இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தத்தில் குறியீடு மற்றும் வணிகத்தை சமநிலைப்படுத்துதல் -சையத் அக்பருதீன், ஷிவாங்கி பாண்டே

 இந்த ஒப்பந்தத்திற்கான ஆதாயங்கள் உண்மையானதாகத் தோன்றினாலும், பாதுகாப்பு நடவடிக்கைகளின் தேவையைக் குறிப்பிடுகின்றன.


இந்தியா, இங்கிலாந்து உடனான டிஜிட்டல் வர்த்தக ஒப்பந்தம் ஒரு புதிய படியாகும். இந்தியா-இங்கிலாந்து, விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் (Comprehensive Economic and Trade Agreement (CETA)) அத்தியாயம் 12-ன் அணுகல், நம்பகத்தன்மை மற்றும் அளவிற்கான சில மேற்பார்வைக் கருவிகளை வர்த்தகம் செய்கிறது. இந்த வர்த்தகம் ஒரு கொள்கை விவாதத்தைத் தூண்டியுள்ளது. ஆதரவாளர்கள் உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு ஒரு இராஜதந்திர ரீதியின் நகர்வு என்று கருதுகிறார்கள். விமர்சகர்கள் இதை டிஜிட்டல் இறையாண்மையிலிருந்து பின்வாங்குவதாகக் கூறுகிறார்கள். இத்தகைய ஒப்பந்தங்கள் அரிதாகவே தெளிவான வெற்றியாளர்களையோ அல்லது தோல்வியாளர்களையோ உருவாக்குகின்றன. அவை பொதுவாக பேச்சுவார்த்தை மூலம் சமரசங்களில் முடிவடைகின்றன. ஒட்டுமொத்தமாக, ஆதாயங்கள் உண்மையானதாகத் தெரிகிறது. ஆனால் மாறிவரும் அபாயங்களைத் தக்க வைத்துக் கொள்ளக்கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் தேவையையும் அவை சுட்டிக்காட்டுகின்றன.


டிஜிட்டல் அணுகுமுறையின் சாதனைகள்


டிஜிட்டல் அணுகுமுறையின் சாதனைகள் தெளிவாக உள்ளன. இந்த ஒப்பந்தம் மின்னணு கையொப்பங்கள் மற்றும் ஒப்பந்தங்களை (electronic signatures and contracts) அங்கீகரிக்கிறது மற்றும் பரஸ்பர அங்கீகாரத்திற்காக இரு தரப்பினரையும் உறுதி செய்கிறது. இது மென்பொருள்-ஒரு-சேவை நிறுவனங்களுக்கான ஆவணங்களை ஒழுங்கமைக்கிறது மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தடைகளையும் குறைக்கிறது. காகிதமில்லா வர்த்தகம் மற்றும் மின்னணு விலைப்பட்டியல் ஆகியவை எல்லை தாண்டிய ஆவணங்கள் மற்றும் பணம் செலுத்துவதை எளிதாக்குகின்றன. மின்னணு பரிமாற்றங்களுக்கான சுங்க வரியில்லா (zero customs duties) கொள்கையை தொடர்கிறது. இது வர்த்தக அமைச்சகம் ஆண்டுக்கு 30 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடும் மென்பொருள் எதிர்கால ஏற்றுமதி திட்டத்தை பாதுகாக்கிறது.


தரவு புதுமைகளில் ஒத்துழைப்பு உதவியாக இருக்கும். இந்த உரை, தேவைப்படும் இடங்களில் ஒழுங்குமுறை சோதனை மையங்களைப் (regulatory sandboxes) பயன்படுத்தும் முன்னோடி திட்டங்களை ஊக்குவிக்கிறது. இது கட்டணங்கள் மற்றும் பிற தரவு சார்ந்த நிறுவனங்களுக்கு மேற்பார்வையின் கீழ் கருவிகளை சோதித்து வளர்க்க ஒரு வழியை வழங்குகிறது, இது வெளிநாடுகளில் நம்பகத்தன்மையை உருவாக்குகிறது. டிஜிட்டல் அத்தியாயத்திற்கு அப்பால், பரந்த இந்தியா - யு.கே. ஒப்பந்தம் அன்றாட வர்த்தகத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்தம் செயல்படுத்தப்படும்போது, இந்திய பொருட்களின் ஏற்றுமதியில் 99% வரை யு.கே.யில் வரி இல்லாமல் நுழையலாம் என்று தொழில்துறை எதிர்பார்க்கிறது, குறிப்பாக ஜவுளி வரிகள் 12%-லிருந்து முக்கிய பொருட்களுக்கு பூஜ்ஜியமாக குறையும், இது திருப்பூர் (தமிழ்நாடு) மற்றும் லூதியானா (பஞ்சாப்) போன்ற ஜவுளி ஏற்றுமதி மையங்களில் வளர்ச்சி வாய்ப்புகளை அதிகரிக்கும். பகுப்பாய்வாளர்கள், பிரிட்டிஷ் பொது கொள்முதல் துறையில் இந்திய ஐ.டி. வழங்குநர்களுக்கு மேலும் வாய்ப்புகள் திறக்கப்படுவதாக சுட்டிக்காட்டுகின்றனர். முதலாளிகள், குறுகிய கால பணிகளுக்கு சமூக பாதுகாப்பு தள்ளுபடிகள் ஊதிய செலவுகளை ஐந்தில் ஒரு பங்காக குறைக்கும் என்று கூறுகின்றனர். இந்த நடவடிக்கைகள் பரந்த மற்றும் முன்கணிக்கக்கூடிய வர்த்தக பாதையை உறுதியளிக்கின்றன.


டிஜிட்டல் செலவுகள்


இருப்பினும், சாத்தியமான டிஜிட்டல் செலவுகள் இன்னும் கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த ஒப்பந்தத்தின்கீழ் குறியீட்டு ஆய்வுக்கு தடை இருப்பதால், ஒரு நிலையான ஒழுங்குமுறை கருவியாக, மூல-குறியீடு சோதனைகளில் (source-code checks) இருந்து இந்தியா பின்வாங்கியுள்ளது என்று விமர்சகர்கள் வாதிட்டனர். விசாரணை அல்லது நீதிமன்றச் செயல்முறையுடன் இணைக்கப்பட்ட, ஒவ்வொரு வழக்கின் அடிப்படையில், கட்டுப்பாட்டாளர்கள் அணுகலைக் கோரலாம்.


அரசாங்க கொள்முதல் டிஜிட்டல் வர்த்தகத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசாங்கத்தால் வாங்கப்படும் பொருட்களில் மூலக் குறியீட்டிற்கான அணுகல் தடைசெய்யப்படவில்லை. ஒப்பந்தம் வணிக நம்பிக்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டாலும், அது அத்தியாவசிய நலன்களையும் பாதுகாக்கிறது. ஒரு பொதுவான பாதுகாப்புக்கான விதிவிலக்கு உள்ளது. தனியாருக்குச் சொந்தமானதாக இருந்தாலும், மின்கட்ட நிலையங்கள், அல்லது கட்டண முறைகள் மற்றும் பிற முக்கியமான உள்கட்டமைப்புகளை தேசிய அளவில் மேற்பார்வையிட அனுமதிக்கிறது. வர்த்தகத்தின் மீது மறைமுகமான கட்டுப்பாட்டை உருவாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், நல்லாட்சியைப் பின்பற்றி மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான கூடுதல் உத்தரவாதம் தேவைப்படுமானால், நம்பகமான ஆய்வகங்களை அங்கீகரிப்பது ஒரு நடைமுறையானப் படியாகும். இந்த ஆய்வகங்கள் கடுமையான பாதுகாப்புகளின் கீழ் முக்கியமான குறியீட்டை மதிப்பாய்வு செய்யலாம்.


அரசாங்கத் தரவுகளைப் பொறுத்தவரை, இதற்கான அணுகுமுறை தன்னார்வமானது. சட்டப்பூர்வ உறுதிப்பாடு இதற்கு எதுவும் இல்லை. எதை எந்த வடிவத்தில் வெளியிட வேண்டும் என்பதை இந்தியா தீர்மானிக்கிறது. ஒரு தரவுத்தொகுப்பைத் திறக்கும்போது, அது இயந்திரத்தில் படிக்கக்கூடியதாகவும், மீண்டும் பயன்படுத்த எளிதாகவும் இருக்க வேண்டும். வரம்புகள் இல்லாமல் யாரும் அணுகலைக் கோரலாம் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. பொறுப்புத் தன்மை தரவுகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் வகையில், எல்லை தாண்டிய தரவு இடைத்தரகர்களிடமிருந்து தெளிவான தணிக்கைத் தடங்களையும் இந்தியா கேட்கலாம்.


எல்லை தாண்டிய தரவு ஓட்டங்களுக்கு "தானியங்கி MFN (மிகவும் விரும்பப்படும் நாடு)" என்று எதுவும் இல்லை. மாறாக, ஒப்பந்தம் ஒரு முன்னோக்கிய மறு ஆய்வு பொறிமுறையை உருவாக்குகிறது. ஒரு தரப்பு பின்னர் கடுமையான தரவு விதிகளுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், இரு தரப்பினரும் சமமான விதிமுறைகளை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கின்றனர். பேசுவதற்கு ஒரு வாக்குறுதி உள்ளது; தானியங்கி நீட்டிப்பு இல்லை.

ஐந்து ஆண்டுகளுக்குள் ஒரு முறையான மதிப்பாய்வு தேவை. ஆனால் AI மிக வேகமாக முன்னேறி வருகிறது. மூன்று ஆண்டுகளுக்குள் ChatGPT-ன் பல பதிப்புகளின் எழுச்சி இதை நிரூபிக்கிறது. எனவே, எதிர்கால வர்த்தக ஒப்பந்தங்கள் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் மதிப்பாய்வுகளைக் கொண்டிருக்க வேண்டும். இது மாறிவரும் அபாயங்களுடன் விதிகளை சீரமைக்க உதவும்.


நவீன வர்த்தக விதிமுறைகளைப் பின்பற்றுவது இந்தியாவின் கடந்தகால அணுகுமுறையிலிருந்து வேறுபட்டது. இருப்பினும், உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு பெரிய பங்கை இலக்காகக் கொண்ட ஒரு நாட்டிற்கு இந்த மாற்றம் தர்க்கரீதியானது. இது வர்த்தக சந்தேகத்திலிருந்து விலகி, இராஜதந்திர ரீதியில் ஈடுபாட்டை நோக்கி இந்தியா நகர்வதைக் காட்டுகிறது.


உள்நாட்டுச் சட்டங்கள் பொதுவாக சர்வதேச உறுதிமொழிகளை ஆதரிக்கின்றன. 2023-ன் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு (Digital Personal Data Protection Act) இன்னும் இறுதி விதிகளுக்கான அறிவிப்பு தேவை. எதிர்கால வர்த்தக ஒப்பந்தங்கள், இந்தச் சட்டத்தை நம்பியிருக்க, எந்தவொரு ஒப்பந்தமும் முடிவடைவதற்கு முன்பு விதிகள் திறந்த ஆலோசனைகளை அனுமதிக்க வேண்டும். இந்த வழியில், உள்ளீடுகளை முன்கூட்டியே எடுக்கலாம் மற்றும் கவலைகளை சரியான நேரத்தில் தீர்க்க முடியும்.


அரசாங்கங்கள் எதை ஒழுங்குபடுத்தலாம், நிறுவனங்கள் எதை எதிர்பார்க்கலாம், குடிமக்கள் எதைப் பாதுகாக்கலாம் என்பதை டிஜிட்டல் ஒப்பந்தங்கள் தீர்மானிக்கின்றன. இந்தியா-இங்கிலாந்து ஒப்பந்தத்தின் அத்தியாயம் 12 ஒரு முக்கியமான மைல்கல் மற்றும் முதல் படியாகும். எதிர்காலத்தில், இந்தியா சந்தை வெளிப்படைத்தன்மையை வலுவான ஒழுங்குமுறை மேற்பார்வையுடன் இணைக்க வேண்டும். நம்பகமான ஆய்வகங்களை அங்கீகரிக்க இந்தியா ஒரு அமைப்பை உருவாக்க முடியும். இந்த ஆய்வகங்கள் கடுமையான பாதுகாப்புகளின் கீழ் முக்கியமான குறியீட்டை மதிப்பாய்வு செய்யும். எல்லை தாண்டிய தரவு ஓட்டங்களுக்கு தணிக்கை பாதைகளை கட்டாயமாக்க இது உதவும். பேச்சுவார்த்தைகளுக்கு முன் பரந்த ஆலோசனைகளை அமைப்பதும், ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் டிஜிட்டல் ஒப்பந்தங்களை தொடர்ந்து மதிப்பாய்வு செய்வதும் மற்றொரு படியாக இருக்கலாம். இந்த அனைத்து நடவடிக்கைகளும் ஒரு முக்கியமான சமநிலையைக் காட்டுகின்றன. தேசிய இறையாண்மை மற்றும் உலகளாவிய ஈடுபாடு ஒன்றுக்கொன்று எதிராக செயல்பட வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, அவை ஒன்றாக நவீன இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை ஆதரிக்க முடியும்.


சையத் அக்பருதீன் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் இந்திய நிரந்தர பிரதிநிதி மற்றும் இப்போது ஹைதராபாத்தில் உள்ள கௌடில்யா பொதுக் கொள்கைப் பள்ளியில் தலைவராக உள்ளார். அதே பள்ளியில் தலைவரின் நிர்வாக உதவியாளராக ஷிவாங்கி பாண்டே உள்ளார்.



Original article:

Share: