சரக்கு மற்றும் சேவை வரி மறுசீரமைப்பு: 5% மற்றும் 18% ஆகிய இரு அடுக்கு வரி கட்டமைப்பு, தீவினைப் பொருட்களுக்கு 40% -ஷிஷிர் சின்ஹா

 குறைந்த விகிதங்களை நிதி நிலைத்தன்மையுடன் சமநிலைப்படுத்தி, அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.


பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையில், சரக்கு மற்றும் சேவை வரி சீர்திருத்தங்களின் இரண்டாம் தலைமுறையானது வரி விகிதங்களின் முக்கியமான மறுசீரமைப்பை உள்ளடக்கியுள்ளது என்றும் இதை ஒன்றிய அரசு 5 மற்றும் 18 சதவீதத்தின் இரு அடுக்கு வரி கட்டமைப்பை முன்மொழிவதன் மூலம் பின்பற்றுகிறது என்றும் மேலும் சில தீவினைப் பொருட்களுக்கு 40 சதவீத வரியையும் சேர்த்துள்ளது என்று கூறினார். தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக, அக்டோபர் முதல் நவம்பர் வரை புதிய கட்டணக் கட்டமைப்பை அமல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது


தற்போது, நான்கு முக்கிய வரி விகிதங்கள் உள்ளன: 5%, 12%, 18% மற்றும் 28% ஆகும். 0.25% மற்றும் 3% சிறப்பு வரி விகிதங்களும் உள்ளன. புகையிலை மற்றும் கார்கள் போன்ற சில பொருட்களுக்கு 28% வரி மற்றும் கூடுதல் இழப்பீட்டு கட்டணம் உள்ளது.


இந்த முன்மொழிவு ஆக்கப்பூர்வமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய உரையாடலை செயல்படுத்துவதற்காக வரி பகுத்தறிவாக்கலுக்கான அமைச்சர்கள் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அடுத்த சில வாரங்களில் இது குறித்து ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக ஒன்றிய அரசாங்கம் அரசுகளுடன் இணைந்து செயல்படும்


செப்டம்பர் அல்லது அக்டோபரில் சரக்கு மற்றும் சேவை வரி குழு கூட்டம் கூடும் என்று மற்றொரு வட்டாரம் தெரிவித்துள்ளது. அனைத்து சரக்கு மற்றும் சேவை வரி மாற்றங்களையும் முடிக்க அவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டங்கள் தேவைப்படலாம்.



சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் அதிகபட்ச அடுக்கை 40 சதவீதமாக நிர்ணயிக்கிறது. 28 சதவீத வரி பிரிவில் உள்ள பொருட்களின் எண்ணிக்கை 5-7 ஆக குறைக்கப்பட்டு, புகையிலை, பான் மசாலா போன்றவற்றை உள்ளடக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவித்தன.


சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் அதிகபட்ச வரி விகிதத்தை 40 சதவீதமாக நிர்ணயிக்கிறது. 28 சதவீத விகிதப் பிரிவில் உள்ள பொருட்களின் எண்ணிக்கை 5-7 ஆகக் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது. இதில், முதன்மையாக புகையிலை, பான் மசாலா போன்றவை அடங்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.


40 சதவீத புதிய வரி விகிதத்தை அறிமுகப்படுத்துவதே இந்த முன்மொழிவின் நோக்கமாகும். அரசாங்கம் வசூலிக்கும் இழப்பீட்டு கூடுதல் வரி வசூல் படிப்படியாக நீக்கப்பட்டவுடன் இந்த புதிய விகிதம் நடைமுறைக்கு வரும் என்று அந்த வட்டாரம் தெரிவித்தது. புகையிலை, குட்கா மற்றும் சிகரெட் போன்ற தீவினைப் பொருட்கள் மீதான வரி முன்பு போலவே தொடரும். எந்தக் குறைப்பும் இருக்காது.


மூன்றாவது கொள்கை விவசாயிகளுடன் தொடர்புடையது. இங்கு வேளாண் உபகரணங்களின் வரிகளைக் குறைக்கும் முயற்சி இருக்கும். இது உற்பத்தித்திறனை அதிகரிப்பதையும் விவசாய இயந்திரமயமாக்கலை செயல்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நான்காவது கொள்கை, உயர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்திற்காக இருக்கும், இதில் வெள்ளைப் பொருட்களுக்கான (white goods) வரி விகிதங்களைக் குறைப்பதற்கு முயற்சி செய்யப்படும். ஐந்தாவது கொள்கை, இழப்பீட்டு வரி (compensation cess) தொடர்பானது, இதை அகற்றுவது மூலம் அதிக நிதி இடைவெளியையும் நெகிழ்வுத்தன்மையையும் வழங்கி, வரி விகிதத்தை ஜிஎஸ்டியுடன் ஒருங்கிணைத்து நியாயப்படுத்த உதவும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.


வரி விகிதங்களை மாற்றுவது அரசாங்க வருமானத்தைக் குறைக்குமா என்று கேட்டபோது, அது ஒரு பிரச்சனையாக இருக்காது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. அதிகமான மக்கள் விதிகளைப் பின்பற்றி அதிகமாக வாங்குவார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். இது இழப்பை ஈடுசெய்யும். அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் விகிதக் குறைப்பு திட்டமிடப்பட்டுள்ளதால், நிதியாண்டின் இறுதிக்குள் வருமானம் மேம்படும். எனவே, பட்ஜெட்டில் பெரிய தாக்கம் எதுவும் இருக்காது என்று மற்றொரு வட்டாரம் மேலும் கூறியது.



Original article:

Share:

‘சபாசார் (SabhaSaar)', கிராம சபைக்கான செயற்கை நுண்ணறிவுக் கருவி -குஷ்பூ குமாரி

 நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில், அரசாங்கம் கிராம சபைகளுக்காக செயற்கை நுண்ணறிவு சக்தியால் இயங்கும் 'சபாசார்' (SabhaSaar) கருவியை அறிமுகம் செய்தது. இதன் அம்சங்கள் என்ன, மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கு என்ன மற்ற டிஜிட்டல் முயற்சிகள் உள்ளன?


தற்போதைய செய்தி


நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில், 'சபாசார்' (SabhaSaar) என்ற செயற்கை நுண்ணறிவு (artificial intelligence (AI)) சக்தியால் இயங்கும் கருவி திரிபுராவில் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் பின்னர் மற்ற மாநிலங்களுக்கும் கிடைக்கும்படி செய்யப்பட்டது. இது வியாழக்கிழமை புதுடில்லியில் ஒன்றிய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் லாலன் மற்றும் அவரது துணை அமைச்சர் பேராசிரியர் S.P. சிங் பாகேல் ஆகியோரால் வெளியிடப்பட்டது.


முக்கிய அம்சங்கள்:


1. ‘SabhaSaar’ கிராம சபை காணொளிகள் மற்றும் ஒலிப் பதிவுகளிலிருந்து கட்டமைக்கப்பட்ட கூட்ட நடவடிக்கை குறிப்புகளை உருவாக்க செயற்கை நுண்ணறிவின் சக்தியைப் பயன்படுத்துகிறது. இது நாடு முழுவதிலும் கிராம சபை கூட்டங்களின் நடவடிக்கை குறிப்புகளில் ஒரே மாதிரியான தன்மையைக் கொண்டு வரும். பஞ்சாயத்து அலுவலர்கள் தங்கள் இ-கிராம்ஸ்வராஜ் (e-GramSwaraj) உள்நுழைவு அடையாளங்களைப் பயன்படுத்தி SabhaSaar-ல் வீடியோ/ஆடியோ பதிவுகளை பதிவேற்றலாம்.


2. 'SabhaSaar’ என்பது எழுத்தறிவு, மொழி மற்றும் டிஜிட்டல் பிளவுகளைக் குறைக்க அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட செயற்கை நுண்ணறிவால்-இயங்கும் மொழி மொழிபெயர்ப்பு தளமான Bhashini-யில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவி ஒரு வீடியோ அல்லது ஆடியோவிலிருந்து ஒரு மொழிபெயர்ப்பை உருவாக்கி, அதைத் தேர்ந்தெடுக்கப்பட்ட வெளியீட்டு மொழியில் மொழிபெயர்த்து, ஒரு சுருக்கத்தைத் தயாரிக்கிறது. இது ஆங்கிலத்துடன் சேர்ந்து, ஹிந்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் குஜராத்தி போன்ற இந்தியாவின் முக்கியமான அனைத்து மொழிகளிலும் உரைமாற்றத்தை (transcription) வழங்குகிறது.


3. 'SabhaSaar’ பஞ்சாயத்துகள், நிர்வாக அமைப்புகள், மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஏற்றது. ஏனெனில், இது ஆவணங்களை நெறிப்படுத்துகிறது மற்றும் பங்குதாரர்களுக்கு சந்திப்பு நுண்ணறிவுகளை உடனடி அணுகலுடன் அதிகாரம் அளிக்கிறது என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றது.


4. ஒரு கிராம சபை வருடத்திற்கு குறைந்தது நான்கு முறை - ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் நடத்தப்பட வேண்டும். இந்தக் கூட்டங்கள் சரியான நேரத்தில் நடைபெறுவதையும் அனைவருக்கும் தெளிவாகத் தெரிவதையும் உறுதிசெய்ய, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் பஞ்சாயத்து NIRNAY என்ற இணையதளத்தைத் தொடங்கியது. இந்த இணையதளம் கூட்டங்களை நிகழ்நேரத்தில் பார்க்கவும் கண்காணிக்கவும் உதவுகிறது.


5. கிராம சபைக் கூட்டங்களை அதிக பங்கேற்பு, வெளிப்படையான மற்றும் துடிப்பானதாக மாற்றுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, பஞ்சாயத்து NIRNAY கூட்டம் கொள்கையை முன்கூட்டியே திட்டமிட்டு குடிமக்களுக்கு அறிவிப்பதற்கான ஏற்பாடுகளை  செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.


6. அமைச்சகத்தின் கிடைக்கும் தரவுகளின்படி, 2024-25 நிதியாண்டில் பஞ்சாயத் NIRNAY இணையதளத்தின் மூலம் 10,000-க்கும் மேற்பட்ட கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த கூட்டங்களில் பெரும்பாலானவை பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் பீகாரில் நடத்தப்பட்டன.


7. இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் அடித்தளமாக கிராம சபை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் 24 பஞ்சாயத்து ராஜ் தினமாகக் (Panchayati Raj Day) கொண்டாடப்படுகிறது. 1993-ஆம் ஆண்டு இந்த நாளில், 73-வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, கிராமம், தொகுதி மற்றும் மாவட்டம் என மூன்று நிலை உள்ளூர் அரசாங்க அமைப்பு தொடங்கப்பட்டது.


8. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின்படி, நாடு முழுவதும் 2,55,397 கிராம பஞ்சாயத்துகள், 6,742 இடைநிலை பஞ்சாயத்துகள், 665 மாவட்ட பஞ்சாயத்துகள், மற்றும் 16,189 பாரம்பரிய உள்ளூர் அமைப்புகள் உள்ளன.


BHASHINI


1. ஜூலை 2022-ல் பிரதம மந்திரி நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட BHASHINI, தேசிய மொழி தொழில்நுட்ப நோக்கத்தின் (National Language Technology Mission) கீழ், மொழி தடைகளை உடைத்து மக்கள் டிஜிட்டல் சேவைகளை சுமூகமாக அணுக உதவ 22 அட்டவணைப்படுத்தப்பட்ட இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


2. BHASHINI  என்பது மொழிகளுக்கான தேசிய பொது டிஜிட்டல் தளத்தை நிறுவ மற்றும் இந்திய மொழிகளில் கிடைக்கும் உள்ளடக்கத்தின் அளவை அதிகரிக்க இந்திய மொழிகளின் நேரலை மொழிபெயர்ப்பை எளிதாக்க வடிவமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மொழி மொழிபெயர்ப்பு கருவியாகும்.


3. BHASHINI திட்டம் ஆட்சியில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை பல மொழி ஒருங்கிணைப்புடன் இணைத்து, தேசிய ஒருங்கிணைப்பை வளர்க்கவும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் மேலும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


கிராம பஞ்சாயத்துகளுக்கான மற்ற டிஜிட்டல் முயற்சிகள் என்ன?


1. கடந்த ஆண்டு மாநிலங்கவையில் கேட்கப்பட்ட சாதாரண கேள்விக்கு (unstarred question) பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் எழுத்துப்பூர்வ பதிலை வழங்கியது. பஞ்சாயத்துகளின் அதிகாரமளிப்புக்காக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அமைச்சகத்திடம் கேட்டது. எழுத்துப்பூர்வ பதிலில் அரசாங்கம் எடுத்த முயற்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சிகளில் பின்வருவன அடங்கும்:


2. இ-கிராம்ஸ்வராஜ் (eGramSwaraj), ஒரு பயனர் நட்பு வலை அடிப்படையிலான இணையத்தளமாகும். இது பரவலாக்கப்பட்ட திட்டமிடுதல், முன்னேற்ற அறிக்கையிடுதல், நிதி மேலாண்மை, வேலை அடிப்படையிலான கணக்கியல், மற்றும் உருவாக்கப்பட்ட சொத்துக்களின் விவரங்களில் சிறந்த வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


3. கிராமப் பஞ்சாயத்துகளின் ரசீதுகள் மற்றும் செலவினங்கள் போன்ற பஞ்சாயத்து கணக்குகளை சரியான நேரத்தில் தணிக்கை செய்வதை உறுதி செய்வதற்காக இணைய வழி தணிக்கைகள் (AuditOnline) தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயலி பஞ்சாயத்து கணக்குகளைத் தணிக்கை செய்வதற்கு உதவுவது மட்டுமல்லாமல், தணிக்கைப் பதிவுகளைப் பராமரிப்பதற்கும் உதவுகிறது.


4. கிராமப்புறங்கள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் பல்வேறு நகர்வாசி மைய சேவைகளை இணைய வழியில் வழங்க, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒரு சமுதாயமான பொது சேவை மையங்களை நடத்தும் ஒரு சிறப்பு நோக்கத்துக்கான நிறுவனம் (Common Service Centre – Special Purpose Vehicle) பொது சேவை மையங்கள் (Common Service Centres) மூலம் நிறுவப்பட்டுள்ளன.



Original article:

Share:

உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு இடையே என்ன வேறுபாடு உள்ளது? -வினீத் பல்லா

 உரிமையியல் வழக்குகளில் (civil disputes) குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர உயர் நீதிமன்றங்கள் அனுமதித்த இரண்டு நிகழ்வுகளில் உச்சநீதிமன்றம் சமீபத்தில் தலையிட்டுள்ளது. இந்தியாவின் சட்ட அமைப்பில், குற்றவியல் மற்றும் உரிமையியல் சட்டத்திற்கு இடையிலான அடிப்படை வேறுபாட்டை புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.


கடந்த இரண்டு வாரங்களில், குற்றவியல் பிரச்சனைகளுக்காக இருந்த வழக்குகளில் குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர உயர் நீதிமன்றங்கள் அனுமதித்த வழக்குகளில் உச்சநீதிமன்றம் இரண்டு முறை தலையிட்டுள்ளது.


புதன்கிழமை, நீதிபதிகள் J B பர்திவாலா மற்றும் R மகாதேவன் அடங்கிய அமர்வு, ஒரு ஒட்டு மர சரக்கு (plywood consignment) விற்பனையில் செலுத்தப்படாத தொகை தொடர்பான வழக்கில் ஒரு தம்பதியருக்கு முன்கூட்டிய ஜாமீன் (pre-arrest bail) மறுத்த ராஜஸ்தான் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. ‘விற்பனை பரிவர்த்தனை நடந்தவுடன் நம்பிக்கை துரோகம் (criminal breach of trust) என்ற கேள்வியே எழாது’ என்றும் இது சட்டத்தின் நிலையான நிலைப்பாடு என்று நீதிபதி பர்திவாலா கூறினார்.


ஆகஸ்ட் 4ஆம் தேதி  அன்று, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், ஒரு எளிய வணிகப் பிரச்சனையில் குற்றவியல் நடவடிக்கையை அனுமதித்ததற்காக, அவரை குற்றவியல் வழக்குகளைக் கையாள்வதிலிருந்து உச்ச நீதிமன்றம் நீக்கியது. நீதிபதி அளித்த தீர்ப்பு, "அதிர்ச்சியளிப்பதாகவும்" (shocking), நீதியை கேலிக்கூத்தாக்குவதாக (Mockery of justice) உச்சநீதிமன்றம் கூறியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இந்த விவகாரத்தில் தலையிட்ட பிறகு, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி குற்றவியல் வழக்குகளை கையாளக்கூடாது என்று முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 8ஆம் தேதி அன்று திரும்பப் பெற்றது.



உரிமையியல் (Civil) மற்றும் குற்றவியல் (criminal)  சட்டம்


உரிமையியல் மற்றும் குற்றவியல் சட்டத்திற்கு இடையேயான வேறுபாடு இந்தியாவின் சட்ட அமைப்பில் அடிப்படையானது. அவற்றின் நோக்கம், சம்பந்தப்பட்ட தரப்பினர் மற்றும் நடைமுறையின் அடிப்படையில் வேறுபடுகின்றன.


உரிமையியல் சட்டம் தனி நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு இடையிலான பிரச்சனைகளை தீர்க்க வடிவமைக்கப்பட்டுள்ளது. நீதி வழக்குகள் (suits) என்று அழைக்கப்படும் உரிமையியல் வழக்குகள், பொதுவாக வழக்கை தாக்கல் செய்த நபரின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்த கருத்து வேறுபாடுகளை உள்ளடக்குகின்றன. ஒரு உரிமையியல் வழக்கின் நோக்கம் யாரையும் தண்டிப்பது அல்ல, மாறாக ஒரு தீர்வை வழங்குவதாகும். பொதுவாக பண இழப்பீடு (monetary compensation) சேதங்கள் என்று அழைக்கப்படுகிறது அல்லது நீதிமன்றத்தால் ஒரு தரப்பினருக்கு ஏதாவது செய்ய அல்லது செய்யாமல் இருக்க உத்தரவிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட நடவடிக்கை தடை உத்தரவு (injunction) என்று அழைக்கப்படுகிறது.


சொத்து பிரச்சனைகள், ஒப்பந்த மீறல்கள், விவாகரத்து மற்றும் குழந்தை பராமரிப்பு போன்ற குடும்பச் சட்ட விவகாரங்கள் மற்றும் பணத்தை மீட்டெடுப்பதற்கான வழக்குகள் ஆகியவை உரிமையியல் வழக்குகளுக்கான (civil cases) எடுத்துக்காட்டுகளாகும். ஒரு உரிமையியல் வழக்கில், வழக்கைத் தாக்கல் செய்பவர் வாதி (plaintiff) என்றும், அது யாருக்கு எதிராக தாக்கல் செய்யப்படுகிறதோ அவர் பிரதிவாதி (defendant) என்றும் அழைக்கப்படுகிறார்.


குற்றவியல் சட்டம் (Criminal law), அரசு அல்லது ஒட்டுமொத்த சமூகத்திற்கு எதிரான குற்றங்களாகக் கருதப்படும் செயல்களைக் கையாள்கிறது. குற்றவாளியைத் தண்டிப்பதும், இதே போன்ற குற்றங்களைச் செய்வதிலிருந்து மற்றவர்களைத் தடுப்பதுவே இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு எதிராக, அரசு, ஒரு அரசு தரப்பு வழக்கறிஞர் (prosecutor) மூலம் குற்றவியல் வழக்கைத் தொடங்குகிறது. அந்த நபர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு அபராதம், சிறைத்தண்டனை அல்லது கடுமையான வழக்குகளில் மரண தண்டனை போன்ற தண்டனைகள் விதிக்கப்படலாம். திருட்டு, மோசடி, தாக்குதல் மற்றும் கொலை போன்ற குற்றங்கள் குற்றவியல் சட்டத்தின் கீழ் வருகின்றன.


உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு இடையே உள்ள பெரிய வித்தியாசம், எவ்வளவு ஆதாரம் தேவைப்படுகிறது என்பதுதான். ஒரு குற்றவியல் வழக்கில், வழக்கைத் தொடங்குபவர் வாதி என்றும் மற்ற தரப்பினரை விட தங்கள் சொல்வது உண்மை என்பதையும் நிரூபிக்க வேண்டும். ஒரு குற்றவியல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் நிச்சயமாக குற்றவாளி என்பதை அரசு தரப்பு வழக்கறிஞர் எந்த சந்தேகமும் இல்லாமல் நிரூபிக்க வேண்டும். ஒரு குற்றவியல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் சிறைக்குச் செல்வது, சுதந்திரத்தை இழப்பது (loss of liberty) போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்படலாம் என்பதால், இது போன்ற வழக்குகளுக்கு அதிக அளவிலான ஆதாரம் தேவைப்படுகிறது.


சில செயல்கள் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் இரண்டிற்கும் வழி வகுக்கலாம். உதாரணமாக, உச்ச நீதிமன்றத்தின் முன் நடந்த முன்னர் குறிப்பிட்ட இரு வழக்குகளில், ஒப்பந்த மீறல், இது ஒரு குற்றவியல் தவறு, ஏமாற்றுதல் மற்றும் நம்பிக்கை துரோகம், இரண்டும் குற்றவியல் குற்றங்கள், நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. குற்றவியல் நடவடிக்கைகளை நியாயப்படுத்த எந்த நிரூபிக்கக்கூடிய குற்றவியல் கூறுகளும் இல்லை என்று உச்சநீதிமன்றம் முடிவு செய்தது; வணிக உறவில் நுழைவதற்கு முன்பு மோசடி செய்வதற்கான குற்றவியல் நோக்கம் இருந்திருந்தால், ஒரே நேரத்தில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்பட்டிருக்கும்.


நடவடிக்கைகளின் கால அளவு 


ஒரு பொதுவான கருத்து - இது அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியால் அவரது பின்னர் ரத்து செய்யப்பட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டது - உரிமையியல் நடவடிக்கைகள் (civil proceedings) குற்றவியல் விசாரணைகளைவிட கணிசமாக அதிக நேரம் எடுக்கும். முதல் பார்வையில், இந்தியா முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களுக்கான தேசிய நீதித்துறை தரவு கட்டதிலிருந்து (National Judicial Data Grid (NJDG)) வரும் தரவு இந்த கருத்தை ஆதரிக்கிறது. ஆகஸ்ட் 14, 2025 நிலவரப்படி, 70.17% குற்றவியல் விசாரணைகள் (criminal trials) ஒரு வருடத்திற்குள் முடிக்கப்பட்டன. அதே நேரத்தில் 37.91% உரிமையியல் வழக்குகள் மட்டுமே அதே காலக்கெட்டில் தீர்க்கப்பட்டன.


சட்டம் மற்றும் நீதி சீர்திருத்தங்களில் பணிபுரியும் ஒரு குழுவான DAKSH-ன் திட்ட இயக்குநரான B. S. சூர்ய பிரகாஷ், உரிமையியல் வழக்குகள் அவற்றின் மாறுபட்டத் தன்மை காரணமாக பொதுவாக அதிக நேரம் எடுக்கும் என்று கூறுகிறார்.



DAKSH என்றால் என்ன?


DAKSH என்பது சட்ட மற்றும் திருத்தங்களை ஆராயும் ஒரு தனிப்பட்ட ஆய்வு அமைப்பாகும். இது அரசால் உருவாக்கபட்ட குழு அல்ல. மேலும், இந்த குழு சட்டம், நீதித்துறை, மனித உரிமைகள் மற்றும் ஆட்சி தொடர்பான ஆய்வுகளை செய்து, மாற்றங்களுக்கான பரிந்துரைகள் வழங்குகிறது.


குற்றவியல் வழக்குகளில், உயிர் மற்றும் சுதந்திரம் சம்பந்தப்பட்டுள்ளது என்று B.S. சூர்ய பிரகாஷ்  The Indian Express கூறினார். குற்றவியல் வழக்குகள் பொதுவாக மிகவும் அவசரமானவையாகக் கருதப்படுகின்றன. ஆனால், குற்றவியல் வழக்குகளில், நீதிமன்றத்திற்கு வெளியே பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளும் (out-of-court settlement) நம்பிக்கையில், மக்கள் பெரும்பாலும் செயல்முறையைத் தாமதப்படுத்துகிறார்கள். பெங்களூரு நீதிமன்றங்களைப் பற்றிய DAKSH-ன் ஆய்வில், பல குற்றவியல் வழக்குகள் ஆரம்பத்திலேயே தாமதமாகின்றன. அதே நேரத்தில் நீதிமன்றம் அறிவிப்பு (Notice) மற்றும் சம்மன்களை (summons) அனுப்புகிறது என்பதைக் காட்டுகிறது.


விதி சட்டக் கொள்கை மையத்தின் சட்ட வல்லுநரான ஷ்ரேயா திரிபாதி, நீதிமன்ற அமைப்பில் ஒரு வழக்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதைக் கண்காணிப்பது கடினம் என்றார். உதாரணமாக, ஒரு மாவட்டநீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட ஒரு வழக்கின் தீர்ப்புக்கு பின்னர், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படலாம். அங்கு அது ஒரு தனி, நிலுவையில் உள்ள வழக்காகக் காட்டப்படும் என்று ஷ்ரேயா திரிபாதி, The Indian Express-இடம் கூறினார். இது தாக்கல் செய்வதிலிருந்து இறுதித் தீர்ப்பு வரை எடுக்கும் மொத்த நேரத்தைத் தீர்மானிப்பதை கடினமாக்குகிறது என்று அவர் கூறினார்.


தேசிய நீதித்துறை தரவு கட்டதிலிருந்து (National Judicial Data Grid (NJDG)) வரும் தரவு குறிப்பிட்ட வகை வழக்குகளைப் பொறுத்து மாறுபாடுகளையும் காட்டுகிறது. உதாரணமாக, உரிமையியல் (Civil) வழக்குகள் முடிப்பதற்கு சராசரியாக 4.91 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் அதே வேளையில், உரிமையியல் வழக்கில் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தாக்கல் செய்யப்படும் அமலாக்க மனுக்கள் (execution petitions) முடிவுக்கு வர சுமார் 3.97 ஆண்டுகள் எடுக்கின்றன.


குற்றவியல் வழக்குகளில் (criminal cases) ஜாமீன் விண்ணப்பங்கள் சராசரியாக 6.12 மாதங்களில் முடிவு செய்யப்படுகின்றன. எனினும், கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகள் உள்ள குற்றவியல் அமர்வு நீதிமன்றவழக்குகள் சராசரியாக 4.65 ஆண்டுகள் எடுக்கின்றன. இது உரிமையியல் வழக்குகளுக்கு எடுக்கும் நேரத்தைப் போன்றது.


மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் குறைவான கடுமையான குற்ற வழக்குகள், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் முடிவடைய சராசரியாக 2.45 ஆண்டுகள் ஆகும்.



Original article:

Share:

வழக்கமான இராணுவ சேவையிலிருந்து அக்னிபாத் (Agnipath) எவ்வாறு வேறுபடுகிறது? -குஷ்பூ குமாரி, ரோஷ்னி யாதவ்

 தற்போதைய நிகழ்வு : ஆயுதப்படைகள், தொழில்நுட்ப ரீதியாக திறமையான மற்றும் பயிற்சி பெற்ற மனிதவளத்திற்கு இடையே ஒரு சிறந்த விகிதத்திற்கான தேவையையும், படையில் உள்ள வீரர்களின் வயது சுயவிவரத்தை குறைப்பதற்கான தேவையையும் கருத்தில் கொண்டு, அக்னிபத் திட்டத்தை மறு மதிப்பீடு செய்வது குறித்து விவாதித்து வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.


முக்கிய அம்சங்கள் :


2022-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து நான்கு வருடங்கள் வரை சிப்பாய்கள், விமானப் பணியாளர்கள் மற்றும் மாலுமிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திட்டத்தை சேவைகள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்து வருகின்றன.


சேவைகள் மற்றும் ராணுவ விவகாரத் துறை சாத்தியமான மாற்றங்கள் குறித்து விவாதங்களை நடத்தியது. ஆனால் இன்னும் பெரிய மாற்றங்கள் எதுவும் அங்கீகரிக்கப்படவில்லை.


இருப்பினும், ஆதாரங்களின்படி, மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து, நான்கு ஆண்டுகளில் அவர்கள் பெற்ற பயிற்சி, அனுபவம் மற்றும் நிபுணத்துவம் போன்ற காரணிகளின் அடிப்படையில், அக்னிவீரர்களை தக்கவைத்துக்கொள்வதை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.


அக்னிவீரர்களின் முதல் குழு 2026-ம் ஆண்டு இறுதிக்குள் தங்கள் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்யும், மேலும் இந்த திட்டத்தில் மாற்றங்களைச் செய்வது குறித்த முடிவு அந்த நேரத்தில் எடுக்கப்படும்.


தற்போதைய விதிகளின்படி, நான்கு ஆண்டு பதவிக்காலத்தின் முடிவில், தகுதி மற்றும் நிறுவனத் தேவைகளுக்கு உட்பட்டு, 25% வரை அக்னிவீரர்கள் சேவைகளில் தக்கவைக்கப்படலாம்.


இந்த சதவீதத்தை அதிகரிப்பதற்கான வழிகளை இராணுவம் விவாதித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான சரியான எண்ணிக்கை துறைகளுக்கு இடையே வேறுபடலாம்.


ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு ஆயுதப் படைகளில் புதிய தலைமுறையின் இராணுவ தளங்கள், உபகரணங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை வாங்குவதற்கும் உள்வாங்குவதற்கும் முயற்சிகள் அதிகரித்து வரும் நிலையில், பெரும்பாலான விவாதங்கள் அவற்றைப் பயன்படுத்த பயிற்சி பெற்ற அதிக மனிதவளத்தின் அவசியத்தை இந்த விவாதங்கள் எடுத்துக்காட்டுகின்றன.


உதாரணமாக, இராணுவத்தில், இந்த சிறப்புப் பயிற்சியில் பெரும்பாலானவை அக்னிவீரர்கள் தங்கள் பிரிவுகளில் சேர்ந்த பின்னரே நடைபெறுகின்றன. அதற்கு முன், அவர்கள் தங்கள் படைப்பிரிவு மையங்களில் ஆறு மாத ஆரம்பப் பயிற்சியை மேற்கொள்கின்றனர்.


இந்த ஆண்டின் தொடக்கத்தில், அக்னிவீரர்களின் விடுப்புக் கொள்கைகளை வழக்கமான வீரர்களின் விடுப்புக் கொள்கைகளுடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவத் தலைமை ஜெனரல் உபேந்திர திவேதி கூறினார். இரு குழுக்களுக்கும் விபத்து சலுகைகளை ஒரே மாதிரியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.


தொழில்நுட்ப ரீதியாக திறமையான வீரர்களுக்கான தேவையை அவர் மேலும் குறிப்பிட்டார். அதிகபட்ச வயது வரம்பை 21-லிருந்து 23 ஆண்டுகளாக உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர் பேசினார்.


உங்களுக்கு தெரியுமா?


அக்னிபாத், நான்கு ஆண்டுகளுக்கு இந்திய ஆயுதப் படைகளுக்கு அதிகாரி பதவிகளுக்குக் கீழே (below officer ranks) உள்ள பணியாளர்களின் பட்டியலில் வீரர்கள், விமானப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளாக இல்லாத மாலுமிகளை பணியமர்த்துவதை நோக்கமாகக் கொண்டது.


நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 'அக்னிவீரர்கள்' என்று அழைக்கப்படும் இந்த ஆட்சேர்ப்பு செய்பவர்களில் 25% பேர் வரை சேவைகளில் நீடிக்கலாம். அவர்கள் மேலும் 15 ஆண்டுகள் நிரந்தர ஆணையத்தில் பணியாற்றலாம். இது தகுதி மற்றும் நிறுவனத் தேவைகளைப் பொறுத்தது.


17.5 ஆண்டுகள் முதல் 23 வயது வரையிலான ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம். முன்னதாக, அதிகபட்ச வயது வரம்பு 21-ஆக இருந்தது, ஆனால் அது அதிகரிக்கப்பட்டது. ஆட்சேர்ப்பு தரநிலைகள் அக்னிபாத்திற்கு முந்தைய வழக்கமான சேவையைப் போலவே உள்ளன.


இந்தத் திட்டம் ஜூன் 2022-ல் தொடங்கப்பட்டது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இராணுவ ஆட்சேர்ப்பு இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது.


அக்னிவீரர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை அடிப்படை சம்பளத்தைப் பெறுகிறார்கள். அவர்களுக்கு ஆபத்து மற்றும் கஷ்டக் காலங்களில் பணம் வழங்கலும் கிடைக்கின்றன.


அவர்கள் தங்கள் மாத சம்பளத்தில் 30%-ஐ சேவா நிதி நிதியில் (Seva Nidhi fund) செலுத்துகிறார்கள். அரசாங்கம் அதற்கு சமமான தொகையைச் சேர்க்கிறது. தங்கள் சேவையை முடித்தபிறகு, வட்டி உட்பட சுமார் ரூ.11.71 லட்சத்தை மொத்தமாகப் பெறுகிறார்கள். இந்தத் தொகை வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.


ஒரு அக்னிவீரர் பணியில் இருக்கும்போது இறந்தால், குடும்பம் ரூ.1 கோடியை மொத்தமாகப் பெறுகிறது. இதில் சேவா நிதி தொகுப்பும் அடங்கும். சிப்பாய் முடிக்க முடியாத மீதமுள்ள சேவைக் காலத்திற்கு குடும்பத்தினர் முழு ஊதியத்தையும் பெறுகிறார்கள். ஒரு அக்னிவீரர் ஊனமுற்றால், அவர்கள் ரூ.44 லட்சம் வரை இழப்பீடாகப் பெறலாம். இது இராணுவ சேவையால் ஏற்படும் அல்லது மோசமடையும் ஊனத்தின் சதவீதத்தைப் பொறுத்து இருக்கும்.


வழக்கமான வீரர்களைப் போலல்லாமல், ஓய்வு பெற்றபிறகு அக்னிவீரர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு படைகளில் சேர்க்கப்படும் அக்னிவீரர்களில் 25% பேருக்கு மட்டுமே ஓய்வூதியப் பலன்கள் கிடைக்கும். இருப்பினும், முதல் நான்கு வருட சேவை இந்த ஓய்வூதியப் பலன்களுக்குக் கணக்கிடப்படாது.



Original article:

Share:

சுதந்திரதின உரையில் பிரதமர் மோடியின் தற்சார்பு பற்றிய உரை, புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளுக்கு ஒரு நம்பிக்கையான தேசத்தின் பதிலை வலியுறுத்துகிறது. -அபினவ் பிரகாஷ்

 உள்நாட்டு குறைமின்கடத்தி உற்பத்தி, ஜெட் எஞ்சின்கள் மற்றும் நாட்டின் அணுசக்தி திறன்களை விரிவுபடுத்துவதன் மூலம், முன்னணி உலக வல்லரசுகளுடன் இணைந்து நிற்கும் இந்தியாவின் நோக்கத்தை பிரதமர் எடுத்துரைத்தார்.


ஆகஸ்ட் 15 அன்று, பிரதமர் நரேந்திர மோடி தனது 12-வது சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் இருந்து, இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில் உரையை நிகழ்த்தினார். அவரது உரை 103 நிமிடங்கள் நீடித்தது, இது ஒரு இந்திய பிரதமரின் மிக நீண்ட உரையாக அமைந்தது. வளர்ந்த இந்தியா-2047 (Viksit Bharat) என்ற இலக்கை அடைவதற்கான தொலைநோக்கு திட்டத்திற்கு இந்த சந்தர்ப்பத்தை அவர் பயன்படுத்திக் கொண்டதால், இந்த உரை ஒரு சிறப்பு நிகழ்விலிருந்து ஒரு இராஜதந்திர ரீதியில் முக்கிய நிகழ்வாக மாறியது.


பிரதமர் மோடியின் உரையின் பின்னணியில் உள்ள தொலைநோக்கு தேசியவாதத்தை பொருளாதார நவீனமயமாக்கலுடன் இணைக்கிறது. இது நீண்டகால சுயசார்பு, கலாச்சார பெருமை, வலுவான மற்றும் நம்பிக்கையான அரசு பற்றிய பாஜகவின் கருத்துக்களில் வேரூன்றியுள்ளது. பிரதமர் மோடியின் ஆத்மநிர்பர் பாரத் (Atmanirbhar Bharat) என்பது வெறும் பொருளாதார யோசனை மட்டுமல்ல. இது தத்துவார்த்தமானது. இது காலணியாதிக்கத்தைச் சார்ந்திருப்பதை அல்லது உலகளாவிய தெற்கில் புதிய-காலனித்துவ உறவுகளைத் திணிக்கும் முயற்சிகளை நிராகரிக்கிறது.


பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி ஆகியவற்றில் தன்னம்பிக்கைக்கான முக்கியத்துவம், "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட" குறைமின்கடத்தி சில்லுகள் (semiconductor chips), ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) மற்றும் அணுசக்தி விரிவாக்கம் (expansion of nuclear energy) ஆகியவற்றின் குறிப்புகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது.


ஒரு நாடு தன்னிறைவு பெற்றிருக்கும்போது அதன் தேசிய நலன்களைப் பாதுகாக்க முடியும். அது சமரசம் செய்யவோ அல்லது மிரட்டலை எதிர்கொள்ளவோ தேவையில்லை. உள்நாட்டு ஆயுதங்களுடன் தீர்க்கமாக செயல்படும் இந்தியாவின் திறனுக்கான சான்றாக ஆபரேஷன் சிந்தூரை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். புதிய பணிகளைத் தொடங்க அவர் நாட்டை வலியுறுத்தினார். இதில் முதல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குறைமின்கடத்தி சில்லு உற்பத்தி (semiconductor chip), ஜெட் என்ஜின்களை உருவாக்குதல் மற்றும் அணுசக்திக்கு வலுவான உந்துதலை வழங்குதல் ஆகியவை அடங்கும். இந்த முயற்சிகளிலிருந்து வரும் சுத்தமான ஆற்றல் இந்தியாவின் வளர்ச்சியை ஆதரிக்கும். தேசிய முக்கியமான கனிமங்கள் இயக்கம் (National Critical Minerals Mission) மற்றும் தேசிய ஆழ்கடல் ஆய்வு பணி (National Deepwater Exploration Mission) ஆகியவை வள இறையாண்மையை நோக்கிய முக்கியமான படிகள், நாட்டின் தொழில்துறை, பாதுகாப்பு மற்றும் ஆற்றல் தேவைகள் உள்ளிருந்து பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்கிறது.


மருந்துத் துறையில், உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் புதுப்பிக்கப்பட்ட உந்துதலை அவர் வலியுறுத்தினார். இதன்மூலம் மலிவு விலையில், உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை (life-saving medicines and vaccines) உருவாக்கி, கோவிட்-கால கண்டுபிடிப்புகளை உருவாக்க இந்தியா வழிவகுக்கும். இந்த பார்வையை விரிவுபடுத்தும் வகையில், பிரதமர் மோடி, விண்வெளி அறிவியலில் இந்தியாவின் வேகமாக முன்னேறும் திறன்களை அடிக்கோடிட்டுக் காட்டினார். ககன்யான் திட்டத்தின் சாதனைகள் ஒரு ஊக்கியாக செயல்படுவதால், உள்நாட்டு விண்வெளி நிலையத்தை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் சீராக முன்னேறி வருவதாகக் குறிப்பிட்டார். செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆய்வு ஆகியவற்றில் புதுமைகளை இயக்கும் 300-க்கும் மேற்பட்ட உள்நாட்டு புத்தொழில் நிறுவனங்கள் (startups) தோன்றியதை அவர் சுட்டிக்காட்டினார். தேசியத்தின் லட்சியம் மற்றும் இராஜதந்திர தன்னாட்சியைப் பிரதிபலிக்கும் உள்நாட்டு தீர்வுகளுடன் உயர்-தொழில்நுட்பத் துறைகளில் முன்னணியில் இருப்பதற்கான இந்தியாவின் உறுதியை அவை விளக்குகின்றன. உலகளாவிய உணவு நிறுவனங்களின் சமமற்ற போட்டி மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் தேவையற்ற அழுத்தத்திலிருந்து தனது விவசாயிகளையும் விவசாயத் துறையையும் பாதுகாப்பதற்கான இந்தியாவின் உறுதியையும் இந்த உரை எடுத்துக்காட்டுகிறது.


பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தானுடன் சமரசம் செய்யாது என்பதைக் காட்டுகிறது. "அணுசக்தி அச்சுறுத்தலுக்கு அடிபணிய" இந்தியா மறுப்பது, மிகவும் முன்னெச்சரிக்கை வெளியுறவுக் கொள்கை மற்றும் இராணுவ அணுகுமுறையை நோக்கிய மாற்றத்தைக் குறிக்கிறது. இந்த மாற்றம் செயலற்ற பாதுகாப்பிலிருந்து செயலில் உள்ள பாதுகாப்பிற்கு இந்தியாவின் பெரிய நகர்வுடன் பொருந்துகிறது. இரத்தமும் நீரும் ஒன்றாகப் பாய முடியாது என்ற கருத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் (Indus Water Treaty) உறுதியான நிலைப்பாடு, இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் அதற்கான விலையை எதிர்கொள்ள நேரிடும் என்பதை தெளிவுபடுத்துகிறது.


சட்டவிரோத ஊடுருவல்களால் ஏற்படும் கடுமையான மற்றும் தொடர்ச்சியான ஆபத்துகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. இது போன்ற சரிபார்க்கப்படாத நுழைவு (unchecked entry) நமது எல்லைகளை அச்சுறுத்துவது மட்டுமல்லாமல், குறிப்பாக எல்லைப் பகுதிகளில் உள்ள நமது குடிமக்களின் வாழ்வாதாரத்தையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது என்பதை தேசத்திற்கு நினைவூட்டுகிறது. மக்கள்தொகை சமநிலையை (demographic balance) சிதைக்கவோ அல்லது அதன் தேசிய ஒருமைப்பாட்டை சமரசம் செய்யவோ இந்தியா அனுமதிக்காது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்தச் சவாலை நேருக்கு நேர் எதிர்கொள்ள, நாட்டின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கான ஒரு தீர்க்கமான முயற்சியான உயர்-சக்தி வாய்ந்த மக்கள்தொகை இயக்கத்தை (High-Powered Demography Mission) அவர் அறிவித்தார். இந்தியாவின் எதிர்காலம் அதன் குடிமக்களின் விருப்பத்தால் தீர்மானிக்கப்படுகிறது. அதை உள்ளிருந்து பலவீனப்படுத்த முயலும் சக்திகளால் அல்ல.

AI, ஆழ்ந்த ஆராய்ச்சி தொழில்நுட்பம் (deep-tech), தூய ஆற்றல் (clean energy) மற்றும் உற்பத்தி (manufacturing) ஆகியவற்றில் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்த இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு பேச்சு அழைப்பு விடுத்தது மற்றும் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை விரைவாகக் கண்காணிக்கவும், நிர்வாகத்தை எளிதாக்கவும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் சீர்திருத்த பணிக்குழுவை அறிவித்தது. முதல் சீர்திருத்தங்களில் ஒன்று அடுத்த தலைமுறைக்கான ஜிஎஸ்டி (Next-Gen GST) ஆகும். இது தீபாவளியன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய ஜிஎஸ்டி நுகர்வோர் மற்றும் MSME-களுக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ”சுதந்திர பாரதம்” (சுதந்திர இந்தியா)-லிருந்து ”சம்ரிதா பாரதம்” (வளமான இந்தியா)-க்கு நகரும் பரந்த பார்வையுடன் இணைத்தார். பிரதமர் மோடி ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள ஒரு பெரிய வேலைவாய்ப்பு திட்டத்தைத் தொடங்கினார், இதன் கீழ் புதிதாக வேலை செய்யும் இளைஞர்கள் ரூ.15,000 பெறுவார்கள். இந்தத் திட்டம் ரூ.3 கோடி இளம் இந்தியர்களுக்கு பயனளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


புவிசார் அரசியல் நிலையற்ற தன்மை, பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் மாறிவரும் கூட்டணிகள் ஆகியவற்றால் குறிக்கப்படும் 2025-ம் ஆண்டின் உலகளாவிய சூழலுக்குள் பிரதமர் மோடியின் பேச்சு புரிந்துகொள்ளப்பட வேண்டும். குறைமின்கடத்திகள் (semiconductors), பாதுகாப்பு (defence) மற்றும் எரிசக்தி (energy) போன்ற முக்கியமான துறைகளில் தன்னம்பிக்கையில் கவனம் செலுத்துவது, உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் கணிக்க முடியாத தன்மை மற்றும் புவிசார் அரசியல் நிலப்பரப்புகளை மாற்றுவதற்கான ஒரு செயலூக்கமான பிரதிபலிப்பாகும். உள்நாட்டு குறைகடத்தி உற்பத்தி, ஜெட் என்ஜின் மற்றும் நாட்டின் அணுசக்தி திறன்களை விரிவுபடுத்துவதன் மூலம், முன்னணி உலக வல்லரசுகளுடன் துணை நிற்கும் இந்தியாவின் நோக்கத்தை இந்த உரை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உயர்தர, மலிவு விலையில் பொருட்களை உற்பத்தி செய்யும் செய்தி, வலுவான உலகளாவிய சந்தை வீரராக (strong global market player) வேண்டும் என்ற இந்தியாவின் லட்சியத்தை எடுத்துக்காட்டியது. உலகப் பொருளாதாரத்தில் உயர இந்தியா தனது மக்கள்தொகை வலிமையையும் ஜனநாயக மதிப்புகளையும் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைக் காண்பிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


பிரதமர் மோடியின் உரை, 140 கோடி குடிமக்களை தேசிய சுயசார்பு மற்றும் விக்சித் பாரத் என்ற புரட்சிகரமான பார்வையின் பின்னால் ஒன்றிணைக்கும், ஆசையை அடிப்படையான உத்தியுடன் இணைத்து கலைநயமாக வெளிப்படுத்துகிறது. விக்சித் பாரதத்தின் தூண்களாக இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளை மையப்படுத்துவதன் மூலம், இந்தச் செய்தி உள்ளடக்கமானதாகவும் தைரியமாக முன்னோக்கிய சிந்தனையுடனும் உள்ளது. உள்நாட்டுத் தொழில்நுட்பம் மற்றும் வலுவான பாதுகாப்பு திறன் மீதான வலியுறுத்தல், உலகளாவிய நிச்சயமற்ற தன்மையின் மத்தியில் வலிமையைக் குறிக்கிறது.


எழுத்தாளர் பாஜக இளைஞர் பிரிவு தேசிய துணைத் தலைவர் ஆவர்.



Original article:

Share:

இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தத்தில் குறியீடு மற்றும் வணிகத்தை சமநிலைப்படுத்துதல் -சையத் அக்பருதீன், ஷிவாங்கி பாண்டே

 இந்த ஒப்பந்தத்திற்கான ஆதாயங்கள் உண்மையானதாகத் தோன்றினாலும், பாதுகாப்பு நடவடிக்கைகளின் தேவையைக் குறிப்பிடுகின்றன.


இந்தியா, இங்கிலாந்து உடனான டிஜிட்டல் வர்த்தக ஒப்பந்தம் ஒரு புதிய படியாகும். இந்தியா-இங்கிலாந்து, விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் (Comprehensive Economic and Trade Agreement (CETA)) அத்தியாயம் 12-ன் அணுகல், நம்பகத்தன்மை மற்றும் அளவிற்கான சில மேற்பார்வைக் கருவிகளை வர்த்தகம் செய்கிறது. இந்த வர்த்தகம் ஒரு கொள்கை விவாதத்தைத் தூண்டியுள்ளது. ஆதரவாளர்கள் உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு ஒரு இராஜதந்திர ரீதியின் நகர்வு என்று கருதுகிறார்கள். விமர்சகர்கள் இதை டிஜிட்டல் இறையாண்மையிலிருந்து பின்வாங்குவதாகக் கூறுகிறார்கள். இத்தகைய ஒப்பந்தங்கள் அரிதாகவே தெளிவான வெற்றியாளர்களையோ அல்லது தோல்வியாளர்களையோ உருவாக்குகின்றன. அவை பொதுவாக பேச்சுவார்த்தை மூலம் சமரசங்களில் முடிவடைகின்றன. ஒட்டுமொத்தமாக, ஆதாயங்கள் உண்மையானதாகத் தெரிகிறது. ஆனால் மாறிவரும் அபாயங்களைத் தக்க வைத்துக் கொள்ளக்கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் தேவையையும் அவை சுட்டிக்காட்டுகின்றன.


டிஜிட்டல் அணுகுமுறையின் சாதனைகள்


டிஜிட்டல் அணுகுமுறையின் சாதனைகள் தெளிவாக உள்ளன. இந்த ஒப்பந்தம் மின்னணு கையொப்பங்கள் மற்றும் ஒப்பந்தங்களை (electronic signatures and contracts) அங்கீகரிக்கிறது மற்றும் பரஸ்பர அங்கீகாரத்திற்காக இரு தரப்பினரையும் உறுதி செய்கிறது. இது மென்பொருள்-ஒரு-சேவை நிறுவனங்களுக்கான ஆவணங்களை ஒழுங்கமைக்கிறது மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தடைகளையும் குறைக்கிறது. காகிதமில்லா வர்த்தகம் மற்றும் மின்னணு விலைப்பட்டியல் ஆகியவை எல்லை தாண்டிய ஆவணங்கள் மற்றும் பணம் செலுத்துவதை எளிதாக்குகின்றன. மின்னணு பரிமாற்றங்களுக்கான சுங்க வரியில்லா (zero customs duties) கொள்கையை தொடர்கிறது. இது வர்த்தக அமைச்சகம் ஆண்டுக்கு 30 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடும் மென்பொருள் எதிர்கால ஏற்றுமதி திட்டத்தை பாதுகாக்கிறது.


தரவு புதுமைகளில் ஒத்துழைப்பு உதவியாக இருக்கும். இந்த உரை, தேவைப்படும் இடங்களில் ஒழுங்குமுறை சோதனை மையங்களைப் (regulatory sandboxes) பயன்படுத்தும் முன்னோடி திட்டங்களை ஊக்குவிக்கிறது. இது கட்டணங்கள் மற்றும் பிற தரவு சார்ந்த நிறுவனங்களுக்கு மேற்பார்வையின் கீழ் கருவிகளை சோதித்து வளர்க்க ஒரு வழியை வழங்குகிறது, இது வெளிநாடுகளில் நம்பகத்தன்மையை உருவாக்குகிறது. டிஜிட்டல் அத்தியாயத்திற்கு அப்பால், பரந்த இந்தியா - யு.கே. ஒப்பந்தம் அன்றாட வர்த்தகத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்தம் செயல்படுத்தப்படும்போது, இந்திய பொருட்களின் ஏற்றுமதியில் 99% வரை யு.கே.யில் வரி இல்லாமல் நுழையலாம் என்று தொழில்துறை எதிர்பார்க்கிறது, குறிப்பாக ஜவுளி வரிகள் 12%-லிருந்து முக்கிய பொருட்களுக்கு பூஜ்ஜியமாக குறையும், இது திருப்பூர் (தமிழ்நாடு) மற்றும் லூதியானா (பஞ்சாப்) போன்ற ஜவுளி ஏற்றுமதி மையங்களில் வளர்ச்சி வாய்ப்புகளை அதிகரிக்கும். பகுப்பாய்வாளர்கள், பிரிட்டிஷ் பொது கொள்முதல் துறையில் இந்திய ஐ.டி. வழங்குநர்களுக்கு மேலும் வாய்ப்புகள் திறக்கப்படுவதாக சுட்டிக்காட்டுகின்றனர். முதலாளிகள், குறுகிய கால பணிகளுக்கு சமூக பாதுகாப்பு தள்ளுபடிகள் ஊதிய செலவுகளை ஐந்தில் ஒரு பங்காக குறைக்கும் என்று கூறுகின்றனர். இந்த நடவடிக்கைகள் பரந்த மற்றும் முன்கணிக்கக்கூடிய வர்த்தக பாதையை உறுதியளிக்கின்றன.


டிஜிட்டல் செலவுகள்


இருப்பினும், சாத்தியமான டிஜிட்டல் செலவுகள் இன்னும் கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த ஒப்பந்தத்தின்கீழ் குறியீட்டு ஆய்வுக்கு தடை இருப்பதால், ஒரு நிலையான ஒழுங்குமுறை கருவியாக, மூல-குறியீடு சோதனைகளில் (source-code checks) இருந்து இந்தியா பின்வாங்கியுள்ளது என்று விமர்சகர்கள் வாதிட்டனர். விசாரணை அல்லது நீதிமன்றச் செயல்முறையுடன் இணைக்கப்பட்ட, ஒவ்வொரு வழக்கின் அடிப்படையில், கட்டுப்பாட்டாளர்கள் அணுகலைக் கோரலாம்.


அரசாங்க கொள்முதல் டிஜிட்டல் வர்த்தகத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசாங்கத்தால் வாங்கப்படும் பொருட்களில் மூலக் குறியீட்டிற்கான அணுகல் தடைசெய்யப்படவில்லை. ஒப்பந்தம் வணிக நம்பிக்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டாலும், அது அத்தியாவசிய நலன்களையும் பாதுகாக்கிறது. ஒரு பொதுவான பாதுகாப்புக்கான விதிவிலக்கு உள்ளது. தனியாருக்குச் சொந்தமானதாக இருந்தாலும், மின்கட்ட நிலையங்கள், அல்லது கட்டண முறைகள் மற்றும் பிற முக்கியமான உள்கட்டமைப்புகளை தேசிய அளவில் மேற்பார்வையிட அனுமதிக்கிறது. வர்த்தகத்தின் மீது மறைமுகமான கட்டுப்பாட்டை உருவாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், நல்லாட்சியைப் பின்பற்றி மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான கூடுதல் உத்தரவாதம் தேவைப்படுமானால், நம்பகமான ஆய்வகங்களை அங்கீகரிப்பது ஒரு நடைமுறையானப் படியாகும். இந்த ஆய்வகங்கள் கடுமையான பாதுகாப்புகளின் கீழ் முக்கியமான குறியீட்டை மதிப்பாய்வு செய்யலாம்.


அரசாங்கத் தரவுகளைப் பொறுத்தவரை, இதற்கான அணுகுமுறை தன்னார்வமானது. சட்டப்பூர்வ உறுதிப்பாடு இதற்கு எதுவும் இல்லை. எதை எந்த வடிவத்தில் வெளியிட வேண்டும் என்பதை இந்தியா தீர்மானிக்கிறது. ஒரு தரவுத்தொகுப்பைத் திறக்கும்போது, அது இயந்திரத்தில் படிக்கக்கூடியதாகவும், மீண்டும் பயன்படுத்த எளிதாகவும் இருக்க வேண்டும். வரம்புகள் இல்லாமல் யாரும் அணுகலைக் கோரலாம் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. பொறுப்புத் தன்மை தரவுகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் வகையில், எல்லை தாண்டிய தரவு இடைத்தரகர்களிடமிருந்து தெளிவான தணிக்கைத் தடங்களையும் இந்தியா கேட்கலாம்.


எல்லை தாண்டிய தரவு ஓட்டங்களுக்கு "தானியங்கி MFN (மிகவும் விரும்பப்படும் நாடு)" என்று எதுவும் இல்லை. மாறாக, ஒப்பந்தம் ஒரு முன்னோக்கிய மறு ஆய்வு பொறிமுறையை உருவாக்குகிறது. ஒரு தரப்பு பின்னர் கடுமையான தரவு விதிகளுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், இரு தரப்பினரும் சமமான விதிமுறைகளை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கின்றனர். பேசுவதற்கு ஒரு வாக்குறுதி உள்ளது; தானியங்கி நீட்டிப்பு இல்லை.

ஐந்து ஆண்டுகளுக்குள் ஒரு முறையான மதிப்பாய்வு தேவை. ஆனால் AI மிக வேகமாக முன்னேறி வருகிறது. மூன்று ஆண்டுகளுக்குள் ChatGPT-ன் பல பதிப்புகளின் எழுச்சி இதை நிரூபிக்கிறது. எனவே, எதிர்கால வர்த்தக ஒப்பந்தங்கள் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் மதிப்பாய்வுகளைக் கொண்டிருக்க வேண்டும். இது மாறிவரும் அபாயங்களுடன் விதிகளை சீரமைக்க உதவும்.


நவீன வர்த்தக விதிமுறைகளைப் பின்பற்றுவது இந்தியாவின் கடந்தகால அணுகுமுறையிலிருந்து வேறுபட்டது. இருப்பினும், உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு பெரிய பங்கை இலக்காகக் கொண்ட ஒரு நாட்டிற்கு இந்த மாற்றம் தர்க்கரீதியானது. இது வர்த்தக சந்தேகத்திலிருந்து விலகி, இராஜதந்திர ரீதியில் ஈடுபாட்டை நோக்கி இந்தியா நகர்வதைக் காட்டுகிறது.


உள்நாட்டுச் சட்டங்கள் பொதுவாக சர்வதேச உறுதிமொழிகளை ஆதரிக்கின்றன. 2023-ன் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு (Digital Personal Data Protection Act) இன்னும் இறுதி விதிகளுக்கான அறிவிப்பு தேவை. எதிர்கால வர்த்தக ஒப்பந்தங்கள், இந்தச் சட்டத்தை நம்பியிருக்க, எந்தவொரு ஒப்பந்தமும் முடிவடைவதற்கு முன்பு விதிகள் திறந்த ஆலோசனைகளை அனுமதிக்க வேண்டும். இந்த வழியில், உள்ளீடுகளை முன்கூட்டியே எடுக்கலாம் மற்றும் கவலைகளை சரியான நேரத்தில் தீர்க்க முடியும்.


அரசாங்கங்கள் எதை ஒழுங்குபடுத்தலாம், நிறுவனங்கள் எதை எதிர்பார்க்கலாம், குடிமக்கள் எதைப் பாதுகாக்கலாம் என்பதை டிஜிட்டல் ஒப்பந்தங்கள் தீர்மானிக்கின்றன. இந்தியா-இங்கிலாந்து ஒப்பந்தத்தின் அத்தியாயம் 12 ஒரு முக்கியமான மைல்கல் மற்றும் முதல் படியாகும். எதிர்காலத்தில், இந்தியா சந்தை வெளிப்படைத்தன்மையை வலுவான ஒழுங்குமுறை மேற்பார்வையுடன் இணைக்க வேண்டும். நம்பகமான ஆய்வகங்களை அங்கீகரிக்க இந்தியா ஒரு அமைப்பை உருவாக்க முடியும். இந்த ஆய்வகங்கள் கடுமையான பாதுகாப்புகளின் கீழ் முக்கியமான குறியீட்டை மதிப்பாய்வு செய்யும். எல்லை தாண்டிய தரவு ஓட்டங்களுக்கு தணிக்கை பாதைகளை கட்டாயமாக்க இது உதவும். பேச்சுவார்த்தைகளுக்கு முன் பரந்த ஆலோசனைகளை அமைப்பதும், ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் டிஜிட்டல் ஒப்பந்தங்களை தொடர்ந்து மதிப்பாய்வு செய்வதும் மற்றொரு படியாக இருக்கலாம். இந்த அனைத்து நடவடிக்கைகளும் ஒரு முக்கியமான சமநிலையைக் காட்டுகின்றன. தேசிய இறையாண்மை மற்றும் உலகளாவிய ஈடுபாடு ஒன்றுக்கொன்று எதிராக செயல்பட வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, அவை ஒன்றாக நவீன இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை ஆதரிக்க முடியும்.


சையத் அக்பருதீன் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் இந்திய நிரந்தர பிரதிநிதி மற்றும் இப்போது ஹைதராபாத்தில் உள்ள கௌடில்யா பொதுக் கொள்கைப் பள்ளியில் தலைவராக உள்ளார். அதே பள்ளியில் தலைவரின் நிர்வாக உதவியாளராக ஷிவாங்கி பாண்டே உள்ளார்.



Original article:

Share:

நியாயவிலைக் கடைப் பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்கும் திட்டம் -டி. ராமகிருஷ்ணன்

 உணவுப் பாதுகாப்பை வழங்குவதில் தாயுமானவர் திட்டம் போன்ற திட்டங்கள் முக்கியமானவை.


ஆகஸ்ட் 12, 2025 அன்று, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தாயுமானவர் திட்டம் என்ற திட்டத்தைத் தொடங்கினார். இது மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக நியாயவிலைப் பொருட்களை வழங்கும் திட்டமாகும். தாயுமானவர் என்ற பெயருக்கு 'தாய்மை பாசத்தைக் காட்டுபவர்' (‘one who shows motherly affection’.) என்று பொருள். தமிழ்நாட்டில் இதற்கு முன்பு இதே போன்ற திட்டங்கள் முயற்சிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தத் திட்டம் அதன் பரந்த அளவிலான பயன்பாட்டினால் சிறப்பு வாய்ந்தது. இதற்காக அரசாங்கம் ₹30.16 கோடியை ஒதுக்கியுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 20.4 லட்சம் மூத்த குடிமக்களும் 1.3 லட்சம் மாற்றுத்திறனாளிகளும் பயனடைவார்கள். சென்னை உட்பட 10 மாவட்டங்களில் ஜூலை மாதம் சோதனை முறையில் ஏற்கனவே நடத்தப்பட்டது.


குறிப்பிட்ட இலக்கு அடிப்படையிலான பொது விநியோகத் திட்டத்திற்குப் (public distribution system (PDS)) பதிலாக அனைவருக்குமான பொது விநியோக முறையை பின்பற்றும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். பல மாநிலங்களில் நியாய விலைக் கடைகளை நடத்துவதற்கு தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்படுவதைப் போலல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் கிட்டத்தட்ட 95% கடைகளின் விவகாரங்களை நிர்வகிக்கின்றன (தேசிய சராசரி 20%-க்கு மேல்). மாநிலத்தில் உள்ள 37,330 கடைகளில், 35,000க்கும் மேற்பட்ட கடைகள் கூட்டுறவு சங்கங்களால் கையாளப்படுகின்றன.


தொலைதூர, மலைப்பாங்கான மற்றும் புவியியல் ரீதியாக சவாலான பகுதிகளில் உள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அணுகுவதை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு 2,495 நடமாடும் நியாய விலைக் கடைகளை நிறுவியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கோவிட்-19 தொற்றுநோய்களின்போது, அப்போதைய அதிமுக ஆட்சியும் இதுபோன்ற ஏழு கடைகளைத் திறந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை வைத்தது.


தாயுமானவர் திட்டம் போன்ற திட்டங்களை பிற மாநிலங்கள் சில காலமாக செயல்படுத்தி வருகின்றன. கேரளாவில் ஒப்பம் (Oppom) திட்டத்தின் கீழ், ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்கள் முதுமை, நோய் அல்லது பிற பிரச்சனைகள் காரணமாக நியாவிலைக் கடைகளுக்குச் சென்று பொருட்களைப் பெற முடியாத மக்களின் வீட்டு வாசலில் அத்தியாவசியப் பொருட்களை வழங்குகிறார்கள். கர்நாடகாவில், அன்ன சுவிதா திட்டம் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பயனளிக்கிறது. பஞ்சாபும் அதன் இதேபோன்று ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறது.


டெல்லி மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில், இதே போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோது டெல்லியில் இந்த திட்டம் தொடங்கவே இல்லை. ஆந்திராவில், ஆட்சி மாற்றம் ஒரு தடையாக இருந்தது: தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான அரசாங்கம், அனைத்து பயனாளிகளுக்கும் மொபைல் விநியோக அலகுகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை வழங்கும் முந்தைய YSR காங்கிரஸ் கட்சியின் நடைமுறையை மாற்றியது. திருத்தப்பட்ட திட்டத்தில், 65 வயதுக்கு மேற்பட்ட அல்லது உடல் ஊனமுற்ற சுமார் 16 லட்சம் பயனாளிகளுக்கு பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்குவது என்று திருத்தப்பட்டுள்ளது.


இருப்பினும், இந்த யோசனை தெளிவாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால்தான், மத்திய அரசு இந்த மாத தொடக்கத்தில் லோக் சபாவில், “[தேசிய உணவு பாதுகாப்பு] சட்டத்தின் கீழ் பயனாளிகளின் வீட்டு வாசலில் உணவு தானியங்களை வழங்குவதற்கு எந்தவொரு ஏற்பாடும் இல்லை” என்று கூறியது விசித்திரமாக உள்ளது. உண்மையில் கூறியிருக்க வேண்டியது என்னவென்றால், சட்டத்தின் பிரிவு 32 (1) படி, இந்தச் சட்டம் “மத்திய அரசு அல்லது மாநில அரசு மற்ற உணவு அடிப்படையிலான நலத்திட்டங்களைத் தொடரவோ அல்லது வகுக்கவோ தடை செய்யவில்லை” என்பதே.


ஆளும் திமுகவின் கூட்டணி கட்சியாக இல்லாவிட்டாலும், திமுக அரசின் திட்டத்தை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பாராட்டினார். இந்த தொடக்க விழாவை தேமுதிக நிறுவனர் விஜயகாந்துக்குக் கிடைத்த "வெற்றி" என்று அவர் கூறினார். 2006 சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு பொருட்களை வழங்குவதாக அவர் உறுதியளித்ததை மக்களுக்கு நினைவூட்டினார். அந்த நேரத்தில், அவரது யோசனை கேலி செய்யப்பட்டதாக அவர் கூறினார். இருப்பினும், 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து கருத்து தெரிவிப்பதில் பிரேமலதா கவனமாக இருந்தார். ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் கட்சிக் கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.


அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (AMMK) பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், சட்டசபை தேர்தலை மனதில் வைத்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார். மேலும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மீண்டும் ஒருமுறை உளுந்தம் பருப்பு, சர்க்கரை அளவை அதிகரிப்பது போன்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதையும் அவர் அரசுக்கு நினைவூட்டினார்.


விமர்சனங்கள் இருந்தபோதிலும், எந்த ஒரு திட்டத்தின் வெற்றியை நிர்ணயிப்பது பொறுப்பான அதிகாரிகளே என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர்ந்துள்ளதாகத் தெரிகிறது. அவர் குறிப்பாக அவர்களின் ஒத்துழைப்பைக் கேட்டபோது இது தெளிவாகத் தெரிந்தது. அவர்களின் சரியான ஆதரவு இல்லாமல், இது போன்ற திட்டங்கள் பல பயனாளிகளுக்கு உணவுப் பாதுகாப்பை வழங்காமல் போகலாம்.



Original article:

Share: