டிஜிட்டல் கடன் சேவையில் செயற்கை நுண்ணறிவை (AI) பொறுப்புடன் பயன்படுத்துதல் -பெனி சக், நீரஜ் சிபல்

 நேர்மை (Fairness), விளக்கக்கூடிய தன்மை (explainability) மற்றும் மனித-சுழற்சி கொள்கை (human-in-the-loop principle) ஆகியவை பொறுப்புள்ள செயற்கை நுண்ணறிவின் முக்கிய கூறுகள் ஆகும்.


கடன் வழங்குவதில் AI பரவலாகப் பயன்படுத்தப்படும்போது, பொறுப்பான கடன் வழங்குவதற்கு பொறுப்பான AI அவசியமாகிறது. கடன் வழங்கும் சூழலில், கடனளிப்பு மதிப்புச் சங்கிலியில் பயன்படுத்தப்படும் AI அமைப்புகள் கணினி அல்லது வாடிக்கையாளருக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தாது என்பதை பொறுப்பான செயற்கை நுண்ணறிவு (Responsible AI) உறுதி செய்கிறது.


முறையான அபாயங்கள் வெளிப்படும் ஒரு வழி, கடன் வழங்குபவர்கள் ஒரே காப்பீட்டு மாதிரியை நம்பியிருக்கும்போது எழும் அதிகப்படியான ஆபத்தாகும். இதனால், பல்வகைப்படுத்தலில் இருந்து நிலைத்தன்மை ஆதாயங்களை இழக்கிறார்கள்.


வாடிக்கையாளர் அபாயங்களில் பாகுபாடு, தனியுரிமை மீறல்கள் மற்றும் வாடிக்கையாளரின் நிதி ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகள் ஆகியவை அடங்கும். வாடிக்கையாளர்கள் தங்களால் வாங்க முடியாத கடன்களை எடுக்கும்போது இந்த சிக்கல்கள் ஏற்படலாம்.


இந்த அபாயங்களைத் தணிக்க அல்லது தடுக்கக்கூடிய மற்றும் மிகவும் வலுவான நிதி அமைப்பை உருவாக்கக்கூடிய பொறுப்புள்ள AI-ன் முன்னுதாரணத்திலிருந்து முக்கிய பரிந்துரைகளை இந்த பகுதி விவாதிக்கிறது.


நியாயமான காரணி


நியாயம் என்பது சார்பு மற்றும் பாகுபாட்டிலிருந்து மக்களைப் பாதுகாப்பதாகும். இது பொறுப்பான AI-ன் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகும். அதாவது, ஒத்த கடன் அபாயங்களைக் (similar credit risks) கொண்டவர்கள் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டும் என்று இந்தக் கொள்கை கூறுகிறது. பாலினம் அல்லது சாதி போன்ற சமூக காரணிகளின் அடிப்படையில் அவர்களின் சிகிச்சை மாறக்கூடாது.


AI-உதவி முடிவுகள் (AI-assisted decisions) பெரும்பாலும் ஒருதலைப்பட்சமானவை என்று சந்தேகிக்கப்படுகின்றன. AI அமைப்புகள் செயல்படும் விதம் இதற்குக் காரணம். அவை முக்கியமாக தரவுகளில் வடிவங்கள் மற்றும் இணைப்புகளைத் தேடுகின்றன. ஆனால் அவை பொதுவாக அந்த வடிவங்கள் ஏன் உள்ளன என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை.


எனவே, ஒரு AI அமைப்பு தரவுகளில் பயிற்சி பெற்றால், அங்கு அதிகமான பெண்கள் கடன்களுக்காக நிராகரிக்கப்படுகிறார்கள். அந்த நிராகரிப்புகள் நியாயமானவை என்றாலும் கூட, AI இன்னும் அனைத்து பெண்களும் மோசமான கடன் அபாயங்களைக் கொண்டவர்கள் என்று கருதக்கூடும்.


சமீபத்திய அமெரிக்க ஆய்வு, பெரிய மொழி மாதிரிகள் (Large Language Models (LLM)) வெவ்வேறு கடன் ஒப்புதல் முடிவுகளை எடுக்கின்றன மற்றும் கருப்பு மற்றும் வெள்ளை அடமான விண்ணப்பதாரர்களுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்களை அதாவது, மற்ற அனைத்து காரணிகளும் ஒரே மாதிரியாக இருந்தாலும் கூட நிர்ணயிக்கின்றன என்பதைக் காட்டுகிறது. ஏனெனில், வரலாற்று நிதித் தரவு சார்புடையது. மேலும் AI-உதவி முடிவுகளும் சார்புடையதாக இருக்கலாம்.


எனவே, பொறுப்பான AI, நியாயமான கொள்கைகளை நிறுவ பயிற்சியாளர்களை கட்டாயப்படுத்துகிறது. நியாயமான கொள்கைகள் என்பது, AI அமைப்புகள் வரலாற்று சார்புகளில் இருந்து விடுபடுவதையும், அவை தங்களுடைய புதிய சார்புகளை அறிமுகப்படுத்தாமல் இருப்பதையும் உறுதிசெய்யும் நடைமுறைகளின் தொகுப்பைக் குறிக்கிறது. இந்த நடைமுறைகளில் பயிற்சிக்கான தரவை பக்கச்சார்பற்ற மற்றும்/அல்லது சீரானதாக தயார் செய்தல், பாதுகாப்பான சூழல்கள்/சாண்ட்பாக்ஸில் மாதிரியை இயக்குதல் மற்றும் AI அமைப்புகளை சார்புநிலைக்கு தொடர்ந்து தணிக்கை செய்தல் ஆகியவை அடங்கும்.


மேலும், குறிப்பிடப்பட்ட ஆய்வில், ஆசிரியர்கள் LLM-ஐ "எந்த சார்பையும் பயன்படுத்த வேண்டாம்" என்று பொதுவாக சொல்வதன் மூலம் இன சார்புகளைக் குறைத்தனர். இது ஆய்வில் வேலை செய்தாலும், உண்மையான உலக சூழ்நிலைகளில் இதைப் பயன்படுத்துவது கடினம். இது நியாயத்தன்மை கொள்கைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக AI அமைப்புகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு, இந்தச் சார்பின் நிஜ வாழ்க்கை விளைவுகள் மீளமுடியாததாகவும் தீவிரமானதாகவும் இருக்கலாம்.


மாதிரி விளக்கமானது பொறுப்பான AI-ன் ஒரு முக்கிய அம்சமாகும். AI அமைப்புகளை மனிதர்களுக்குப் புரிய வைக்கும் நுட்பங்கள் இதில் அடங்கும். கடன் வழங்குவதில் விளக்கக்கூடிய AI மிகவும் முக்கியமானது. கடன் ஒப்புதல் மற்றும் நிராகரிப்புக்கான அளவுகோல்களை அறிய ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு உரிமை உண்டு.


தாராளமயக் கடன் விதிமுறைகள் வாடிக்கையாளர் மற்றும் அமைப்பின் நிதி ஆரோக்கியத்திற்கு கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன. வாடிக்கையாளர்கள் திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ளும்போது, ​​அவர்கள் அதிகக் கடனாளிகளாக மாறக்கூடும். இது பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்த புதிய கடன்களை எடுக்க கடன் வாங்குபவர்களை கட்டாயப்படுத்துகிறது. கடன் திருப்பிச் செலுத்தாதது கடன் வழங்குபவரின் பதவிப்பணி (போர்ட்ஃபோலியோ) தரத்தையும் பாதிக்கிறது.


தற்போதைய விதிகளின்படி, ஒரு கடன் வாங்குபவர் ஒரு கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால், அவர்களின் அனைத்து கடன்களும் செயல்படாததாகக் கருதப்படுகின்றன. இது சரியான காரணங்களுக்காக கடன்களை அங்கீகரிப்பது அல்லது நிராகரிப்பது மிகவும் முக்கியமானது. இதன் காரணமாக, கடன்-ஆபத்து மாதிரிகள் (credit-risk models) விளக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கோருகிறது.


பொதுவான விளக்க முறைகளில் பகுதி சார்பு வரைபடங்கள் (Partial Dependency Plots (PDPs)) போன்ற அடிப்படை காட்சிப்படுத்தல்கள் அடங்கும். அவை ஒவ்வொரு உள்ளீடும் முடிவை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் காட்டுகின்றன. தனிப்பட்ட மாறிகள் முடிவுக்கு எவ்வாறு பங்களிக்கின்றன என்பதையும் மேம்பட்ட முறைகள் விளக்கலாம்.


மாதிரிகள் மிகவும் சிக்கலானதாக மாறும்போது, ​​இந்த நுட்பங்கள் போதுமானதாக இருக்காது என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். உலகெங்கிலும் உள்ள விதிமுறைகள் சிக்கலான தன்மைக்கும், விளக்கக்கூடிய தன்மைக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன, இது பெரும்பாலும் துல்லியத்தை அதிகரிக்கிறது, இது எளிமையான AI அமைப்புகளுக்கு சாதகமாக இருக்கலாம்.


மனித-சுழற்சி (Human-in-the-loop)


இறுதியாக, பொறுப்புள்ள AI ஆனது, மனித-சுழற்சி (HITL) கொள்கைக்கு வலுவாக வாதிடுகிறது. இது, AI அமைப்புகளின் செயல்பாட்டில் மனிதனின் மேற்பார்வை மற்றும் மனித உள்ளீட்டிற்கு இடமளிக்கிறது. இது எப்போதும் வளர்ந்து வரும் நிதித் துறைக்கு மிகவும் முக்கியமானது. AI அமைப்புகள் பயிற்சியளிக்கப்பட்ட தரவுகளால் வரையறுக்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்ட பேரியல் பொருளாதார நிலைமைகளின் கீழ் பயிற்றுவிக்கப்பட்ட அமைப்புகள், அந்த நிலைமைகள் மாறும் போது, ​​விரைவாக தேவையற்றதாகவும், அபாயகரமானதாகவும் கூட ஆகலாம்.


கோவிட் தொற்றுநோய் இந்தப் பிரச்சினைகளைக் காட்டியது. "சாதாரண" பொருளாதார நிலைமைகளில் பயிற்சியளிக்கப்பட்ட AI மாதிரிகள் தொற்றுநோயின் போது தோல்வியடைந்தன. இது ஒரு எதிர்பாராத உலகளாவிய நிகழ்வாகும். இந்த நேரத்தில், கடன் வழங்குபவர்கள் மனித தீர்ப்பை நம்பியிருந்தனர் மற்றும் புதிய பொருளாதார யதார்த்தத்திற்கு ஏற்ப AI மாதிரிகளை மீண்டும் பயிற்சி செய்தனர். மாதிரிகள் அவற்றின் அடிப்படை அனுமானங்கள் முற்றிலும் சீர்குலைந்தால் தானாகவே கற்றுக்கொள்ள முடியாது.


மேலும், தொழில் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது மனித-சுழற்சி (HITL) பொருத்தமானது மற்றும் கணினிகள் கற்றுக்கொள்ள போதுமான பயிற்சி தரவு இல்லை. மனித-சுழற்சியை (HITL) நடைமுறைப்படுத்துவது, AI மனிதர்களுக்குப் புரியும் என்பதை உறுதிப்படுத்துவது மற்றும் மாதிரியின் விளைவுகளை மேற்பார்வையிடும் மனிதர்களை நியமிப்பது மற்றும் குறிப்பிடத்தக்க முடிவுகளைக் கொண்டிருப்பது ஆகியவை அடங்கும். மேலும் மேம்பட்ட அமைப்புகள், AI அமைப்பின் முடிவுகளை மனிதர்கள் மீறுவதற்கு இடமளிக்கின்றன.


கடன் வழங்குவதில் பொறுப்பான AI இன்று மிக முக்கியமானது. அதிகப்படியான கடன் மற்றும் போர்ட்ஃபோலியோ தரம் பற்றிய கவலைகள் அதிகரித்து வருகின்றன. ஒழுங்குமுறை அதிகாரிகள், கடன் வழங்குபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பழக்கமான ஆனால் கவலைக்கிடமான காலங்களை எதிர்கொள்கின்றனர்.


பிரச்சனைக்கு ஒரு தொழில்நுட்ப அம்சம் உள்ளது. எனவே, AI அமைப்புகளுக்கு பொறுப்பான AI கொள்கைகளைப் பயன்படுத்துவதன் மூலமும் தீர்வு பயனடையக்கூடும். பொறுப்பான AI-ஆல் வழங்கப்படும் பாதுகாப்புகள் பாரம்பரிய நடவடிக்கைகளுடன் இணைந்து செயல்படக்கூடும். மூலதன இருப்புக்களை அதிகரிப்பது போன்ற இந்த பாரம்பரிய நடவடிக்கைகள், பொறுப்பான AI-ஐப் பயன்படுத்துவதன் மூலம் மிகவும் பயனுள்ளதாக மாறும்.


துவாரா ஆராய்ச்சியில் சக், எதிர்கால நிதி முன்முயற்சிக்கு தலைமை தாங்குகிறார். சிபல் ஒரு AI நிபுணர் மற்றும் PwC இந்தியாவில் இயக்குநராகப் பணியாற்றுகிறார்.


Original article:
Share:

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூற்று : அமெரிக்கா வர்த்தக வரிகளை விதித்திருந்தாலும், இந்தியாவின் வலுவான உள்நாட்டு தேவை வணிகங்களை ஈர்க்கிறது.

 அவரது கூற்றுப்படி, இந்தியா வளர்ந்த இந்தியாவை (Viksit Bharat) அடைவதற்காக உருமாறுதல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதால், நிர்வாகக் கட்டமைப்புகளையும் மாநிலத் திறனையும் வலுப்படுத்துவது அவசியம், அதை புறக்கணிக்க முடியாது.


இந்தியாவின் வளர்ச்சிப் பாதை வலுவாக இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தினார். இந்தியப் பொருளாதாரம் மீள்தன்மை கொண்டது என்பதையும், வலுவான உள்நாட்டு தேவை ஆகியவை இந்தியா உலகளாவிய வளர்ச்சியின் முக்கிய இயக்கியாக இருக்க உதவும் என்றும் அவர் கூறினார். அமெரிக்க வரிவிதிப்புகளால் உலகளாவிய வர்த்தக நிலைமை மாறி வருவதால் இது மிகவும் முக்கியமானதாகும்.


அவர் குறிப்பிடுகையில், “நம் நாட்டின் வளர்ச்சிப் பாதை வலுவாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் வலுவான பெரிய பொருளாதார அடிப்படைகள் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களால் இது ஆதரிக்கப்படுகிறது.” லண்டனில் உள்ள இந்தியா ஹவுஸில், ‘2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த பொருளாதாரமாக மாறுவதற்கான இந்தியாவின் தேடலுக்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற உரையில், தொடக்க உரையின்போது அவர் குறிப்பிட்டிருந்தார்.


டிரம்ப் நிர்வாகத்தின் வரிவிதிப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர் குறிப்பிடுகையில், அமெரிக்கா இந்தியாவின் முன்னணி வர்த்தக நட்பு நாடாகும். “வரிவிதிப்புகளாலும் அமெரிக்க அரசாங்கத்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகளாலும் வர்த்தகம் பாதிக்கப்படும் நேரத்தில், உள்நாட்டு தேவையில் இந்தியாவின் வலிமை வலுவாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இந்த தேவை உலகளாவிய விநியோகங்களை ஈர்க்க ஒரு பெரிய சக்தியாகச் செயல்படுகிறது” என்று அவர் கூறினார்.


அவரது கூற்றுப்படி, இந்தியா வளர்ந்த இந்தியாவை அடைவதற்காக உருமாறும் சீர்திருத்தங்களை மேற்கொள்வதால், நிர்வாகக் கட்டமைப்புகளையும் மாநிலத் திறனையும் வலுப்படுத்துவது பேச்சுவார்த்தைக்குட்படாது. நேரடிப் பயன் பரிமாற்றம் மானியங்களை ஒழுங்குபடுத்துதல், கசிவுகளைக் குறைத்தல் மற்றும் இலக்கு நல விநியோகத்தை உறுதி செய்தல் போன்ற முன்முயற்சிகளுடன் பொதுச் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவது குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களில் ஒன்றாகும்.


அரசாங்க சேவைகளின் மின் விநியோகம், குறிப்பாக நிதி, உள்ளூர் அரசாங்க பயன்பாடுகள் மற்றும் சமூகநலத் திட்டங்கள் ஆகிய துறைகளிலும் விரிவடைந்துள்ளது. முன்னோக்கிச் செல்லும்போது, ​​குடிமைச் சமூகம், தொழில்துறை மற்றும் கல்வித்துறை ஆகியவற்றுடனான கூட்டணி நாடுகளின் கொள்கைகள் குடிமக்களை மையமாகக் கொண்டதாகவும், புதுமையானதாகவும் இருப்பதை உறுதிசெய்வதற்கு முக்கியமானது’ என்றார்.


வளர்ந்த இந்தியா@2047-ஐ (Viksit Bharat@2047) நோக்கி நாம் அணிவகுத்துச் செல்லும்போது, ​​நம் அணுகுமுறையை உள்ளடக்கியதாகவும், நிலையானதாகவும், புத்தாக்கம் சார்ந்ததாகவும், சவால்களை வளர்ச்சிக்கான வாய்ப்புகளாக மாற்றுவதாகவும் இருக்க வேண்டும். தொடர்ந்து சீர்திருத்தங்கள், மேக்ரோ பொருளாதார நிலைத்தன்மையைப் பேணுதல், மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் வளர்ச்சி பலனளிப்பதை உறுதி செய்வதிலும் நம் அரசாங்கம் உறுதியாக உள்ளது,” என்று அவர் கூறினார்.


உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அரசாங்கத்தின் கவனம் செலுத்துவதை அவர் எடுத்துரைத்தார். 2017-18 முதல் 2025-26 பட்ஜெட் வரை ஒன்றிய அரசின் மூலதனச் செலவு 4.3 மடங்கு அதிகரித்துள்ளது என்றார். மேலும், செலவினத்தில் ஏற்பட்ட இந்த பெரிய உயர்வு இந்தியாவின் இயற்பியல் உள்கட்டமைப்பில் பெரும் முன்னேற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. பிரதமர் கதிசக்தி தேசிய மாஸ்டர் திட்டம் (PM GatiShakti National Master Plan) சிறந்த போக்குவரத்து இணைப்புகளை உருவாக்க உதவுகிறது. இது வர்த்தகத்தை சாதகமாக்குகிறது மற்றும் தளவாடச் செலவுகளைக் குறைக்கிறது.


இதன் விளைவாக, உலக வங்கியின் லாஜிஸ்டிக்ஸ் செயல்திறன் குறியீட்டில் (Logistics Performance Index) இந்தியாவின் தரவரிசை 2014-ல் 54-ல் இருந்து 2023-ல் 38 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பொது டிஜிட்டல் உள்கட்டமைப்பின் வளர்ச்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பத்தாண்டுகாலத்தில், UPI, ஆதார் மற்றும் JAM டிரினிட்டி போன்ற முன்முயற்சிகள் நிதி உள்ளடக்கத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன, பொருளாதாரத்தை முறைப்படுத்தியுள்ளன, மேலும் துறைகளில் செயல்திறனை மேம்படுத்தியுள்ளன. "டிஜிட்டல் கல்வியறிவுக்கான டிஜிட்டல் சக்சர்தா அபியான் (Digital Saksharta Abhiyan (DISHA)), தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கான தரவு பாதுகாப்புச் சட்டங்கள் (Data Protection Laws for privacy and security) மற்றும் கிராமப்புற இணைப்புக்கான பாரத்நெட் (BharatNet for rural connectivit) போன்ற முன்முயற்சிகள் மூலம் டிஜிட்டல் புரட்சியின் சவால்களால் ஏற்படும் கவலைகளை அரசாங்கம் நிவர்த்தி செய்கிறது," என்று அவர் கூறினார்.


இந்தியாவின் முன்னேற்றத்திற்கு விவேகமான வளர்ந்த பொருளாதாரக் கொள்கைகள், சீர்திருத்தங்கள் மற்றும் மக்களின் மீள்தன்மை ஆகியவையே காரணம் என்று அமைச்சர் பாராட்டினார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 10-வது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா இப்போது 5-வது பெரிய பொருளாதாரமாக உள்ளது என்று அவர் கூறினார். இந்தியா அதன் சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவான 2047-ம் ஆண்டுக்குள் "விக்ஸித் பாரத்" (வளர்ந்த நாடு) ஆவதற்கு இலக்கு வைத்துள்ளது என்று அவர் வலியுறுத்தினார். இந்த இலக்கை அடைய புதுமை, நிலையான முதலீடுகள், தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான வலுவான அர்ப்பணிப்பு தேவை.


Original article:
Share:

தமிழ்நாடு ஆளுநர் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு -குஷ்பூ குமாரி

 ஆளுநர் செயல்பாட்டாளராக இருக்க வேண்டுமே தவிர, தடுப்பவராக இருக்க கூடாது (catalyst and not an inhibitor) என்று உச்சநீதிமன்ற அமர்வு கூறியது. இந்த சூழலில், ஆளுநருடன் தொடர்புடைய பிற அரசியலமைப்பு விதிகள் யாவை? முக்கிய பரிந்துரைகள் யாவை?


தற்போதைய செய்தி: 


ஒரு முக்கியமான தீர்ப்பில், நீதிபதிகள் ஜே பி பர்திவாலா மற்றும் ஆர் மகாதேவன் தலைமையிலான உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு சட்டமன்றம் ஏற்கனவே அவற்றை மறுபரிசீலனை செய்த பின்னர், நவம்பர் மாதம் 10 மசோதாக்களை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பும் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியின் முடிவு தவறானது மற்றும் சட்டவிரோதமானது என்று அறிவித்தது.


ஆளுநர்களுக்கு வழங்கப்படும் மசோதாக்கள் குறித்து அவர்கள் முடிவு செய்ய நீதிமன்றம் ஒரு காலக்கெடுவை நிர்ணயித்தது. ஒரு அரிய நடவடிக்கையாக, அரசியலமைப்பின் 142-வது பிரிவின் கீழ் அதன் சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி, 10 மசோதாக்கள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் கூறியது.


முக்கிய அம்சங்கள்:


1. மோதல்களின்போது, ​​ஆளுநர் உடன்பாட்டைக் கொண்டு வந்து பிரச்சினைகளைத் தீர்க்க உதவ வேண்டும் என்று கூறி, நீதிமன்றம் ஆளுநரின் பங்கை விளக்கியது. ஆளுநர் மாநிலத்தின் செயல்பாட்டை ஆதரிக்க வேண்டும். அதைத் தடுக்கக்கூடாது. ஆளுநரின் அனைத்து நடவடிக்கைகளும் பதவியின் கண்ணியத்தை மதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.


2. மசோதாக்கள் குறித்து ஆளுநர்கள் முடிவெடுக்க நீதிமன்றம் ஒரு காலக்கெடுவை நிர்ணயித்து, அரசியலமைப்பின் 200வது பிரிவைப் பற்றிக் குறிப்பிட்டது. ஒரு மசோதா சமர்ப்பிக்கப்படும்போது ஆளுநர் என்ன செய்ய முடியும் என்பதை இந்தப் பிரிவு விளக்குகிறது: 


(1) மசோதாவை அங்கீகரிப்பது

 

(2) அதை நிராகரிப்பது


(3) மறுபரிசீலனைக்கு திருப்பி அனுப்புவது அல்லது 


(4) ஒப்புதலுக்காக குடியரசுத்தலைவருக்கு அனுப்ப வேண்டும்.


3. பிரிவு 200, ஆளுநர் ஒரு மசோதாவை "முடிந்தவரை விரைவில்" திருப்பி அனுப்ப வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவைக் குறிப்பிடவில்லை. தெளிவான காலக்கெடு இல்லாமல், ஆளுநர் மசோதாவை காலவரையின்றி தாமதப்படுத்தலாம். இது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் செயல்பாட்டை சீர்குலைக்கும். இதைத் தடுக்க, உச்சநீதிமன்றம் ஆளுநர்கள் மசோதாக்கள் மீது முடிவெடுக்க அதிகபட்சமாக ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை கால அவகாசத்தை நிர்ணயித்துள்ளது.


ஆளுநருடன் தொடர்புடைய பிற முக்கியமான அரசியலமைப்பு விதிகள்:


1. அரசியலமைப்பின் பிரிவு 153ன் படி, ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருக்க வேண்டும். 1956ஆம் ஆண்டில், ஒரே நபர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக இருக்க அனுமதிக்கும் ஒரு திருத்தம் செய்யப்பட்டது.


2. அரசியலமைப்பின் பிரிவு 155, குடியரசுத் தலைவர் ஆளுநரை நியமிக்கிறார் என்று கூறுகிறது. குடியரசுத்தலைவரின் விருப்பப்படி ஆளுநர் பதவி வகிக்கிறார். குடியரசுத்தலைவரால் ஆளுநரை எந்த நேரத்திலும் நீக்க முடியும் என்று பிரிவு 156 கூறுகிறது.


3. பிரிவு 157 மற்றும் 158, ஆளுநருக்கான தகுதிகளை விளக்குகின்றன. அவை : அவர்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். குறைந்தது 35 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும், நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடாது. வேறு எந்த ஊதியம் பெறும் பதவியையும் வகிக்கக்கூடாது.


4. பிரிவு 163 ஆளுநர் மாநில அமைச்சர்கள் குழு மற்றும் முதலமைச்சரின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறது.


5. பிரிவு 173, மாநில சட்டமன்றத்தை அழைக்க, இடைநீக்கம் செய்ய அல்லது கலைக்க ஆளுநருக்கு அதிகாரத்தை வழங்குகிறது. ஆனால், இது அமைச்சர்கள் குழுவுடன் கலந்தாலோசித்த பிறகு செய்யப்பட வேண்டும்.


6. மாநில சட்டமன்றத்தில் ஒரு கட்சி தனது பெரும்பான்மையை நிரூபிக்க எவ்வளவு நேரம் தேவை என்பதை தீர்மானிப்பது போன்ற சில அதிகாரங்கள் ஆளுநருக்கு உண்டு. தொங்கு சட்டசபை ஏற்பட்டால், எந்தக் கட்சி முதலில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பதையும் ஆளுநர் முடிவு செய்வார்.


என்ன சீர்திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன?


நிர்வாக சீர்திருத்த ஆணையம் 1968, (Administrative Reforms Commission)) மற்றும் சர்க்காரியா ஆணையம் 1988, (Sarkaria Commission) போன்ற பல்வேறு குழுக்கள் ஆளுநரின் பங்கிற்கு சீர்திருத்தங்களை பரிந்துரைத்துள்ளன. பிரதமர், உள்துறை அமைச்சர், மக்களவை சபாநாயகர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் அடங்கிய குழு மூலம் ஆளுநரைத் தேர்ந்தெடுப்பது மற்றும் அவர்களின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகளாக நிர்ணயிப்பது ஆகியவை இதில் அடங்கும். தேவைப்பட்டால் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய சட்டமன்றத்தை அனுமதிக்கவும் அவர்கள் பரிந்துரைத்தனர்.


2001ஆம் ஆண்டு, அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட அரசியலமைப்பின் செயல்பாட்டை மறுஆய்வு செய்வதற்கான தேசிய ஆணையம், ஒன்றிய அமைச்சர்கள் குழுவால் ஆளுநர் நியமிக்கப்பட்டு பதவியில் இருப்பதால், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருக்கும்போது ஒன்றிய அமைச்சர்கள் குழுவிலிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தல்களின்படி ஆளுநர் செயல்படக்கூடும் என்ற கவலை உள்ளது என்று சுட்டிக்காட்டியது. இதன் விளைவாக ஆளுநர்கள் "ஒன்றிய அரசின் முகவர்கள்" (agents of the Centre) என்று அழைக்கப்பட்டனர்.


குடியரசுத் தலைவர் vs ஆளுநர்


ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு, அவர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள் மற்றும் நீக்கப்படுகிறார்கள் என்பதுதான். குடியரசுத் தலைவர் நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதே, நேரத்தில் ஆளுநர் ஒன்றிய அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறார். குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்வதன் மூலம் மட்டுமே நீக்க முடியும். ஆனால், ஒன்றிய அரசின் விருப்பப்படி ஆளுநரை பதவியில் இருந்து நீக்க முடியும்.


பொம்மை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு


ஆளுநரின் பங்கு குறித்த பிரச்சினை எழும்போதெல்லாம், கண்களுக்குத் தோன்றும் குறிப்பிடத்தக்க வழக்குகளில் ஒன்று பொம்மை வழக்கின் தீர்ப்பாகும். பிரிவு 356-ன் கீழ் எதிர்க்கட்சிகளால் ஆட்சி செய்யப்படும் மாநில அரசுகளை கலைக்க ஆளுநர் அடிக்கடி குடியரசுத்தலைவரின் ஆட்சியை பரிந்துரைத்த நேரத்தில் இது வந்தது. மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதில் ஆளுநர் அலுவலகத்தின் நடத்தையை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்த முதல் வழக்குகளில் இதுவும் ஒன்றாகும் என்பதால் இது குறிப்பிடத்தக்கது.


1994ஆம் ஆண்டு எஸ்.ஆர். பொம்மை எதிர் இந்திய ஒன்றிய வழக்கில் (SR Bommai v Union of India case), குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் குடியரசுத் தலைவரின் முடிவு சட்டவிரோதமானதாகவோ, தீய நோக்கத்துடன் எடுக்கப்பட்டதாகவோ, தவறான காரணிகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகவோ, அல்லது அதிகார துஷ்பிரயோகம் அல்லது மோசடியை உள்ளடக்கியதாகவோ இருந்தால் நீதிமன்றங்களால் மறுபரிசீலனை செய்யப்படலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆளும் கட்சிக்கு போதுமான ஆதரவு உள்ளதா என்பதைச் சரிபார்க்க நம்பிக்கை வாக்கெடுப்பு சிறந்த வழி என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

ஆளுநர் அரசியலமைப்பைப் பாதுகாக்கச் செயல்பட வேண்டும்.  எந்தவொரு அரசியல் கட்சியையும் ஆதரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியது. அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதும் ஆளுநரின் கடமை என்று அது கூறியது. கட்சித் தாவல் செயல்பாடுகள் மூலம் இந்திய ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்க ஆளுநர் அனுமதிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் கூறியது. ஆளுநரால் எடுக்கப்படும் எந்தவொரு நேர்மையற்ற அல்லது நியாயமற்ற முடிவுகளையும் நீதிமன்றங்கள் மறுபரிசீலனை செய்யலாம் என்றும் குறிப்பிட்டது.


Original article:
Share:

93-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் எதைப் பற்றி விவாதிக்கிறது? -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய நிகழ்வு : தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இடஒதுக்கீடு வழங்கும் யோசனை நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதன் சட்டபூர்வமான தன்மை குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், அந்த சர்ச்சையும் பத்தாண்டுகளுக்கு முன்பே உச்ச நீதிமன்றத்தால் தீர்க்கப்பட்டது.


முக்கிய அம்சங்கள் :


யோகேந்திர யாதவ் குறிப்பிடுவது :


1. இது மிகப்பெரிய எதிர்க்கட்சியின் ஆதரவைப் பெறும் ஒரு யோசனை. உண்மைதான், கடைசி சந்தர்ப்பத்தில், ஒரு யோசனையின் நேரம் வந்துவிட்டதை நீங்கள் நிறுத்த முடியாது. இருப்பினும், அந்த முடிவுக்கு முந்தைய காலத்தில் நாம் வாழ்கிறோம். இந்த நேரத்தில், ஆழமான நிலை எந்த யோசனையையும் தாமதப்படுத்தலாம், ஒத்திவைக்கலாம் மற்றும் தவிர்க்கலாம். இந்த யோசனைக்கு அரசியல் விருப்பம் தேவை. அதற்கு இப்போது அது தேவை.


2. அரசு தனியார் பல்கலைக்கழகங்கள், தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகள் (உதவி பெறும் மற்றும் உதவி பெறாத இரண்டும்) போன்ற தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கு (private higher educational institutions (PHEI)) இடஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கான காரணம் தெளிவானது மற்றும் எளிமையானது.


3. உயர்கல்வி என்பது அறிஞர்கள் "திறம்பட பராமரிக்கப்படும் சமத்துவமின்மை" என்று அழைக்கும் ஒரு சக்திவாய்ந்த வழிமுறையாகும். வரலாற்று ரீதியாக பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவதைப் போலவே, அவர்கள் அணுகக்கூடிய கல்வி நிறுவனங்களும் கல்வித் தரம் மற்றும் வேலை வாய்ப்புகளிலிருந்து வெளியேற்றப்படுகின்றன.


4. "நடக்கும் தளம்" (happening site) என்பது உயர்கல்வியின் உயர் மட்டங்களைக் குறிக்கிறது. இந்தப் பகுதி உயர் வர்க்கம் மற்றும் உயர் சாதி உயரடுக்கினரால் திறம்பட தனியார்மயமாக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது. சமத்துவ வாய்ப்புக்கான நமது உறுதிப்பாட்டை நாம் தக்க வைத்துக் கொள்ள விரும்பினால், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். SC, ST மற்றும் OBC-களுக்கான தற்போதைய இடஒதுக்கீட்டுக் கொள்கையை தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் அரசு நீட்டிக்க வேண்டும்.


5. முதலாவதாக, உயர்கல்விக்கான தேவையில் மிகப்பெரிய அதிகரிப்பு உள்ளது. வரலாற்று ரீதியாக கல்வி மறுக்கப்பட்ட சமூகங்கள் இப்போது அதை நாடுவதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். சதீஷ் தேஷ்பாண்டே இந்தப் போக்கை சுருக்கமாகக் குறிப்பிடுவதாவது, "1990–1991 மற்றும் 2018–2019-க்கு இடையில், பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஐந்தரை மடங்கு அதிகரித்துள்ளது மற்றும் மொத்த சேர்க்கை ஏழரை மடங்கு அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் மொத்த சேர்க்கை விகிதம் (GER) இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது." SC, ST, OBC மற்றும் முஸ்லிம்கள் போன்ற பிற்படுத்தப்பட்ட சமூகக் குழுக்களுக்கும், இந்தக் குழுக்களில் உள்ள பெண்களுக்கும் வளர்ச்சி விகிதங்கள் அதிகமாக உள்ளன.


6. இது நல்ல செய்தியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இரண்டாவது பிரச்சினை உள்ளது. அவை, உயரடுக்கு நிலையில் உள்ள மக்கள் பொது உயர்கல்வியை விட்டு வெளியேறுகிறார்கள், இது அதன் சரிவுக்கு வழிவகுக்கிறது.


உங்களுக்குத் தெரியுமா? :


1. 2005-ம் ஆண்டில், அரசியலமைப்பின் 93வது திருத்தம் பிரிவு 15(5)-ஐச் சேர்த்தது. இந்தப் பிரிவு, SC, ST அல்லது SEBC (சட்டப்பூர்வமாக OBC) முன்னேற்றத்திற்காக சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ய அரசாங்கத்தை அனுமதித்தது. இது தனியார் நிறுவனங்கள் உட்பட கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கு பொருந்தும் அவை, அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும். இது சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தாது.


2. பின்னர் அரசாங்கம் இந்த விதியைப் பயன்படுத்தி மத்திய கல்வி நிறுவனங்கள் (சேர்க்கையில் இடஒதுக்கீடு) சட்டம், 2006-ஐ நிறைவேற்றியது. இந்தச் சட்டம் OBC-களுக்கு மத்திய கல்வி நிறுவனங்களில் மட்டுமே இடஒதுக்கீட்டை வழங்கியது.


3. உச்ச நீதிமன்றம் (அசோக் குமார் தாக்கூர் vs இந்திய ஒன்றியம், 2008) அரசு நடத்தும் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை ஆதரித்தது. இருப்பினும், உதவி பெறாத தனியார் நிறுவனங்களின் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. இந்தப் பிரச்சினை பின்னர் இரண்டு வழக்குகளில் தீர்க்கப்பட்டது. முதலில், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு (IMA vs இந்திய ஒன்றியம், 2011) அதைக் கையாண்டது. பின்னர், ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு (Pramati Educational and Cultural Trust vs இந்திய ஒன்றியம், 2014) உதவி பெறாத தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை ஆதரித்தது. இப்போது, ​​எந்த சட்ட சிக்கல்களும் இல்லை.


4. தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் (HEI) சுயவிவரம் தெளிவாக உள்ளது. பணக்காரர்களுக்கான அதிகாரப்பூர்வமற்ற இடஒதுக்கீட்டைத் தவிர, அவை வேறு எந்த இடஒதுக்கீட்டு முறையையும் பின்பற்றுவதில்லை. அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பின் (2021-22) சமீபத்திய தரவு, நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 20% ஆக இருக்கும் உயர்சாதி இந்துக்கள், தனியார் பல்கலைக்கழகங்களில் 60%-க்கும் அதிகமான மாணவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. தனியார் (மாநில தனியார் மற்றும் நிகர்நிலை தனியார்) பல்கலைக்கழகங்களில் சமூகக் குழுவால் மாணவர்களின் பிரிவு இங்கே:


- பட்டியலிடப்பட்ட வகுப்பினர் (SCs): 6.8% (தற்போதைய மக்கள்தொகை பங்கு 

    சுமார் 17%)

- பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (STs): 3.6% (மக்கள் தொகை சுமார் 9%)

- பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCs): 24.9% (மக்கள் தொகை 45-50% க்கு 

    இடையில்)

- முஸ்லிம்கள்: 3.8% (மக்கள் தொகை சுமார் 15%)


உயர்ந்த தனியார் பல்கலைக்கழகங்களிலும் அவை வழங்கும் பிரபலமான படிப்புகளிலும் நிலைமை இன்னும் சீரற்றதாக இருக்கலாம்.


5. இடஒதுக்கீடு மாற்றத்தை ஏற்படுத்தலாம். பொதுத்துறை பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டிய மாணவர்களைப் பார்க்கும்போது, ​​வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது. சதவீதங்கள்: 14.6% SC-க்கள், 6% ST-க்கள் மற்றும் 31.2% OBC-க்கள் ஆகும். இதில், முஸ்லிம்களுக்கு சிறிய வித்தியாசம் உள்ளது. அவர்கள் 4.1% மாணவர்களை மட்டுமே கொண்டுள்ளனர் மற்றும் இடஒதுக்கீட்டைப் பெறவில்லை. அதன் வரம்புகள் இருந்தபோதிலும், ஒதுக்கீடு அடிப்படையிலான உறுதியான நடவடிக்கை செயல்படுகிறது.


Original article:
Share:

இணையவழி விளையாட்டு (Online Gaming) : பிரச்சனைகள் மற்றும் கவலைகள் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய செய்தி : Dream11, Games24x7, மற்றும் Winzo போன்ற இணையவழி விளையாட்டு நிறுவனங்களை பணமோசடி தடுப்புச் சட்டங்களின் கீழ் கொண்டுவருவதற்கான திட்டத்தை இறுதி செய்யும் பணியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது. இது ‘உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (know-your-customer (KYC))’ எனும் வாடிக்கையாளர் பற்றிய விவரங்கள் மூலம்  தேவைகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைக் கண்காணித்தல் மற்றும் புகாரளித்தல் போன்ற கடுமையான விதிகளைப் பின்பற்ற அவர்களை கட்டாயப்படுத்தும் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


முக்கிய  அம்சங்கள்:


• நிதி அமைச்சகம், பிற அமைச்சகங்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பணமோசடி தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act (PMLA)), 2002இன் கீழ், இணையவழி விளையாட்டு நிறுவனங்களை "அறிக்கையிடல் நிறுவனங்கள்" (reporting entities) என்று குறிப்பிடும்  திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. 


• PMLA சட்டத்தின் கீழ், வங்கிகள் மற்றும் நிதி இடைத்தரகர்கள் போன்ற நிதி நிறுவனங்கள் பதிவு செய்தல் மற்றும் அறிக்கையிடல் விதிகளைப் பின்பற்ற வேண்டும். ஏனெனில், அவை அறிக்கையிடல் நிறுவனங்களாக வகைப்படுத்தப்படுகின்றன.


• PMLA-வின் கீழ், ஒரு அறிக்கையிடல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் பரிவர்த்தனைகள் பற்றிய விவரங்களை நிதி அமைச்சகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் நிதி புலனாய்வு பிரிவு-இந்தியாவிற்கு (Financial Intelligence Unit-India (FIU-IND)) வழங்க வேண்டும். அனைத்து பரிவர்த்தனைகளின் பதிவுகளையும் வைத்திருத்தல், வாடிக்கையாளர்கள் மற்றும் உரிமையாளர்களின் அடையாளத்தைக் காட்டும் ஆவணங்கள் மற்றும் வாடிக்கையாளர் கணக்குகள் மற்றும் வணிக தொடர்பு தொடர்பான கோப்புகள் போன்ற பல விதிகளையும் இது பின்பற்ற வேண்டும்.


• உலகளாவிய பணமோசடி கண்காணிப்புக் குழுவின் (Financial Action Task Force (FATF)) விதிமுறைகளுக்கு இணங்க, பணமோசடி எதிர்ப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியுதவி (anti-money laundering and countering the financing of terrorism (AML/CFT)) கடப்பாடுகளை எதிர்ப்பதற்கும் இது உட்பட்டது.


• 2023ஆம் ஆண்டில் இதேபோன்ற நடவடிக்கையில், நிதி அமைச்சகம் மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்களை (virtual digital assets (VDAs)) அறிக்கையிடல் நிறுவனங்களாக அறிவித்தது. இது கிரிப்டோகரன்சி நிறுவனங்களை நேரடியாக இலக்காகக் கொண்ட ஒரு நடவடிக்கையாகும்.


• இது இறுதி செய்யப்பட்டால், 2023ஆம் ஆண்டில் பயனர்கள் அத்தகைய பயன்பாடுகளில் செய்யும் முழு வைப்புத்தொகைக்கும் 28 சதவீத பொருட்கள் சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Service Tax (GST)) விதிக்கப்பட்ட பிறகு, கேமிங் நிறுவனங்கள் மீதான இரண்டாவது பெரிய நடவடிக்கையாக இது இருக்கும்.


• இந்தத் துறையும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும். ஆனால், நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக இந்த விதிகள் அமல்படுத்தப்படவில்லை.


உங்களுக்குத் தெரியுமா?


• மார்ச் 2025இல் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (Federation of Indian Chambers of Commerce & Industry (FICCI)) மற்றும் EYஇன் அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள இணையவழி விளையாட்டு நிறுவனங்கள் 2024-ஆம் ஆண்டில் கூட்டாக $2.7 பில்லியனை வருவாய் ஈட்டின. இந்த நிறுவனங்கள் வழக்கமாக பயனரின் வெற்றிகளில் ஒரு சதவீதத்தை எடுத்து பணம் சம்பாதிக்கின்றன.


• அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டில் 155 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் இணையவழி விளையாட்டின் துணைப் பிரிவுகளான fantasy sports, rummy, poker மற்றும் பிற பரிவர்த்தனை அடிப்படையிலான விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளனர். இது 2023ஆம் ஆண்டை விட 10 சதவீதம் அதிகரித்துள்ளது. சராசரியாக தினமும் சுமார் 110 மில்லியன் மக்கள் இந்த விளையாட்டுகளை விளையாடினர்.


• இந்திய நிறுவனங்கள் PMLA விதிகளைப் பின்பற்றும் அதே வேளையில், வெளிநாட்டு பந்தயம் மற்றும் சூதாட்ட செயலிகள் அவற்றைப் பின்பற்றாது என்று விளையாட்டுத் துறையில் உள்ளவர்கள் கவலைப்படுகிறார்கள். 28% சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டபோது அவர்கள் எழுப்பிய கவலை இது.


• விதிகளைப் பின்பற்றாத இணையவழி விளையாட்டு நிறுவனங்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில், 2022ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 2025 வரை 1,400-க்கும் மேற்பட்ட இணையம் சார்ந்த பந்தயம்/சூதாட்டம்/கேமிங் வலைத்தளங்களை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தடை செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.  சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வு இயக்குநரகம் (Directorate General of GST Intelligence (DGGI)) சட்டவிரோத வெளிநாட்டு விளையாட்டு தளங்களின் 350க்கும் மேற்பட்ட இணைப்புகளையும் தடை செய்தது.


• தகவல் தொழில்நுட்ப விதிகளில் திருத்தங்கள் மூலம் இணையவழி விளையாட்டு துறையை ஒழுங்குபடுத்தும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முயற்சி தோல்வியுற்றது மற்றும் ஒழுங்குபடுத்தும் முறைகள் இல்லை என்பதாலும் தொழில்துறை சார்ந்த பிரச்சனைகள் உருவாகின்றன.


• ஏப்ரல் 2023ஆம் ஆண்டில், இணையவழி விளையாட்டிற்கான விதிகளை அமைச்சகம் அறிவித்தது. இது இணையவழி விளையாட்டுகளின் சட்டபூர்வமான தன்மையைக் கண்டறிய சுய-ஒழுங்குமுறை அமைப்புகளை அமைப்பதற்கு அனுமதித்தது.  இந்த அமைப்புகளையும் விதிகளின் பிற பகுதிகளையும் அரசாங்கம் மேற்பார்வையிடும்.


• இருப்பினும், சில சுய ஒழுங்குமுறை முன்மொழிவுகளை அமைச்சகம் நிராகரித்தது. ஏனெனில், அவை விளையாட்டு துறையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.  இது நலன் மோதலுக்கு வழிவகுக்கும் என்று அது நம்பியது.


• மாநிலத்தின் இணையவழி விளையாட்டு சட்டத்திற்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், இணையவழி விளையாட்டு குறித்த விதிகளை இப்போது அமல்படுத்த முடியாது என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூறியது. ஏனெனில், அது இன்னும் எந்த சுய ஒழுங்குமுறை அமைப்புகளையும் அமைக்கவில்லை.


Original article:
Share:

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தடுத்து நிறுத்திய தமிழ்நாட்டு ஆளுநரின் நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது: தீர்ப்பும் அதன் தாக்கமும் -அபூர்வா விஸ்வநாத்

 தமிழ்நாடு ஆளுநர் மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்பு: இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் போன்ற எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் பிற மாநிலங்களின் ஆளுநர்களையும் பாதிக்கும்.


ஆளுநரின் அதிகாரங்கள் குறித்த தீர்ப்பில், நிலுவையில் உள்ள 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் முடிவு சட்டவிரோதமானது (illegal) மற்றும் தவறானது (erroneous) என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.


இந்த முடிவு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநரின் பங்கைப் பாதிக்கிறது. ஏனெனில், அவை ஒன்றிய அரசுடன் அரசியல் ரீதியாக சிக்கலான உறவைப் பகிர்ந்து கொள்கின்றன.


கேரள ஆளுநர் மசோதாக்களை ஒப்புதல் அளிக்க ஏன் நிறைய நேரம் எடுத்துக்கொள்கிறார் என்று கேள்வி எழுப்பும் இதேபோன்ற ஒரு வழக்கு, இப்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்காகக் காத்திருக்கிறது.


மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநரின் பங்கு பற்றி அரசியலமைப்பு என்ன சொல்கிறது?


அரசியலமைப்பின் பிரிவு 163 ஆளுநரின் பொதுவான அதிகாரங்களை  (powers of the Governor) கோடிட்டுக் காட்டுகிறது. அதே, நேரத்தில் பிரிவு 200 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இந்த விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரத்தின் வரையறைகளைத் தீர்மானிக்க இரண்டு பிரிவுகளும் ஒன்றாகக் கருதப்படுகின்றன.


ஒரு மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநரிடம் அளிக்கும் போது,

​​

1) மசோதாவை அங்கீகரிப்பது, 


2) ஒப்புதலை நிறுத்தி வைப்பது, 


3) மசோதாவை மறுபரிசீலனைக்கு திருப்பி அனுப்புவது, அல்லது 


4) மசோதாவை மறுபரிசீலனைக்கு குடியரசுத்தலைவருக்கு அனுப்புவது  போன்ற நான்கு தேர்வுகள் ஆளுநருக்கு உள்ளன. 


ஒரு மாநில சட்டமன்றம் அல்லது சட்டமன்றத்தின் இரு அவைகளாலும் ஒரு மசோதா நிறைவேற்றப்படும்போது, ​​அது ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும். பின்னர், ஆளுநர் மசோதாவை அங்கீகரிப்பதா, ஒப்புதலை நிறுத்தி வைப்பதா அல்லது மறு ஆய்வுக்கு குடியரசுத்தலைவருக்கு அனுப்புவதா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று பிரிவு 200 கூறுகிறது.


இருப்பினும், பிரிவு ஒரு முக்கிய விதியைக் கொண்டுள்ளது. ஆளுநர் "முடிந்தவரை விரைவில்” (may, as soon as possible) பண மசோதாக்கள் அல்லாத பிற மசோதாக்களை திருப்பி அனுப்பலாம். அவை மசோதாவை பகுதிகளாகவோ அல்லது முழுவதுமாகவோ மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளும் செய்தியுடன் இருக்கும் என்று அது கூறுகிறது. சட்டமன்றம் மசோதாவை மறுபரிசீலனை செய்த பிறகு ஆளுநருக்கு திருப்பி அனுப்பினால், ஆளுநர் "ஒப்புதல் தராமல் நிறுத்தக்கூடாது” (shall not withhold assent therefrom) என்று பிரிவு விளக்கியுள்ளது.


எதிர்க்கட்சிகள் தலைமையிலான மாநிலங்களில் அரசாங்கத்திற்கும் ஆளுநருக்கும் இடையிலான மோதல் முக்கியமாக வார்த்தைப் பிரயோகத்தில் வருகிறது. ஆளுநர் ஒரு மசோதாவை விரைவில் அனுப்ப வேண்டும் என்றால், குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த நிச்சயமற்ற தன்மையைப் பயன்படுத்திக் கொண்டு, ஆளுநர் அலுவலகங்கள் மசோதாக்களை மாநில சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பாமல் காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளன.


ஒரு ஆளுநர் ஒரு மசோதாவை நிரந்தரமாக தாமதப்படுத்த முடியுமா?


மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் காலவரையற்ற காலக்கெடு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தையே முடக்குவதற்குச் சமமானதாகும். ஒப்புதல் வழங்குவது குறித்த தனது முடிவை தாமதப்படுத்துவதன் மூலம் ஆளுநர் "பாக்கெட் வீட்டோவைப்” (“pocket veto”) பயன்படுத்துகிறார் என்பது தமிழ்நாடு அரசின் வாதமாகும்.


இதுவே தமிழ்நாடு அரசின் முக்கிய வாதமாக இருந்தது. ஆளுநர் மசோதாக்களை அங்கீகரிக்கும் தனது முடிவை தாமதப்படுத்துவதன் மூலம் "பாக்கெட் வீட்டோவைப்” பயன்படுத்துகிறார் என்று தமிழ்நாடு வாதிட்டது.


"பாக்கெட் வீட்டோ” (Pocket Veto) : 

"பாக்கெட் வீட்டோ" என்பது ஆளுநர் ஒரு மசோதாவை அங்கீகரிக்கவோ நிராகரிக்கவோ செய்யாமல், அதை கால வரம்பற்று நிலுவையில் வைத்திருப்பதைக் குறிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம், ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் மசோதாவின் மீது ஆளுநர் முடிவெடுக்க எந்த காலக்கெடுவையும் நிர்ணயிக்கவில்லை.


மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தனது விருப்புரிமை அதிகாரங்களைப் பயன்படுத்துவதாக ஆளுநர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இருப்பினும், இந்த விருப்புரிமையை தன்னிச்சையாகவோ அல்லது தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையிலோ பயன்படுத்த முடியாது. ஆனால், அரசியலமைப்பு அடிப்படையில் மட்டுமே நியாயமான காரணங்களுடன் பயன்படுத்த முடியும்.


பிரிவு 200 “shall” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. இது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் ஆளுநர் இதை ஒரு பரிந்துரையாக மட்டுமல்லாமல், அவர்கள் செய்ய வேண்டிய ஒன்றாகக் கருத வேண்டும் என்று விரும்பினர் என்பதைக் காட்டுகிறது.


இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முன்பு என்ன கூறியது?


அருணாச்சலப் பிரதேச சட்டமன்ற (Nabam Rebia and Bamang Felix vs Deputy Speaker) வழக்கில் 2016ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த முக்கியமான தீர்ப்பில், இந்தப் பிரச்சினையை விரிவாக விளக்கியது. ஆளுநர் ஒரு மசோதாவை அங்கீகரிப்பதை எப்போதும் தாமதப்படுத்த முடியாது என்றும், மசோதாவில் ஏற்படும் மாற்றங்களுக்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய ஒரு செய்தியுடன் அதை சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.


இது  பிரிவு 102 மற்றும் பிரிவு 103 உட்பிரிவில் விளக்கப்பட்டுள்ளது. 


விதி 102(1):


முழு மசோதாவையோ அல்லது அதன் சில பகுதிகளையோ மறுபரிசீலனை செய்யுமாறு அல்லது அவர் பரிந்துரைக்கும் குறிப்பிட்ட மாற்றங்களைப் பார்க்குமாறு கேட்டு ஆளுநர் ஒரு மசோதாவை சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பும்போது, ​​சபாநாயகர் பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்ய வேண்டும்:


சட்டசபை கூடினால் (அமர்வில்), சபாநாயகர் சட்டமன்றத்தில் ஆளுநரின் செய்தியை சத்தமாக வாசிக்க வேண்டும்.


சட்டசபை கூடவில்லை என்றால், சபாநாயகர் செய்தி அனைத்து உறுப்பினர்களுடனும் பகிரப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என்று நீதிமன்றம் கூறியது.


2023ஆம் ஆண்டு, பஞ்சாப் மாநிலம் vs ஆளுநரின் முதன்மைச் செயலாளர் வழக்கில் (State Of Punjab vs Principal Secretary To The Governor), பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசுக்கும் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் இடையிலான பிரச்சனையை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.


சில மசோதாக்களை ஆளுநர் அங்கீகரிக்க மறுத்ததால் மாநில அரசு அவருக்கு எதிராக நீதிமன்றம் சென்றது. இரண்டு சட்டமன்றக் கூட்டத்தொடர்கள் தெளிவாக சட்டவிரோதமானவை என்பதால், தாம் ஒப்புதலை நிறுத்தி வைத்ததாக ஆளுநர் கூறினார்.


சட்டமன்றம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட பின்னர், சட்டமன்றக் கூட்டத்தை சபாநாயகர் மீண்டும் கூட்டினார்.


தேர்ந்தெடுக்கப்படாத மாநிலத்தலைவராக ஆளுநருக்கு (unelected Head of the State) சில அரசியலமைப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநில சட்டமன்றங்களின் வழக்கமான சட்டமியற்றும் போக்கைத் தடுக்க முடியாது. இதன் விளைவாக, பிரிவு 200-ன் முக்கிய பகுதியின் கீழ் ஆளுநர் ஒப்புதலை நிறுத்தி வைக்க முடிவு செய்தால், மசோதாவை மறுபரிசீலனை செய்வதற்காக மாநில சட்டமன்றத்திற்கு அனுப்புவதற்கான முதல் நிபந்தனையில் சுட்டிக்காட்டப்பட்ட போக்கைப் பின்பற்றுவதே சரியான நடவடிக்கையாகும்" என்று உச்சநீதிமன்றம் கூறி மாநில அரசுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.


மேலும், செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு தீர்ப்பில் நீதிமன்றம் என்ன கூறியது?


செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத் தீர்ப்பு 2023-ஆம் ஆண்டு தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், இத்தீர்ப்பில் உச்சநீதிமன்றம் இன்னும் சிலவற்றைச் சேர்த்தது.


முதலாவதாக, பிரிவு 200-ன் கீழ் ஆளுநர் தனது அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கான காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்தது.


பொது விதியாக, முதல் விதியின்படி முன்பே சபைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட ஒரு மசோதாவை இரண்டாவது சுற்றில் குடியரசுத் தலைவருக்கு வழங்கிய பிறகு, அதை அவரது பரிசீலனைக்காக ஆளுநர் ஒதுக்கி வைக்க முடியாது.  இந்தப் பொது விதிக்கு ஒரே விதிவிலக்கு, இரண்டாவது சுற்றில் சமர்ப்பிக்கப்படும் மசோதா, முதல் சுற்றில் ஆளுநருக்கு சமர்ப்பிக்கப்படும் மசோதாவிலிருந்து வேறுபட்டால் மட்டுமே சமர்ப்பிக்க முடியும் என்று உச்சநீதிமன்ற அமர்வு கூறியது.


மாநில அமைச்சரவை குழுவின் ஆலோசனைக்கு மாறாக, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடிவு செய்தால், அது மூன்று மாதங்களுக்குள் செய்யப்பட வேண்டும். முதல் விதிமுறையின்படி (பிரிவு 200இன்) மறுபரிசீலனைக்குப் பிறகு ஒரு மசோதாவை சமர்ப்பித்தால், ஆளுநர் அதிகபட்சமாக ஒரு மாத காலத்திற்குள் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும், என்று நீதிமன்றம் கூறியது.


இந்தத் தீர்ப்பும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில், நீதிமன்றம் அரசியலமைப்பின் 142-வது பிரிவின் கீழ் அதிகாரங்களைப் பயன்படுத்தி 10 மசோதாக்களை ஒப்புதல் பெற்றதாக அறிவித்தது. ஏனெனில், இந்த மசோதாக்கள் வழக்கத்திற்கு மாறாக நீண்ட காலமாக ஆளுநரால் நிலுவையில் வைக்கப்பட்டிருந்ததாகவும், இதே போன்ற பிரச்சினைகள் குறித்த நீதிமன்றத்தின் முந்தைய முடிவுகளுக்கு ஆளுநர் சிறிதும் மரியாதை காட்டவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.


சட்டப்பிரிவு 142 உச்சநீதிமன்றத்திற்கு ஒரு தனித்துவமான அதிகாரத்தை வழங்குகிறது. சில சமயங்களில், சட்டம் ஒரு தீர்வை வழங்காதபோது "முழுமையான நீதியை" (complete justice) வழங்க உச்ச நீதிமன்றத்திற்கு பிரிவு 142 சிறப்பு அதிகாரத்தை வழங்குகிறது. இது போன்ற சூழ்நிலைகளில், நீதிமன்றம் தலையிட்டு சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் சர்ச்சையைத் தீர்க்க முடியும்.


மற்ற மாநிலங்களில் இதே போன்ற வழக்குகளுக்கு இப்போது என்ன நடக்கிறது?


2023ஆம் ஆண்டு தீர்ப்பும் தற்போதைய தீர்ப்பும் இதே போன்ற வழக்குகள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன என்பதைப் பாதிக்கும்.


மூன்று மசோதாக்கள் முன்னாள் ஆளுநர் ஆரிஃப் முகமது கானின் ஒப்புதலுக்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருப்பதாகவும், மற்ற மூன்று மசோதாக்கள் ஒரு வருடத்திற்கும் மேலாகக் காத்திருப்பதாகவும் கேரளா வாதிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு (Public Interest Litigation (PIL)) தாக்கல் செய்யப்பட்டது. அதில் மாநில அரசும் ஒரு பிரதிவாதியாக சேர்க்கப்பட்டது. இருப்பினும், உயர் நீதிமன்றம் இதில் தலையிட வேண்டாம் என்று முடிவு செய்ததால், அரசு இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் மற்றொரு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நிலுவையில் உள்ளது.


Original article:
Share: