இந்தியா தனது அதிகாரத்துவத்தை நவீனமயமாக்குவதற்கு அவசர சீர்திருத்தங்கள் தேவைப்படும் நிர்வாக சவால்களை எதிர்கொள்கிறது. பொருளாதார வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்தாலும், வருமான சமத்துவமின்மை, முக்கிய துறைகளில் குறைவான முதலீடு மற்றும் திறமையற்ற அதிகாரத்துவம் போன்ற பிரச்சனைகளை இன்னும் கையாள்கிறது. இந்திய ஆட்சிப் பணி நீண்டகாலமாக நாட்டை ஆட்சி செய்வதில் முக்கிய பங்காற்றியுள்ளது. எவ்வாறாயினும், இந்திய ஆட்சிப் பணி மற்றும் பரந்த அதிகாரத்துவத்திற்குள் நிலவும் சிக்கல்கள் இந்தியாவின் பொருளாதார திறனை முழுமையாக உணர நிர்வாக சீர்திருத்தங்கள் அவசரமாக தேவை என்பதைக் காட்டுகின்றன.
இந்திய ஆட்சிப் பணியின் (Indian Administrative Service (IAS)) பாரம்பரியம் மற்றும் சவால்கள்
இந்தியாவின் "கடினமான சட்டகம்" என்று அழைக்கப்படும் இந்திய ஆட்சிப் பணி, காலனித்துவ இந்திய குடிமைப் பணியிலிருந்து (Indian Civil Service (ICS)) உருவானது. சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியாவின் நிர்வாகத்தின் முக்கிய பகுதியாக இந்திய ஆட்சிப் பணி மாறியது. நிர்வாகத்தில் அதிகாரிகள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். இருப்பினும், இந்த அமைப்பு சிக்கல்களை எதிர்கொண்டது. அரசியல் தலையீடு, நிபுணத்துவமின்மை மற்றும் காலாவதியான நடைமுறைகள் அதன் செயல்திறனை மெதுவாகக் குறைத்துள்ளன.
இந்திய ஆட்சிப் பணி அரசியல்மயமாக்கப்படுவது முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாகும். அடிக்கடி இடமாற்றங்கள், இடைநீக்கங்கள் மற்றும் பதவி உயர்வுகள் ஆகியவை தகுதியை விட அரசியல் விசுவாசத்தால் பாதிக்கப்படுவது மன உறுதியையும் தொழில்முறையையும் பலவீனப்படுத்தியுள்ளது. பல்வேறு துறைகளில் அடிக்கடி சுழற்றப்படுவதால், அதிகாரிகள் பெரும்பாலும் கள நிபுணத்துவத்தைப் (domain expertise) பெற போராடுகிறார்கள். சிக்கலான ஆளுகை நிலப்பரப்பில் பயனுள்ள கொள்கை நிபுணர்களாக மாறுவதை இது தடுக்கிறது.
ஊழல் மற்றும் திறமையின்மை இந்தியாவின் அதிகாரத்துவத்தின் முக்கிய பிரச்சினைகளாகும். உலக வங்கியின் அரசாங்க செயல்திறன் அளவீட்டின்படி, இந்தியா மிதமான இடத்தில் மட்டுமே உள்ளது. இது கொள்கை அமலாக்கத்தின் மோசமான தரம் மற்றும் வரையறுக்கப்பட்ட நிர்வாக சுதந்திரத்தை பிரதிபலிக்கிறது. சீர்திருத்தம் இல்லாமல், இந்த திறமையின்மைகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிர்வாக இலக்குகளைத் தடுக்கலாம்.
இந்தியாவில் நிர்வாகத் தலைமையிலான ஆட்சி (Executive-led governance) கலவையான முடிவுகளைக் கொண்டுள்ளது. இது விரைவான பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அனுமதித்துள்ளது. ஆனால், கொள்கை அமலாக்கத்தில் இடையூறுகள் மற்றும் பொறுப்பான நிர்வாகம் இல்லாமை ஆகியவற்றை ஏற்படுத்தியது. ஒன்றிய அரசாங்கம் அதிகார அமைப்பு பெரும்பாலும் அதிகாரத்துவத்தின் நுண்ணறிவு மற்றும் நிபுணத்துவத்தை புறக்கணிக்கிறது. கொள்கைகளை திறம்பட செயல்படுத்தும் திறனைக் குறைக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், அரசாங்கம் இந்த பிரச்சினைகளில் சிலவற்றை தீர்க்க முயற்சிக்கிறது. அவர்கள் அரசியல்மயமாக்கப்பட்ட இடமாற்றங்களை குறைத்துள்ளனர் மற்றும் அதிகாரத்துவ பொறுப்புணர்வை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இருப்பினும், பிரதமர் அலுவலகத்தில் அதிகாரத்தை மையப்படுத்துவது மூத்த அதிகாரிகளின் சுயாட்சியை பலவீனப்படுத்தலாம். மேலும், இது இந்திய ஆட்சிப் பணியை வலுவிழக்கச் செய்யலாம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் நிர்வாக சீர்திருத்தங்கள் தேவை என்பது புதிதல்ல. சுதந்திரத்திற்குப் பிறகு, 50க்கும் மேற்பட்ட ஆணையங்கள் மற்றும் குழுக்கள் நாட்டின் நிர்வாக அமைப்பை மறுவடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. முதல் நிர்வாக சீர்திருத்த ஆணையம் (Administrative Reforms Commission (ARC)) 1966-ல் அமைக்கப்பட்டது. அதுவும் அதன் பின்னர் வந்த ஆணையங்களும் அதிகாரத்துவத்தில் சிறப்பு, பொறுப்பான நிர்வாகம் மற்றும் தகுதி அடிப்படையிலான பதவி உயர்வுகளின் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
2005-ல் நிறுவப்பட்ட இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையம், நிர்வாக சீர்திருத்தங்களுக்கான திட்டத்தை வகுத்தது. குடிமை பணிகளில் நுழைவதற்கான வயதைக் குறைக்கவும், செயல்திறன் அடிப்படையிலான பதவி உயர்வுகளை அறிமுகப்படுத்தவும், பக்கவாட்டு நுழைவை (lateral entry) அனுமதிக்கவும் மற்றும் தன்னிச்சையான இடமாற்றங்களுக்கு (arbitrary transfers) எதிராக பாதுகாப்புகளை ஏற்படுத்தவும் அது பரிந்துரைத்தது. ஆனால், இதில் பல பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை. அதிகாரத்துவ மந்தநிலை மற்றும் அரசியல் எதிர்ப்பு காரணமாக அவை முடங்கியுள்ளன.
சீர்திருத்தம் செய்ய அரசு முனைப்பு
இந்திய ஆட்சிப் பணியை நிர்வாக மாதிரியின் வரம்புகளை மோடி அரசு அங்கீகரித்துள்ளது. இதை நிவர்த்தி செய்ய, மூத்த அதிகாரத்துவ பதவிகளில் பக்கவாட்டு நுழைவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையானது தனியார் துறை மற்றும் பிற அரசாங்க சேவைகளில் இருந்து கள வல்லுநர்களை முக்கிய கொள்கை உருவாக்கும் பாத்திரங்களுக்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய கண்ணோட்டங்களையும் சிறப்பு அறிவையும் அமைப்பில் புகுத்துவதே குறிக்கோள்.
2018 முதல், குறிப்பிட்ட பணிகளுக்கு சிறப்பு அறிவு மற்றும் கள நிபுணத்துவம் கொண்ட நபர்களைக் கொண்டு வருவதற்கு ஒன்றிய அரசு பக்கவாட்டு ஆட்சேர்ப்பைப் பின்பற்றி வருகிறது. 2023ஆம் ஆண்டளவில், இந்த முயற்சியின் மூலம் 57 அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இந்த அதிகாரிகளில் பலர் தனியார் துறையிலிருந்து வந்தவர்கள், புதிய திறமைகள் மற்றும் முன்னோக்குகளை நிர்வாகத்தில் கொண்டு வருவதற்கான தெளிவான முயற்சியைக் காட்டினர். ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission (UPSC)) சமீபத்தில் பக்கவாட்டு நுழைவுக்கான 45 பதவிகளுக்கு விளம்பரம் செய்தது. இந்தப் பதவிகளில் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள இணைச் செயலாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கான பணிகளும் அடங்கும். இந்த நடவடிக்கை இந்திய ஆட்சிப் பணியின் பாரம்பரியத்தை சீர்குலைத்துள்ளது. இப்போது, ஒன்றிய அரசில் உள்ள இணைச் செயலாளர்களில் 33% மட்டுமே இந்திய ஆட்சிப் பணியை சேர்ந்தவர்கள்.
இருப்பினும், பக்கவாட்டு நுழைவு முயற்சி எதிர்ப்பை சந்தித்துள்ளது. ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் உட்பட விமர்சகர்கள், மன உறுதிக்கு இது தீங்கு விளைவிக்கும் மற்றும் பதவி உயர்வு ஊக்குவிப்புகளை பாதிக்கும் என்று கூறுகின்றனர். இந்த நியமனங்களில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு இல்லாதது குறித்து எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன. கூட்டணிக் கட்சிகளின் அரசியல் அழுத்தம் காரணமாக பக்கவாட்டு நுழைவு குறித்த பிரதமர் மோடி அரசாங்கம் தனது நிலைப்பாட்டை சிலநாட்களுக்கு முன் மாற்றியது. இந்த சீர்திருத்தத்தின் சர்ச்சையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் கீழ் அமெரிக்க முன்மொழியப்பட்ட அரசாங்க செயல்திறன் துறை (Department of Government Efficiency (DOGE)) இந்தியாவின் நிர்வாக அமைப்பை சீர்திருத்த ஒரு மாதிரியை வழங்குகிறது. DOGE அரசாங்க செயல்பாடுகளை நெறிப்படுத்தவும், திறமையின்மையை குறைக்கவும் மற்றும் தேவையற்ற முகமைகளை அகற்றவும் நோக்கமாக உள்ளது. இது எலோன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி போன்ற தலைவர்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட அரசாங்க செயல்திறன் துறையானது (DOGE) வீணான செலவினங்களைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறது இந்த அணுகுமுறை இந்திய அதிகாரத்துவம் எதிர்கொள்ளும் சவால்களுடன் தொடர்புடையது. இந்தியாவில் இது போன்ற ஆலோசனைக் குழு குடிமை சேவையில் திறமையின்மையைக் கண்டறிய உதவும். இது தரவு சார்ந்த முடிவுகளை ஊக்குவிக்கலாம் மற்றும் அதிகாரத்துவ செயல்திறனை மதிப்பிடுவதற்கான அளவீடுகளை உருவாக்கலாம். அமெரிக்காவின் 150வது ஆண்டு நிறைவு விழாவை சார்ந்து இணைக்கப்பட்ட DOGEஇன் காலவரையறை போன்ற காலக்கெடுவுக்கான ஆணையம், சீர்திருத்த முயற்சிகள் கவனம் செலுத்தி செயல்படுவதை உறுதிசெய்யும்.
சீர்திருத்தத்திற்கான சவால்கள்
இந்தியாவின் அதிகாரத்துவத்தை சீர்திருத்துவது கடினமான பணி. குறைபாடுகள் இருந்தபோதிலும், இந்திய ஆட்சிப்பணி நாட்டின் நிர்வாக கட்டமைப்பில் ஆழமாக வேரூன்றி உள்ளது. பக்கவாட்டு நுழைவு, செயல்திறன் அடிப்படையிலான பதவி உயர்வுகள் மற்றும் சிறப்பு பயிற்சி ஆகியவற்றிற்கான முன்மொழிவுகள் பெரும்பாலும் பணிக்குள்ளயே எதிர்ப்பை எதிர்கொள்கின்றன. அங்கு பணிமூப்பு அடிப்படையிலான முன்னேற்றம் (seniority-based progression) மற்றும் பொதுவான அணுகுமுறைகள் ஆழமாக நிறுவனமயமாக்கப்பட்டுள்ளன. அரசியல் தலையீடு சீர்திருத்த முயற்சிகளை மேலும் சிக்கலாக்குகிறது. தன்னிச்சையான இடமாற்றங்களிலிருந்து அதிகாரத்துவத்தைப் பாதுகாக்க முயன்ற ஆட்சிப்பணி தரநிலைகள், செயல்திறன் மற்றும் பொறுப்புடைமை மசோதா (2010) (Accountability Bill) அதிகாரத்துவத்தை தன்னிச்சையான இடமாற்றங்களிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது. ஆனால், அது சட்டக் குழப்பத்தில் சிக்கியுள்ளது. உதாரணமாக, உச்ச நீதிமன்றம் 2013இல் ஆட்சிப்பணி குழுக்களை நிறுவ உத்தரவிட்டது. இருப்பினும், அமலாக்கம் இல்லாததால் இந்த தலையீடுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இந்திய அதிகாரத்துவத்தின் சவால்களை எதிர்கொள்ள நிர்வாக சீர்திருத்தத்திற்கான பன்முக அணுகுமுறை (multifaceted approach) முக்கியமானது. ஆட்சேர்ப்பு தகுதி மற்றும் கள நிபுணத்துவத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பதவி உயர்வுகள் பணிமூப்பு அடிப்படையில் இல்லாமல், செயல்திறன் அடிப்படையில் இருக்க வேண்டும். அரசியல் இடமாற்றங்களிலிருந்து அதிகாரவர்க்கத்தைப் பாதுகாப்பது மற்றும் கொள்கை வகுப்பதில் நிபுணத்துவத்தை ஊக்குவிப்பது பொறுப்புணர்வையும் செயல்திறனையும் மேம்படுத்தும். செயல்திறனைக் கண்காணிக்கவும், வேலைவாய்ப்புகள், பதவி உயர்வுகள் மற்றும் கொள்கைகளில் சிறந்த முடிவுகளை எடுக்கவும் வலுவான தரவு அமைப்புகளை அரசாங்கம் உருவாக்க வேண்டும். இந்தியாவின் பொருளாதார இலக்குகள் மற்றும் பயனுள்ள நிர்வாகத்திற்கு சீர்திருத்தம் முக்கியமானது.
வினோத் பானு, புது டெல்லியில் உள்ள சட்டமன்ற ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை மையத்தின் இயக்குநராக உள்ளார்.