தகுதியுடைய அனைத்து மக்களும் அரசின் திட்டங்களிலிருந்து பயனடைவதை உறுதி செய்வதே வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தின் குறிக்கோளாகும் - பிரதமர் மோடி

 ‘மோடியின் உத்தரவாத வாகனங்கள்’ (Modi Ki Guarantee vehicles) ஒவ்வொரு மூலை முடுக்கையும் சென்றடைந்து, பயனாளிகளின் வீட்டு வாசலுக்கு அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்கிறது.


ஜனவரி 8 அன்று, பிரதமர் நரேந்திர மோடி, வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தின் (Viksit Bharat Sankalp Yatra (VBSY)) முதன்மை நோக்கம், அரசாங்கத் திட்டங்கள், தகுதியான அனைத்து மக்களையும் சென்றடைவதை உறுதி செய்வதே என்று பிரதமர் கூறினார்.


வீடியோ அழைப்புகள் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தின் பயனாளிகளுடன் பேசிய திரு மோடி, பிரச்சாரம் 50 நாட்களாக நடந்து வருவதாகவும், சுமார் 11 கோடி மக்களுடன் இணைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். இது அரசாங்கத்தின் பயணம் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டின் பயணம் என்றும் அவர் வர்ணித்தார்.


‘மோடியின் உத்தரவாத வாகனங்கள்’, அரசு அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சென்றடைவதையும் திரு. மோடி குறிப்பிட்டார். அரசின் சலுகைகளுக்காகக் காத்திருக்கும் ஏழைகளுக்கு இந்த அணுகுமுறை எவ்வாறு அர்த்தமுள்ள மாற்றங்களைக் கொண்டுவருகிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். இப்போது, அரசாங்கம் இந்த சலுகைகளை அவர்களின் வீட்டு வாசலில் நேரடியாக வழங்குவதில் உறுதியாக உள்ளது.


‘மோடியின் உத்தரவாதம்’ மீதான உலகளாவிய கவனத்தையும், "வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயண (Viksit Bharat Sankalp Yatra (VBSY)) திட்டத்தின் வெற்றிக்கான அதன் தொடர்பையும் பற்றி பிரதமர் பேசினார்.


அடிப்படைத் தேவைகளுக்கான போராட்டங்களைக் குறைத்து, தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என அவர் கூறினார். நாட்டின் மிக முக்கியமான நான்கு குழுக்களாகக் கருதப்படும் ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்தக் குழுக்கள் அதிகாரம் பெற்றால்தான், ஒட்டுமொத்த தேசமும் வலுப்பெறும் என்று அவர் கூறினார்.


உஜ்வாலா (Ujjwala) இணைப்புக்காக 12 லட்சம் புதிய விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் பாதுகாப்பு காப்பீட்டு திட்டம் (Suraksha Bima Yojana), ஜீவன் ஜோதி யோஜனா (Jeevan Jyoti Yojana) மற்றும் PM SVANidhi (பிரதம மந்திரி ஸ்வாநிதி) போன்ற பிற திட்டங்களுக்கும் லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் வந்துள்ளன என்றார்.


ஒரு கோடி காசநோய் (TB) மற்றும் 22 லட்சம் அரிவாள் செல் (sickle cell) பரிசோதனைகள் உட்பட இதுவரை இரண்டு கோடி பேருக்கும் மேல் சுகாதாரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று திரு. மோடி கூறினார். ஏழைகள், தலித்துகள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் வீட்டு வாசலுக்கு மருத்துவர்கள் சென்றடைகிறார்கள், இது முந்தைய அரசாங்கங்களால் சவாலாகக் கருதப்பட்டது. 5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் யோஜ்னா (Ayushman Yojna), மற்றும் ஏழைகளுக்கு ஜன் ஔஷதி கேந்திரா (Jan Aushadhi Kendras) ஆகியவற்றின் பலன்கள் குறித்து அவர் பேசினார்.


பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அரசின் பங்கை பிரதமர் வலியுறுத்தினார். முத்ரா யோஜனா (Mudra Yojana) போன்ற திட்டங்களை அவர் குறிப்பிட்டார். வங்கி மித்ராக்கள் (Bank Mitras), பசு சாகிகள் (Pashu Sakhis) மற்றும் ஆஷா பணியாளர்களாக (Asha workers) பணிபுரியும் பெண்களைப் பற்றியும் அவர் பேசினார். கடந்த பத்தாண்டுகளில் 10 கோடி பெண்கள் சுயஉதவி குழுக்களில் சேர்ந்துள்ளனர். இந்த குழுக்கள் ₹7.50 லட்சம் கோடிக்கு மேல் நிதியுதவி பெற்றுள்ளன. இது பல வருடங்களாக பல பெண்கள் நிதி ரீதியாக சுதந்திரம் பெற உதவியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். நமோ ட்ரோன் திதி திட்டம் (‘NaMo Drone Didi Scheme) போன்ற திட்டங்கள் மூலம் பயனாளிகளின் எண்ணிக்கையை இரண்டு கோடியாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தின் போது, சுமார் ஒரு லட்சம் ட்ரோன்கள் செயல்விளக்கம் செய்யப்பட்டன. தற்போது விவசாயத்தில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த பயிற்சி அளித்து வருகின்றனர், ஆனால் எதிர்காலத்தில் இது மற்ற பகுதிகளுக்கும் விரிவடையும் என்றார்.


முந்தைய அரசாங்கங்கள் தங்கள் விவசாயக் கொள்கைகளில் உற்பத்தி மற்றும் விற்பனையில் மட்டுமே கவனம் செலுத்தியதாக திரு மோடி குறிப்பிட்டார். விவசாயிகள் எதிர்கொள்ளும் அன்றாட சவால்களை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. விவசாயிகளின் இந்த சிரமங்களை தீர்க்க தனது தலைமையிலான அரசு விரிவான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றார். பின்னர் அவர்களுக்கு உதவ எடுக்கப்பட்ட முயற்சிகளையும் பட்டியலிட்டார்.




Original article:

Share: