• கடந்த சில மாதங்களாக ஏற்கனவே கவனிக்கப்பட்ட இந்த போக்கு, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான 10 ஆண்டு பன்முக சுற்றுலா விசாவை (multiple-entry tourist visa) நிறுத்துவதற்கான கனடாவின் சமீபத்திய முடிவால் அதிகரித்துள்ளது. இந்த கொள்கை மாற்றம் அடிக்கடி பயணிப்பவர்களை பாதிக்கும். நீண்ட கால விசாக்களின் எளிமை மற்றும் நம்பகத்தன்மையை சார்ந்து இருந்த மக்களுக்கு இது அதிக சவால்களை உருவாக்கும்.
• விசா குறித்த கனடாவின் முடிவு சந்தேகத்திற்கு இடமின்றி அனுமதி விகிதங்களை பாதிக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். முன்னதாக, இந்த விசா விருப்பம் இந்திய விண்ணப்பதாரர்களிடையே பிரபலமான தேர்வாக இருந்தது.
குறிப்பாக, வலுவான நிதி பின்னணி, திடமான பயண வரலாறு மற்றும் கனடாவில் குடும்ப உறவுகள் உள்ளவர்களால் இது விரும்பப்பட்டது. நேரடியான செயல்முறை மூலம் விசாக்கள் மிகவும் எளிதாக வழங்கப்பட்டன.
• அனுமதி விகிதங்களில் திடீர் வீழ்ச்சி இந்திய மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு சிரமங்களை உருவாக்கியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், மாணவர் விசாக்கள் அல்லது பிற நீண்ட கால அனுமதிகளைப் பெற முடியாவிட்டால், 10 வருட விசாவை ஒரு மாற்று விருப்பமாகப் பார்த்தனர்.
இப்போது, 10 வருட விசா நிறுத்தம் சுற்றுலா விசா அனுமதி விகிதங்கள் வீழ்ச்சியடைய செய்துள்ளது. இதனால் நாட்டிற்குள் நுழைவதற்கு வரையறுக்கப்பட்ட விருப்பங்களை எதிர்கொள்கின்றனர்.
சமீபத்திய மாதங்களில் சுற்றுலா விசா அதிகரிப்பு விகிதங்கள் குறைவதன் பின்னணியில் உள்ள காரணிகள் :
1. எல்லை துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் : இது தொடர்பான வழக்குகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, இந்தியாவிலிருந்து வரும் பார்வையாளர்கள், கனடாவை போக்குவரத்துக்குப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைகிறார்கள்.
2. தற்காலிக குடியிருப்பாளர்களைக் குறைப்பதற்கான கொள்கை : தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கனடா தனது கொள்கைகளை கட்டுப்படுத்தி வருகிறது. 10 ஆண்டு விசாக்களுடன் பலர் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர் அல்லது வேலை செய்கிறார்கள் என்ற பிரச்சனையும் எழுந்துள்ளன.
இது, புதிய விண்ணப்பதாரர்களுக்கு கடுமையான ஆய்வைப் பயன்படுத்த புலம்பெயர்வு அதிகாரிகளைத் (immigration authorities) தூண்டுகிறது
3. செயலாக்க தாமதங்கள் மற்றும் பின்னடைவுகள் : விசா செயலாக்கத்தில் தாமதங்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான விசா விண்ணப்பங்கள் பெறப்படுவதும் காரணமாகும்.
4. இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளில் விரிசல் : இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான அரசியல் பதட்டங்கள், குறிப்பாக கனடாவில் நடைபெற்ற ஒரு உயர்மட்ட படுகொலை வழக்கில் இந்தியாவின் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, இருதரப்பு நாடுகளின் உறவுகளை பல்வேறு வகைகளில் பாதித்துள்ளன.