தமிழ்நாடு ஆளுநர் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு -குஷ்பூ குமாரி

 ஆளுநர் செயல்பாட்டாளராக இருக்க வேண்டுமே தவிர, தடுப்பவராக இருக்க கூடாது (catalyst and not an inhibitor) என்று உச்சநீதிமன்ற அமர்வு கூறியது. இந்த சூழலில், ஆளுநருடன் தொடர்புடைய பிற அரசியலமைப்பு விதிகள் யாவை? முக்கிய பரிந்துரைகள் யாவை?


தற்போதைய செய்தி: 


ஒரு முக்கியமான தீர்ப்பில், நீதிபதிகள் ஜே பி பர்திவாலா மற்றும் ஆர் மகாதேவன் தலைமையிலான உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு சட்டமன்றம் ஏற்கனவே அவற்றை மறுபரிசீலனை செய்த பின்னர், நவம்பர் மாதம் 10 மசோதாக்களை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பும் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியின் முடிவு தவறானது மற்றும் சட்டவிரோதமானது என்று அறிவித்தது.


ஆளுநர்களுக்கு வழங்கப்படும் மசோதாக்கள் குறித்து அவர்கள் முடிவு செய்ய நீதிமன்றம் ஒரு காலக்கெடுவை நிர்ணயித்தது. ஒரு அரிய நடவடிக்கையாக, அரசியலமைப்பின் 142-வது பிரிவின் கீழ் அதன் சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி, 10 மசோதாக்கள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் கூறியது.


முக்கிய அம்சங்கள்:


1. மோதல்களின்போது, ​​ஆளுநர் உடன்பாட்டைக் கொண்டு வந்து பிரச்சினைகளைத் தீர்க்க உதவ வேண்டும் என்று கூறி, நீதிமன்றம் ஆளுநரின் பங்கை விளக்கியது. ஆளுநர் மாநிலத்தின் செயல்பாட்டை ஆதரிக்க வேண்டும். அதைத் தடுக்கக்கூடாது. ஆளுநரின் அனைத்து நடவடிக்கைகளும் பதவியின் கண்ணியத்தை மதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.


2. மசோதாக்கள் குறித்து ஆளுநர்கள் முடிவெடுக்க நீதிமன்றம் ஒரு காலக்கெடுவை நிர்ணயித்து, அரசியலமைப்பின் 200வது பிரிவைப் பற்றிக் குறிப்பிட்டது. ஒரு மசோதா சமர்ப்பிக்கப்படும்போது ஆளுநர் என்ன செய்ய முடியும் என்பதை இந்தப் பிரிவு விளக்குகிறது: 


(1) மசோதாவை அங்கீகரிப்பது

 

(2) அதை நிராகரிப்பது


(3) மறுபரிசீலனைக்கு திருப்பி அனுப்புவது அல்லது 


(4) ஒப்புதலுக்காக குடியரசுத்தலைவருக்கு அனுப்ப வேண்டும்.


3. பிரிவு 200, ஆளுநர் ஒரு மசோதாவை "முடிந்தவரை விரைவில்" திருப்பி அனுப்ப வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவைக் குறிப்பிடவில்லை. தெளிவான காலக்கெடு இல்லாமல், ஆளுநர் மசோதாவை காலவரையின்றி தாமதப்படுத்தலாம். இது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் செயல்பாட்டை சீர்குலைக்கும். இதைத் தடுக்க, உச்சநீதிமன்றம் ஆளுநர்கள் மசோதாக்கள் மீது முடிவெடுக்க அதிகபட்சமாக ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை கால அவகாசத்தை நிர்ணயித்துள்ளது.


ஆளுநருடன் தொடர்புடைய பிற முக்கியமான அரசியலமைப்பு விதிகள்:


1. அரசியலமைப்பின் பிரிவு 153ன் படி, ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருக்க வேண்டும். 1956ஆம் ஆண்டில், ஒரே நபர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக இருக்க அனுமதிக்கும் ஒரு திருத்தம் செய்யப்பட்டது.


2. அரசியலமைப்பின் பிரிவு 155, குடியரசுத் தலைவர் ஆளுநரை நியமிக்கிறார் என்று கூறுகிறது. குடியரசுத்தலைவரின் விருப்பப்படி ஆளுநர் பதவி வகிக்கிறார். குடியரசுத்தலைவரால் ஆளுநரை எந்த நேரத்திலும் நீக்க முடியும் என்று பிரிவு 156 கூறுகிறது.


3. பிரிவு 157 மற்றும் 158, ஆளுநருக்கான தகுதிகளை விளக்குகின்றன. அவை : அவர்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். குறைந்தது 35 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும், நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடாது. வேறு எந்த ஊதியம் பெறும் பதவியையும் வகிக்கக்கூடாது.


4. பிரிவு 163 ஆளுநர் மாநில அமைச்சர்கள் குழு மற்றும் முதலமைச்சரின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறது.


5. பிரிவு 173, மாநில சட்டமன்றத்தை அழைக்க, இடைநீக்கம் செய்ய அல்லது கலைக்க ஆளுநருக்கு அதிகாரத்தை வழங்குகிறது. ஆனால், இது அமைச்சர்கள் குழுவுடன் கலந்தாலோசித்த பிறகு செய்யப்பட வேண்டும்.


6. மாநில சட்டமன்றத்தில் ஒரு கட்சி தனது பெரும்பான்மையை நிரூபிக்க எவ்வளவு நேரம் தேவை என்பதை தீர்மானிப்பது போன்ற சில அதிகாரங்கள் ஆளுநருக்கு உண்டு. தொங்கு சட்டசபை ஏற்பட்டால், எந்தக் கட்சி முதலில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பதையும் ஆளுநர் முடிவு செய்வார்.


என்ன சீர்திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன?


நிர்வாக சீர்திருத்த ஆணையம் 1968, (Administrative Reforms Commission)) மற்றும் சர்க்காரியா ஆணையம் 1988, (Sarkaria Commission) போன்ற பல்வேறு குழுக்கள் ஆளுநரின் பங்கிற்கு சீர்திருத்தங்களை பரிந்துரைத்துள்ளன. பிரதமர், உள்துறை அமைச்சர், மக்களவை சபாநாயகர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் அடங்கிய குழு மூலம் ஆளுநரைத் தேர்ந்தெடுப்பது மற்றும் அவர்களின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகளாக நிர்ணயிப்பது ஆகியவை இதில் அடங்கும். தேவைப்பட்டால் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய சட்டமன்றத்தை அனுமதிக்கவும் அவர்கள் பரிந்துரைத்தனர்.


2001ஆம் ஆண்டு, அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட அரசியலமைப்பின் செயல்பாட்டை மறுஆய்வு செய்வதற்கான தேசிய ஆணையம், ஒன்றிய அமைச்சர்கள் குழுவால் ஆளுநர் நியமிக்கப்பட்டு பதவியில் இருப்பதால், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருக்கும்போது ஒன்றிய அமைச்சர்கள் குழுவிலிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தல்களின்படி ஆளுநர் செயல்படக்கூடும் என்ற கவலை உள்ளது என்று சுட்டிக்காட்டியது. இதன் விளைவாக ஆளுநர்கள் "ஒன்றிய அரசின் முகவர்கள்" (agents of the Centre) என்று அழைக்கப்பட்டனர்.


குடியரசுத் தலைவர் vs ஆளுநர்


ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு, அவர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள் மற்றும் நீக்கப்படுகிறார்கள் என்பதுதான். குடியரசுத் தலைவர் நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதே, நேரத்தில் ஆளுநர் ஒன்றிய அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறார். குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்வதன் மூலம் மட்டுமே நீக்க முடியும். ஆனால், ஒன்றிய அரசின் விருப்பப்படி ஆளுநரை பதவியில் இருந்து நீக்க முடியும்.


பொம்மை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு


ஆளுநரின் பங்கு குறித்த பிரச்சினை எழும்போதெல்லாம், கண்களுக்குத் தோன்றும் குறிப்பிடத்தக்க வழக்குகளில் ஒன்று பொம்மை வழக்கின் தீர்ப்பாகும். பிரிவு 356-ன் கீழ் எதிர்க்கட்சிகளால் ஆட்சி செய்யப்படும் மாநில அரசுகளை கலைக்க ஆளுநர் அடிக்கடி குடியரசுத்தலைவரின் ஆட்சியை பரிந்துரைத்த நேரத்தில் இது வந்தது. மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதில் ஆளுநர் அலுவலகத்தின் நடத்தையை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்த முதல் வழக்குகளில் இதுவும் ஒன்றாகும் என்பதால் இது குறிப்பிடத்தக்கது.


1994ஆம் ஆண்டு எஸ்.ஆர். பொம்மை எதிர் இந்திய ஒன்றிய வழக்கில் (SR Bommai v Union of India case), குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் குடியரசுத் தலைவரின் முடிவு சட்டவிரோதமானதாகவோ, தீய நோக்கத்துடன் எடுக்கப்பட்டதாகவோ, தவறான காரணிகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகவோ, அல்லது அதிகார துஷ்பிரயோகம் அல்லது மோசடியை உள்ளடக்கியதாகவோ இருந்தால் நீதிமன்றங்களால் மறுபரிசீலனை செய்யப்படலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆளும் கட்சிக்கு போதுமான ஆதரவு உள்ளதா என்பதைச் சரிபார்க்க நம்பிக்கை வாக்கெடுப்பு சிறந்த வழி என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

ஆளுநர் அரசியலமைப்பைப் பாதுகாக்கச் செயல்பட வேண்டும்.  எந்தவொரு அரசியல் கட்சியையும் ஆதரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியது. அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதும் ஆளுநரின் கடமை என்று அது கூறியது. கட்சித் தாவல் செயல்பாடுகள் மூலம் இந்திய ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்க ஆளுநர் அனுமதிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் கூறியது. ஆளுநரால் எடுக்கப்படும் எந்தவொரு நேர்மையற்ற அல்லது நியாயமற்ற முடிவுகளையும் நீதிமன்றங்கள் மறுபரிசீலனை செய்யலாம் என்றும் குறிப்பிட்டது.


Original article:
Share: