உரிமையியல் வழக்குகளில் (civil disputes) குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர உயர் நீதிமன்றங்கள் அனுமதித்த இரண்டு நிகழ்வுகளில் உச்சநீதிமன்றம் சமீபத்தில் தலையிட்டுள்ளது. இந்தியாவின் சட்ட அமைப்பில், குற்றவியல் மற்றும் உரிமையியல் சட்டத்திற்கு இடையிலான அடிப்படை வேறுபாட்டை புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
கடந்த இரண்டு வாரங்களில், குற்றவியல் பிரச்சனைகளுக்காக இருந்த வழக்குகளில் குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர உயர் நீதிமன்றங்கள் அனுமதித்த வழக்குகளில் உச்சநீதிமன்றம் இரண்டு முறை தலையிட்டுள்ளது.
புதன்கிழமை, நீதிபதிகள் J B பர்திவாலா மற்றும் R மகாதேவன் அடங்கிய அமர்வு, ஒரு ஒட்டு மர சரக்கு (plywood consignment) விற்பனையில் செலுத்தப்படாத தொகை தொடர்பான வழக்கில் ஒரு தம்பதியருக்கு முன்கூட்டிய ஜாமீன் (pre-arrest bail) மறுத்த ராஜஸ்தான் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. ‘விற்பனை பரிவர்த்தனை நடந்தவுடன் நம்பிக்கை துரோகம் (criminal breach of trust) என்ற கேள்வியே எழாது’ என்றும் இது சட்டத்தின் நிலையான நிலைப்பாடு என்று நீதிபதி பர்திவாலா கூறினார்.
ஆகஸ்ட் 4ஆம் தேதி அன்று, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், ஒரு எளிய வணிகப் பிரச்சனையில் குற்றவியல் நடவடிக்கையை அனுமதித்ததற்காக, அவரை குற்றவியல் வழக்குகளைக் கையாள்வதிலிருந்து உச்ச நீதிமன்றம் நீக்கியது. நீதிபதி அளித்த தீர்ப்பு, "அதிர்ச்சியளிப்பதாகவும்" (shocking), நீதியை கேலிக்கூத்தாக்குவதாக (Mockery of justice) உச்சநீதிமன்றம் கூறியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இந்த விவகாரத்தில் தலையிட்ட பிறகு, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி குற்றவியல் வழக்குகளை கையாளக்கூடாது என்று முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 8ஆம் தேதி அன்று திரும்பப் பெற்றது.
உரிமையியல் (Civil) மற்றும் குற்றவியல் (criminal) சட்டம்
உரிமையியல் மற்றும் குற்றவியல் சட்டத்திற்கு இடையேயான வேறுபாடு இந்தியாவின் சட்ட அமைப்பில் அடிப்படையானது. அவற்றின் நோக்கம், சம்பந்தப்பட்ட தரப்பினர் மற்றும் நடைமுறையின் அடிப்படையில் வேறுபடுகின்றன.
உரிமையியல் சட்டம் தனி நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு இடையிலான பிரச்சனைகளை தீர்க்க வடிவமைக்கப்பட்டுள்ளது. நீதி வழக்குகள் (suits) என்று அழைக்கப்படும் உரிமையியல் வழக்குகள், பொதுவாக வழக்கை தாக்கல் செய்த நபரின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்த கருத்து வேறுபாடுகளை உள்ளடக்குகின்றன. ஒரு உரிமையியல் வழக்கின் நோக்கம் யாரையும் தண்டிப்பது அல்ல, மாறாக ஒரு தீர்வை வழங்குவதாகும். பொதுவாக பண இழப்பீடு (monetary compensation) சேதங்கள் என்று அழைக்கப்படுகிறது அல்லது நீதிமன்றத்தால் ஒரு தரப்பினருக்கு ஏதாவது செய்ய அல்லது செய்யாமல் இருக்க உத்தரவிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட நடவடிக்கை தடை உத்தரவு (injunction) என்று அழைக்கப்படுகிறது.
சொத்து பிரச்சனைகள், ஒப்பந்த மீறல்கள், விவாகரத்து மற்றும் குழந்தை பராமரிப்பு போன்ற குடும்பச் சட்ட விவகாரங்கள் மற்றும் பணத்தை மீட்டெடுப்பதற்கான வழக்குகள் ஆகியவை உரிமையியல் வழக்குகளுக்கான (civil cases) எடுத்துக்காட்டுகளாகும். ஒரு உரிமையியல் வழக்கில், வழக்கைத் தாக்கல் செய்பவர் வாதி (plaintiff) என்றும், அது யாருக்கு எதிராக தாக்கல் செய்யப்படுகிறதோ அவர் பிரதிவாதி (defendant) என்றும் அழைக்கப்படுகிறார்.
குற்றவியல் சட்டம் (Criminal law), அரசு அல்லது ஒட்டுமொத்த சமூகத்திற்கு எதிரான குற்றங்களாகக் கருதப்படும் செயல்களைக் கையாள்கிறது. குற்றவாளியைத் தண்டிப்பதும், இதே போன்ற குற்றங்களைச் செய்வதிலிருந்து மற்றவர்களைத் தடுப்பதுவே இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு எதிராக, அரசு, ஒரு அரசு தரப்பு வழக்கறிஞர் (prosecutor) மூலம் குற்றவியல் வழக்கைத் தொடங்குகிறது. அந்த நபர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு அபராதம், சிறைத்தண்டனை அல்லது கடுமையான வழக்குகளில் மரண தண்டனை போன்ற தண்டனைகள் விதிக்கப்படலாம். திருட்டு, மோசடி, தாக்குதல் மற்றும் கொலை போன்ற குற்றங்கள் குற்றவியல் சட்டத்தின் கீழ் வருகின்றன.
உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு இடையே உள்ள பெரிய வித்தியாசம், எவ்வளவு ஆதாரம் தேவைப்படுகிறது என்பதுதான். ஒரு குற்றவியல் வழக்கில், வழக்கைத் தொடங்குபவர் வாதி என்றும் மற்ற தரப்பினரை விட தங்கள் சொல்வது உண்மை என்பதையும் நிரூபிக்க வேண்டும். ஒரு குற்றவியல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் நிச்சயமாக குற்றவாளி என்பதை அரசு தரப்பு வழக்கறிஞர் எந்த சந்தேகமும் இல்லாமல் நிரூபிக்க வேண்டும். ஒரு குற்றவியல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் சிறைக்குச் செல்வது, சுதந்திரத்தை இழப்பது (loss of liberty) போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்படலாம் என்பதால், இது போன்ற வழக்குகளுக்கு அதிக அளவிலான ஆதாரம் தேவைப்படுகிறது.
சில செயல்கள் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் இரண்டிற்கும் வழி வகுக்கலாம். உதாரணமாக, உச்ச நீதிமன்றத்தின் முன் நடந்த முன்னர் குறிப்பிட்ட இரு வழக்குகளில், ஒப்பந்த மீறல், இது ஒரு குற்றவியல் தவறு, ஏமாற்றுதல் மற்றும் நம்பிக்கை துரோகம், இரண்டும் குற்றவியல் குற்றங்கள், நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. குற்றவியல் நடவடிக்கைகளை நியாயப்படுத்த எந்த நிரூபிக்கக்கூடிய குற்றவியல் கூறுகளும் இல்லை என்று உச்சநீதிமன்றம் முடிவு செய்தது; வணிக உறவில் நுழைவதற்கு முன்பு மோசடி செய்வதற்கான குற்றவியல் நோக்கம் இருந்திருந்தால், ஒரே நேரத்தில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்பட்டிருக்கும்.
நடவடிக்கைகளின் கால அளவு
ஒரு பொதுவான கருத்து - இது அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியால் அவரது பின்னர் ரத்து செய்யப்பட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டது - உரிமையியல் நடவடிக்கைகள் (civil proceedings) குற்றவியல் விசாரணைகளைவிட கணிசமாக அதிக நேரம் எடுக்கும். முதல் பார்வையில், இந்தியா முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களுக்கான தேசிய நீதித்துறை தரவு கட்டதிலிருந்து (National Judicial Data Grid (NJDG)) வரும் தரவு இந்த கருத்தை ஆதரிக்கிறது. ஆகஸ்ட் 14, 2025 நிலவரப்படி, 70.17% குற்றவியல் விசாரணைகள் (criminal trials) ஒரு வருடத்திற்குள் முடிக்கப்பட்டன. அதே நேரத்தில் 37.91% உரிமையியல் வழக்குகள் மட்டுமே அதே காலக்கெட்டில் தீர்க்கப்பட்டன.
சட்டம் மற்றும் நீதி சீர்திருத்தங்களில் பணிபுரியும் ஒரு குழுவான DAKSH-ன் திட்ட இயக்குநரான B. S. சூர்ய பிரகாஷ், உரிமையியல் வழக்குகள் அவற்றின் மாறுபட்டத் தன்மை காரணமாக பொதுவாக அதிக நேரம் எடுக்கும் என்று கூறுகிறார்.
குற்றவியல் வழக்குகளில், உயிர் மற்றும் சுதந்திரம் சம்பந்தப்பட்டுள்ளது என்று B.S. சூர்ய பிரகாஷ் The Indian Express கூறினார். குற்றவியல் வழக்குகள் பொதுவாக மிகவும் அவசரமானவையாகக் கருதப்படுகின்றன. ஆனால், குற்றவியல் வழக்குகளில், நீதிமன்றத்திற்கு வெளியே பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளும் (out-of-court settlement) நம்பிக்கையில், மக்கள் பெரும்பாலும் செயல்முறையைத் தாமதப்படுத்துகிறார்கள். பெங்களூரு நீதிமன்றங்களைப் பற்றிய DAKSH-ன் ஆய்வில், பல குற்றவியல் வழக்குகள் ஆரம்பத்திலேயே தாமதமாகின்றன. அதே நேரத்தில் நீதிமன்றம் அறிவிப்பு (Notice) மற்றும் சம்மன்களை (summons) அனுப்புகிறது என்பதைக் காட்டுகிறது.
விதி சட்டக் கொள்கை மையத்தின் சட்ட வல்லுநரான ஷ்ரேயா திரிபாதி, நீதிமன்ற அமைப்பில் ஒரு வழக்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதைக் கண்காணிப்பது கடினம் என்றார். உதாரணமாக, ஒரு மாவட்டநீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட ஒரு வழக்கின் தீர்ப்புக்கு பின்னர், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படலாம். அங்கு அது ஒரு தனி, நிலுவையில் உள்ள வழக்காகக் காட்டப்படும் என்று ஷ்ரேயா திரிபாதி, The Indian Express-இடம் கூறினார். இது தாக்கல் செய்வதிலிருந்து இறுதித் தீர்ப்பு வரை எடுக்கும் மொத்த நேரத்தைத் தீர்மானிப்பதை கடினமாக்குகிறது என்று அவர் கூறினார்.
தேசிய நீதித்துறை தரவு கட்டதிலிருந்து (National Judicial Data Grid (NJDG)) வரும் தரவு குறிப்பிட்ட வகை வழக்குகளைப் பொறுத்து மாறுபாடுகளையும் காட்டுகிறது. உதாரணமாக, உரிமையியல் (Civil) வழக்குகள் முடிப்பதற்கு சராசரியாக 4.91 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் அதே வேளையில், உரிமையியல் வழக்கில் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தாக்கல் செய்யப்படும் அமலாக்க மனுக்கள் (execution petitions) முடிவுக்கு வர சுமார் 3.97 ஆண்டுகள் எடுக்கின்றன.
குற்றவியல் வழக்குகளில் (criminal cases) ஜாமீன் விண்ணப்பங்கள் சராசரியாக 6.12 மாதங்களில் முடிவு செய்யப்படுகின்றன. எனினும், கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகள் உள்ள குற்றவியல் அமர்வு நீதிமன்றவழக்குகள் சராசரியாக 4.65 ஆண்டுகள் எடுக்கின்றன. இது உரிமையியல் வழக்குகளுக்கு எடுக்கும் நேரத்தைப் போன்றது.
மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் குறைவான கடுமையான குற்ற வழக்குகள், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் முடிவடைய சராசரியாக 2.45 ஆண்டுகள் ஆகும்.