ஒரு பிராந்திய மறுமலர்ச்சி : BIMSTEC உச்சி மாநாடு பற்றி…

 BIMSTEC உச்சி மாநாடு இருதரப்பு சந்திப்புகளுக்கு ஒரு தளத்தை வழங்கியது.


கடந்த வாரம், 6-வது பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC)) உச்சிமாநாடு பாங்காக்கில் ஏழு அண்டை நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைத்தது. இந்த உச்சிமாநாடு உலகளாவிய சவால்களின் எதிர்கொள்ளும் நேரத்தில் நடைபெற்றது மற்றும் பல ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருந்த பிராந்திய குழுவை மீண்டும் உயிர்ப்பிக்க ஒரு வாய்ப்பை வழங்கியது. 


தெற்காசியாவின்  தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கம் (South Asian Association for Regional Cooperation (SAARC)) மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் (Association of Southeast Asian Nations (ASEAN)) நாடுகளை இணைப்பதற்காக BIMSTEC உருவாக்கப்பட்டது. இருப்பினும், தெளிவான இலக்குகள் இல்லாததால் அந்தக் குழு போராடியது மற்றும் அரசியல் சவால்களை எதிர்கொண்டது. 2014ஆம் ஆண்டில்  இந்தியா மற்றும் பாகிஸ்தானின் உறவுகள் மோசமடைந்த பிறகு, SAARC அமைப்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படமல் உள்ளது. மேலும், பூட்டான் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை நிராகரித்ததால் வங்காளதேசம், பூட்டான், இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய சிறிய குழுக்கள் பின்னடைவைச் சந்தித்தன. 


இதன் விளைவாக, இந்தியா BIMSTEC அமைப்பில் முதலீடு செய்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை உச்சிமாநாட்டை நடத்தும் திட்டம் கோவிட்-19 தொற்றுநோயால் தாமதமானது. இருப்பினும், மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் போன்ற சவால்கள் இருந்தபோதிலும், உச்சிமாநாடு நடைபெற்றது. ஆனால், ஒப்பந்தங்களின் எண்ணிக்கை மற்றும் ஒத்துழைப்புக்கான பகுதிகளைக் கருத்தில் கொண்டு, உச்சிமாநாடு பயனுள்ளதாக இருந்தது. இந்த உச்சிமாநாட்டில் BIMSTEC வர்த்தக சபையை (“hub”) உருவாக்குவது மற்றும் இந்தியாவின் வடகிழக்கை பசிபிக் பெருங்கடலுடன் இணைக்கும் இந்தியா-மியான்மர்-தாய்லாந்து நெடுஞ்சாலையை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. 


BIMSTEC அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்படுவதால், கூட்டுப் பேரிடர் மேலாண்மை அமைப்பை உருவாக்குவது முக்கியம். “தொலைநோக்கு 2030” (‘Vision 2030’) ஆவணத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பிற திட்டங்களில், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (free trade agreement (FTA)) மற்றும் சுங்க ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதும் அடங்கும்.


குழு விவாதங்களைத் தவிர, இந்த உச்சிமாநாடு தலைவர்களுக்கு இருதரப்பு சந்திப்புகளுக்கான அரிய வாய்ப்பை வழங்கியது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேசத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸும் சிறுபான்மையினரை நடத்துதல், எல்லைப் படுகொலைகள் மற்றும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் இந்திய வருகை போன்ற பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்தனர். 


அண்டை நாடுகளுக்கு இடையே உணர்ச்சிபூர்வமான "சொல்லாடல்களை" (rhetoric) தவிர்க்க வேண்டும் என்பது மோடியின் முக்கியமான அறிவுரையாக இருந்துது. ஆனால், டாக்காவும் இந்தியாவும் அதைப் பின்பற்ற வேண்டும்.  இந்தியா முன்னதாக நேபாளத் தலைவர் கே.பி. சர்மா ஒலியை அழைக்காததால் பல மாதங்களாக நீடித்த பதற்றத்திற்குப் பிறகு அவருடனான அவரது சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பு உறவுகளை மேம்படுத்தவும், விரைவில் ஒரு வருகைக்கு வழிவகுக்கும் மற்றும் அவர்களுக்கு இடையேயான பிரச்சினைகளைத் தீர்க்கவும் உதவும் என்று நம்புகிறார்கள். 


BIMSTEC கூட்டத்தில் மியான்மர் பிரதமர் ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் கலந்து கொண்டது ஒரு சிறப்பு அம்சமாகும். தங்கள் நாடுகளில் ஜனநாயகத்தை மீண்டும் கொண்டுவருவது குறித்து ஜெனரல் மின் மற்றும் வங்காளதேசத்தின் யூனுஸுக்கு பிரதமர் மோடி அளித்த ஆலோசனை தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும் என்று நம்பப்படுகிறது. உச்சிமாநாடு சிறப்பாக நடந்தது, ஆனால் அதன் பல திட்டங்கள் பழைய SAARC ஒப்பந்தங்களைப் போலவே உள்ளன. BIMSTEC அமைப்பை வலுவாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க, உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் மற்றும் SAARC அமைப்பை பலவீனப்படுத்திய அதே தவறுகளைத் தவிர்க்க வேண்டும்.


Original article:
Share: