சமீபத்திய, சரக்கு மற்றும் சேவை வரி குழு கூட்டத்தின் முடிவுகள் உறுதியற்ற (capricious) அணுகுமுறையைக் காட்டுகிறது.
இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட மறைமுக வரி முறை (indirect tax regime) எட்டாவது ஆண்டை எட்டியுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி குழுவின் உச்ச அமைப்பான, அதன் 55வது கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், சில வரி விகித மாற்றங்கள் மற்றும் தெளிவுபடுத்தல்கள் உட்பட பல முடிவுகளை அறிவித்தது. இருப்பினும், குழு பரந்த பிரச்சினைகள் குறித்த விவாதங்களை ஒத்திவைத்தது. சில அடிப்படை விஷயங்களை தெளிவுபடுத்துவதற்காக, ஒன்றிய மற்றும் மாநிலங்களை உள்ளடக்கிய குழுவிற்கு 55 கூட்டங்கள் தேவைப்பட்டன. விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மிளகு மற்றும் திராட்சை, பரிசு செலவுச்சீட்டுகள் மற்றும் வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களால் (non-banking finance companies (NBFCs)) கடன் வாங்குபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதங்கள் ஆகியவை வரிக்கு உட்பட்டவை அல்ல என்பதை உறுதிப்படுத்துவது இதில் அடங்கும். அதேபோன்று, சரக்கு மற்றும் சேவை வரி குழு பாப்கார்னுக்கு மூன்றடுக்கு வரி முறையை (three-tier tax) அறிமுகப்படுத்தியுள்ளது. ஆரோக்கியம் என்ற பெயரில் இனிப்பு வகைகளுக்கு அதிக வரி விதிப்பது கவலையை ஏற்படுத்துகிறது. ஜூலை 2017-ல் தொடங்கப்பட்ட போது, இது போன்ற நடவடிக்கைகள் ஒன்றிய அரசின் கூற்றுகளில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. இந்த வரியானது “நல்ல மற்றும் எளிய வரியாக” (‘Good and Simple Tax’) விளம்பரப்படுத்தப்பட்டது. இந்த முடிவு நீண்ட கால தாமதமான பகுத்தறிவு செயல்முறை மூலம் சரக்கு மற்றும் சேவை வரியின் சிக்கலான விகிதக் கட்டமைப்பை எளிதாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய சந்தேகத்தையும் எழுப்புகின்றன.
சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களை மாற்றியமைக்கும் குழுவின் ஆரம்பப் பரிந்துரைகளை சரக்கு மற்றும் சேவை வரி குழு மதிப்பாய்வு செய்யவில்லை. செயல்முறையை விரைவுபடுத்துவதற்கான அர்ப்பணிப்பு இருந்தபோதிலும், ஆயுள் மற்றும் உடல்நலக் காப்பீட்டுக் கொள்கைகளின் வரிவிதிப்பை மறுபரிசீலனை செய்வதற்கான பரிந்துரைகளையும் அது புறக்கணித்தது. காப்பீட்டுக் கொள்கை வரிகள் குறித்த விவாதங்கள் விரைவில் நடைபெறும் என்று கூறி குழுவின் தலைவர் கூட்டத்திலிருந்து முன்கூட்டியே வெளியேறினார். குறிப்பாக, நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் இருந்தே இந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு உறுதி அளித்து வருகிறது. இருப்பினும், தாமதங்கள் தொழில்துறையை பாதிக்கத் தொடங்கியுள்ளன. நவம்பரில், புதிய ஆயுள் காப்பீட்டு வணிகம் இந்த ஆண்டு முதல் முறையாக வீழ்ச்சியடைந்தது. சரக்கு மற்றும் சேவை வரி குறைப்பை எதிர்பார்த்து நுகர்வோர் காப்பீடு வாங்குவதை நிறுத்தினர். இந்த முடிவெடுக்காத நிலை நீடித்தால், விளைவுகள் மோசமாக இருக்கும். இது நுகர்வு மீது எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பரந்த விகிதத்தை பகுத்தறிவு திட்டம் முன்னோக்கி நகர்த்தவில்லை. நுகர்வு மற்றும் வரி உறுதி ஆகிய இரண்டையும் நம்பியிருக்கும் தனியார் முதலீட்டுத் திட்டங்களையும் இது பாதிக்கும்.
உச்ச நீதிமன்றத்தின் அக்டோபர் மாத தீர்ப்பை மாற்றியமைக்க சரக்கு மற்றும் சேவை வரி குழு முடிவு செய்தது. இந்த தீர்ப்பு ரியல் எஸ்டேட் உருவாக்குநர்கள் வாடகைக்கு அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட வணிக கட்டிடங்களுக்கான கட்டுமான செலவில் உள்ளீட்டு வரி வரவுகளை கோர அனுமதித்தது. இந்த முடிவு இந்தியாவின் முதலீட்டு தாக்கத்தை ஏற்படுத்தும். சட்ட மாற்றங்கள் ஜூலை 2017ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த பிறகு முதலீட்டாளர்களுக்கு கடந்த பத்தாண்டுகளில் இருந்த இது போன்ற வரி சிக்கல்கள் பற்றிய கவலைகளை மீண்டும் கொண்டுவருகிறது.