கவாச் என்றால் என்ன?, அது எப்படி வேலை செய்கிறது? டிப்ராய் குழு (Debroy Committee) ஏன் பொருத்தமானது?
செய்திகளில் குறிப்பிட்டுள்ளது என்ன ?
ஜூன் மாதம் மேற்கு வங்கத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் (Kanchanjunga Express) மற்றும் சரக்கு ரயிலுக்கு (goods train) இடையே ஏற்பட்ட மோதலுக்கு இரயில்வே பாதுகாப்பு ஆணையர் (Commissioner of Railway Safety (CRS)) இரயில்வே நிலைய ஊழியர்கள் மற்றும் கோட்ட மற்றும் மண்டல அளவிலான அதிகாரிகள் பொறுப்பேற்றனர். CRS இந்த சம்பவத்தை "accident-in-waiting" என்று அழைத்தது. "தானியங்கி சிக்னல் பழுதுகளின்" (automatic signal failures) போது இரயில் செயல்பாடுகளை நிர்வகிப்பதில் பல நிலைகளில் ஏற்பட்ட குறைபாடுகள் இதற்குக் காரணமாகும். இந்த சம்பவத்தை அடுத்து CRS தானியங்கி இரயில்-பாதுகாப்பு அமைப்பான, கவாச் அமைப்பை உடனடியாக செயல்படுத்த இரயில்வே பாதுகாப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
முக்கிய அம்சங்களானவை :
1. கவாச் என்பது இந்தியாவின் மேம்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு (advanced Automatic Train Protection (ATP)) அமைப்பாகும். இது, ரயிலின் பிரேக்கிங் அமைப்பைத் தானாகச் செயல்படுத்துவதன் மூலம் இரயில் மோதலைத் தடுக்கலாம். இது இந்திய தொழில்துறையுடன் இணைந்து ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பால் (Research Design and Standards Organisation) உருவாக்கப்பட்டது.
2. இந்த தொழில்நுட்பம் இரயில் நிலையங்கள், இரயில்கள் மற்றும் இரயில்வே தண்டவாளங்களில் நிலைநிறுத்தப்பட்ட ரேடியோ அலைவரிசை அடையாள அமைப்புகளுடன் இணைக்கப்பட்ட மின்னணு சாதனத்தைக் கொண்டுள்ளது. ஒரு லோகோ பைலட் (loco pilot) கவனக்குறைவாக சிவப்பு சிக்னலைத் தவிர்த்துவிட்டால், கவாச் தானாகவே இரயிலின் பிரேக்கிங் முறையை செயல்படுத்தி கட்டுப்படுத்துகிறது. கூடுதலாக, இந்த அமைப்பானது அனைத்து இரயில்களும் ஒரே பாதையில் வருவதைக் கண்டறிந்து, மோதல்களைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து, லோகோ பைலட்டை எச்சரிக்கிறது.
3. கவாச் (Kavach) என்றும் அழைக்கப்படும் ரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பு (Train Collision Avoidance System (TCAS)), ஏற்கனவே உள்ள அமைப்புகளின் முக்கிய கூறுகளை உள்ளடக்கியது. இந்த அமைப்புகள் சோதிக்கப்பட்டு பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ரயில் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை அமைப்பு மற்றும் உள்நாட்டு மோதல் எதிர்ப்பு சாதனம் ஆகியவை இதில் அடங்கும்.
4. கவாச் அமைப்பின் அடிப்படை அம்சங்கள் :
(i) அனுமதிக்கப்பட்ட வேகத்தில் இரயில்களை இயக்க அனுமதிக்கிறது.
(ii) ஆபத்தில் சிக்னல் கடந்து செல்வதைத் (Signal Passing at Danger (SPAD)) தடுப்பதில் லோகோ பைலட்டுகளுக்கு SPAD அமைப்பு உதவுகிறது
(iii) தொடர்ச்சியான வேக கண்காணிப்பை வழங்குகிறது.
(iv) இரயில்வேயில் லோகோ பைலட்டுக்கான சிக்னல் அம்சங்களையும் இயக்கும் அதிகாரத்தையும் காட்டுகிறது.
(v) சாத்தியமான மோதல்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது.
5. அக்டோபர் 2022 மற்றும் டிசம்பர் 2023-ஆம் ஆண்டில், 789 கிலோமீட்டர் பாதை மற்றும் 90 இன்ஜின்களில் கவாச் அமைப்பை நிறுவுவதற்கான நான்கு ஒப்பந்தங்கள் 24 மாதங்கள் நிறைவடைந்தன. இதுவரை, மொத்த பாதையில் 405 கிலோமீட்டர்களில் என்ஜின்கள் மூலம் வெற்றிகரமான சோதனைகள் முடிக்கப்பட்டுள்ளன. 2024-25 நிதியாண்டுக்கான இலக்கு 735 கிலோமீட்டர்கள் ஆகும்.
6. 2024-25 நிதியாண்டில் கவாச் நிறுவலுக்கு 1,112.57 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
7. டெப்ராய் குழு (Debroy committee) செப்டம்பர் 22, 2014-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது மற்றும் அதன் இறுதி அறிக்கையை ஜூன் 2015-ஆம் ஆண்டில் சமர்ப்பித்தது. இந்திய ரயில்வே தொடர்பான முடிவெடுக்கும் அமைப்பு, கணக்கியல் அமைப்பு, மனித வள மேலாண்மை மற்றும் பணியாளர் செலவுகள், பன்முகத்தன்மை போன்ற பல்வேறு சிக்கல்களைக் இக்குழு கையாண்டது. இதில் இந்திய இரயில்வேயில் நுழைவதற்கான வழிகள், அதிக வருவாய் செலவினம் மற்றும் குறைந்த மூலதனச் செலவு, ஒரு சுதந்திரமான கட்டுப்பாட்டாளர் அமைப்பதற்கான நிதி நிலை தேவைகள் போன்றவை இதில் அடங்கும்.
8. இந்தக் குழு மொத்தம் 40 பரிந்துரைகளை வழங்கியது. இவற்றில் 19 முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஏழு பகுதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. பதினான்கு பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டன.
9. இந்திய இரயில்வேயை தாராளமயமாக்க வேண்டும் என்பதே அந்தக் குழுவின் முக்கியப் பரிந்துரை. "தாராளமயமாக்கல்" (liberalisation) என்பதன் அர்த்தம் "தனியார்மயமாக்கல்" (privatisation) என்பதல்ல என்பதை அவர்கள் தெளிவுபடுத்தினர். இரயில்வே துறையில் புதிய ஆபரேட்டர்கள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது. இது வளர்ச்சியை ஊக்குவிக்கவும் சேவைகளை மேம்படுத்தவும் உதவும். மேலும், ஒழுங்குபடுத்தும் செயல்முறை அவசியம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த செயல்முறையானது ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிக்கும் மற்றும் அனைத்து பங்குதாரர்களின் நலன்களையும் பாதுகாக்கும்.
10. சில பரிந்துரைகள் ஏற்கப்பட்டுள்ளன. இது, இரயில்வேக்கான தனி நிதிநிலை அறிக்கையைப் படிப்படியாக நீக்குதல், இரயில்வே வாரியத்தின் தலைவரை தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) மறு நியமித்தல் மற்றும் பொது மேலாளர்கள் (GMகள்) மற்றும் கோட்ட ரயில்வே மேலாளர்கள் (DRMs) சுதந்திரமாக முடிவெடுக்க அதிக அதிகாரங்களை வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும். இருப்பினும், இந்திய இரயில்வேயின் "தாராளமயமாக்கல்" தொடர்பான முக்கிய பரிந்துரை இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
11. டெப்ராய் நிபுணர் குழு, முடிவெடுப்பதை விரைவுபடுத்த இரயில்வே வாரியத்தின் தலைவரை மீண்டும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டது. செப்டம்பர் 2020-ஆம் ஆண்டில், அரசாங்கம் புதிய வடிவத்தில் வாரியத்தை மறுசீரமைத்தது மற்றும் இரயில்வே வாரியத்தின் முதல் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியை நியமித்தது.
12. இரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் இந்த அறிக்கையை அரசாங்கம் தீவிரமாக எடுத்துக்கொண்டதாக தெரிவித்தார். இது பெரும்பாலான முக்கியமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிகாரிகளுக்கு அதிகாரமளித்தல் போன்றவை ஆகும். பரிந்துரைகளை பரவலாக்குவதற்கு அரசாங்கம் ஓரளவு செயல்பட்டது. பிரிவுகளை சுதந்திரமான வணிக அலகுகளாகக் கருதுதல் மற்றும் பிரிவுக்குள் அனைத்து வகையான டெண்டர்களையும் கையாள DRMகளுக்கு அதிகாரம் அளிப்பதும் இதில் அடங்கும்.