இணையவழி விளையாட்டு (Online Gaming) : பிரச்சனைகள் மற்றும் கவலைகள் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய செய்தி : Dream11, Games24x7, மற்றும் Winzo போன்ற இணையவழி விளையாட்டு நிறுவனங்களை பணமோசடி தடுப்புச் சட்டங்களின் கீழ் கொண்டுவருவதற்கான திட்டத்தை இறுதி செய்யும் பணியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது. இது ‘உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (know-your-customer (KYC))’ எனும் வாடிக்கையாளர் பற்றிய விவரங்கள் மூலம்  தேவைகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைக் கண்காணித்தல் மற்றும் புகாரளித்தல் போன்ற கடுமையான விதிகளைப் பின்பற்ற அவர்களை கட்டாயப்படுத்தும் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


முக்கிய  அம்சங்கள்:


• நிதி அமைச்சகம், பிற அமைச்சகங்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பணமோசடி தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act (PMLA)), 2002இன் கீழ், இணையவழி விளையாட்டு நிறுவனங்களை "அறிக்கையிடல் நிறுவனங்கள்" (reporting entities) என்று குறிப்பிடும்  திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. 


• PMLA சட்டத்தின் கீழ், வங்கிகள் மற்றும் நிதி இடைத்தரகர்கள் போன்ற நிதி நிறுவனங்கள் பதிவு செய்தல் மற்றும் அறிக்கையிடல் விதிகளைப் பின்பற்ற வேண்டும். ஏனெனில், அவை அறிக்கையிடல் நிறுவனங்களாக வகைப்படுத்தப்படுகின்றன.


• PMLA-வின் கீழ், ஒரு அறிக்கையிடல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் பரிவர்த்தனைகள் பற்றிய விவரங்களை நிதி அமைச்சகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் நிதி புலனாய்வு பிரிவு-இந்தியாவிற்கு (Financial Intelligence Unit-India (FIU-IND)) வழங்க வேண்டும். அனைத்து பரிவர்த்தனைகளின் பதிவுகளையும் வைத்திருத்தல், வாடிக்கையாளர்கள் மற்றும் உரிமையாளர்களின் அடையாளத்தைக் காட்டும் ஆவணங்கள் மற்றும் வாடிக்கையாளர் கணக்குகள் மற்றும் வணிக தொடர்பு தொடர்பான கோப்புகள் போன்ற பல விதிகளையும் இது பின்பற்ற வேண்டும்.


• உலகளாவிய பணமோசடி கண்காணிப்புக் குழுவின் (Financial Action Task Force (FATF)) விதிமுறைகளுக்கு இணங்க, பணமோசடி எதிர்ப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியுதவி (anti-money laundering and countering the financing of terrorism (AML/CFT)) கடப்பாடுகளை எதிர்ப்பதற்கும் இது உட்பட்டது.


• 2023ஆம் ஆண்டில் இதேபோன்ற நடவடிக்கையில், நிதி அமைச்சகம் மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்களை (virtual digital assets (VDAs)) அறிக்கையிடல் நிறுவனங்களாக அறிவித்தது. இது கிரிப்டோகரன்சி நிறுவனங்களை நேரடியாக இலக்காகக் கொண்ட ஒரு நடவடிக்கையாகும்.


• இது இறுதி செய்யப்பட்டால், 2023ஆம் ஆண்டில் பயனர்கள் அத்தகைய பயன்பாடுகளில் செய்யும் முழு வைப்புத்தொகைக்கும் 28 சதவீத பொருட்கள் சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Service Tax (GST)) விதிக்கப்பட்ட பிறகு, கேமிங் நிறுவனங்கள் மீதான இரண்டாவது பெரிய நடவடிக்கையாக இது இருக்கும்.


• இந்தத் துறையும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும். ஆனால், நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக இந்த விதிகள் அமல்படுத்தப்படவில்லை.


உங்களுக்குத் தெரியுமா?


• மார்ச் 2025இல் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (Federation of Indian Chambers of Commerce & Industry (FICCI)) மற்றும் EYஇன் அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள இணையவழி விளையாட்டு நிறுவனங்கள் 2024-ஆம் ஆண்டில் கூட்டாக $2.7 பில்லியனை வருவாய் ஈட்டின. இந்த நிறுவனங்கள் வழக்கமாக பயனரின் வெற்றிகளில் ஒரு சதவீதத்தை எடுத்து பணம் சம்பாதிக்கின்றன.


• அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டில் 155 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் இணையவழி விளையாட்டின் துணைப் பிரிவுகளான fantasy sports, rummy, poker மற்றும் பிற பரிவர்த்தனை அடிப்படையிலான விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளனர். இது 2023ஆம் ஆண்டை விட 10 சதவீதம் அதிகரித்துள்ளது. சராசரியாக தினமும் சுமார் 110 மில்லியன் மக்கள் இந்த விளையாட்டுகளை விளையாடினர்.


• இந்திய நிறுவனங்கள் PMLA விதிகளைப் பின்பற்றும் அதே வேளையில், வெளிநாட்டு பந்தயம் மற்றும் சூதாட்ட செயலிகள் அவற்றைப் பின்பற்றாது என்று விளையாட்டுத் துறையில் உள்ளவர்கள் கவலைப்படுகிறார்கள். 28% சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டபோது அவர்கள் எழுப்பிய கவலை இது.


• விதிகளைப் பின்பற்றாத இணையவழி விளையாட்டு நிறுவனங்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில், 2022ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 2025 வரை 1,400-க்கும் மேற்பட்ட இணையம் சார்ந்த பந்தயம்/சூதாட்டம்/கேமிங் வலைத்தளங்களை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தடை செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.  சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வு இயக்குநரகம் (Directorate General of GST Intelligence (DGGI)) சட்டவிரோத வெளிநாட்டு விளையாட்டு தளங்களின் 350க்கும் மேற்பட்ட இணைப்புகளையும் தடை செய்தது.


• தகவல் தொழில்நுட்ப விதிகளில் திருத்தங்கள் மூலம் இணையவழி விளையாட்டு துறையை ஒழுங்குபடுத்தும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முயற்சி தோல்வியுற்றது மற்றும் ஒழுங்குபடுத்தும் முறைகள் இல்லை என்பதாலும் தொழில்துறை சார்ந்த பிரச்சனைகள் உருவாகின்றன.


• ஏப்ரல் 2023ஆம் ஆண்டில், இணையவழி விளையாட்டிற்கான விதிகளை அமைச்சகம் அறிவித்தது. இது இணையவழி விளையாட்டுகளின் சட்டபூர்வமான தன்மையைக் கண்டறிய சுய-ஒழுங்குமுறை அமைப்புகளை அமைப்பதற்கு அனுமதித்தது.  இந்த அமைப்புகளையும் விதிகளின் பிற பகுதிகளையும் அரசாங்கம் மேற்பார்வையிடும்.


• இருப்பினும், சில சுய ஒழுங்குமுறை முன்மொழிவுகளை அமைச்சகம் நிராகரித்தது. ஏனெனில், அவை விளையாட்டு துறையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.  இது நலன் மோதலுக்கு வழிவகுக்கும் என்று அது நம்பியது.


• மாநிலத்தின் இணையவழி விளையாட்டு சட்டத்திற்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், இணையவழி விளையாட்டு குறித்த விதிகளை இப்போது அமல்படுத்த முடியாது என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூறியது. ஏனெனில், அது இன்னும் எந்த சுய ஒழுங்குமுறை அமைப்புகளையும் அமைக்கவில்லை.


Original article:
Share: