal guarantee for MSP)அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் விரும்பலாம்.
விலை மற்றும் வருமான ஆதரவு
பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதரவு விலைகளை ஆதரிப்பதில்லை. இந்த விலைகள் சந்தை தேவையை கருத்தில் கொள்ளவில்லை என்று அவர்கள் வாதிடுகின்றனர். சந்தைக்கு என்ன தேவையோ அதன் அடிப்படையில் விவசாயிகள் பயிர்களை வளர்க்க வேண்டும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வெவ்வேறு பயிர்களின் விலைகளால் இது காட்டப்படுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலைகள் தேவையை கருத்தில் கொள்ளவில்லை என்றால், அவை சில பயிர்களை அதிகமாகவும் மற்றவற்றிற்கு பற்றாக்குறையையும் ஏற்படுத்தும்.
விவசாயிகளுக்கு "விலைக்கு" (price) பதிலாக "வருமானம்" (income) கொடுப்பது நல்லது என்று பொருளாதார வல்லுநர்கள் பெரிதும் நம்புகிறார்கள். அதாவது, ஒரு விவசாயிக்கு (மத்திய அரசின் PM-Kisan Samman Nidhi) அல்லது ஒரு ஏக்கருக்கு (தெலுங்கானா அரசாங்கத்தின் Rythu Bandhu) என்ற அடிப்படையில் ஆண்டுதோறும் ஒரு நிலையான தொகையை அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்ற வேண்டும். இந்த நேரடி வருமான ஆதரவு திட்டங்கள் (Direct income support schemes) சந்தையை சீர்குலைக்காது. அனைத்து விவசாயிகளும், என்ன பயிரிட்டாலும், எவ்வளவு உற்பத்தி செய்தாலும், யாருக்கு விற்றாலும், யாருக்கு எந்த விலைக்கு விற்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் விலை நிர்ணயம் சீராக கொண்டுவர வேண்டும் .
ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரே அளவு பணம் கொடுப்பதில் குறைபாடு உள்ளது. இது ஒரு கேள்வியை எழுப்புகிறது : வயல்களில் கடினமாக உழைக்கும் விவசாயிகளைப் பற்றி என்ன? பக்க வேலையாக விவசாயம் செய்பவர்களை விட இந்த விவசாயிகள் அதிக வளங்களையும், நேரத்தையும், உழைப்பையும் செலவிடுகிறார்கள்.
இந்த விவசாயிகள், விவசாயம் இரண்டாம் நிலை அல்லது தற்செயலான வாழ்வாதாரமாக இருப்பவர்களைப் போலல்லாமல், தாங்கள் இப்போது விதைக்கும் பயிருக்கு ஒருவித விலை உத்தரவாதத்தை நாடுவது மற்றும் சில மாதங்களுக்குள் அறுவடை செய்வது நியாயமானது.
இந்த விவசாயிகள் மற்ற வணிகர்கள் சந்திக்காத அபாயங்களை எதிர்கொள்கின்றனர். அவர்கள் விலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வளரும் பயிர்கள் தொடர்பான அபாயங்களை சமாளிக்க வேண்டும். இந்த அபாயங்களில் வானிலை பிரச்சினைகள், பூச்சிகள் மற்றும் நோய்கள் அடங்கும். எனவே, குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதம் கேட்பது நியாயமற்றதாக இருக்காது.
விலை ஆதரவு பல்வேறு வகையான பயிர்களை வளர்க்க விவசாயிகளை ஊக்குவிக்க உதவும். விவசாயிகள் பயறு வகைகள், தினைகள் போன்ற பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும் என்பதில் உறுதியாக இருந்தால், அவர்கள் அரிசி, கோதுமை அல்லது கரும்புக்குப் பதிலாக இவற்றைப் பயிரிடலாம். குறைந்தபட்ச ஆதரவு விலைகள் சந்தை விலைக்கு அருகில் விலைகள் இருக்கும் வரை மற்றும் வெவ்வேறு பயிர்களுக்கு இடையே நியாயமான விலை சமநிலை இருக்கும் வரை இந்த அணுகுமுறை நன்றாக வேலை செய்கிறது. இதை எவ்வாறு திறம்படச் செய்வது என்பதுதான் அடுத்து பதிலளிக்க வேண்டிய முக்கியமான கேள்வி.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எப்படி உத்தரவாதம் அளிக்க முடியும்?
இரண்டு வழக்கமான வழிகள் உள்ளன.
1. சர்க்கரை ஆலைகளுக்கு கொள்முதல் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையை செலுத்த வைப்பது முதல் முறையாகும். கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு கொள்முதல் செய்த 14 நாட்களுக்குள் நியாயமான விலையை சர்க்கரை ஆலைகள் சட்டப்பூர்வமாக வழங்க வேண்டும். இருப்பினும், இந்த முறை சிக்கல்களைக் கொண்டுள்ளது. உதாரணமாக, கரும்பு விவசாயிகளுக்கு பணம் கொடுப்பதில் அடிக்கடி தாமதம் ஏற்படுகிறது. மேலும், தனியார் வர்த்தகர்கள் வாங்கவே வேண்டாம் என்று தேர்வு செய்யலாம் .
2. இரண்டாவது முறை, குறைந்தபட்ச ஆதரவு விலையில் வழங்கப்படும் அனைத்து விவசாயிகளின் விளைபொருட்களையும் அரசு நிறுவனங்கள் கொள்முதல் செய்வது. இந்த முறை நிலையானது அல்ல, ஏனெனில் இது மிகவும் விலை உயர்ந்தது மற்றும் நிர்வகிக்க கடினமாக உள்ளது.
3. மூன்றாவது விருப்பம் விலை குறைபாடு செலுத்தும் முறைகள் (price deficiency payments (PDP)) ஆகும். இம்முறையில் அரசு பயிர்களை கொள்முதல் செய்வதோ, சேமித்து வைப்பதோ இல்லை. மாறாக, சந்தை விலைக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் (MSP) உள்ள வித்தியாசத்தை விவசாயிகளுக்குக் கொடுக்கிறது. ஆனால் சந்தை விலை குறைவாக இருந்தால், விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இந்தத் தொகை விவசாயிகள் தனியார் வியாபாரிகளுக்கு விற்கும் பயிர்த் தொகைக்கானது.
பவந்தர் புக்தான் யோஜனா (Bhavantar Bhugtan Yojana) மூலம் மத்தியப் பிரதேசத்தில் முதன்முதலில் விலை குறைபாடு செலுத்தும் முறை (price deficiency payments (PDP)) முயற்சி செய்யப்பட்டது.
இந்தத் திட்டம், மத்தியப் பிரதேசம் மற்றும் இரண்டு மாநிலங்களில் உள்ள வேளாண் உற்பத்திச் சந்தைக் குழுவில் (Agricultural Produce Market Committee (APMC)) கிடங்கில் விற்பனைக்கான மாதத்தின் போது அதிகமாகக் குறிப்பிடப்பட்ட விலையை சராசரியாகக் கொண்டு ஒரு பயிரின் சந்தை விலையை நிர்ணயித்தது.
"அனுபந்த் பத்ரா" (anubandh patra) (வர்த்தகர் உடனான விற்பனை ஒப்பந்தம்), "டோல் பார்ச்சி" (tol parchi) மற்றும் "புக்தான் பத்ரா" (bhugtan patra), இரு தரப்பினராலும் கையொப்பமிடப்பட்ட பணம் செலுத்தும் கடிதம் ஆகியவற்றின் ஆதரவுடன், விவசாயியால் விற்கப்பட்ட உண்மையான அளவின் மீது குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எதிரான விலை வேறுபாடு செலுத்தப்பட்டது.
மத்தியப் பிரதேச திட்டம் (Madhya Pradesh scheme) 2017-18 காரிஃப் பருவத்தில் எட்டு பயிர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது: உளுந்து, சோயாபீன், மக்காச்சோளம், அர்ஹர், மூங், நிலக்கடலை, எள் மற்றும் நைகர்சீட். இதில், சுமார் 21 லட்சம் விவசாயிகள் பதிவு செய்து, தோராயமாக ரூ.1,952 கோடி செலுத்தப்பட்டாலும், மத்திய அரசின் ஆதரவு இல்லாததால், இத்திட்டம் நிறுத்தப்பட்டது.
ஹரியானாவில் ஒரு மாதிரி
ஹரியானாவின் விலை குறைபாடு செலுத்தும் முறைகள் (price deficiency payments (PDP)) திட்டம், பாவந்தர் பார்பாய் யோஜனா (Bhavantar Bharpai Yojana (BBY)) எனப்படும், முக்கியமாக பஜ்ரா (bajra) (முத்து தினை), கடுகு மற்றும் சூரியகாந்தி விதைகளில் கவனம் செலுத்துகிறது. இதில் நிலக்கடலை, சனா (கொண்டைக்கடலை), நிலவேம்பு மற்றும் 16 காய்கறி மற்றும் 3 பழ பயிர்களையும் உள்ளடக்கியது.
பாவந்தர் பார்பாய் யோஜனா (Bhavantar Bharpai Yojana (BBY)) ஹரியானா அரசாங்கத்தின் 'மேரி ஃபசல், மேரா பயவுரா' (Meri Fasal, Mera Byaura) தரவுத் தளம் மூலம் செயல்படுகிறது. விவசாயிகள் இந்த இணையதளத்தில் பதிவு செய்து, கிராமத்தின் பெயர், காஸ்ரா நிலத்தின் எண் (khasra- இது கிரமப்புறங்களில் உள்ள நிலங்களுக்கு ஒதுக்கப்படும் தனித்துவமான எண்) , வைத்திருக்கும் அளவு மற்றும் வெவ்வேறு பயிர்களுடன் தாங்கள் பயிரிட்ட பகுதி போன்ற தங்கள் நிலத்தைப் பற்றிய தகவல்களை வழங்க வேண்டும்.


விவசாயிகள் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காரிஃப் பயிர்களுக்கும் (kharif crops), நவம்பர் முதல் பிப்ரவரி வரை ராபி பருவமான குளிர்கால-வசந்த கால (rabi (winter-spring)) பயிர்களுக்கும் பதிவு செய்யலாம். அவை பதிவுசெய்யப்பட்டு, அவற்றின் பயிர்ப் பகுதியை அதிகாரிகள் மற்றும் செயற்கைக்கோள் இமேஜிங் மூலம் "கிர்த்வாரி" (girdwari-பயிர் பகுதி சரிபார்ப்பு) மூலம் சரிபார்க்கப்பட்டதும், அவர்கள் பாவந்தர் பார்பாய் யோஜனா (Bhavantar Bharpai Yojana (BBY)) மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலையைப் (MSP) பெறலாம்.
குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) ஏன் சட்டப்பூர்வ உரிமையாக இருக்க வேண்டும்
ஹரியானா பாவந்தர் பார்பாய் யோஜனாவில் (Bhavantar Bharpai Yojana (BBY)) நேரடி கொள்முதல் மற்றும் விலை குறைபாடு செலுத்தும் முறைகள் (price deficiency payments (PDP)) இரண்டையும் பயன்படுத்துகிறது. 2020-21 ஆம் ஆண்டில், மாநில அரசு 776,909 டன் பஜ்ரா மற்றும் 16,952 டன் சூரியகாந்தியை நேரடியாக ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,150 மற்றும் ரூ.5,885 என்ற விலைக்கு வாங்கியது.
அடுத்தடுத்த ஆண்டுகளில், குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் சந்தை விலைகளுக்கு இடையே உள்ள இடைவெளியின் அடிப்படையில் கொள்முதல் அல்லது விலை குறைபாடு செலுத்தும் முறைகள் (price deficiency payments (PDP)) செய்ய வேண்டுமா என்பதை ஹரியானா முடிவு செய்கிறது. இடைவெளி குறைவாக இருந்தால், அவர்கள் சந்தை விலைகளை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு நெருக்கமாக உயர்த்துவதற்காக கொள்முதல் செய்கிறார்கள் மற்றும் மீதமுள்ளவற்றுக்கு விலை குறைபாடு செலுத்தும் முறையைப் (PDP) பயன்படுத்துகின்றனர். இடைவெளி அதிகமாக இருந்தால், விலை குறைபாடு செலுத்தும் முறையை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
2022-23க்கான விலை குறைபாடு செலுத்தும் முறை ((price deficiency payments (PDP))) விகிதங்கள் பஜ்ராவிற்கு ரூ.450/குவின்டாலுக்கும், சூரியகாந்திக்கு ரூ.1,000/குவின்டாலுக்கும் நிர்ணயிக்கப்பட்டது. இது தேசிய பொருட்கள் (National Commodity) மற்றும் வழித்தோன்றல்கள் சந்தையில் (derivatives market) உள்ள சராசரி விலையிலிருந்து நிர்ணயிக்கப்பட்டது. விவசாயிகள் தங்கள் தொகுதி / துணை மாவட்டத்திற்கான மூன்று ஆண்டு சராசரி விளைச்சலின் அடிப்படையில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வரம்புகளுடன் பணம் பெறுகிறார்கள்.
அடுத்து என்ன ?
மத்தியப் பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகியவை அரிசி, கோதுமை மற்றும் கரும்பு ஆகியவற்றைத் தாண்டிய பயிர்களுக்கு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவது சாத்தியம் என்பதை நிரூபித்துள்ளன.
அவர்களின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் இந்த மாநிலங்களில் தற்போதுள்ள விவசாய உற்பத்தி சந்தை குழுக்கள் (APMC) கிடங்கின் உள்கட்டமைப்பு மற்றும் விவசாயிகளின் பதிவு அமைப்புகள் ஒவ்வொரு பரிவர்த்தனையையும் கண்காணிக்க அனுமதிக்கிறது. விவசாயிகள் என்ன பயிர்களை விற்கிறார்கள் மற்றும் எந்த விலையில் விற்கிறார்கள் என்பதைப் பதிவுசெய்து, அவர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான வித்தியாசத்தை எளிதாகச் செலுத்துகிறது.
50% மத்திய அரசின் நிதியுதவியுடன் நாடு தழுவிய விலை குறைபாடு செலுத்தும் முறைகள் (price deficiency payments (PDP)) திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது மத்திய பிரதேசம் மற்றும் ஹரியானாவின் உதாரணங்களைப் பின்பற்ற மற்ற மாநிலங்களை ஊக்குவிக்கும். தொடக்கத்தில், தேவையான சந்தை உள்கட்டமைப்பு மற்றும் அமைப்புகளை உருவாக்க முடியும். மேலும், விவசாயிகளும் சட்டப்பூர்வ ஆணைகள் மூலமாகவோ அல்லது பிற வழிகளிலோ குறைந்தபட்ச ஆதரவு விலை பெறுவதை உறுதிசெய்யலாம்.