புது தில்லி சிறிய மட்டு உலைககளை (Small Modular Reactors) முக்கிய பகுதியாகக் கருதுகிறது. அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பும் சிறிய மட்டு உலைகள் மீது ஆர்வம் காட்டுகிறார்.
வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில், இந்தியாவின் வணிக நலன்களும், டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகளும் சீரமைக்கத் தொடங்கியுள்ளன. இந்த பரஸ்பர ஆர்வத்தின் முக்கியமான பகுதியாக சிறிய மட்டு உலைகள் உள்ளது. புது தில்லி ஒரு ராஜதந்திர முன்னுரிமையாக இதில் அதிக கவனம் செலுத்துகிறது. சிறிய மட்டு உலைகள் மீது டிரம்ப் அதிக ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது.
ஜோ ரோகனுடனான தேர்தலுக்கு முந்தைய உரையாடலில், பெரிய அணு உலைகள், "மிகவும் சுத்தமாக" இருக்கும் அதே வேளையில், தற்போது உள்ள காலகட்டத்தில் சிக்கலானதாகவும், பட்ஜெட்டை மீறுவதாகவும் டிரம்ப் கூறினார். அதற்கு தீர்வாக மட்டு உலைகள் இருக்கும் என்று அவர் பரிந்துரைத்தார். தொழிற்சாலைகளில் உருவாக்கக்கூடிய மட்டு உலைகள், பெரிய அணு உலைகளால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கலாம் என்று டிரம்ப் நம்புகிறார்.
சிறிய மட்டு உலைகளின் (small reactors) உற்பத்தி மதிப்புச் சங்கிலியில் நுழைய இந்தியா செயல்படும் நேரத்தில் இது நடந்துள்ளது. இந்த நடவடிக்கை இந்தியாவின் மாசு இல்ல ஆற்றல் மாற்றம் இலக்குகள் மற்றும் அதன் தொழில்நுட்பம் சார்ந்த வெளியுறவுக் கொள்கை ஆகிய இரண்டிற்கும் உதவுகிறது.
சிறிய மாட்டு உலைகள் (Small Modular Reactors)
சர்வதேச அணுசக்தி முகமை (International Atomic Energy Agency (IAEA)) என்பது தூய்மையான ஆற்றல் குறித்து அரசாங்கங்களுக்கு ஆலோசனை வழங்கும் ஒரு சர்வதேச அமைப்பாகும். உலகம் நிகர பூஜ்ஜியத்தை அடைய அணுசக்தி 2050-ஆண்டுக்குள் இரண்டு மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று இவ்வமைப்பு கூறுகிறது. இருப்பினும், அணுசக்தி தற்போது பல சிக்கல்களை எதிர்கொள்கிறது. இது விலை உயர்ந்தது, மாற்றம் ஏற்படுவதற்கு அதிக நேரம் எடுக்கும். ஏதேனும், தவறு நடந்தால் பேரழிவு பேரழிவை ஏற்படுத்தலாம்.
சிறிய மட்டு உலைகள் (SMRs) இதற்கு ஒரு தீர்வை வழங்குகின்றன. SMR என்பது ஒரு யூனிட்டுக்கு 30MWe முதல் 300 MW வரை திறன் கொண்ட சிறிய அணுஉலைகள் ஆகும். தற்போதைய, அணுசக்தி பிரச்சினைகளில் பெரும்பாலானவற்றை அவர்களால் தீர்க்க முடியும். தொழில்நுட்ப நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு இயந்திர கற்றல் மற்றும் தரவு மையங்களில் இருந்து வளர்ந்து வரும் மின்சார தேவை அதிகரித்து வருவதால் இது முக்கியமானது.
பல வகையான சிறிய மட்டு உலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. நான்கு முக்கிய வகைகள் உள்ளன. அணுக்கரு வினைகளின் தீவிர வெப்பத்தை நிர்வகிக்க ஒவ்வொன்றும் வெவ்வேறு குளிரூட்டியைப் பயன்படுத்துகின்றன. அதில் இலகு நீர், அதிக வெப்பநிலை வாயு, திரவ உலோகம் மற்றும் உருகிய உப்பு போன்றவை பயன்படுத்தப்டுகின்றன.
மிகவும் பொதுவான வகை இலகு நீர் உலை (light water reactors) ஆகும். இவை ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் உள்ள பாரம்பரிய அணுமின் நிலையங்களைப் போலவே இருக்கின்றன. இவை அனைத்தும் குளிரூட்டப்பட்டவை. இலகு நீர் உலைகள் வடிவமைத்து ஒப்புதல் அளிப்பது எளிது. ஏனெனில், பெரும்பாலான அணுக்கரு விதிமுறைகள் நீர்-குளிரூட்டப்பட்ட உலைகளை அடிப்படையாகக் கொண்டவை. ஜோ ரோகனுடனான தனது உரையாடலில் டிரம்ப் பரிந்துரைத்தபடி, ஒரு பெரிய பாரம்பரிய அணுமின் நிலையத்தை சுருக்கி அதை ஒரு தொழிற்சாலையில் அளவில் உருவாக்கி, அதில் பெருமளவில் மின்சாரம் உற்பத்தி செய்வது முக்கிய யோசனையாகும்.
நியூஜெர்சியில் உள்ள கேம்டனில் உள்ள ஹோல்டெக் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இந்திய அணுசக்தித் துறை (India’s Department of Atomic Energy) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஹோல்டெக் உலகின் மிகப்பெரிய அணுசக்தி கூறுகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த கலந்துரையாடல்கள் சாத்தியமான ஒத்துழைப்புகளில் கவனம் செலுத்துகின்றன.
ஹோல்டெக் அதன் SMR-300 உலையை மையமாகக் கொண்ட ஒரு பொது-தனியார் முயற்சியை முன்மொழிகிறது. இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்திற்குப் பிறகு சுமார் 20 ஆண்டுகளாக இருந்து வரும் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அணுசக்தி ஈடுபாட்டின் முட்டுக்கட்டை உடைப்பதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. ஹோல்டெக்கின் சிறிய மட்டு உலை திட்டங்களுக்காக இந்தியாவில் இருக்கும் நிலக்கரி ஆலை தளங்களைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் உற்பத்தியில் இணைந்து செயல்படுவதும் ஒரு திட்டமாகும்.
தற்போது, இரண்டு சிறிய மட்டு உலை திட்டங்கள் உலகளவில் செயல்படுகின்றன. ஒன்று ரஷ்யாவில் உள்ள அகாடமிக் லோமோனோசோவ், தலா 35 மெகாவாட் இரண்டு தொகுதிகள் கொண்ட மிதக்கும் மின் அலகு கொண்டது. இது மே 2020-ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கியது. மற்றொன்று சீனாவில் HTR-PM ஆகும். இது டிசெம்பர் 2021-ஆம் ஆண்டில் கட்டத்துடன் இணைக்கப்பட்டு, டிசம்பர் 2023-ஆம் ஆண்டில் வணிகச் செயல்பாடுகளைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
சிறிய மட்டு உலை (SMR) பிரிவில் உள்ள மற்ற போட்டியாளர்களில் Rolls-Royce SMR, NuScale இன் VOYGR SMR, வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக்ஸ் AP300 SMR மற்றும் GE-ஹிட்டாச்சியின் BWRX-300 ஆகியவை அடங்கும்.
ஹோல்டெக்கின் SMR-300 என்பது அமெரிக்க எரிசக்தித் துறையின் மேம்பட்ட உலை விளக்கத் திட்டத்தால் ஆதரிக்கப்படும், ஏழு மேம்பட்ட உலை வடிவமைப்புகளில் ஒன்றாகும். 2020-ஆம் ஆண்டில், வடிவமைப்பு, பொறியியல் மற்றும் உரிமத்தை துரிதப்படுத்த ஹோல்டெக் $116 மில்லியன் பெற்றுள்ளது. இந்த திட்டம் இங்கிலாந்து மற்றும் கனடாவில் சிறிய அணு உலையைப் பயன்படுத்துவதற்கான ஆரம்ப திட்டம் மற்றும் மறுஆய்வு நிலைகளில் உள்ளது.
இரண்டு சட்ட தடைகள்
சில சிக்கல்கள் உள்ளன. இந்தியாவில், 2010-ஆம் ஆண்டின் அணுசக்தி சேதத்திற்கான பொறுப்புச் சட்டம் (Civil Liability for Nuclear Damage Act, 2010) அணுசக்தி விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கும், பொறுப்புகளை ஒதுக்கீடு செய்வதற்கும், இழப்பீட்டு நடைமுறைகளைக் குறிப்பிடுவதற்கும் ஒரு அமைப்பை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், GE-ஹிட்டாச்சி, வெஸ்டிங்ஹவுஸ் மற்றும் அரேவா இப்போது Orano போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த சட்டத்தை ஒரு தடையாகக் குறிப்பிட்டுள்ளன. சட்டம் ஆபரேட்டர்களின் பொறுப்பை உபகரணங்கள் சப்ளையர்களுக்கு மாற்றுகிறது. இதனால் இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து வெளிநாட்டு விற்பனையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில், '10CFR810' அங்கீகாரம், ஹோல்டெக் போன்ற அமெரிக்க நிறுவனங்களை கடுமையான பாதுகாப்புகளின் கீழ் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கிறது. இருப்பினும், இந்தியாவில் அணுசக்தி சாதனங்களைத் தயாரிக்கவோ அல்லது அணுசக்தி வடிவமைப்புப் பணிகளைச் செய்யவோ அனுமதிக்கவில்லை. SMR-களை தயாரிக்கவும், அணு உதிரிபாகங்களை தனது சொந்த தேவைகளுக்கு இணை உற்பத்தி செய்யவும் விரும்பும் இந்தியாவிற்கு இந்த கட்டுப்பாடு சிக்கலாக உள்ளது.
அமெரிக்க-இந்தியா அணுசக்தி ஒப்பந்தத்தில் மாற்றங்கள் தேவைப்படலாம். 2010-ஆம் ஆண்டு சட்டத்தை மாற்றுவதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் இல்லாவிட்டாலும், புது தில்லி தீர்வுக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 810 அங்கீகாரத்தை அமெரிக்கா சரிசெய்யும் என புது தில்லி நம்புகிறது. அதிபர் ஜோ பைடனின் கீழ் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் இருந்தபோதிலும், உற்பத்தியை மீண்டும் அமெரிக்காவிற்கு கொண்டு வருவதில் கவனம் செலுத்தும் அதிபர் டொனால்ட் டிரம்பின் கீழ் இந்த பிரச்சினை சவால்களை எதிர்கொள்ளக்கூடும். இருப்பினும், அதிபர் டிரம்பின் அணுகுமுறையில், இந்தியாவில் இருந்து சில சமரசம் ஏற்பட்டால், சில சலுகைகள் கிடைக்கும் என்று புதுடெல்லி நம்புகிறது.
சிறிய மட்டு உலைகள் (SMR) துறையில் நிலையான இடத்தை தன்னைக் காட்டிக்கொள்ள இந்தியா விரும்புகிறது. இது சிறிய உலைகளை இயக்குவதில் வலுவான வரலாற்றைக் கொண்டுள்ளது மற்றும் அணு உலைகளை செலவு குறைந்த அளவிலும் தயாரிக்கும் திறனையும் கொண்டுள்ளது.
உலகளாவிய சிறிய மட்டு உலைகள் (SMR) சந்தையை வழிநடத்த பெய்ஜிங் ஒரு லட்சியத் திட்டத்தைத் தொடரும் நேரத்தில், இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தியாவைப் போலவே, பெய்ஜிங்கும் சிறிய மட்டு உலைகள் (SMR) உற்பத்தியை உலகளாவிய தெற்கில் அதன் இராஜதந்திர வெளிப்பாட்டின் ஒரு கருவியாகப் பார்க்கிறது. மின்சார வாகனத் துறையை எப்படி மாற்றியதோ அதேபோன்று சிறிய மட்டு உலைகள் (SMR) தொழிற்துறையிலும் பெரிய மாற்றங்களைக் கொண்டுவருவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் ஊக்கமான ஒத்துழைப்பு
இந்தியாவின் அணுசக்தித் திட்டமானது 220MWe அழுத்தம் கொண்ட கனரக நீர் உலைகள் (pressurized heavy water reactors(PHWR)) மற்றும் அதற்கு மேல் போன்ற சிறிய உலை வகைகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. இருப்பினும், இந்தியா தனது உலை தொழில்நுட்பத்தில் சவால்களை எதிர்கொள்கிறது. கனரக நீர் உலைகள் (PHWR) கன நீர் மற்றும் இயற்கை யுரேனியத்தைப் பயன்படுத்துகின்றன. உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் இலகு நீர் உலைகளுடன் ஒப்பிடும்போது இந்த உலைகள் அதிக செறிவு கொண்டதாக உள்ளது .
ஹோல்டெக் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு கூட்டு அணுகுமுறையை பரிந்துரைக்கிறது. இது, இரு நாடுகளுக்கும் பயனளிக்கும். ஏனெனில், அவை சீனாவுடன் தனித்து போட்டியிடும் நிலையில் இல்லை. இந்தியா அதன் காலவரம்பு முடிவாக PHWR தொழில்நுட்ப வரம்புகளை எதிர்கொள்கிறது. அதிக தொழிலாளர் செலவுகள் மற்றும் வளர்ந்து வரும் பாதுகாப்புவாத உணர்வு ஆகியவற்றால் அமெரிக்கா தடுக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் கொள்கை வட்டாரங்களில் விரிவான தொழில்நுட்ப விவாதங்கள் நடைபெற்று வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவாதங்கள் அத்தகைய உலைகளை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு மற்றும் செயல்திறனை ஆய்வு செய்வதற்கான திட்டத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.இந்தியாவுடன் அணுசக்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்த ரஷ்யாவும் ஆர்வமாக உள்ளது. அரசாங்கத்தின் முடிவைப் பொறுத்து எதிர்கால நடவடிக்கை இருக்கும் என்று அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். இது அணுசக்தி சட்டம், 1962-ஆம் ஆண்டின் கட்டமைப்பிற்குள் இருக்கும். இதில் தனியார் துறை மற்றும் புத்தொழில்களை ஈடுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.